Sunday, June 26, 2011

அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடர்ச்சி...4


டிஸ்கி : இந்த பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி" அட்டகாசமா நம்மை ரசிச்சிட்டு இருந்ததை எத்தனை பேர்கள் கவனிச்சீங்க சொல்ல முடியுமா......??!!!! 


தொடரும் காதல்..........!!!!!

அந்த காதல் ஜோடி ரத்னவேல் அய்யாவும் அவர் மனைவியும்தான்....!!! எனக்கு முதலில் அய்யாவின் மனைவியை சரியாக அடையாளம் தெரியவில்லை, அவர்களும் ஒரு பதிவரா இருக்ககூடும் என்றே கருதினேன். 


அவர்கள் இருவரும் நம்மை எல்லாம் குழந்தைகளாக எண்ணி ரசிச்சிட்டு இருந்ததை நான் கவனிச்சிட்டே இருந்தேன்...!!!


மைக் கைமாறி கைமாறி போகும் போது ரத்னவேல் அய்யா பேசியதும் அடுத்து அவர் மனைவிக்கு போகாமல் வேறு பதிவர் கைக்கு மைக் போனதும் மைல்டா ஒரு டவுட் வந்தது. 


அப்புறம் பதிவர் சந்திப்பு முடிந்து சாப்பாட்டு நேரம்தான் கவனித்தேன். அவர்கள் ஜோடியாக இருந்து சாப்பிட்டு கொண்டிருப்பதை....!!! அப்புறம்தான் இந்த மரமண்டைக்கு புரிஞ்சது ஆஹா இது தம்பதிகள்ன்னு, 


நான் அருகில் போயிருந்து பேசிகொண்டிருக்கும் போதே பாப்பா'ம்மா கல்பனாவும் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து பேசி கொண்டிருந்தாள். நல்ல அன்பாக என்னை நலம் விசாரித்தார்கள்.


அவர்கள் பிளாக்கை பற்றியும், அவர்கள் ஒரு சரணாலயத்தை பற்றி எழுதி இருந்ததை பற்றியும் அய்யா'கிட்டே கேட்டதும், பதில் வந்தது அம்மாகிட்டே இருந்துதான்...!!! எனக்கு அப்பமே நல்லா புரிஞ்சி போச்சி இது சூப்பர் டூப்பர் "காதல்" ஜோடின்னு....!!!


இவர்கள் பறவைகளையும், மிருகங்களையும் அருமையா நேசிக்கிறவர்கள் என்பது அவர்கள் பதிவுகளிலும் நான் நேரில் பார்த்த போதும் நன்றாக உணர்ந்து கொண்டேன். 


பூர்வ ஜென்மம் என்பது உண்மையா....??? நான் அதை நம்புகிரவனில்லை, ஆனால் இந்த அன்பின் இணைபிரியா தம்பதிகள் எனக்கு தாய், தந்தையாக தோன்றியது எப்படி....??? என் தங்கச்சி பாப்பாவும் அவர்கள் அருகில் வந்திருந்து பேசி கொண்டிருந்தாளே இது என்ன உறவு...??!!!!!


நினச்சி பார்க்கும் போது ஆச்சர்யமா இருக்கு...!!! ஒருவேளை எனது மூதாதையர் விருதுநகரில் இருந்து பிழைப்புக்காக கன்னியாகுமரி வந்ததால், அந்த மண் பாசமா..??!!! அல்லது நான் நம்பாமல் இருக்கும் பூர்வஜென்ம பந்தமா..?!!! மலைப்பாக இருக்கிறது மனதில்.....!!!!


இந்த "காதல்" ஜோடி நேரில் மட்டுமில்லை போட்டோவிலும் இணை பிரிவதில்லை என்பது இன்னும் என்னை ஆச்சர்ய படுத்தும் விஷயம்...!!!


டிஸ்கி : இவர்களும் அவர்கள் தம் குடும்பமும் பல்லாண்டு வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ ஆண்டவனை வேண்டுகிறேன்.


டிஸ்கி : நெட் என்னை விட வேகம் குறைவாக இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை.

           நேசம் தொடரும்............

அடுத்த பதிவில் ஆபீசர் வருகிறார் கையில் விலங்குடன், ஒடுங்கலேய் ஒடுங்கலேய்.....

