போனதடவை குடும்பமாக ஊர் [[கன்னியாகுமரி]] போனபோது, எங்கள் வீடு மாங்காயா நிறைஞ்சி இருந்துட்டு இருந்துச்சு, இதை கவனித்த நான் என் மகனிடம் கேட்டேன் எப்பிடிடா இம்புட்டு மாங்காய்'ன்னு அவன் சொன்னான் களவாண்டுட்டு வந்ததுன்னு [[அவ்வ்வ்வ்வ்]]
என் அண்ணன்கள் மகன்களும் இவனுமா சேர்ந்து கொள்ளை அடிச்சிட்டு இருந்தவனை கண்டித்தேன், அப்போ அருகில் இருந்த எங்க அம்மா, நீ மட்டும் என்ன பெரிய உத்தமனா..??? அன்னைக்கு நீ செய்ததை இன்னைக்கு உம்மொவன் செய்யுறான்னு போட்டு குடுக்க, என் மகன் என்னை ஒரு மாதிரியா பார்த்தானே பாக்கணும் ஹி ஹி...
ஒருநாள் நானும் நண்பன் ராஜகுமாரும், மற்றும் நண்பர்களும் எங்கள் ஊர் பாலத்தில் இருந்து பேசிட்டு இருக்கும்போது, என் மகன்கள் மாங்காய் களவாண்டுட்டு வாரதை பார்த்துட்டு சொன்னேன், டேய் தோப்புகாராணுவ பார்த்தனுகன்னா சின்னபிள்ளை'ன்னு பார்க்கமாட்டாணுக அடிச்சு புடுவானுகடா'ன்னு சொல்லி மிகவும் கண்டித்தேன்.
இதை கேட்ட நண்பர்கள் பலமாக சிரித்து கொண்டே, சொன்னார்கள் மக்கா நாமளும் இந்த வயசுல இப்படிதான் களவாண்டோம் நினைவிருக்கா'ன்னு சொல்லவும், மறுபடியும் என் மகன் என்னைப்பார்த்து முறைச்ச முறைப்பு இருக்கே அவ்வ்வ்வ்வ்....
பிறகு ராஜகுமார் சொன்னான், மக்கா சின்னபசங்க லேசுல பிடி அம்புடமாட்டாங்க தோப்புகாரன் கையிலே, ஓடிருவாணுக, என்ன, இன்னாருன்னு தெரிஞ்சிட்டா பஞ்சாயத்து நம்மகிட்டேதானே வரும் அப்போ பார்த்துக்கலாம் என்று டென்ஷனை குறைத்தான்.
இப்போ உன்னையே எடுத்துக்க, சின்னபிள்ளையில நீ களவாங்காத மாந்தோப்பு உண்டா சொல்லு, எத்தனை தடவை உன்னை ஓட ஓட விரட்டியும் நீ அவனுக கையில அம்புடலையே நினைச்சுப்பார்'ன்னு சொல்லவும் பிளாஷ் பேக் ஆரம்பம், அப்பிடியே மேலே பாருங்க விட்டத்தை.....
எட்டாம் கிளாஸ் படிக்கும் போது நானும் நண்பன் பால்ராஜும், மகேஷும் மாங்காய் களவாங்க போனோம் ஒரு தோப்புக்கு, அந்த மாந்தொப்பில்தான் இனிப்பு மாங்காய் கொத்து கொத்தா காச்சி கிடக்கும், ஆனால் வேலி பலமாக போட்டு கேட் போட்டு இருந்தார்கள்.
மாந்தோப்புக்கு சொந்தக்காரன் ஒரு முன் கோபி, சற்று நொண்டி நடப்பார், எப்போதும் தீட்டிய அருவாலோடுதான் வலம் வருவார், கூடவே ஒரு முரட்டு நாயும் வரும்.
மதியம் நேரம் நாங்கள் மூவரும் கேட் ஏறிசாடி மாமரத்தில் ஏறிவிட்டோம், தோட்டக்காரன் வரமாட்டான்னு சந்தோஷத்துல மாங்காய் பறிச்சு தின்னுட்டு இருக்கும் போதே தோட்டக்காரன் சைக்கிளில் வந்து இறங்க, கூடவே நாயும்.....
கேட்டை திறந்து உள்ளேவரவும் பயந்து போன மகேஷ் நேரே கீழே குதித்து ஓட, நாய் அவன் பின்னாடி ஓட, தோட்டக்காரனுக்கு ஓடமுடியாது, திட்டுறான் திட்டு அம்புட்டு திட்டு, இதைக்கேட்டு பயந்த பால்ராஜ் அடுத்து கீழே குதிக்க நாய் கன்பியூஷன் ஆக, நாய் இவன் பின்னாடி ஓட......
