Monday, January 23, 2012

நாஞ்சில்மனோ'வின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்....!!!

மேனேஜ்மென்ட் மாற்றம் காரணமாக பதிமூன்று நாட்கள் பிளாக் வர முடியவில்லை. இன்னும் புதிய மேனேஜ்மென்ட் ஹேன்ட் ஓவர் எடுக்க வரவில்லை காரணம் பஹ்ரைனில் தொடராக நடந்து வரும் கலவரம்...!!!!என்னை தேடி மெயிலிலும் சாட்டிங்கிலும் போனிலும் நலம் விசாரித்த நண்பர்கள், தோழிகள், அண்ணன்கள், என் தங்கைமார் யாவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றிகள் [[ஆஹா கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தோமே வந்துட்டானா மறுபடியும் கொலை வெறியோட]]

பொங்கலுக்கு நான் யாருக்குமே வாழ்த்து சொல்ல முடிய இயலாமல் போனபடியால், உங்கள் யாவருக்கும் பொன்னான பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!!!

அடிக்கடி எனக்கு போன் செய்து நலம் விசாரித்த விக்கிக்கும், ஆபிசருக்கும், தங்கச்சிங்க கல்பனா, ரேவா இன்னும் பெயர் சொல்லமுடியாத நண்பர்கள் நண்பிகளுக்கும் மிக்க நன்றி நன்றி....!!!

இன்று முதல் நாஞ்சில்மனோவின் அதிரடி புதிரடி ஆட்டம் ஆரம்பம்......[[எவம்லே அங்கே குனிஞ்சி கல்லேடுக்குறது....!!!]]


புதிய லேப்டாப் வாங்க முயற்ச்சி செய்தேன் பத்து நாட்கள் முன்பு, என் நலம் விரும்பும் நண்பர்களின் [[வேலையில் பிரச்சினை இருப்பதால்]] வேண்டுகோளுக்கு இணங்க வாங்கவில்லை, ஆனால் லேப்டாப் வாங்க வைத்திருந்த பணம் ஒரே நாள் செலவில் காற்றில் கரைந்து விட்டது...!!!

அண்ணே நமக்கு செக்கன்ஹேன்ட் லேப்டாப் வாங்குவோம் அண்ணே என்று "கலியுகம்"தினேஷ் தம்பி சொன்னான், ஆனால் அப்படி வாங்குவதை விட புதுசே நல்லது என தோன்றியதால் யாருக்கும் சொல்லாமல், கம்பியூட்டர் இஞ்சினியர், தம்பி இணையம் புத்தூர் வில்லியம்சை கூட்டிட்டு போயி வாங்கிட்டு வந்துட்டேன்.

என்ன கம்பியூட்டர் படம் போட்டு, பதிவு போட்டு உங்களை கலவர படுத்த விரும்பவில்லை [[ஹி ஹி]] ஏன்னா எங்க அண்ணனுங்க சிபி என்ற மூதேவியும், விக்கி என்ற பக்கியும் ஹோட்டல்ல ஹால் புக் பண்ணி அழுது நாரடிச்சிருவேன்னு சொன்னதால பதிவு எழுத [[கொல்ல]] மாட்டேன்.


அடுத்து நம்ம சிபி அண்ணனின் ஆயிரமாவது பதிவுக்கு சுட சுட கமெண்ட்ஸ் போடமுடியாம போனதுக்கு எனக்கு மிகவும் மனதுக்கு வேதனையாக இருந்தது, மெயில் ஒப்பன் பண்ணியதும் அவனை தொடர்பு கொண்டு அந்த லிங்கை வாங்கி கமெண்ட்ஸ் போட்டபின்தான் மனசு லேசாகியது. அந்த பதிவு அம்புட்டு நெகிழ்ச்சியாக இருந்தது....!!! அண்ணே டேய் அண்ணே வாழ்த்துக்கள்டா....!!!

இனி அருவாள் உங்கள் பதிவுகளில் நாள்தோறும் தகதகக்கும் நன்றி.....

52 comments:

 1. தம்பி, நீ எப்போ அமைதியா இருந்தே?

  ReplyDelete
 2. புது லேப்டாப் வாங்கிய மனோ இன்று முதல் புதுலேப்டாப் மனோ என அன்புடன் அழைக்கப்படுவாய்

  ReplyDelete
 3. வாங்க மக்கா வாங்க

  ReplyDelete
 4. உங்களின் வரவு.....மகிழ்ச்சி

  ReplyDelete
 5. பிரச்னைகள் விரைவில் சரியாகட்டும்! இனி வரும் நாட்கள் இனிதே கழியட்டும்! புது கணிணி யோகம் கொண்டு வரட்டும்!