டிஸ்கி : போட்டோ எல்லாம் ரத்னவேல் அய்யா பதிவில் இருந்து சுட்டது. அவர் பிளாக் லிங்க் கீழே......

56 comments:

  1. அருமை அருமை
    இந்தப் பதிவை ரத்னவேல் காதல் தம்பதிகளுக்கு
    அர்பணித்ததை மிகவும் ரசித்தேன்
    அவர்கள் பிறஉயிர்கள் மீதாக கொண்டுள்ள நேசத்தை
    விளக்கும் விதமாக அவர்கள் வீட்டு பறவைகள் சரணாலய படத்தை
    இணைப்பாக சேர்த்ததும் அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //இவர்களும் அவர்கள் தம் குடும்பமும் பல்லாண்டு வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ ஆண்டவனை வேண்டுகிறேன்.//
    நானும் வேண்டுகிறேன்!

    ReplyDelete
  3. சிவனும் பார்வதியும் இணைந்து பார்க்கும்போது அம்மையப்பன் என்றுதானே எண்ணிப்பழக்கம். அந்த பிரியம் இதுபோல வெளிப்படும். (எங்கள் ஊர் பக்கம் காலடி மண் எடுத்து சுற்றி போட சொல்வார்கள். )

    ReplyDelete
  4. ஷர்புதீன் said...
    maamaa, naanthan fasttu//

    என்னாது மாமாவா...??? அவ்வ்வ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  5. Ramani said...
    அருமை அருமை
    இந்தப் பதிவை ரத்னவேல் காதல் தம்பதிகளுக்கு
    அர்பணித்ததை மிகவும் ரசித்தேன்
    அவர்கள் பிறஉயிர்கள் மீதாக கொண்டுள்ள நேசத்தை
    விளக்கும் விதமாக அவர்கள் வீட்டு பறவைகள் சரணாலய படத்தை
    இணைப்பாக சேர்த்ததும் அருமை
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//

    மிக்க நன்றி குரு....

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...
    //இவர்களும் அவர்கள் தம் குடும்பமும் பல்லாண்டு வாழ்ந்து முன்னுதாரணமாக திகழ ஆண்டவனை வேண்டுகிறேன்.//

    நானும் வேண்டுகிறேன்!//

    நன்றி நன்றி தல.....

    ReplyDelete
  7. சாகம்பரி said...
    சிவனும் பார்வதியும் இணைந்து பார்க்கும்போது அம்மையப்பன் என்றுதானே எண்ணிப்பழக்கம். அந்த பிரியம் இதுபோல வெளிப்படும். (எங்கள் ஊர் பக்கம் காலடி மண் எடுத்து சுற்றி போட சொல்வார்கள். )//

    ஓஹோ அப்பிடியெல்லாம் இருக்கா...?? ஆச்சர்யமா இருக்கே...!!!

    ReplyDelete
  8. //நெட் என்னை விட வேகம் குறைவாக இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை.//BAHRAIN ஞாபகம் வருதா?.

    ReplyDelete
  9. அருமையான தம்பதிகள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. Very Nice Photos And Also Couple. Super Anna.

    ReplyDelete
  11. எலேய் மக்கா நன்றிலே.....அழகான காதல் ஜோடியை பதிவாக்கியதுக்கு

    ReplyDelete
  12. கும்ம முடில.. சீரியசா எழுதி இருக்கே பொழச்சிப்போடா..

    ReplyDelete
  13. நல்லதொரு உதாரணத் தம்பதிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

    அப்புறம் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன்.பாருங்க.

    ReplyDelete
  14. நெகிழ்ச்சியான தொடர்
    மனதை கொள்ளை கொள்கிறது
    அண்ணாச்சி.............

    ReplyDelete
  15. பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி"

    பற்றிய விபரங்கள், புகைப்படங்கள் எல்லாமே மிகச்சிறப்பாக உள்ளன.

    உண்மையான முதிர்ச்சியான காதலும், பாசமும், நேசமும் இதுபோன்ற அனுபவசாலியான அதிர்ஷ்டசாலியான அருமையான தம்பதியிடம் தான் காணமுடியும்.


