Monday, June 27, 2011

அதிரடி [[நெல்லை]] சந்திப்பு கடைசி பாகம்

ஆபீசர் சங்கரலிங்கம், ஆக்கபூர்வமான செயல்பாட்டின் தந்தை என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அவர் மனசு ஒரு பிஞ்சி குழந்தையின் மனசு என்பது நான் பார்த்து பேசி பழகி, அவரிடம் உணர்ந்து கொண்டேன்...!!!!

நான் சந்திப்புக்கு வந்ததே ஒருமணி நேரம் லேட்டாதான், ஹாலில் நுழைந்ததுமே என்னை தெரிந்து கொண்டு உள்ளே அழைத்து [[இம்சை அரசனும்'தான்]] அருகில் அமர்த்தி அழகு பார்த்தார். மைக்கும் உடனடியாக என்னிடம் தந்தார் ஆபீசர்....!!! [[சிபி அப்போது கீழே கல்லை தேடினான் என்று அப்புறமாதான் செல்வா சொன்னான் குற்றாலத்தில் வைத்து ம்ஹும் ராஸ்கல்]]


ஒவ்வொரு பதிவராக பேசி கொண்டிருக்கும் போதே, இடையிடையே வெளியே போயிட்டும் வந்துட்டும் இருந்தார் ஆபீசர். நான் கவனிச்சிட்டே இருந்தேன். அது மீடியா'காரர்களுக்கு அட்வைஸ் செய்யவும், சாப்பாடு ரெடி ஆகிருச்சா'ன்னும் அக்கறையோடு பார்த்து கொண்டிருந்தார்....!!!


இடையிடையே வந்து சபையை கண்ட்ரோலிலும் வச்சிகிட்டார் நேர்த்தியாக, போட்டோ எப்பிடி எப்பிடி எடுக்க வேண்டும்னு டைரக்ஷன் சொல்லிட்டும் இருந்தார். 




ஆக்கப்பூர்வமாக உண்டியல் பணம் வசூல் செய்து ஒரு பெரிய சாதனையை செய்தும் காட்டினார் மட்டுமல்லாது அதை தொடரவும் செய்கிறார் தன்னடக்கமாக....!!!

அப்புறமா சூப்பரா பதிவர் சந்திப்பு முடிஞ்சதும், சாப்பிட போனோம் பஃபே சாப்பாடு அருமையா செய்து இருந்தார்கள் [[பின்னே பிடிச்சி உள்ளே கிள்ளே போட்டுற போறாருன்னு பயந்துட்டாயின்களோ]] ஆபீசர் பம்பரமாக சுழண்டு கொண்டு இருந்தார், அவர் சொன்னது போல இது குடும்ப விழா ஆச்சே யாரும் மனசு நோகாமல் இருக்கணுமே என்ற அக்கறை அவர் கண்ணில் தெரிஞ்சது...!!!


எல்லாரும் திருப்தியா சாப்பிட்டோம் சிபி தவிற, ராஸ்கல் பத்து பிளேட் உள்ளே தள்ளிட்டு சர்வர் கையில ஆப்பை அடி வாங்குன பின்பும் சாப்பாட்டு திசையையே பார்த்துட்டு இருந்தான் மூதேவி...[[ஹா ஹா ஹா மாட்டுனியாடா]]


எல்லாரும் கை குலுக்கியும் கும்பிட்டும் பி......ரி.......யா......விடை பெற்று கொண்டிருந்தனர் ஆனால் ஆபீசருக்கு இன்னும் எல்லோரும் அவர் கூடவே இருக்க வேண்டும் என்ற தவிப்பு இருந்தது என்னவோ உண்மை, எனக்கும்தான்.....!!!