  ReplyDelete
 6. வணக்கம்ண்ணே!ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றதுல சந்தோசம் .கடவுள் அருளால் சில நாட்களுக்கு முன்புதான் எனது உடல் நிலை சரியாகி கடந்த இரண்டு நாட்களாக பிளாக் பக்கம் வருகிறேன் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 7. வாங்க மக்கா வாங்க...

  ReplyDelete
 8. koodal bala said...
  வணக்கம்ண்ணே!ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றதுல சந்தோசம் .கடவுள் அருளால் சில நாட்களுக்கு முன்புதான் எனது உடல் நிலை சரியாகி கடந்த இரண்டு நாட்களாக பிளாக் பக்கம் வருகிறேன் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்//

  உங்கள் உடல் நலம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பாலா, அப்புறம் கூடங்குளம் பிரச்சினை பற்றி பதிவுகள் போட்டுட்டே இருங்கள்...!

  ReplyDelete
 9. வாங்க வாங்க, வந்து கலக்குங்க, புது லேப் டாப், கலக்குங்கண்ணே, கலக்குங்குங்க........

  ReplyDelete
 10. Happy to see you ...waiting for your hilarious posts

  ReplyDelete
 11. மனோ இல்லாத பதிவுலகம்!நிலவில்லா வானம்!!
  திருப்பாச்சி அருவா திரும்ப வந்தாச்சு!

  ReplyDelete
 12. அது ஏண்ணே குச்சி வச்சி நடக்குரிய, இரண்டாவது படத்துலே;

  ReplyDelete
 13. காணவில்லைன்னு உங்களையும் , வாத்தியார் கருணையும் பத்தி ஒரு பதிவு தயார் செய்தேன் .. அதுக்குள்ள வந்துடிங்க ...

  ReplyDelete
 14. வருக ...வருக ...வருக ...வருக ...வருக ...

  ReplyDelete
 15. வங்க மச்சான் வாங்க...
  வந்து வழிய...பார்த்துட்டு போங்க...

  நல்ல...செட்டில் ஆனா பிறகு மீண்டும் வாங்க....

  ReplyDelete
 16. அருவா ரிட்டர்ன்ஸ்.....

  ReplyDelete
 17. பணம் ஒரே நாள் செலவில் காற்றில் கரைந்து விட்டது...!!!  பஹரைன்ல ரூபாய் எல்லாம் காத்திலே கரையிர மாதிதான் இருக்குமா...அதுவும் நல்லதுதான் ..சேர்த்து வச்சுட்டு பூதம் மாதிரி காத்திட்டு இருக்க வேண்டாம் ...பிள்ளைக்கு பேரப்பிள்ளைக்கு கொள்ளு எள்ளு ஜொள்ளு பேரப்பசங்களுக்குன்னு சொல்லிட்டு சேர்க்க வேண்டாம்

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. அதிரடி தலைப்போடு அட்டகாசமாக ரிடர்னா?வெல்கம் பேக்&ஸ்டார்ட் ம்யூஸிக்...

  ReplyDelete
 20. வாங்க அண்ணே .. வாங்க ...
  எல்லோரையும் சுளுக்கு எடுக்க போறேன் என்பதை இப்படி சூசகமா சொல்றிங்களே

  ReplyDelete
 21. பாஸ் நான் காலையில் பதிவு போடும் போது யோசித்தேன் எங்கடா மனே அண்ணைக்காணவில்லை என்று மாலையில் இப்ப என் தளத்தில் உங்கள் கமண்ட் கண்ட போதுதான் வந்துவிட்டீர்கள் என்று வந்தேன்.

  ஏன்ணே ஏற்கனவே உங்களை லாப்டாப் மனோ என்று சொல்லுறாஙக் நீங்க வேற புது லாப்டாப் வாங்கினதா சொல்லிட்டீங்க மேல பாருங்க சி.பி பாஸ் புது லாப்டாப் மனோ என்று கூவிட்டு போயிருக்கார் அப்ப இனி புது லாப்டாப் மனோவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 22. வாங்கோ வாங்கோ !

  ReplyDelete
 23. வாங்க வாங்க....இவ்வளவு நாளா அருவா எங்கடா போச்சுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆட்டத்தை ஆரம்பிங்க

  ReplyDelete
 24. வாங்க வாங்க வந்து என் வலைப்பூவை பார்த்து கமண்ட் போட்டு போங்க.

  ReplyDelete
 25. மனோ ,நீங்க இல்லாமம் நான் முகநூலை விட்டே வெளியாகிவிட்டேன்..ஹா ஹா ஹா!இனி பதிவில்தான் சந்திப்பு!!!வாங்க மனோ,உங்க சேவை இங்கே எங்களுக்கு தேவைலா!!!!!!!இனி சொல்லிவிட்டுப்போங்க!!