    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. பதிவர் சந்திப்பின் ஹைலைட் இதுவல்லவா, ஏன் சொல்லவில்லை? அருமை அருமை.

    ReplyDelete
  17. எனது மனமார்ந்த நமஸ்காரங்கள், அந்த ஆத்மார்த்த தம்பதிகளுக்கு.

    ReplyDelete
  18. அருமை அருமை
    இந்தப் பதிவை ரத்னவேல் காதல் தம்பதிகளுக்கு
    அர்பணித்ததை மிகவும் ரசித்தேன்

    ReplyDelete
  19. நெகிழ்ச்சியான தொடர்
    மனதை கொள்ளை கொள்கிறது

    ReplyDelete
  20. M.G.ரவிக்குமார்™..., said...
    //நெட் என்னை விட வேகம் குறைவாக இருப்பதால் விரிவாக எழுத முடியவில்லை.//BAHRAIN ஞாபகம் வருதா?.//

    அட ஆமா மக்கா........!!!

    ReplyDelete
  21. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அருமையான தம்பதிகள்..//

    ஆமாய்யா.....!!!

    ReplyDelete
  22. பலே பிரபு said...
    Very Nice Photos And Also Couple. Super Anna.//

    நன்றி தம்பி......

    ReplyDelete
  23. விக்கியுலகம் said...
    எலேய் மக்கா நன்றிலே.....அழகான காதல் ஜோடியை பதிவாக்கியதுக்கு//

    நன்றி அண்ணே.....

    ReplyDelete
  24. சி.பி.செந்தில்குமார் said...
    கும்ம முடில.. சீரியசா எழுதி இருக்கே பொழச்சிப்போடா..//

    சரிடா அண்ணே.......

    ReplyDelete
  25. செங்கோவி said...
    நல்லதொரு உதாரணத் தம்பதிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

    அப்புறம் உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன்.பாருங்க.//

    பதில் அனுப்பிட்டேன் மக்கா......

    ReplyDelete
  26. A.R.ராஜகோபாலன் said...
    நெகிழ்ச்சியான தொடர்
    மனதை கொள்ளை கொள்கிறது
    அண்ணாச்சி...........//

    மிக்க நன்றி கோபால்....

    ReplyDelete
  27. வை.கோபாலகிருஷ்ணன் said...
    பதிவர் சந்திப்பில் "ஒரு காதல் ஜோடி"

    பற்றிய விபரங்கள், புகைப்படங்கள் எல்லாமே மிகச்சிறப்பாக உள்ளன.

    உண்மையான முதிர்ச்சியான காதலும், பாசமும், நேசமும் இதுபோன்ற அனுபவசாலியான அதிர்ஷ்டசாலியான அருமையான தம்பதியிடம் தான் காணமுடியும்.


    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி அய்யா......

    ReplyDelete
  28. FOOD said...
    பதிவர் சந்திப்பின் ஹைலைட் இதுவல்லவா, ஏன் சொல்லவில்லை? அருமை அருமை.//

    சொல்லிட்டா நீங்க முந்திடுவீங்களே ஆபீசர் பதிவெழுத ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  29. FOOD said...
    எனது மனமார்ந்த நமஸ்காரங்கள், அந்த ஆத்மார்த்த தம்பதிகளுக்கு.//

    நன்றி ஆபீசர்......

    ReplyDelete
  30. மாலதி said...
    அருமை அருமை
    இந்தப் பதிவை ரத்னவேல் காதல் தம்பதிகளுக்கு
    அர்பணித்ததை மிகவும் ரசித்தேன்//

    மிக்க நன்றி மாலதி.....

    ReplyDelete
  31. நெகிழ்ச்சியான தொடர்
    மனதை கொள்ளை கொள்கிறது//

    நன்றிங்க......

    ReplyDelete
  32. நீங்களும் சிபியும் இதே போல நல்ல ஜோடி தான்.உங்களைப் பத்தியும் ஒரு பதிவு போடலாம் போல!..

    ReplyDelete
  33. நான் சரியா கண்டு பிடிச்சு ரத்னவேல் ஐயாவுக்கு என் பதிவில் க்ளு கொடுத்திட்டேன் அருமையான ஜோடி.

