Thursday, August 25, 2011

அறிவியல் நாங்களும் சொல்வோமுல்ல...!!!


விண்ணில் சில விண்மீன்கள் ஒரே மாதிரியான அளவுடன் எப்போதும் ஒளிர்வதில்லை. சில விண்மீன்கள் மங்கலாகவும் பின்னர் அதிக பிரகாசத்துடனும் என மாறி மாறி தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன.
இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables)  அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
மேலும் இவற்றை மாறும் விண்மீன்கள் (Variable Stars) என்றும் அழைக்கின்றனர். இந்த சீபீட்கள் மங்கலாக மாறுவதில் இருந்து பின் பிரகாசமாகி இறுதியாக மங்கலாக மாறுவது வரை உள்ள காலத்தை அவற்றின் ‘கால அளவு’ என அழைக்கின்றனர் (Periods). சில சீபீட்களின் கால அளவு ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கிறது. சிலவற்றின் கால அளவு இரண்டு மாதங்கள் கூட நீள்கிறது.
சீபீட்கள் என்ற பெயர் எப்படி இந்த விண் மீன்களுக்கு வந்தது என்று நாம் காண்போம். முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இப்படியான விண்மீன் சீபஸ் (Cepheus) என்கிற விண்மீன் தொகுதியில் அமைந்த டெல்டா சீபி (Delta Cephie) என்கிற விண்மீன் தான். அதனால் தான் இப்படி மாறும் விண்மீன்களை சீபீட்கள் என அழைக்கின்றனர். டெல்டா சீபியின் கால அளவு 5.3 நாட்கள் ஆகும். நமக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள சீபீட் துருவ நட்சத்திரம் (Pole Star) ஆகும். இதன் கால அளவு வெறும் 4 நாட்கள் தான். சீபீட்கள் எனப்படும் மாறும் விண்மீன்கள் விண்வெளியில் தொலைவுகளை அளப்பதில் மிகவும் உதவியாக உள்ளன.
வானத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே என்றென்றும் மாறாதவை என்றும் நிரந்தரமானவை என்றும் நிலவி வந்த கருத்துக்களுக்கு சாவு மணி அடித்தது, இந்த சீபிட்களின் கண்டுபிடிப்பு தான். இன்னொரு வகையான மாறும் விண்மீன்கள் கூட உள்ளன. அவற்றை ‘மறைக்கும் மாறிகள்’ (Eclipsing Variables) என்கின்றனர். சில விண்மீன்கள் வானத்தில் இரட்டை விண்மீன்களாக (Binary Star‡) உள்ளன. அதாவது இரண்டு விண்மீன்களும் தங்களின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இப்படியான இரட்டை விண்மீன்களில் ஒன்று பிரகாசமாக ஒளிரக் கூடியதாகவும் மற்றொன்று மங்கலான விண்மீனாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இரு விண்மீன்களும் ஒரு பொது மையத்தைப் பொறுத்து ஒன்றை ஒன்று சுற்றி வரும்போது, மங்கலான விண்மீன் பிரகாசமாக ஒளிரும் விண்மீனுக்கு முன்பாக வர வாய்ப்பு உள்ளது. அப்போது அது ஒளிரும் விண்மீனை மறைத்து விடுகிறது. இது ஒரு தற்காலிக ஒளி இழப்பு தான். மங்கலான விண்மீன் மீண்டும் தன் சுழற்சியில் ஒளிரும் விண்மீனை விட்டு விலகும்போது, அது மீண்டும் பிரகாசிக்கிறது. இது போல ஒரு ஒழுங்கில் எல்லாமே நிகழ்கிறது. முதன் முதலில் (1782ம் ஆண்டு) இந்தக் கருத்தை சொன்னவர் ஆங்கில வானியல் வல்லுனர் ஜான் கூட்ரிக் (John Goodricke) என்பவர் தான். ஆல்கால் (Algol) என்கிற இரட்டை விண்மீன்கள் இதற்கு உதாரணம். இப்போதைக்கு இந்த ‘மறைக்கும் மாறிகளை’ நாம் கண்டு கொள்ளாமல் விடுவோம்.
விண்மீன்களை வகைப்படுத்துவதில் அதனுடைய ஒளிரும் தன்மை அல்லது பிரகாசம் (Brightne‡‡) முக்கியமான பங்கு வகிக்கிறது. ஹிப்பார்கஸ் என்பவர்தான் விண்மீன்களை முதன் முதலாக அவற்றின் பிரகாசத்தை வைத்து தரம் பிரித்தார். அவர் மொத்தம் ஆறு அளவு நிலைகளாக (Magnitîde) விண்மீன்களை வரிசைப்படுத்தினார். மிகவும் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்கள் இவருடைய தரப்படி குறைந்த அளவு நிலைகளைக் கொண்டிருந்தது. விண்ணில் தெரிந்த இருபது பிரகாசமான விண்மீன்களை அவர் முதல் அளவு நிலை (Fir‡t Magnitîde) அல்லது முதல் தர விண்மீன்கள் என அழைத்தார்.
முதல் தர விண்மீன்களை விட சற்றே மங்கலான விண்மீன்களை அவர் இரண்டாம் அளவு நிலை (Second Magnitîde) அல்லது இரண்டாம் தர விண்மீன்கள் என வகைப்படுத்தினார். இப்படி  மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அளவு நிலை வரை விண்மீன்களை வரிசைப்படுத்தப் பட்டது. இவற்றில் ஆறாம் தர விண்மீன்கள் மட்டும் ஓரளவு கண்ணுக்குப் புலனாகும் அளவு மங்கலானவை ஆகும்.