எல்லாரையும் வழி அனுப்பி விட்டு ஆபீசரும் நானும், சிபியும், கவுசல்யா'வும், செல்வாவுமாக ஹோட்டலுக்கு வெளியே வந்தோம். வந்து ஆபீசர் நம்ம செல்வாவை ஒரு [[ரேடியோ ஜாக்கி]] வேலைக்கு இண்டர்வியூ'க்காக அழைத்து சென்றார்..[[இது செல்வாவுக்கு தெரியாமல் நடந்த சர்பரைஸ்]]



செல்வாவும் ஆபீசரும் போய்விட்டு சிபி தங்கி இருந்த அஞ்சி நட்சத்திர ஹோட்டலுக்கு வந்து விடுவதாக சொல்லி விட்டு அவனை உடன் அழைத்து சென்றார்...!!! ஒரு ஒரு மணி நேரம் கழித்து வந்தார்கள்.


மணி மாலை ஆறு ஆகி இருக்க கிரண் டீவியில் நியூஸ் வந்தது நம் பதிவர் சந்திப்பு பற்றி எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது....!!! நாங்கள் குற்றாலம் போக சிபி தீவிரமாக [[???]] இருந்த படியால் உடனடியாக வெளியே புறப்பட்டோம்.

சிபி ஹோட்டல் ரூமை நாறடித்து விட்டதாக [[ரிஷப்சனில்]] அங்கே ஃபைன் கட்ட சொல்ல அவன் அவர்கள் காலை கட்டி பிடித்து அழுது கொண்டிருந்ததை என் ஓரக்கண்ணால் பார்த்து சந்தோஷமாக ரசித்து கொண்டிருந்தேன் ஹி ஹி ஹி...


அப்புறமாக ஆபீசர் இன்னும் எங்களை அனுப்ப மனம் இல்லாதவராக, சரி வாங்க காப்பி குடிக்கலாம்னு கூப்பிட்டார் சரி ஏதாவது ஹோட்டலில் சாப்பிடிடலாம்னு சொன்னதும், இன்னும் அவருக்கு எங்களை அனுப்ப மனம் இல்லாதவராக, நல்ல காப்பி வேணுமா வேண்டாமான்னு கேட்டார். 

நாங்களும் நல்ல காப்பி வேணும்னு [[பன்னி குட்டியின் அந்த காப்பி இல்லை]] சொல்லவும் சரி அப்போ நம்ம ஆபீசுக்கே போயிருவோம்னு கூட்டிட்டு போனார். அடேங்கப்பா....!!! போற வழியில போற வாரவிங்க எல்லாரும் ஆபீசருக்கு சல்யூட் வைக்கிராயிங்க....!!!

போற வழியில ஒரு இடிச்சி தரைமட்டம் ஆக்கப்பட்ட பில்டிங்கை காட்டி சொன்னார் இதுதான் என் ஆபீசுன்னு [[அவ்வ்வ்வ் சின்ன பிள்ளையை இப்பிடியா கலவர படுத்துறது..?? அதுக்கு தனி பதிவு வச்சிருக்கேன்]] அந்த இடிக்கப்பட்ட இடம்தான் முன்னால் ஆபீசாக செயல்பட்டுள்ளதாம், இப்போது அதே இடத்தில் புதுசா ஆபீஸ் கட்டுவதாக சொன்னார்...


அப்புறமா தற்காலிகமாக செயல்படும் ஆபீசுக்கு அன்புடன் அழைத்து சென்றார். எங்களை அமர வைத்து காப்பி வாங்கி தந்தார் [[சிபி காப்பி குடிக்கமாட்டானாம் பால்'தான் குடிப்பானாம், ராஸ்கல் பச்சை புள்ளைன்னு நாம புரிஞ்சிகிடனுமாம் போடாங்]] சூப்பரா இருந்துச்சு. இடையே சிபி'க்கு போன் வர, அவனை யாரோ ஒரு வில்லன் [[வில்லி]] செமையா மிரட்ட வெளியே தெரிச்சி ஓடிட்டான் ராஸ்கல்....


நேரம் இருட்டியதால் குற்றாலம் சீக்கிரமாக நாங்கள் கிளம்ப எத்தனித்தாலும், ஆபீசருக்கு எங்களை பிரிய மனமே இல்லை, எங்களுக்கும்தான்...ஒரு வழியா பிரியா விடை.........

