நான் பஹ்ரைன் வந்த இரண்டாம் வருஷம் நடந்த ஒரு மோதல், சாரி காதல்....
நான் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த ஆரம்பகாலம், எங்கள் ஹோட்டலுக்கு புதிதாக அக்கவ்ண்டண்டாக பணிபுரிய கேரளா கோட்டயத்தில் இருந்து ஒரு புதிய பெண் வந்தாள், அழகோ அழகு கொள்ளை அழகு....!!!
எங்கள் ஹோட்டல் முதலாளி முதற்கொண்டு, மானேஜர், டிஷ்வாசர்கள் கூட அவள்மீது மையல் கொண்டிருந்தார்கள், ஆனால் அவள் மையல் கொண்டதோ சாதாரண சர்வரான என்மீது [[எலேய் அடிக்க வராதீங்கப்பா இது உண்மை, மட்டுமல்ல என் வீட்டம்மாவுக்கும் தெரியும்]]
நான் தமிழன் என்பதால் என்மீது ஒரு ஈர்ப்பு'ன்னு அடிக்கடி சொல்வாள், தமிழர்களை மிகவும் நேசிக்கும் மனம் [[அதுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு சொன்னால் அழுதுருவீங்க ஸோ வருங்காலத்துல சொல்லுவேன், யாராவது மலையாளிங்க தமிழனை தாக்கும் போது]] அவளுடையது...!!!
அவள் பெயர் சு'மீதா [[பெயர் மாற்றபட்டுள்ளது]] கொள்ளையே கொள்ளை போகும் அழகு, அவளுக்காகவே தனியாக மேக்கப் போட்டுகொண்டுவரும் மானேஜர்கள், மற்றைய ஸ்டாப்'கள், ஆனால் எனக்காகவே தன்னை அலங்கரித்துக்கொண்டு, என்னிடம் மட்டும் வந்து கேட்பாள் "எங்கென உண்டு" என்று...
எனக்கு பொதுவா ஒரு குணம் உண்டு அதிகம் அழகா இருக்குற பெண்களை பிடிக்காது, காரணம் அவர்களின் ஆணவம். அதுலதான் சம்மட்டி அடி விழுந்தது!!!! சுமிதா பார்க்க நடிகை மீனா போல இருப்பாள், என்கூட வேலைபார்ப்பவர்கள் எல்லாருக்கும் [[மலையாளிகள்]] செமையான கடுப்பு....
அவள் என்னோடு பழகும் விதமும், அவள் எனக்கு வாங்கித்தரும் [[மறுத்தும் விடமாட்டாள்]] பரிசு பொருட்கள், நான் வேண்டாம் என்று சொன்னதால் நேரில் என் ரூமுக்கே வந்துவிட்டாள், அதுக்கு பயந்தே அவள் என்ன வாங்கிதந்தாலும் உடனே வாங்கிவிடுவேன்.
எனக்கு மலையாளம் சரியாக பேச கத்து தந்ததும் அவள்தான், [[பொம்பளைங்க கத்து தந்தா சீக்கிரம் கத்துக்கலாம் ம்ஹும் அதுவும் அழகான பெண்கள்??? கேட்கவே வேண்டாம் போங்க]]
இவளின் நோக்கம் [[காதல்]] அறிந்து இடையிடையே என் மனைவி பற்றியும், எனக்கு ஒரு பையன் [[பெண்குழந்தை அப்புறமா பொறந்தது]] இருக்குறான் என்பது பற்றியும் நாசுக்காக சொல்லுவேன், அவள் அதை பொருட்படுத்தவே இல்லை...
அடபாவிமகள் காதலை சொல்லியே விட்டாள், ஹோட்டல் மொத்தமும் சொல்லியும் விட்டாள். நான் எவ்ளோ எடுத்து சொல்லியும், கடுப்பான மலையாளிகள் போட்டுகுடுத்தும் அவள் அசையவே இல்லை....
நான் கல்யாணம் ஆனவன், எனக்கு ஒரு குழந்தையும் இருக்குன்னு எவளவோ சொல்லியும் கேட்பதாக இல்லை, என்னையும் கல்யாணம் பண்ணிக்கோ இல்லைன்னா செத்துருவேன்னு ஒருநாள் கத்தியால் கையை அறுத்து விட்டாள், மனசுகேக்காமல் ஓடிப்போனேன் பார்க்க, என்னை கட்டிபிடித்து அழுத அழுகை இன்னமும் ரணமாக நெஞ்சில இருக்கு....
அவள் குடும்பத்தார் எவளவோ எடுத்து சொல்லியும், எங்கள் முதலாளி அவளை மிரட்டியும் அவள் அசரவில்லை, ஏன்னா நான் கல்யாணம் ஆனவன் அவளை கல்யாணம் செய்ய எனக்கு மனமில்லைன்னு [[வீட்டம்மாகிட்டே வாயில அடி வாங்கவேண்டி பயந்து]] எல்லாருக்கும் தெரியும்....
