Tuesday, November 15, 2011

எங்க அப்பா சொல்லித்தந்த நீதி....!!!

என் சின்ன வயசில் என் அப்பா எனக்கு சொல்லித்தந்த கதைகள் அவர் மறைந்தாலும் அவர் சொன்ன கதைகள் காதில் இனிமையாக ஒலித்து கொண்டே இருக்கும், அப்படி என் அப்பா சொன்ன கதைகளை இங்கே பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் உண்மையா பொய்யா தெரியாது.

ஊரில் ஒரு வயதானவருக்கு கொஞ்சம் நிலம் இருந்தது, அந்த ஊருக்கு ஒண்ட வந்த பிடாரி ஒருத்தனுக்கு கொஞ்சம் பூமியை வாடகைக்கு கொடுத்தார் அவர்,  அந்த காலத்துல பேப்பர் எழுத்தெல்லாம் கிடையாது வாக்குதான் முக்கியமாக இருக்கும் அம்புட்டு நம்பிக்கை...!!!


வாடகை [[குத்தகை]] கொடுத்து கொண்டிருந்தவன் திடீரென பணம் கொடுப்பதை நிறுத்திவிட, பெரியவர் பூமியை காலி பண்ணசொன்னார், அதை தொடர்ந்த சண்டையின் நிமித்தம் கேஸ் கோர்ட்டுக்கு போனது, ஒண்ட வந்தவன், பெரியவர் பூமி அது அல்ல, இது என் சொந்தபூமி, பெரியவர் என்னை மிரட்டுகிறார் அந்த பூமியை தரசொல்லின்னு புகார் கொடுத்துட்டான்...


கோர்ட்டுக்கு ஒவ்வொரு நாளும் போயி விசாரிக்கபட்டனர், விசாரணையின் போது நீதிபதி முன்பு இவர்கள் இப்படி பேசுவார்களாம், ஒண்ட வந்தவன், அந்தபூமி அந்தபூமி'ன்னு சொல்வானாம். பெரியவரோ என்னுடைய பூமி என்னுடைய பூமின்னு அழுத்தமா சொல்வாராம்....


வழக்கு இழுத்து கொண்டே போயிருக்கு பலநாட்களாக, நீதிபதி இந்த இருவர் பேசும் ஸ்லாங்கை கவனித்தபடியே இருந்து கொண்டிருந்தார். தீர்ப்பு நாளும் வந்தது...


நீதிபதி தீர்ப்பு சொன்னார், இவர்கள் சொன்ன பேசிய பேச்சில் இருந்து அவர்கள் வாயின் வாக்குபடியே தீர்ப்பு சொல்கிறேன், ஒருத்தனும் தன் பூமியை அந்தபூமி அந்தபூமி என சொல்லமாட்டான், ஆக அந்தபூமி அவனுடையது இல்லை, பெரியவர் எப்போது பேசும்போதும் என்பூமி என்பூமி என அவர் பேச்சிலிருக்கும் அழுத்தமே அந்தபூமி அவருடையது என தீர்ப்பளிக்கிறேன் என தீர்ப்பு சொன்னார்.


என் அப்பா என்னை மடியில் உக்காரவச்சி சொன்ன நீதி : என்னைக்குமே அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது, ஆசைபட்டு சபைமுன் தலைகுனிந்து நிற்கக்கூடாது என்பதே....!!!


அந்த நீதி போதனைதான், நான் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த நாட்களில் [[http://nanjilmano.blogspot.com/2011/10/blog-post_09.html]] அந்த நடனக்காரி நண்பிக்கு கொடுத்த நான்கு கிலோ தங்கத்தில் ஒரு பீஸில் கூட கைவைக்க மனமில்லை என நினைக்கிறேன், [[அப்பாவுக்கு நன்றி]] மலையாளி நண்பர்கள் இப்பவும் என்னை பார்த்து ஆச்சர்யமாக கேட்பார்கள், எப்படிடா உன்னால் இப்படி முடிகிறது என்று...!!! இவர்களுக்கு என்ன தெரியும் எங்க அப்பா என்ன சொல்லி வளர்த்தார் என்று....

டிஸ்கி : நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதில் இடம் பெற்று இருந்த டிஸ்கி மாற்றப்பட்டுள்ளது.


66 comments:

  1. அண்ணே என்னமா நீதி சொல்லிட்டு வந்து...கடைசில இப்படி அறிவாளிங்கள போட்டு உடைச்சிட்டீங்களே ஹிஹி!