கடைசியாக ஆபீசர் முகத்தில் நான் கண்டது, பெற்ற மகளுக்கு சீர் செனத்தி செய்து, மணவாளன் வீட்டுக்கு மன நிறைவுடன் அனுப்பிய ஒரு தந்தையின் சமாதானம் அவர் முகத்தில் ஜொலிப்பதை கண்டேன். எவ்வளவு அற்புதமாக அழகாக நேர்த்தியாக இந்த குடும்ப [[பதிவர்]] சந்திப்பை நடத்தினார் பாருங்கள்....!!!!


மிக்க நன்றி ஆபீசர், நீங்க எங்களுக்கு தந்தையுமானவன்......!!!!!

டிஸ்கி : நிறைய பொறாமையால் பொசுங்கும் நண்பர்களின் [[ஹி ஹி]] வேண்டுகோளுக்கு இணங்க பதிவர் சந்திப்பு நிறைவு பெறுகிறது....

டிஸ்கி : இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் குற்றாலம் டூர் ரவுசு ஆரம்பம்.......


டிஸ்கி : மேலே படத்தில் இருக்கும் குரங்குதான் சிபி'யையும் செல்வாவையும் கடித்து குதறி பழி வாங்கியது, 

52 comments:

  1. போட்றா மொத வெட்டை ந்க்கொய்யால

    ReplyDelete
  2. >>மிக்க நன்றி ஆபீசர், நீங்க எங்களுக்கு தந்தையுமானவன்......!!!!!

    இன்னைக்குத்தான் பயபுள்ள உருப்படியா போஸ்ட் போட்டிருக்கான்

    ReplyDelete
  3. ஹி ..ஹி ...பதிவர் சந்திப்பு பதிவு போய்கிட்டே இருக்கு .........

    ReplyDelete
  4. நெல்லைப் பதிவர்கள் குறித்து தங்கள்
    தொடர் பதிவின் மூலம் தெளிவாகத்
    தெரிந்து கொள்ள முடிந்தது
    வராத ஏக்கத்தை அதிகரித்தும் போனது
    நன்றி

    ReplyDelete
  5. no no no mee the firstu..neenga pathivai thirumba podunga....annaaa

    ReplyDelete
  6. anna sema ya solli irukenga :)))))

    CP sir than paavam ( aama anatha kurangau uyirota irukaa ??)

    ReplyDelete
  7. உங்களின் பதிவுகள் பதிவர்கள் சந்திப்பு நேரில் பார்த்தமாதிரியே இருக்கிறது எங்களுக்கு..
    நன்றிகள்,,

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் said...
    போட்றா மொத வெட்டை ந்க்கொய்யால//

    டேய் டேய் நாளை இருக்குடி உனக்கு ஸ்டுப்பிட்.....

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் said...
    >>மிக்க நன்றி ஆபீசர், நீங்க எங்களுக்கு தந்தையுமானவன்......!!!!!

    இன்னைக்குத்தான் பயபுள்ள உருப்படியா போஸ்ட் போட்டிருக்கான்//

    அடபாவி ராஸ்கல்......!!

    ReplyDelete
  10. இம்சைஅரசன் பாபு.. said...
    ஹி ..ஹி ...பதிவர் சந்திப்பு பதிவு போய்கிட்டே இருக்கு ........//

    ஹா ஹா ஹா ஹா......!

    ReplyDelete
  11. Ramani said...
    நெல்லைப் பதிவர்கள் குறித்து தங்கள்
    தொடர் பதிவின் மூலம் தெளிவாகத்
    தெரிந்து கொள்ள முடிந்தது
    வராத ஏக்கத்தை அதிகரித்தும் போனது
    நன்றி//

    கண்டிப்பாக ஒரு நாள் நாமும் சந்திக்கலாம் குரு....

    ReplyDelete
  12. இம்சைஅரசன் பாபு.. said...
    ஹி ..ஹி ...பதிவர் சந்திப்பு பதிவு போய்கிட்டே இருக்கு ........//

    ஹா ஹா ஹா ஹா......!

    ReplyDelete
  13. விக்கியுலகம் said...
    நன்றி!//

    எதுக்கு...??? சிபி'யும் செல்வாவும் குரங்குகிட்டே கடி வாங்குனதுக்கா...??? தெளிவா சொல்லுய்யா...