நன்றி : அறிவியல் செய்திகள்.

டிஸ்கி : என்ன சிபி மட்டும்தான் ஒருநாளைக்கு அஞ்சாறு பதிவு போடுவானா...??? ஏன் என்னால் போடமுடியாதா....??? இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!

28 comments:

  1. அசத்தல் அறிவியல்..

    கலக்குங்க அண்ணா

    ReplyDelete
  2. சீக்கிரம் தமிழ்மணம் இன்ட்லி இணையுங்க ஓட்டு போடணுமில்ல??

    ReplyDelete
  3. டிஸ்கி : என்ன சிபி மட்டும்தான் ஒருநாளைக்கு அஞ்சாறு பதிவு போடுவானா...??? ஏன் என்னால் போடமுடியாதா....??? இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!// மக்கா நீ எத்தனை வேணுமின்னாலும் போடுங்க.. படிக்க நாங்க ரெடி ..

    ReplyDelete
  4. சிபிக்கு போட்டியா...
    நடத்துங்க...நடத்துங்க...

    ReplyDelete
  5. cepheid Variables பற்றி எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக விளக்கி இருக்கீங்க. நல்ல பகிர்வு, நன்றி.

    ReplyDelete
  6. வானியல் பற்றிய அறிவியல் தகவல்
    விண்மீன்களை வகைப்படுத்திய விதம்
    எல்லாம் நல்லா இருக்கு நண்பரே.

    ReplyDelete
  7. திடீர்னு இங்கிலீசு பேரு எல்லாம் சொல்லுறீங்க ? நல்லா இருக்குனா :)

    ReplyDelete
  8. என்னது இது மூணாவது பதிவா ? :))

    ReplyDelete
  9. ஒரு பதிவை போட்டு இதை ஹிட் பன்றதுக்கு படாத பாடு படுறோம்...

    என்னது இது மூணாவது பதிவா...

    பார்த்து செய்யுங்க மனோ...

    ReplyDelete
  10. அ..றி..வி..ய...ல்!

    - நாங்களும் சொல்லிட்டோம்ல!

    ReplyDelete
  11. சிபிக்கு போட்டியாக சீபீட்களா?

    ReplyDelete
  12. காதல் நகைசுவை அறிவியல்.எனஅசத்தல்
    எல்லா பக்கங்களிலும் கலக்கும் உங்களின் தனித்துவமே பாராட்டுகளுக்கு உரியன.

    ReplyDelete
  13. ஆகா! புது ரூட்டா இருக்கே!நன்று!

    ReplyDelete
  14. இதுவும் நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  15. வாழ்துக்கள் மாப்பிள.. 

    ReplyDelete
  16. மூணாவது பதிவா...
    Physics
    Chemistry
    Biology...போலவா?

    ReplyDelete
  17. அவியல்ல இருந்து அறிவியலுக்கு போயிட்டீரு. இது உமக்கே நல்லா இருக்கா?

    ReplyDelete
  18. ஆஹா.....இத்தோட........நம்ம மணோ தலைய சுத்தி ஒளிவட்டம் தெரியுதே!
    என்ன ஆச்சு மணோ ???
    இருந்தாலும் நல்லா இருக்கு பதிவு.

    ReplyDelete
  19. இதுவும் நல்லாத்தான் சொல்லுறீங்க பாஸ்,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. எலேய் என்றா இது பதிவுக்கு வந்தா அறிவியல் பாடம் நடத்தி இருக்க ஹிஹி!

    ReplyDelete
  21. இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!//

    பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  22. வேற ஒண்ணுமில்ல, அண்ணன் இன்னிக்கு பிராண்டு மாத்தி அடிச்சிட்டாரு, அவ்வளவுதான்...!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!