    ReplyDelete
  2. விக்கியுலகம் said... 1 2
    அண்ணே என்னமா நீதி சொல்லிட்டு வந்து...கடைசில இப்படி அறிவாளிங்கள போட்டு உடைச்சிட்டீங்களே ஹிஹி!//

    அப்போ நீ அறிவாளி இல்லியா ஹி ஹி....

    ReplyDelete
  3. அருமையான கதை. "பேராசை பெரு நஷ்டம்" என்பதை உணர வேண்டும்.

    ReplyDelete
  4. " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said... 1 2
    அண்ணே என்னமா நீதி சொல்லிட்டு வந்து...கடைசில இப்படி அறிவாளிங்கள போட்டு உடைச்சிட்டீங்களே ஹிஹி!//

    அப்போ நீ அறிவாளி இல்லியா ஹி ஹி...."

    >>>>>>>>>

    இல்லன்னே...நான் அப்பாவி ஹிஹி!

    ReplyDelete
  5. விக்கியுலகம் said... 7 8
    " MANO நாஞ்சில் மனோ said...
    விக்கியுலகம் said... 1 2
    அண்ணே என்னமா நீதி சொல்லிட்டு வந்து...கடைசில இப்படி அறிவாளிங்கள போட்டு உடைச்சிட்டீங்களே ஹிஹி!//

    அப்போ நீ அறிவாளி இல்லியா ஹி ஹி...."

    >>>>>>>>>

    இல்லன்னே...நான் அப்பாவி ஹிஹி!//

    நீ மானமுள்ள அப்'பாவியடா....!!!

    ReplyDelete
  6. தமிழ் உதயம் said... 5 6
    அருமையான கதை. "பேராசை பெரு நஷ்டம்" என்பதை உணர வேண்டும்.//

    நிதர்சனம் மக்கா....

    ReplyDelete
  7. Iyaiyo...mano....aruva eduthuttare........
    Ini enna nadakkapovutho..????

    Sandai varuma ????
    Mmmmmmm
    eemanthiduvomo...????
    Yaravathu vangappa sandaikku....
    Thakkalium,,,,,mano-vum
    ul kuthu pathivu
    pottukkite irukkanga.....

    ReplyDelete
  8. " NAAI-NAKKS said...
    Iyaiyo...mano....aruva eduthuttare........
    Ini enna nadakkapovutho..????

    Sandai varuma ????
    Mmmmmmm
    eemanthiduvomo...????
    Yaravathu vangappa sandaikku....
    Thakkalium,,,,,mano-vum
    ul kuthu pathivu
    pottukkite irukkanga....."

    >>>>>>>>>>

    யோவ்...இங்கே என்ன சண்டையா நடக்குது...ஏன்யா நீ வேற ஹிஹி!

    ReplyDelete
  9. அருவா தூக்குன மனோவுக்கு இந்த நெலமைன்னா...டிஸ்கில அடிவாங்குனவங்க நிலமைய நெனச்சி பாக்குறேன் ஹிஹி!

    ReplyDelete
  10. சூப்பர் அண்ணே

    நல்ல நீதி இது எல்லாம் ஞாபகம் வச்சு இருந்தா இன்னைக்கு நிறைய பேரு சந்தோசமா வெளியில இருந்து இருப்பாங்கே

    ReplyDelete
  11. NAAI-NAKKS said... 13 14
    Iyaiyo...mano....aruva eduthuttare........
    Ini enna nadakkapovutho..????

    Sandai varuma ????
    Mmmmmmm
    eemanthiduvomo...????
    Yaravathu vangappa sandaikku....
    Thakkalium,,,,,mano-vum
    ul kuthu pathivu
    pottukkite irukkanga.....//

    யோவ் இங்கே என்ன நாரதர் கழகமா ச்சே ச்சீ கலகமா நடக்குது...?

    ReplyDelete
  12. விக்கியுலகம் said...
    " NAAI-NAKKS said...
    Iyaiyo...mano....aruva eduthuttare........
    Ini enna nadakkapovutho..????

    Sandai varuma ????
    Mmmmmmm
    eemanthiduvomo...????
    Yaravathu vangappa sandaikku....
    Thakkalium,,,,,mano-vum
    ul kuthu pathivu
    pottukkite irukkanga....."