நான் மேலே மரத்தோடு மரமா ஒட்டி ஒளிஞ்சிகிட்டேன். ஒருவழியா அவனுக ரெண்டுபேரும் தப்பிச்சிட்டாணுக, தோட்டக்காரன் வந்து மறுபடியும் மரத்தை பார்த்தான், என்னை காணாமல் திட்டிக்கொண்டே அவன் வேலையை கவனிக்க போனான், நாயும் அவன் பின்னாடியே போனது.
நானும் அவன் போகட்டும் அப்புறமா இறங்கலாம்னு நினைக்கும் போதே, நாய்க்கு வாசம் தெரிஞ்சிட்டது நான் மேலே இருப்பது, வேகமா ஓடிவந்து மரத்தை சுத்த ஆரம்பிச்சது, அவ்வ்வ்வ் என்னை கண்டு பிடிச்சி குரைக்க ஆரம்பிச்சதும் தோட்டக்காரன் அருவாளை கையில் எடுக்கவும்...
நாய்கடியை விட அருவா டேஞ்சர்டோன்னு மேலே இருந்து நாய் மேலேயே குதிக்கவும் நாய் சற்று பின்வாங்கியதும், பிடிச்சேன் பாருங்க ஓட்டம், நாயும் பயங்கரமா துரத்த, தோட்டக்காரன் அருவாளை எடுத்து வீச, அருவா என்னை டச் பண்ணி கீழே விழுந்தது, நல்லவேளை காயமில்லை...
இப்போ நாய்க்கும் எனக்கும்தான் கடுமையான ஓட்டம், ஆத்தி கடிச்சுதுன்னா அஞ்சி கிலோ கறியை புடுங்கிருமே, அந்த பெரிய வேலியை எப்பிடித்தான் தாண்டினேன்'ன்னு இப்பவும் ஆச்சர்யமா இருக்கு, நாயும் பின்னால ஜம்ப் பண்ணி வேலிக்கு நடுவுல நெளிஞ்சிட்டு கிடந்தது. [[இப்பவும் அந்த வேலி இருக்கு]]
வெளியே ஒளிந்து கொண்டிருந்த நண்பர்கள் என்னை கண்டதும், ஓடிவர மூனுபேருமா ஓட்டம் பிடித்தோம் வீட்டுக்கு, அந்த கலவரத்துலையும் நான்கு மாங்காய் பாக்கட்டுகுள்ளே பத்திரமா வச்சிருந்தேன்.
மலரும் நினைவுகள், சிரிப்பா சிரிக்குது போங்க.....!!!
டிஸ்கி : இன்ட்லி'ல ஓட்டு போடுறவுங்க இன்ட்லியை கிளிக் செய்துட்டு அதில் "பரிந்துரை"ன்னு இருப்பதை கிளிக் பண்ணீங்கன்னா ஓட்டு விழுந்துரும்.
"மனோ"தத்துவம் : எம்புட்டுதான் கல்லெரிஞ்சாலும் விழுற மாங்காய்'தான் விழும்.
டிஸ்கி : இன்ட்லி'ல ஓட்டு போடுறவுங்க இன்ட்லியை கிளிக் செய்துட்டு அதில் "பரிந்துரை"ன்னு இருப்பதை கிளிக் பண்ணீங்கன்னா ஓட்டு விழுந்துரும்.
"மனோ"தத்துவம் : எம்புட்டுதான் கல்லெரிஞ்சாலும் விழுற மாங்காய்'தான் விழும்.
மொத வேட்டு
ReplyDelete//
ReplyDelete"மனோ"தத்துவம் : எம்புட்டுதான் கல்லெரிஞ்சாலும் விழுற மாங்காய்'தான் விழும்.
//
தத்துவம் no: 100000001
பழத்தை வைத்து ஒரு பதிவு நடத்துங்க
ReplyDeleteபிளாக்கின் இடது ஓரத்தில் ஆரன்சு சொக்கா போட்டு ஒரு பையன் இருக்கானே அது லேப் டாப் மனோவோட தம்பியா?
ReplyDeleteசி பி அண்ணன் முந்திடார்
ReplyDelete//
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
பிளாக்கின் இடது ஓரத்தில் ஆரன்சு சொக்கா போட்டு ஒரு பையன் இருக்கானே அது லேப் டாப் மனோவோட தம்பியா?