    ReplyDelete
  14. koodal bala said...
    Officer.....The Great.!//


    யா யா யா யா.......!!!

    ReplyDelete
  15. நெல்லைப் பதிவர்கள் குறித்து தங்கள்
    தொடர் பதிவின் மூலம் தெளிவாகத்
    தெரிந்து கொள்ள முடிந்தது.

    நன்றி!

    ReplyDelete
  16. தமிழ்வாசி - Prakash said...
    hi......hi......//

    அடங் கொன்னியா இதென்னய்யா சிரிப்பு புரியலையே அவ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  17. siva said...
    no no no mee the firstu..neenga pathivai thirumba podunga....annaaa
    //

    தம்பி அண்ணனை ரொம்ப கஷ்ட்ட படுத்தாதீங்கப்பா உருண்டு பொரண்டு அழுதுருவேன் சாக்குரதை....

    ReplyDelete
  18. கல்பனா said...
    anna sema ya solli irukenga :)))))

    CP sir than paavam ( aama anatha kurangau uyirota irukaa ??)//

    பாப்பா'ம்மா, குரங்கு செத்து போச்சின்னா, சிபி'யும் மண்டைய போட்டுருவான்னு டாகுடர் சொல்லிட்டான் அதான் குரங்கை பத்திரமா பாதுகாத்து வச்சிருக்கார் ஆபீசர் அரெஸ்ட் பண்ணி[[ம்ஹும் குரங்கைதான்]]

    ReplyDelete
  19. வேடந்தாங்கல் - கருன் *! said...
    உங்களின் பதிவுகள் பதிவர்கள் சந்திப்பு நேரில் பார்த்தமாதிரியே இருக்கிறது எங்களுக்கு..
    நன்றிகள்,,//

    சீக்கிரமா சென்னை வாரேன்ய்யா வந்து உங்களுக்கும் லந்து குடுக்குறேன் என்ன...

    ReplyDelete
  20. சே.குமார் said...
    நெல்லைப் பதிவர்கள் குறித்து தங்கள்
    தொடர் பதிவின் மூலம் தெளிவாகத்
    தெரிந்து கொள்ள முடிந்தது.

    நன்றி!//

    வணக்கம் வணக்கம் மக்கா....

    ReplyDelete
  21. //மிக்க நன்றி ஆபீசர், நீங்க எங்களுக்கு தந்தையுமானவன் // சூப்பர் மனோண்ணே..நெஞ்சைத் தொடும் பதிவு.உண்மையில் ஆஃபீசர் சாரின் அன்பும் அக்கறையும் பாராட்டப் படவேண்டியது. பெரியோர் என்றும் பெரியோரே.

    ReplyDelete
  22. உங்கள் பதிவின் மூலம்..உங்கள் ஆபிசரின் அன்பும் தெரிந்தது...அதைவிட நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை புரிந்தது..

    ReplyDelete
  23. செங்கோவி said...
    //மிக்க நன்றி ஆபீசர், நீங்க எங்களுக்கு தந்தையுமானவன் // சூப்பர் மனோண்ணே..நெஞ்சைத் தொடும் பதிவு.உண்மையில் ஆஃபீசர் சாரின் அன்பும் அக்கறையும் பாராட்டப் படவேண்டியது. பெரியோர் என்றும் பெரியோரே.//


    சத்தியமான உண்மை மக்கா நீங்க சொன்னது.....!!!

    ReplyDelete
  24. Shiva sky said...
    உங்கள் பதிவின் மூலம்..உங்கள் ஆபிசரின் அன்பும் தெரிந்தது...அதைவிட நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை புரிந்தது..//

    மிக்க நன்றி சிவா.....

    ReplyDelete
  25. அண்ணன் உத்தம சிங்கம் மனோ அவர்களுக்கு எல்லோரும் ஒரு முறை ஜோரா கைத்தட்டுங்க...!

    ReplyDelete
  26. கலக்கல் சார் ..