    >>>>>>>>>>

    யோவ்...இங்கே என்ன சண்டையா நடக்குது...ஏன்யா நீ வேற ஹிஹி!//

    சண்டையேதான் நடக்கனுமாக்கும்...??

    ReplyDelete
  13. விக்கியுலகம் said...
    அருவா தூக்குன மனோவுக்கு இந்த நெலமைன்னா...டிஸ்கில அடிவாங்குனவங்க நிலமைய நெனச்சி பாக்குறேன் ஹிஹி!//

    ஹா ஹா ஹா ஹா எலேய் முடியல....

    ReplyDelete
  14. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    சூப்பர் அண்ணே

    நல்ல நீதி இது எல்லாம் ஞாபகம் வச்சு இருந்தா இன்னைக்கு நிறைய பேரு சந்தோசமா வெளியில இருந்து இருப்பாங்கே//

    என்னய்யா தீகாரை நோக்கி கையை காட்டுறீங்க ஹி ஹி....

    ReplyDelete
  15. அட எங்கேய்யா போனீர்கள் லகுட பாண்டிகளா...அண்ணன் வைட் பண்றாரு இல்ல...மும்மூர்த்திகளும் வரவும் ஹிஹி!

    ReplyDelete
  16. நல்ல கதை.
    ஆனால் மனோ - நம்ம கதையில வர்ற நீதிபதி மாதிரி நல்ல நீதிபதிகள் எல்லா நீதி மன்றங்களிலும் இருந்து விட்டால் பிரச்சனையில்லை.
    ஆனால் - இல்லையே.... சந்தர்ப்பம், சாட்சிகள்.... இத்யாதி இத்யாதிகள் ...... நிறைய தவறான தீர்ப்புகள் - தாமதமான தீர்ப்புகளைத் தானே பார்க்கிறோம்.

    ReplyDelete
  17. கதையில நீதி உங்களுக்கு போதனை....
    அப்புறம் அந்த டிஸ்கியில பில்மா யாரு?


    நம்ம தளத்தில்:
    பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?

    ReplyDelete
  18. நல்ல கருத்துள்ள கதை அல்ல உண்மை - அடுத்தவன் பொருள் நமக்கெதுக்கு.

    ReplyDelete
  19. விக்கியுலகம் said... 29 30
    அட எங்கேய்யா போனீர்கள் லகுட பாண்டிகளா...அண்ணன் வைட் பண்றாரு இல்ல...மும்மூர்த்திகளும் வரவும் ஹிஹி!//

    அவிங்க தெரிச்சி ஓடி பலமணி நேரமாச்சுடா வெண்ணை......

    ReplyDelete
  20. அப்பு said...
    நல்ல கதை.
    ஆனால் மனோ - நம்ம கதையில வர்ற நீதிபதி மாதிரி நல்ல நீதிபதிகள் எல்லா நீதி மன்றங்களிலும் இருந்து விட்டால் பிரச்சனையில்லை.
    ஆனால் - இல்லையே.... சந்தர்ப்பம், சாட்சிகள்.... இத்யாதி இத்யாதிகள் ...... நிறைய தவறான தீர்ப்புகள் - தாமதமான தீர்ப்புகளைத் தானே பார்க்கிறோம்.//

    எப்பிடி சைக்காலஜிக்கா தீர்ப்பு சொல்லியிருக்கார் பாருங்க, ஆச்சர்யமா இருக்கு..!!!

    ReplyDelete
  21. தமிழ்வாசி - Prakash said...
    கதையில நீதி உங்களுக்கு போதனை....
    அப்புறம் அந்த டிஸ்கியில பில்மா யாரு?//

    தெரிஞ்சும் தெரியாத மாதிரியே நடிக்கிரியேய்யா ஹி ஹி...

    ReplyDelete
  22. மனசாட்சி said...
    நல்ல கருத்துள்ள கதை அல்ல உண்மை - அடுத்தவன் பொருள் நமக்கெதுக்கு.//

    அதே அதே அதேதான்....

    ReplyDelete
  23. "பேராசை பெரு நஷ்டம்"

    உண்மைதான் மக்கா....

    ReplyDelete
  24. சங்கவி said...
    "பேராசை பெரு நஷ்டம்"

    உண்மைதான் மக்கா.....//

    mikka nanri...

    ReplyDelete
  25. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    நல்ல கதை.//

    மிக்க நன்றி...