    ReplyDelete
  34. ஹிஹி நெல்லை தொடரட்டும்..என்னாது ஆபீசர் வாராரா???எஸ்ஸா??ஹிஹி

    ReplyDelete
  35. மக்கா.... ஊருக்கு வந்தாலும் வந்திங்க... நல்லநல்ல பதிவா போடுறிங்களே....

    ReplyDelete
  36. ங்கொய்யால செண்ட்மெண்ட போட்டு தப்பிச்சிட்ட.... ரைட் விடு....!

    ReplyDelete
  37. அடுத்து ஆப்பிசர் வரட்டும் அப்புறம் இருக்குடி....!

    ReplyDelete
  38. //அவர்கள் இருவரும் நம்மை எல்லாம் குழந்தைகளாக எண்ணி ரசிச்சிட்டு இருந்ததை நான் கவனிச்சிட்டே இருந்தேன்...!!!//

    அண்ணே "நம்மை" என்று சொல்லி உங்களையும் சேர்த்துக்கிட்டிங்க?

    ReplyDelete
  39. மனோ - தங்கள் பதிவை படித்து மிகவும் நெகிழ்ந்து விட்டேன். நன்றி. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    பதிவர் சந்திப்பில் இருந்த நிலைமை - ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஏதாவது எங்கள் உறவில் விசேஷம் என்றால் எங்கள் வீட்டில் தான் எனது மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் , எனது தம்பி பெண், மகன், எனது தங்கையின் இரட்டை பையன்கள் எல்லோரும் கூடுவார்கள். அன்று சந்தோஷ அரட்டை தூள் பறக்கும். எனது மனைவி என்னை கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நான் நிறைய சிரித்தால் ஆஸ்த்மாவினால் இளைப்பு வந்து விடும். எனவே போதும் போதும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அன்று அதே நிலைமை தான் திருநெல்வேலியில் இருந்தது. சிபி, நீங்கள் எல்லாம் பேசும் போது எனது பிள்ளைகளாக தான் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆஹா நமது பிள்ளைகள் எப்படி பேசுகிறார்கள் என்று ரசித்துக் கொண்டிருந்தேன்.
    அடுத்து சாப்பாட்டைப் பற்றி, நான் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று அவர்கள் தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள், ஏதாவது ஒவ்வாத உணவு என்றால் இலையில் வைக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அதனால் தான் எந்த விழா என்றாலும் சேர்ந்து உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். நான் மட்டும் தனியாக போவது கிடையாது. அதற்கு உடல் ஒத்துழைக்காது. அவர்கள் என்னை எங்களது மூன்று பையன்களோடு நான்காவது குழந்தையாக தான் வளர்க்கிறார்.
    கலந்து கொண்ட எல்லோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    நன்றி மனோ.

    ReplyDelete
  40. vanathy said...
    lovely couples!!//

    ஆமாம்'ப்பா.....!!!

    ReplyDelete
  41. M.G.ரவிக்குமார்™..., said...
    நீங்களும் சிபியும் இதே போல நல்ல ஜோடி தான்.உங்களைப் பத்தியும் ஒரு பதிவு போடலாம் போல!..//

    ஹா ஹா ஹா ஹா அந்த ராஸ்கல பற்றி பேசாதீங்க மக்கா ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  42. நாய்க்குட்டி மனசு said...
    நான் சரியா கண்டு பிடிச்சு ரத்னவேல் ஐயாவுக்கு என் பதிவில் க்ளு கொடுத்திட்டேன் அருமையான ஜோடி.//

    ஹா ஹா ஹா ஹா கரிக்க்ட்டு......!!!

    ReplyDelete
  43. மைந்தன் சிவா said...
    ஹிஹி நெல்லை தொடரட்டும்..என்னாது ஆபீசர் வாராரா???எஸ்ஸா??ஹிஹி//

    ஓடிராதேய்யா ஆபீசர் ரொம்ப நல்லவர் நம்ம சத்யராஜ் மாதிரி, தப்பு செய்தாதான் செவில்ல அடி விழும் இல்லைன்னா குழந்தை மாதிரி பார்த்துப்பார்...