//
தாத்தா
ஹி ஹி ஹி...
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said... 1 2
ReplyDeleteமொத வேட்டு//
அண்ணே....
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//
"மனோ"தத்துவம் : எம்புட்டுதான் கல்லெரிஞ்சாலும் விழுற மாங்காய்'தான் விழும்.
//
தத்துவம் no: 100000001//
ஆஹா.............
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteபழத்தை வைத்து ஒரு பதிவு நடத்துங்க//
ஹி ஹி சரிங்கோ...
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபிளாக்கின் இடது ஓரத்தில் ஆரன்சு சொக்கா போட்டு ஒரு பையன் இருக்கானே அது லேப் டாப் மனோவோட தம்பியா?//
ஹி ஹி அழகா இருக்கா இல்லையா'ன்னு சொல்றதை விட்டுட்டு ஆராச்சி பன்றானாம் ம்ஹும்...
அந்த கலவரத்திலேயும் மாங்காய கீழே போடாம ஓடிய உங்க மன தைரியத்தை பாராட்டி ஆணிவேர் கொடுக்கும் பரிசு, ஆலய மணி படத்தில் சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா...
ReplyDeleteடிஸ்கி: மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறேன்
என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteசி பி அண்ணன் முந்திடார்//
அவன்தான் பதிவுலக சூப்பர் ஸ்டார் ஆச்சே...
அண்ணே வணக்கம்னே!
ReplyDelete///பிடிச்சேன் பாருங்க ஓட்டம்// ஹா.. ஹா.. ஹா.. நமக்கும் அனுபவம் இருக்கு.
ReplyDeleteதத்துவம் - முடியலை..............ப்ளீஸ்
ReplyDeleteஎன் ராஜபாட்டை"- ராஜா said... 11 12
ReplyDeleteஇன்று என் வலையில்
விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?//
விஜயை பார்த்துட்டு ஜனங்கள் பேதி ச்சே ச்சீ பீதி ஆகாமல் இருந்தா சரி....
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//
சி.பி.செந்தில்குமார் said...
பிளாக்கின் இடது ஓரத்தில் ஆரன்சு சொக்கா போட்டு ஒரு பையன் இருக்கானே அது லேப் டாப் மனோவோட தம்பியா?
//
தாத்தா//
பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி....
தத்துவம் செம செம ..
ReplyDeleteவெளங்காதவன் said...
ReplyDeleteஹி ஹி ஹி...//
என்னய்யா நீரும் மாங்காய் களவாங்க கிளம்பியாச்சோ..??
suryajeeva said...
ReplyDeleteஅந்த கலவரத்திலேயும் மாங்காய கீழே போடாம ஓடிய உங்க மன தைரியத்தை பாராட்டி ஆணிவேர் கொடுக்கும் பரிசு, ஆலய மணி படத்தில் சரோஜா தேவி பயன்படுத்திய சோப்பு டப்பா...
டிஸ்கி: மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறேன்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
விக்கியுலகம் said...
ReplyDeleteஅண்ணே வணக்கம்னே!//
சரி சரி புரியுது, வணக்கம் அண்ணே...
மனசாட்சி said...
ReplyDelete///பிடிச்சேன் பாருங்க ஓட்டம்// ஹா.. ஹா.. ஹா.. நமக்கும் அனுபவம் இருக்கு.//
ஹா ஹா ஹா ஹா....
மனசாட்சி said...
ReplyDeleteதத்துவம் - முடியலை..............ப்ளீஸ்//
ஹி ஹி....
அரசன் said...
ReplyDeleteதத்துவம் செம செம ..//
ஹா ஹா ஹா ஹா....
என்ன ஒரு களவாணித்தனம்
ReplyDeleteமனோதத்துவம்- சூப்பர் ஹா ஹா ஹா
ஜ.ரா.ரமேஷ் பாபு said... 53 54
ReplyDeleteஎன்ன ஒரு களவாணித்தனம்
மனோதத்துவம்- சூப்பர் ஹா ஹா ஹா//
ஹே ஹே ஹே ஹே நன்றி...
பையனிடம் இரண்டு முறை பல்ப் வாங்கிட்டீங்க ஹாஹா
ReplyDeleteஅது அப்பிடித்தான் நண்பரே உசுரு பயம் வந்தால் வேலி ஒசரம் கண்ணுக்கு தெரியாது ,ஹா ஹா
ReplyDeleteஇதெல்லாம் வரலாறு....