முதலாளி [[மலையாளி]] என்னை கூப்பிட்டு மிரட்டினான், இப்பவே சர்ச் கூட்டிட்டு போயி ரெண்டுபேரையும் கல்யாணம் செய்து வச்சிருவேன்னு மிரட்டினான், சார் நான் யாரையும் காதலிக்கவும் இல்லை அது எனக்கு தேவையும் இல்லை என கடுமையாக சொன்னேன்....
எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம், எப்பிடிடா இந்த ஆதிவாசி மாதிரி இருக்குற பாண்டிக்கு இந்த கிளி சிக்குச்சுன்னு, அவளின் கண்ணீர் என்னை வெகுவா கரைக்க ஆரம்பிச்சது, என் வீட்டம்மாகிட்டே எதுவும் மறைக்க மாட்டேன், அவளிடம் சொன்னதும் ஈசியா சொல்லிவிட்டாள், நோ பிராப்ளம் அத்தான், எனக்கு கொள்ளிவைக்க வந்துருங்க....
எவளவோ கெஞ்சி பார்த்தேன் கோபப்பட்டேன், அடியும் விழுந்தது, அசரவில்லை [[காதல் அம்புட்டு பவர்போல]] அவள்.....என்ன செய்யன்னு யோசனையா இருந்தப்போ, சக தோழி திவ்யா என் அவஸ்த்தையும் அவள் அவஸ்த்தையும் புரிந்தவளாய் எனக்கு ஐடியா தர ஆரம்பித்தாள்...
சுமிதா'வுக்கு எது எது பிடிக்காதோ அதையெல்லாம் செய்ய சொன்னாள், அதையெல்லாம் செய்தேன், அவளுடன் பணிபுரியும் மற்ற சேச்சிகளும் அவளை பிரைன் வாஷ் செய்ய....
இதுக்கிடையில் என் நண்பன் [[மலையாளி]] அவள் மீது காதல் செய்ய [[எனக்கும் அவனுக்கும் ஒரு அலைவரிசை கிடடையாது]] அவனும் ஒருநாள் தன் கையை அறுத்து காதலை சொல்ல, சேச்சி'களும் சுமிதாவை மூளைசலவை செய்ய, நண்பனின் காதலுக்கு சம்மதித்தாள்.
அவனும் "உடனே" அவளை ஊருக்கு கூட்டிக்கொண்டு போயி திருமணம் செய்துகொண்டான். கல்யாணம் முடிந்து திரும்பி வந்தார்கள், எனக்கு பிரமோசன் கிடைக்க ஆரம்பிச்சுச்சி, ஊரில் இருந்து வந்தவள் என்னோடு பேசவும் இல்லை, ஏன் ஒரு ஹாய் கூட சொல்லவில்லை, நானும் கண்டுக்கவில்லை, வேலை விஷயமாக ஏதும் கேள்வி இருந்தால், கேள்விக்கேற்ற பதில் மட்டுமே.....
அழகான ஒரு பெண் குழந்தையும் பிறந்தது அவர்களுக்கு, அதுவரைக்கும் நானும் அவளும் பேசினதே கிடையாது, அந்த குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கு பெரிய பங்ஷன் வைத்தார்கள், என்ன நினைத்தார்களோ எனக்கும் அழைப்பு வந்தது.
எனக்கு போகவே மனசில்லை, காரணம் பங்சனுக்கு வரும் எல்லாருக்குமே எங்கள் விஷயம் தெரியும், ஆனாலும் மலையாளி நண்பர்கள் என்னை வலுகட்டாயமாக கொண்டு போகவே, குழந்தைக்கு ஏதாவது வாங்கணுமே என்று ஒரு தங்க மோதிரம் வாங்கி சென்றேன்...
என்னை வரவேற்றது அவள் கணவன், அவன் கையில் மோதிரத்தை குடுத்தேன், எல்லார் கண்களும் என்மீது, சுமிதா தெரியாதவள் போல நின்றிருந்தாள்.
நான் வேகமாக வெளியேறினேன் சில நண்பர்களுடன் பேசிவிட்டு, லி ஃ ப்'டில் வராமல் மாடிப்படி வழியே கடகடவென இறங்கினேன், இரண்டாவது ஃப்லோர் வரவும் சுமிதா எனக்காக காத்திருந்தாள், என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாள், அவள் என்னோடு பேசாதது காரணம் அவள் கணவனாம்..
கல்யாணம் முடிந்து முதல் இரவில் அவளிடம் வாங்கிய முதல் சத்தியம், என்னோடு பேசக்கூடாது என்றாம்...!!!! ஆகவேதான் பேசவில்லை என்றாள், என் நெஞ்சை அவள் கண்ணீரால் நனைத்தாள், நானும் தடுக்கவில்லை, காதலின் அன்பு எனக்கு தெரியாதா என்ன....