    ReplyDelete
  27. அருமை அருமை

    //ஆபீசர் சங்கரலிங்கம், ஆக்கபூர்வமான செயல்பாட்டின் தந்தை என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அவர் மனசு ஒரு பிஞ்சி குழந்தையின் மனசு என்பது நான் பார்த்து பேசி பழகி, அவரிடம் உணர்ந்து கொண்டேன்...!!!!

    எப்பிடி ஒரு வாசகம், திருவாசகம் மாதிரி. அவரு கூட பழகி பிஞ்சு மனசுல எதுவும் நஞ்சு கலக்கலையே!!/??

    சீக்கிரம் சீக்கிரம் சொல்லுங்க குத்தாலத்துல என்ன பண்ணீங்கன்னு!!?? ஆவலாய் கத்து இருக்கோம்.

    ReplyDelete
  28. நெல்லைப் பதிவர்கள் குறித்து தங்கள்
    தொடர் பதிவின் மூலம் தெளிவாகத்
    தெரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  29. உங்கள் பதிவின் மூலம்..உங்கள் ஆபிசரின் அன்பும் தெரிந்தது...அதைவிட நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை புரிந்தது..//

    ReplyDelete
  30. கலந்துகொள்ள முடியாத என் போன்ற பதிவர்கள் அதிட்டம் இல்லாதவர்கள்.
    சந்திப்பு பற்றிய பதிவுகளைப் படித்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!

    ReplyDelete
  31. அருமையான பதிவு.
    உங்கள் ஆர்ப்பாட்டமான பதிவினால் சந்தோஷத்தில் கண் கலங்குகிறது.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. அருமையான பதிவு கூடவே வந்து இருந்து ரசித்த மாதிரி
    வறாத என்னை போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது உங்களின் பதிவு

    ஆபிசர் சாருக்கு ஒரு மனம் மகிழ்ந்த வந்தனம்

    ReplyDelete
  33. ஆப்பிசரின் சிறப்பான இம் முயற்சிக்கும், ஒழுங்குபடுத்தல்களுக்கும், நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தி முடித்த பக்குவத்திற்கும்,
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  34. பதிவர் சந்திப்பினை நேரடி வர்ணணை மூலம் ரசிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வண்ணம் சுவாரசியமாகத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க அருவா மன்னரே!

    ரசித்தேன்.

    குற்றாலம் ரவுசு பற்றி ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  35. பாவி மனசா அந்த ஆளை போட்டு இப்படியா பெரட்டி பெரட்டி அடிக்குறது. ஈரோடு பக்கம் போய்விடாதிர்.

    ReplyDelete
  36. அழகான தொகுப்பு மாப்பூ கொஞ்சம் பொறாமை நாங்களும் கலந்து கொள்ளவில்லையே என்று மீண்டும் வாருங்கள் குற்றாலா ஓயில் மசாச்சுடன்.
    தமிழ்மணம் புட்டுக்கிடுட்டு உயிரை வாங்குது மற்றவர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை அருவா மாப்பூ!

    ReplyDelete
  37. விக்கியுலகம் said...
    அண்ணன் உத்தம சிங்கம் மனோ அவர்களுக்கு எல்லோரும் ஒரு முறை ஜோரா கைத்தட்டுங்க...!//

    ஹே ஹே ஹே ஹே.....

    ReplyDelete
  38. அரசன் said...
    கலக்கல் சார் ..//

    நன்றி அரசன்....

    ReplyDelete
  39. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
    அருமை அருமை

    //ஆபீசர் சங்கரலிங்கம், ஆக்கபூர்வமான செயல்பாட்டின் தந்தை என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அவர் மனசு ஒரு பிஞ்சி குழந்தையின் மனசு என்பது நான் பார்த்து பேசி பழகி, அவரிடம் உணர்ந்து கொண்டேன்...!!!!

    எப்பிடி ஒரு வாசகம், திருவாசகம் மாதிரி. அவரு கூட பழகி பிஞ்சு மனசுல எதுவும் நஞ்சு கலக்கலையே!!/??

    சீக்கிரம் சீக்கிரம் சொல்லுங்க குத்தாலத்துல என்ன பண்ணீங்கன்னு!!?? ஆவலாய் கத்து இருக்கோம்.//

    இதோ வந்துட்டேன்...