    ReplyDelete
  26. அப்பா சொன்னாலும் ஆசிரியர் சொன்னாலும் கடைபிடிக்க மனம் வேண்டும்

    பகுக்க தெரிந்த மனம் இருக்கையில்
    பரந்த உலகம் சொந்தமய்யா

    ReplyDelete
  27. அ. வேல்முருகன் said... 53 54
    அப்பா சொன்னாலும் ஆசிரியர் சொன்னாலும் கடைபிடிக்க மனம் வேண்டும்

    பகுக்க தெரிந்த மனம் இருக்கையில்
    பரந்த உலகம் சொந்தமய்யா//

    நூறு சதவீதம் உண்மை நண்பரே....

    ReplyDelete
  28. தங்கள் தந்தை உலகுக்கு
    அருமையான மகனைப் போலவே
    அருமையான கதையையும் கொடுத்துள்ளார் என
    நினைக்க மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது
    அருமையான கதை அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  29. Ramani said... 57 58
    தங்கள் தந்தை உலகுக்கு
    அருமையான மகனைப் போலவே
    அருமையான கதையையும் கொடுத்துள்ளார் என
    நினைக்க மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது
    அருமையான கதை அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி குரு.....

    ReplyDelete
  30. மாப்ள கதை பிரிண்ட் எடுத்துகிட்டேன்... உங்க அப்பாவ போல நாங்களும் சிறந்த அப்பாவாக இருப்போம்ல... ஹா ஹா ஹா நன்றி மனோ ஜீ...

    ReplyDelete
  31. ////என் அப்பா என்னை மடியில் உக்காரவச்சி சொன்ன நீதி : என்னைக்குமே அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது, ஆசைபட்டு சபைமுன் தலைகுனிந்து நிற்கக்கூடாது என்பதே....!!!
    /////

    மிகவும் அற்புதமான ஒரு நீதி உங்கள் அப்பா சொன்னது.

    இந்தக்கதையில் அந்த நீதிபதியின் புத்திசாலித்தனம் சிறப்பானது

    ReplyDelete
  32. அருமையாக கதை... மனோ சார்

    ReplyDelete
  33. அருமையான கதை பாஸ்! டிஸ்கி சரியாப் புரியல!
    COOOOL! :-)

    ReplyDelete
  34. ஆமாம்.... காலை முதல் மாலை வரை இடையறாத பணிகளுக்கு இடையில் இதைப் படிச்சா, சூப்பராவும் இருக்கும்... சூப்புற மாதிரியும் இருக்கும்....
    The buckle or clasp is a device used for fastening two loose ends, with one end attached to it and the other held by a catch in a secure but adjustable manner.[1] Usually overlooked and taken for granted, the invention of the buckle has been indispensable in securing two ends before the invention of the zipper. The basic buckle frame comes in a variety of shapes and sizes dependent on the intended use and fashion of the era.[2] Buckles are still in very much use today as they have been in the past with more than just securing one’s belt, but being one of the most dependable devices in securing a range of items.

    #யோவ்.... இந்தப் பதிவுல மயிரிலி அப்டீங்ரா மாரி எதுவும் பேரு யூஸ் பண்ணி இருக்கீங்களா? எனக்கு ஏனோ கமெண்டு கொஞ்சம் காட்டம் காட்டமா வருது....
    :)

    ReplyDelete
  35. நல்ல நீதிக்கதைகளைச் சொல்லி வளர்த்திருக்கும் தந்தை மீதும் தனயன் மீதும் மரியாதை அதிகரிக்கின்றது. எப்போதும் நீதிதான் வெல்லும் என்பதைச் சொல்லும் தீர்ப்பாளர் நல்ல சாமர்த்தியசாலி!

    ReplyDelete
  36. மணத்தில் நீங்கள் மலரனும் என்பதே என் போன்ற வாசகர்களின் தீராத பிரார்த்தனை பலபதிவுகளை நேரடியாகவருவதற்கு நேரம் கிடைப்பது குறைவான போது திரட்டிதான் கொண்டுவந்து காட்டும் கண்ணாடி இது என் தனிப்பட்ட கருத்து விரும்பினால் வலையில் இருக்கட்டும் அல்லது அவர் பாசையில் நினையுங்கள் ! செம்பை நெளிக்கமுடியாத அளவு பலமான அடி மக்கா உள்ளத்தில்!

    ReplyDelete
  37. தம்பி லேப்டாப் மனோவுக்கு வணக்கம்.. டிஸ்கியில் உனது நேரடி தாக்கல் கண்டேன், மகிழ்ச்சி..