  ReplyDelete
 26. வாங்க. வாங்க..!! உங்க வருகைக்காக நம்ம எத்தனை பேரு காத்திட்டு இருக்காங்க தெரியுமா?

  ReplyDelete
 27. வாங்க வாங்க மக்களே,

  திரும்பவும் அதிரடிய ஆரம்பியுங்க..
  உங்க கலாட்டா இல்லாம கொஞ்சம் வறண்டு போயி தான் இருக்கு

  தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 28. இனிய வருகை,இனியெல்லாம் வசந்தமே!

  ReplyDelete
 29. // சி.பி.செந்தில்குமார் said...
  புது லேப்டாப் வாங்கிய மனோ இன்று முதல் புதுலேப்டாப் மனோ என அன்புடன் அழைக்கப்படுவாய்//
  சிபி இனி பாடாவதி சிபி என்றழைக்கப்படுவார். ஹே ஹே.

  ReplyDelete
 30. கொஞ்ச நாளா நானும் சரியா பதிவுலகம் வர முடியலை. இனி இழுத்து வரும் உங்கள் பதிவு.
  விரைவில், பணியிடம் சீரடையட்டும்.

  ReplyDelete
 31. உடான்ஸ் இணைப்பு கொடுத்தாச்சு.உடனே ஓட்டுப்போடுங்க நண்பர்களே.

  ReplyDelete
 32. மேனேஜ்மென்ட் மாற்றம் காரணமாக பதிமூன்று நாட்கள் பிளாக் வர முடியவில்லை//நான் இத்தனை நாளா நீங்க தான் மானேஜர்ன்னு நினைச்சுட்டு இருந்தேன் ஹிஹி!!!!

  Welcome back.

  ReplyDelete
 33. என்ன கொடும சார் இது..... அதுக்குள்ள வந்துட்டீங்க.......?

  ReplyDelete
 34. என்னது புது லேப்டாப்பா, அப்போ பழச காக்காக்கு போட்டுட்டீங்களாண்ணே?

  ReplyDelete
 35. /////இன்னும் பெயர் சொல்லமுடியாத நண்பர்கள் நண்பிகளுக்கும் மிக்க நன்றி நன்றி....!!!/////

  என்னது சொல்லமுடியாத பேரா.... அம்புட்டு அசிங்கமா பேர் வெச்சிருக்கவன் எவன்ல....?

  ReplyDelete
 36. அண்ணே அருவாள தலைகீழா புடிச்சிருக்கீங்க...? பாத்து.. படாத எடத்துல பட்டுட போகுது......!

  ReplyDelete
 37. மனோ அண்ணாச்சி சொல்லாமல் சென்னைக்குப் போய் விட்டாரா என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பின் உங்கள் வரவை அறிந்த போது புது மடிகணனி பார்த்த சந்தோஸம் .ஹீ ஹீ நமக்கும் ஆசைதான் கணனி வாங்க என்ன நேரம் கூடிவருது இல்லை.

  ReplyDelete
 38. அண்ணே தங்கள் வருகை நல்வரவாகுக.

  ReplyDelete
 39. நீங்க இல்லாம பதிவுலகமே டல்லடிச்சு இருந்துச்சு அண்ணே. உங்க அருவா இல்லாம எல்லாருக்கும் குளிர் விட்டு போச்சுண்ணே.
  கூலிங்க் கிளாஸ் போட்டுக்கிட்டு பொங்கபானைக்குள் கரண்டியை விடாமல் அடுப்புக்குள் கரண்டியை விட்டு அதையும் போட்டோ புடிச்சு பிளாக்ல போட்ட பதிவரை அருவாளை தீட்டிக்கிட்டு வந்து என்னன்னு கேளுங்கண்ணே.

  ReplyDelete
 40. பழைய லேப்டாப்க்கு பேரிச்சம்பழம்...பழைய லேப்டாப்க்கு பேரிச்சம்பழம்...பழைய லேப்டாப்க்கு பேரிச்சம்பழம்...

  ReplyDelete
 41. அருவா....சானை பிடிக்கறதுங்க.....அருவா....சானை பிடிக்கறதுங்க.....அருவா....சானை பிடிக்கறதுங்க.....
  அருவா....சானை பிடிக்கறதுங்க.....

  ReplyDelete
 42. வெல்கம் பேக் மனோ அண்ணா..

  ReplyDelete
 43. வாங்க வாங்க. மறுபடி கலக்குங்க

  உங்க ப்ளாக் அலுவலகத்தில் வாசித்தாலும் கமன்ட் அங்கே போடா முடியலை. பதிவு அன்றே வாசிதுட்டேன், இன்று தான் கமன்ட் போடுறேன்

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!