    ReplyDelete
  40. போளூர் தயாநிதி said...
    நெல்லைப் பதிவர்கள் குறித்து தங்கள்
    தொடர் பதிவின் மூலம் தெளிவாகத்
    தெரிந்து கொள்ள முடிந்தது//

    மிக்க நன்றி மக்கா...

    ReplyDelete
  41. போளூர் தயாநிதி said...
    உங்கள் பதிவின் மூலம்..உங்கள் ஆபிசரின் அன்பும் தெரிந்தது...அதைவிட நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை புரிந்தது..//

    நன்றி நன்றி.....

    ReplyDelete
  42. சென்னை பித்தன் said...
    கலந்துகொள்ள முடியாத என் போன்ற பதிவர்கள் அதிட்டம் இல்லாதவர்கள்.
    சந்திப்பு பற்றிய பதிவுகளைப் படித்து மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!//

    நாமும் கண்டிப்பா ஒரு நாள் சந்திக்கலாம் தல.....

    ReplyDelete
  43. Rathnavel said...
    அருமையான பதிவு.
    உங்கள் ஆர்ப்பாட்டமான பதிவினால் சந்தோஷத்தில் கண் கலங்குகிறது.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.//

    நன்றிகள் அய்யா.......

    ReplyDelete
  44. A.R.ராஜகோபாலன் said...
    அருமையான பதிவு கூடவே வந்து இருந்து ரசித்த மாதிரி
    வறாத என்னை போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது உங்களின் பதிவு

    ஆபிசர் சாருக்கு ஒரு மனம் மகிழ்ந்த வந்தனம்//

    நன்றி மக்கா......

    ReplyDelete
  45. FOOD said...
    நன்றி மனோ. என்றும் உங்கள் அனைவரின் அன்பிற்கு உரியவனாய் இருந்தால் அதுவே எனக்கு பெருமை. பதிவர் சந்த்திப்பில், இன்னும் நிறைய செய்யவேண்டும் என்று எண்ணி நிறைவேறாத ஆசைகளே அதிகம்.//

    நீங்கள் எங்களுக்கு செய்ததே நிறைய, இன்னும் நிறைவேறாத ஆசையா....??? நன்றி ஆபீசர்.....

    ReplyDelete
  46. நிரூபன் said...
    ஆப்பிசரின் சிறப்பான இம் முயற்சிக்கும், ஒழுங்குபடுத்தல்களுக்கும், நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தி முடித்த பக்குவத்திற்கும்,
    பாராட்டுக்கள்.//

    பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள்......

    ReplyDelete
  47. நிரூபன் said...
    பதிவர் சந்திப்பினை நேரடி வர்ணணை மூலம் ரசிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்தும் வண்ணம் சுவாரசியமாகத் தொகுத்து எழுதியிருக்கிறீங்க அருவா மன்னரே!

    ரசித்தேன்.

    குற்றாலம் ரவுசு பற்றி ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.//

    ஹா ஹா ஹா ஹா இதோ குற்றாலம் வந்துட்டே இருக்கு....

    ReplyDelete
  48. இளம் தூயவன் said...
    பாவி மனசா அந்த ஆளை போட்டு இப்படியா பெரட்டி பெரட்டி அடிக்குறது. ஈரோடு பக்கம் போய்விடாதிர்.//

    நான் ஈரோடு போனால் அந்த ஆள் பெட்டி பாம்பா அடங்கிருவான் பாருங்க ஹி ஹி.....

    ReplyDelete
  49. Nesan said...
    அழகான தொகுப்பு மாப்பூ கொஞ்சம் பொறாமை நாங்களும் கலந்து கொள்ளவில்லையே என்று மீண்டும் வாருங்கள் குற்றாலா ஓயில் மசாச்சுடன்.
    தமிழ்மணம் புட்டுக்கிடுட்டு உயிரை வாங்குது மற்றவர்களின் பதிவுகளை படிக்க முடியவில்லை அருவா மாப்பூ!//

    தமிழ்மணம் ஒர்க் ஆகலை மக்கா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!