ReplyDeleteM.R said...
ReplyDeleteபையனிடம் இரண்டு முறை பல்ப் வாங்கிட்டீங்க ஹாஹா//
ஹா ஹா ஹா ஹா...
M.R said...
ReplyDeleteஅது அப்பிடித்தான் நண்பரே உசுரு பயம் வந்தால் வேலி ஒசரம் கண்ணுக்கு தெரியாது ,ஹா ஹா//
ஆமாய்யா, இப்போ அந்த வேலியை பார்த்தாலும் ஆச்சர்யமா இருக்கு...!!!
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteஇதெல்லாம் வரலாறு....//
ஆமாய்யா பாடத்துல வைப்பாயிங்க ஹி ஹி...
//இன்ட்லி'ல ஓட்டு போடுறவுங்க இன்ட்லியை கிளிக் செய்துட்டு அதில் "பரிந்துரை"ன்னு இருப்பதை கிளிக் பண்ணீங்கன்னா ஓட்டு விழுந்துரும்//
ReplyDeleteஓட்டு விழுந்துருமா?
! சிவகுமார் ! said...
ReplyDelete//இன்ட்லி'ல ஓட்டு போடுறவுங்க இன்ட்லியை கிளிக் செய்துட்டு அதில் "பரிந்துரை"ன்னு இருப்பதை கிளிக் பண்ணீங்கன்னா ஓட்டு விழுந்துரும்//
ஓட்டு விழுந்துருமா?//
ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்யா....
ஆனாலும் மாங்காயை கீழே போடாமல்
ReplyDeleteஓடிய உங்களுக்கு மன தைரியம் அதிகம் தான் மக்களே.....
ஹா.ஹா.ஹா.ஹா..திருட்டு மாங்காய்தான் ருசி அதிகம்.......
ReplyDeleteதிருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்... எல்லாருக்குள்ளும் இதுபோல மலரும் நினைவுகள் இருக்கு... அதை தூசி தட்டிவிட்டுட்டீங்க...
ReplyDeleteஅந்த வயசிலேயே அருவாளைப் பார்த்ததனாலேதான்
ReplyDeleteநாம் இப்ப வீச்சருவா வைச்சு பென்சில் சீவ முடியுது
படத்தோடு பதிவினைப் படிக்க திரில்லிங்கா இருக்கு
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
சூப்பர் மாப்பு.....
ReplyDelete//"மனோ"தத்துவம் : எம்புட்டுதான் கல்லெரிஞ்சாலும் விழுற மாங்காய்'தான் விழும்.//
ReplyDeleteஇங்க பார்ரா! :-)
// பிளாஷ் பேக் ஆரம்பம், அப்பிடியே மேலே பாருங்க விட்டத்தை.....//நீங்கள் சொல்வதைப்போல விட்டத்தைப்பார்த்தால் பதிவை எப்படி படிக்கறது?
ReplyDelete//மலரும் நினைவுகள், சிரிப்பா சிரிக்குது போங்க.....!!!//உங்கள் வர்னனை கண்டு படிப்பவர்களும் சிரித்தோம்.
திருட்டு மாங்காய்ல உப்பத்தடவி திங்கிற சொகம் இருக்கே......
ReplyDeleteஇப்படி மாங்காய் தேங்காய் கரும்பு என திருடி உண்ட நீங்கத நினைவுகள் நிறையவே உண்டு நல்ல நினைவலைகள் ...
ReplyDeleteஆமா மாங்கா மடையன்னு சொல்றாங்களே அது ஏன்?
ReplyDeleteநாய்க்கு ஒரு மாங்கா போட்டிருந்தா விட்டிருக்கும் (ஆமா நாய் மாங்கா தின்னுமா?)
ReplyDeleteதத்துவம் ... சூப்பர்.,
ReplyDeleteமகேந்திரன் said...
ReplyDeleteஆனாலும் மாங்காயை கீழே போடாமல்
ஓடிய உங்களுக்கு மன தைரியம் அதிகம் தான் மக்களே.....//
ஹா ஹா ஹா ஹா ஓட்டமா அது...ம்ஹும்...
K.s.s.Rajh said...
ReplyDeleteஹா.ஹா.ஹா.ஹா..திருட்டு மாங்காய்தான் ருசி அதிகம்.......//
ஆமாய்யா ஆமா....
சே.குமார் said...
ReplyDeleteதிருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்... எல்லாருக்குள்ளும் இதுபோல மலரும் நினைவுகள் இருக்கு... அதை தூசி தட்டிவிட்டுட்டீங்க...//
ஹா ஹா ஹா ஹா அதே அதே....