    ReplyDelete
  38. நட்பை இப்படி நிரூபிக்கனும்னு அவசியமா என்ன? என்றென்றும் நீ, ராம்சாமி, விக்கி , அனைவரும் நண்பர்கள் தான்..

    ReplyDelete
  39. என்னது டிஸ்கி யா?

    ஓடுலே.. ஓடு...

    மக்கா நட்பு இதைவிட உயர்ந்தது. என்றுமே நீங்க நண்பர்தான் இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அதை இப்படித்தான் நிருபிக்க வேண்டுமா என்ன?

    ReplyDelete
  40. அப்பாவி விக்கியும் எனக்கு பதிவு உலகில் முதல் நண்பர்..

    எப்போதும்.....

    ReplyDelete
  41. //மானமில்லாமல் "பில்மா" நண்பனும் ஹிட்ஸ்'காக நண்பனா இருந்திருக்கிறான்னு நினைக்கும் போது "கருணை"யோடும் "கவிதையோடும்" மனது கனக்கிறது....!!!


    //
    என்ன குழப்பம் இது ?

    ReplyDelete
  42. என்னைக்குமே மத்தவங்க பொருளுக்கு ஆசைப்படக் கூடாது// நல்ல நீதி ..

    அருமையான அப்பா..

    ReplyDelete
  43. நான்கு கிலோ தங்கத்தில் ஒரு பீஸில் கூட கை வைக்க மனமில்லை - ஹேட்ஸ் ஆப்..

    ReplyDelete
  44. அருமையான நீதிக்கதை மனோ.

    நிதியை எதிர்பார்க்காத நீதிபதி. நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கார்.

    ReplyDelete
  45. கதை நன்றாக இருந்தது...

    அப்புறம் நாம நல்ல மனதோடு இருக்கும் வரை எந்த பிரச்சனையும் கிடையாது. எனவே விட்டுத்தள்ளுங்க. நல்லவராவே இருப்போம்.

    ReplyDelete
  46. என் அப்பா என்னை மடியில் உக்காரவச்சி சொன்ன நீதி : என்னைக்குமே அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது, ஆசைபட்டு சபைமுன் தலைகுனிந்து நிற்கக்கூடாது என்பதே....!!!



    அந்த நீதி போதனைதான், நான் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த நாட்களில் அந்த நடனக்காரி நண்பிக்கு கொடுத்த நான்கு கிலோ தங்கத்தில் ஒரு பீஸில் கூட கைவைக்க மனமில்லை என நினைக்கிறேன், [[அப்பாவுக்கு நன்றி]]


    நடனக்காரி நண்பி
    நான்கு கிலோ தங்கத்தில்
    நாட்டமில்லாத
    நாஞ்சில் மனோவுக்கு
    நிறைந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்..
    !

    ReplyDelete
  47. //"One father is more than a hundred Schoolmasters." //
    பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  48. உங்கள் அப்பா சொன்ன கதைகளை நீங்கள் உங்கள் மகனுக்கும் சொல்வீர்கள்தானே!

    ReplyDelete
  49. நல்ல நீதிக்கதை மனோ... அடுத்தவர்கள் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது தான் நல்லது....

    ReplyDelete
  50. வணக்கம் மனோ!
    இந்த கதை கட்டாயம் அந்த காலத்தில் ந்டந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.. அப்போது நீதி நாயம் கொஞ்சமாவது இருந்துச்சு வாக்கு தவறாதவங்க அவங்க!!

    ReplyDelete
  51. தனிமரம் said...
    மணத்தில் நீங்கள் மலரனும் என்பதே என் போன்ற வாசகர்களின் தீராத பிரார்த்தனை பலபதிவுகளை நேரடியாகவருவதற்கு நேரம் கிடைப்பது குறைவான போது திரட்டிதான் கொண்டுவந்து காட்டும் கண்ணாடி இது என் தனிப்பட்ட கருத்து விரும்பினால் வலையில் இருக்கட்டும் அல்லது அவர் பாசையில் நினையுங்கள் ! செம்பை நெளிக்கமுடியாத அளவு பலமான அடி மக்கா உள்ளத்தில்!

    எனது ஆசையும் அதுதான் நீங்கள் மட்டுமல்ல போன அனைவரும் திரும்பி வரனும்..

