ஒரு நீதி கதை சொல்றேன் கேளுங்க ஸாரி படியுங்க......
ஒரு ஊர்ல ஒரு நரி இருந்துச்சாம் வேண்ணா நரியை விக்கி;ன்னு வச்சிக்குவோம் [!] அப்புறம் அதே ஊர்ல ஒரு ஒட்டகமும் இருந்துச்சாம் அதை நம்ம சிபி'ன்னு வச்சிக்குவோம் [!]
அந்த ஊர்ல ஒரு பெரிய ஆறு இருந்தது. ஆற்றின் அக்கரையில் நண்டுகள் ஏராளம் இருப்பதை அறிந்த நரிக்கு நாக்கில் எச்சில் ஊறியது, ஆனால் நதியின் அக்கரைக்கு நரியால் போகமுடியாததால் குள்ளநரித்தனமாக [[நரிதானே]] யோசிக்க தொடங்கியது.
நல்ல ஒரு யோசனை செய்து ஓட்டகத்திடம் வந்தது சிபி சிபி ஸாரி ஓட்டகமே ஓட்டகமே அந்த நதிக்கு அக்கரையில் பெரிய கரும்பு தோட்டம் இருக்கு வா நாம ரெண்டுபேரும் அக்கரைக்கு போகலாம் வா என்றது, நாக்கில் எச்சில் ஊறிய ஒட்டகமும் ஓகே சொன்னது.
நரி ஒட்டகம் மீது ஏறிக்கொள்ள ஒட்டகம் நீந்தியபடி அக்கரை வந்து சேரவும் நரி ஒட்டகத்துக்கு கரும்பு தோட்டத்தை காட்டிவிட்டு படபடவென நண்டுகளை பிடித்து தின்றது.
ஒட்டகம் கரும்பு தோட்டத்தில் நுழையவும் நரிக்கு நண்டு தின்று வயிறு நிரம்பியது, ஒட்டகம் கரும்பை வாயில் வைக்கவும் நரி ஊளை போட ஆரம்பித்தது, இதை கவனித்த தோட்டக்காரன் ஒட்டகத்தை வாங்கு வாங்கு என வாங்கி விரட்ட ஒட்டகம் தப்பித்தோம் பிழைத்தொம்னு நதிக்கரைக்கு ஓடிவந்து நரியையும் ஏற்றிக்கொண்டு ஆற்றில் இறங்கியது.
நடு ஆறு வந்ததும் நரி கேட்டது நீ நன்றாக கரும்பு தின்றாயா என்றது அதற்கு ஒட்டகம் ஆமாம் ஆமாம் கரும்பை விட பிரம்படி நன்றாக இருந்தது, ஆமாம் நீ எதுக்குய்யா ஊளை போட்டு ஊரை கூட்டினாய்..? நரி சொன்னது, எனக்கு வயிறு நிறைந்ததும் ஊளை இடும் வழக்கம் உண்டு என்றது....!!!
ஒட்டகம் : ஓ அப்பிடியா ராசா எனக்கும் வயிறு நிறையலைன்னா தண்ணியில முங்கும் வழக்கம் உண்டு எனசொல்லி ஆற்றில் முங்கியது, பிளான் பண்ணி வந்த நரி ஆத்தோடு போயிருச்சு, பிரம்படி வாங்கி தின்ன ஒட்டகம் ஏமாந்து போச்சு....!!!
நீதி : எவன் சொல்றதையும் கண்ணை மூடிட்டு நம்பாதே, எவனையும் நம்பி தோளில் ஏறாதே....!!!
டிஸ்கி : ஹி ஹி எப்பூடீ நாங்களும் சொல்வோம்ல.....