Ramani said...
ReplyDeleteஅந்த வயசிலேயே அருவாளைப் பார்த்ததனாலேதான்
நாம் இப்ப வீச்சருவா வைச்சு பென்சில் சீவ முடியுது
படத்தோடு பதிவினைப் படிக்க திரில்லிங்கா இருக்கு
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்//
ஹா ஹா ஹா ஹா நன்றி குரு....
சசிகுமார் said...
ReplyDeleteசூப்பர் மாப்பு.....//
நன்றி மக்கா....
//அருவா என்னை டச் பண்ணி கீழே விழுந்தது, நல்லவேளை காயமில்லை...//
ReplyDeleteஅருவாளுக்கு காயமாகலைன்னு பீலிங்க பாருங்க...
ஜீ... said...
ReplyDelete//"மனோ"தத்துவம் : எம்புட்டுதான் கல்லெரிஞ்சாலும் விழுற மாங்காய்'தான் விழும்.//
இங்க பார்ரா! :-)//
ஹி ஹி....
//எம்புட்டுதான் கல்லெரிஞ்சாலும் விழுற மாங்காய்'தான் விழும்.//
ReplyDeleteரொம்ப அநுபவம் போல தெரியுதே!
ஸாதிகா said...
ReplyDelete// பிளாஷ் பேக் ஆரம்பம், அப்பிடியே மேலே பாருங்க விட்டத்தை.....//நீங்கள் சொல்வதைப்போல விட்டத்தைப்பார்த்தால் பதிவை எப்படி படிக்கறது?
//மலரும் நினைவுகள், சிரிப்பா சிரிக்குது போங்க.....!!!//உங்கள் வர்னனை கண்டு படிப்பவர்களும் சிரித்தோம்.//
ஹா ஹா ஹா ஹா நன்றிங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteதிருட்டு மாங்காய்ல உப்பத்தடவி திங்கிற சொகம் இருக்கே......//
நாக்குல நீர் சுரக்குதுய்யா...!!!
இந்த ஓட்டத்தை ஒலிம்பிக்ஸ்ல ஓடியிருந்தா ஒரு மெடலாவது இந்தியாவுக்கு கிடைச்சிருக்கும்.
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மாலதி said...
ReplyDeleteஇப்படி மாங்காய் தேங்காய் கரும்பு என திருடி உண்ட நீங்கத நினைவுகள் நிறையவே உண்டு நல்ல நினைவலைகள் ...//
நீங்களும் ஒரு பதிவு எழுதுங்களேன் சூப்பரா இருக்குமே...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆமா மாங்கா மடையன்னு சொல்றாங்களே அது ஏன்?//
அதுக்கு ஒரு கதை உண்டுய்யா மறந்துப்போச்சு, எங்கே அப்பா சொன்ன கதை...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநாய்க்கு ஒரு மாங்கா போட்டிருந்தா விட்டிருக்கும் (ஆமா நாய் மாங்கா தின்னுமா?)//
யோவ் நாயி "அந்த" காயை பறிக்க ஓடி வருது நீரு வேற.......
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteதத்துவம் ... சூப்பர்.,//
வாத்தி எத்தனை மரத்துல கல்லெரிஞ்சாரோ????
சத்ரியன் said...
ReplyDelete//அருவா என்னை டச் பண்ணி கீழே விழுந்தது, நல்லவேளை காயமில்லை...//
அருவாளுக்கு காயமாகலைன்னு பீலிங்க பாருங்க...//
ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆஹா....
RAMVI said...
ReplyDeleteஇந்த ஓட்டத்தை ஒலிம்பிக்ஸ்ல ஓடியிருந்தா ஒரு மெடலாவது இந்தியாவுக்கு கிடைச்சிருக்கும்.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//
ஹா ஹா ஹா ஹா ஹா....
உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்...
மாங்காய் களவெடுக்காதவங்க யாருமே இருக்கமுடியாதோ.நானும்தான் !
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said... 41 42
ReplyDeleteவெளங்காதவன் said...
ஹி ஹி ஹி...//
என்னய்யா நீரும் மாங்காய் களவாங்க கிளம்பியாச்சோ..??//
இப்பத்தான் திரும்பி வந்தேன் மக்கா!
விக்கி மாம்ச நாய் கடிச்சு வச்சிடுச்சு...
ஹாஸ்பிடல் போயிட்டு வர லேட் ஆயிடுச்சு மக்கா!