    ஒன்று மட்டும் உறுதி நீங்கள் திரட்டியில் இல்லாவிடினும் நான் உன் வீடு தேடி வருவேன் மக்கா!!

    ReplyDelete
  52. சி.பி.செந்தில்குமார் said...
    நட்பை இப்படி நிரூபிக்கனும்னு அவசியமா என்ன? என்றென்றும் நீ, ராம்சாமி, விக்கி , அனைவரும் நண்பர்கள் தான்..//

    நீ என்றைக்கும் என் உயிர் நண்பன்தாண்டா, சும்மா வாரனும்னு வாருனேன் ஹி ஹி....

    ReplyDelete
  53. வேடந்தாங்கல் - கருன் *! said...
    என்னது டிஸ்கி யா?

    ஓடுலே.. ஓடு...

    மக்கா நட்பு இதைவிட உயர்ந்தது. என்றுமே நீங்க நண்பர்தான் இதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். அதை இப்படித்தான் நிருபிக்க வேண்டுமா என்ன?//

    ஹா ஹா ஹா ஹா உண்மை சத்தியம் ஹி ஹி....

    ReplyDelete
  54. காட்டான் said...
    தனிமரம் said...
    மணத்தில் நீங்கள் மலரனும் என்பதே என் போன்ற வாசகர்களின் தீராத பிரார்த்தனை பலபதிவுகளை நேரடியாகவருவதற்கு நேரம் கிடைப்பது குறைவான போது திரட்டிதான் கொண்டுவந்து காட்டும் கண்ணாடி இது என் தனிப்பட்ட கருத்து விரும்பினால் வலையில் இருக்கட்டும் அல்லது அவர் பாசையில் நினையுங்கள் ! செம்பை நெளிக்கமுடியாத அளவு பலமான அடி மக்கா உள்ளத்தில்!

    எனது ஆசையும் அதுதான் நீங்கள் மட்டுமல்ல போன அனைவரும் திரும்பி வரனும்..

    ஒன்று மட்டும் உறுதி நீங்கள் திரட்டியில் இல்லாவிடினும் நான் உன் வீடு தேடி வருவேன் மக்கா!!//

    என் நண்பர்களுக்கு மரியாதை இல்லாத இடம் எனக்கு வேண்டாம் மக்கா, உங்கள் அதீத அன்பும் ஆதரவுமே எனக்கு போதும்யா....

    வீடுதேடி வந்து கல்லெறியும் அன்புக்கு தலைவணங்குகிறேன்....ஹி ஹி....

    ReplyDelete
  55. வேடந்தாங்கல் - கருன் *! said...
    அப்பாவி விக்கியும் எனக்கு பதிவு உலகில் முதல் நண்பர்..

    எப்போதும்.....//

    அந்த ராஸ்கல் சண்டைகோழி ஆச்சே ஹா ஹா ஹ ஹா ஹா...

    ReplyDelete
  56. அப்பான்னா அப்பா தான்..
    என்ன அழகா சொல்லியிருகாங்க பாருங்க..

    அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதே..
    அங்கேயே முடிஞ்சுதுய்யா நிறையா விஷயங்கள்..

    அப்படி ஆசைப்பட்டு அடுத்தவன் முன்னாடி தலைகுனிந்து நிற்காதே..
    அப்படி போடுங்க .. இந்த மாதிரி ஒரு கேவலத்தை அனுபவிக்க கூடாது..

    சொன்னவங்க காலை தொட்டு கும்பிடனும் மக்களே....

    ReplyDelete
  57. எந்தக் காலத்திலும் தலைமுறை தாண்டினாலும் இந்த நீதிக்கதையை சொல்லிக்கொடுக்கலாம் !

    ReplyDelete
  58. me the firstu..(sorry konjam lateu)

    ReplyDelete
  59. அட என்ன ஒரு கதை அல்ல நீதிக்கதை
    நிஜமாவ ஒரு சூப்பர் போஸ்ட்

    ReplyDelete
  60. slide show vara hero yarunga..
    annachi..

    supera erukkaru..

    ReplyDelete
  61. நல்ல கருத்துக்கள் நண்பா... அருமையான எழுத்து நடை...

    ReplyDelete
  62. நாட்டாமை தீர்ப்புக்கு நிகரில்லை!

    அதி புத்திசாலி நீதிபதி!

    நன்றி! மனோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  63. மிகவும் அருமையான நீதிக்கதைணே..!! பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  64. மனோ,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தியுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!