    ReplyDelete
  44. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா.... ஊருக்கு வந்தாலும் வந்திங்க... நல்லநல்ல பதிவா போடுறிங்களே....//

    உசுப்பெத்துராயிங்களே அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  45. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ங்கொய்யால செண்ட்மெண்ட போட்டு தப்பிச்சிட்ட.... ரைட் விடு....!//

    அடப்பாவிகளா போட்டு தாக்க இம்புட்டு வேகமாவா வந்திரு ஒய்....

    ReplyDelete
  46. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அடுத்து ஆப்பிசர் வரட்டும் அப்புறம் இருக்குடி....!//


    ஹி ஹி ஹி ஹி மக்கா எனக்கா ஆபீசருக்கா...?

    ReplyDelete
  47. THOPPITHOPPI said...
    //அவர்கள் இருவரும் நம்மை எல்லாம் குழந்தைகளாக எண்ணி ரசிச்சிட்டு இருந்ததை நான் கவனிச்சிட்டே இருந்தேன்...!!!//

    அண்ணே "நம்மை" என்று சொல்லி உங்களையும் சேர்த்துக்கிட்டிங்க?//

    ஆஹா கொலை வெறியாதான் என்னை பாக்குரீன்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  48. நெஞ்சம் நிகிழ்கிறது அண்ணா
    வாழ்க வளமுடன்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
    வாழ்க உங்கள் தொண்டு.

    ReplyDelete
  49. Rathnavel said...
    மனோ - தங்கள் பதிவை படித்து மிகவும் நெகிழ்ந்து விட்டேன். நன்றி. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    பதிவர் சந்திப்பில் இருந்த நிலைமை - ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஏதாவது எங்கள் உறவில் விசேஷம் என்றால் எங்கள் வீட்டில் தான் எனது மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் , எனது தம்பி பெண், மகன், எனது தங்கையின் இரட்டை பையன்கள் எல்லோரும் கூடுவார்கள். அன்று சந்தோஷ அரட்டை தூள் பறக்கும். எனது மனைவி என்னை கவனித்துக் கொண்டே இருப்பார்கள். நான் நிறைய சிரித்தால் ஆஸ்த்மாவினால் இளைப்பு வந்து விடும். எனவே போதும் போதும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அன்று அதே நிலைமை தான் திருநெல்வேலியில் இருந்தது. சிபி, நீங்கள் எல்லாம் பேசும் போது எனது பிள்ளைகளாக தான் நினைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஆஹா நமது பிள்ளைகள் எப்படி பேசுகிறார்கள் என்று ரசித்துக் கொண்டிருந்தேன்.
    அடுத்து சாப்பாட்டைப் பற்றி, நான் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று அவர்கள் தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள், ஏதாவது ஒவ்வாத உணவு என்றால் இலையில் வைக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அதனால் தான் எந்த விழா என்றாலும் சேர்ந்து உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். நான் மட்டும் தனியாக போவது கிடையாது. அதற்கு உடல் ஒத்துழைக்காது. அவர்கள் என்னை எங்களது மூன்று பையன்களோடு நான்காவது குழந்தையாக தான் வளர்க்கிறார்.
    கலந்து கொண்ட எல்லோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    நன்றி மனோ.//


    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம், வாழ்த்துக்கள் அய்யா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும், உடம்பை நல்லா கவனிச்சிகொங்க ஆண்டவர் துணை எப்போதும் உங்களுக்கு உண்டு...

    ReplyDelete
  50. மக்கா அருமையான அறிமுகம்....

    தங்களது மிகச்சிறந்த பதிவில் இப்பதிவிற்கு தனி இடம்...

    ReplyDelete
  51. நல்ல தம்பதிகள்

    வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  52. நல்லதொரு உதாரண தம்பதிகள்.. இவங்க ஆசீர்வாதம் நமக்கெல்லாம் என்னிக்கும் வேணும்..

    ReplyDelete
  53. இக் காலத்தில் இணை பிரியாத அன்றில்களாக நாம் அனைவரும் வாழகப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக ரத்னவேல் ஐயா தம்பதிகள் விளங்குகிறார்கள்.

    வாழ்த்துக்கள் ஐயா,

    பகிர்விற்கு நன்றி மனோ அண்ணாச்சி.

    ReplyDelete
  54. இனிய தம்பதிகளின் இனிய பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!