நிறைய பல்ப் வாங்கிருக்கீங்க ....உங்க மாங்காய் கதை படிச்சு ஒரே சிரிப்பு,என் பொண்ணுக்கூட ஏம்மா சிரிக்கிறீங்கன்னு கேக்கிற அளவுக்கு சிரிச்சேன்..புள்ள வேற பயந்துடுச்சு!!
ReplyDelete'மாம்பூவே சிறு மைனாவே' னு சும்மாவா பாடினாங்க அழகுனா அழகு அப்படி ஒரு அழகு.
ReplyDeleteஆனா நீங்க போட்டு இருக்கிற மாங்கா படத்தை பார்த்தா இந்த வயசில எனக்கு திருடித் திங்கணும் போல இருக்குது
ஹேமா said...
ReplyDeleteமாங்காய் களவெடுக்காதவங்க யாருமே இருக்கமுடியாதோ.நானும்தான் !//
ஹா ஹா ஹா ஹா எல்லாருமே, கள்ளன் கள்ளி'தான் போல....
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteமாங்கா களவாண்ட கதை நல்லாத்தான் இருக்கு!
ReplyDeleteவெளங்காதவன் said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said... 41 42
வெளங்காதவன் said...
ஹி ஹி ஹி...//
என்னய்யா நீரும் மாங்காய் களவாங்க கிளம்பியாச்சோ..??//
இப்பத்தான் திரும்பி வந்தேன் மக்கா!
விக்கி மாம்ச நாய் கடிச்சு வச்சிடுச்சு...
ஹாஸ்பிடல் போயிட்டு வர லேட் ஆயிடுச்சு மக்கா!//
அவனை இனி கழுதையும் கடிக்கப் போகுது....
S.Menaga said...
ReplyDeleteநிறைய பல்ப் வாங்கிருக்கீங்க ....உங்க மாங்காய் கதை படிச்சு ஒரே சிரிப்பு,என் பொண்ணுக்கூட ஏம்மா சிரிக்கிறீங்கன்னு கேக்கிற அளவுக்கு சிரிச்சேன்..புள்ள வேற பயந்துடுச்சு!!//
ஹா ஹா ஹா ஹா.....
நாய்க்குட்டி மனசு said...
ReplyDelete'மாம்பூவே சிறு மைனாவே' னு சும்மாவா பாடினாங்க அழகுனா அழகு அப்படி ஒரு அழகு.
ஆனா நீங்க போட்டு இருக்கிற மாங்கா படத்தை பார்த்தா இந்த வயசில எனக்கு திருடித் திங்கணும் போல இருக்குது//
காசு குடுத்து வாங்கி சாப்புடுங்கோ, நாய் கடிச்சி வச்சிரப்போகுது....
Chitra said...
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்//
அமெரிக்கா புயல் திரும்பியாச்சு....
சென்னை பித்தன் said...
ReplyDeleteமாங்கா களவாண்ட கதை நல்லாத்தான் இருக்கு!//
அப்புறமா தேங்காய் களவாண்டதை சொல்றேன் ஹி ஹி....
ஓஹோ ....இதுதான் அருவா ரகசியமா !
ReplyDeleteமாங்கா களவு... :))) நினைவுகள் சுகமானவை நண்பரே...
ReplyDeleteஅடடா இந்தப் பதிவரும் மாங்காய்த் திருடரா...
ReplyDeleteமாங்காய் டேஸ்ட் எப்டி?
ReplyDeleteமனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள் மனோ.
ReplyDeleteஅண்ணாச்சி கொஞ்சம் லடே
ReplyDeleteஅருமையா இருக்கு நினைவுகள்
அப்புறம் சொல்ல மறந்துட்டேன்
ReplyDeleteதீபா வளி திரு நாள் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
இனிய காலை வணக்கம் மனோ அண்ணா,
ReplyDeleteநலமா?
மலரும் நினைவுகளை ரசித்தேன்...
உங்கள் மகன் உங்களுக்கே வில்லனாகிட்டாரா..
ஹே...
ஹே...
மனோ தத்துவம் சூப்பர் தல.
ஆஹா...மாங்கா செய்ற வேலையைப் பார்த்தீங்களா....
ReplyDeleteஎன்ன கொடுமை...முறைப்பு சொந்த மகன்கிட்டேவா?????
சமாளிக்க வேண்டியதுதுான்....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ...
மலரும் நினைவுகள், சிரிப்பா சிரிக்குது போங்க.....!!
ReplyDeleteமனோதத்துவம் அருமை!