அழுதுவிட்டு சொன்னாள், மனோ என் குழந்தையின் பெயர் என்ன தெரியுமா...?? உன் பேர்தான் வச்சிருக்கேன் மனு'ன்னு [[என்னை அப்பிடிதான் கூப்பிடுவாள்]] நீ பங்க்சன்ல பாதியில போகாதே மனு, என்மீது கொஞ்சமாவது அன்பு இருந்தா என் குழந்தையை கையில் எடுத்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு போ என்றாள்...
உன்னோடு நான் பேசினதுல என் மனபாரம் எல்லாம் காற்றோடு போயிருச்சி என்றாள், அவளை லிப்டில் அனுப்பிவிட்டு நான் படியில் நடந்து போனேன், போயி குழந்தையை கையில் எடுத்து முத்தம் கொடுத்தேன், குழந்தை என்னை கையால் வருடியது, கையை கவனித்தேன் விரலில் நான் கொடுத்த மோதிரம் பளிச்சிட்டது...!!!!
விடைபெற்றேன், அவள் முகம் பார்த்தேன் பரம திருப்தியாக சைகையால் விடை கொடுத்தாள் அந்த தேவதை!!!!
மறக்க நினைச்ச விஷயம் பத்து வருஷமாச்சு, திடீர்னு இன்னைக்கு பேஸ்புக் சாட்'ல தேவதை வந்தேவிட்டாள் அதே அழகோடு, என் மீது அன்பை பொழிந்து, ஆனால் இது காதல் அல்ல நட்பு என்று சொல்லி சிரிக்கிறாள்....!!!!
என் பேஸ்புக்ல தேவதை வந்துருக்கா, என் பேஸ்புக் அக்கவுட்ன்ல அவள் போட்டோவும் இருக்கு கண்டுபிடிக்கிறவங்க கண்டு பிடிச்சிக்கோங்க[[இந்த பதிவு அவளின் அனுமதி பெற்றே இட்டுருக்கிறேன்]], அவளுக்கு இப்போது இரண்டு குழைந்தைகள் இருக்காம் [[வாழ்க செல்லம் வளமுடன்]] இப்பவும் ஐ லவ் யூ'டான்னு சொல்லி என்னை கலாயிக்கிறாள் ஹா ஹா ஹா ஹா....!!!!
அண்ணன் இன்னிக்கு புல் மப்பாட்டு இருக்கு..... உண்மைகளை தாறுமாறா எடுத்து விட்டிருக்காரே? அப்படியே இன்னும் கொஞ்சம் வாயை கிளறிவிடுவோம்....
ReplyDeleteங்ணா உங்க ஆட்டோகிராப்ல ஒரு பக்கத்தை போட்டுட்டீங்க, அப்படியே அடுதடுத்த பக்கங்களையும் போடுறது...?
ReplyDeleteஹா ...ஹா ...ஹா...
ReplyDelete//////எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம், எப்பிடிடா இந்த ஆதிவாசி மாதிரி இருக்குற பாண்டிக்கு இந்த கிளி சிக்குச்சுன்னு//////
ReplyDeleteகன்பர்மா தலைவரு மப்புலதான் எழுதி இருக்காப்ல..... இல்லேன்னா இப்படி ஆதிவாசின்னு உண்மைய உளறி இருக்க மாட்டாரே?
///////என் பேஸ்புக்ல தேவதை வந்துருக்கா, என் பேஸ்புக் அக்கவுட்ன்ல அவள் போட்டோவும் இருக்கு கண்டுபிடிக்கிறவங்க கண்டு பிடிச்சிக்கோங்க/////////
ReplyDeleteஇப்போ வெளங்கிருச்சு....... நீங்க உங்க தேவதை ரொம்ப அழகு, அதுவும் மீனா மாதிரின்னு சொன்னது எல்லாரையும் குழப்பிவிடத்தானே?
தி கிரேட் எஸ்கேப்...
ReplyDeleteஜீவி- யில் வரும் என் காதல் படிக்கட்டகள் தொ்டர் போன்று சுவாரஸ்யமாக இருந்தது...
ReplyDeleteஎப்படியோ தப்பிச்சிங்க...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணன் இன்னிக்கு புல் மப்பாட்டு இருக்கு..... உண்மைகளை தாறுமாறா எடுத்து விட்டிருக்காரே? அப்படியே இன்னும் கொஞ்சம் வாயை கிளறிவிடுவோம்...//
அடப்பாவி உமக்கு நேற்றைக்கு அடிச்சது இன்னமும் இறங்கலையா ஹி ஹி....
அவளிடம் சொன்னதும் ஈசியா சொல்லிவிட்டாள், நோ பிராப்ளம் அத்தான், எனக்கு கொள்ளிவைக்க வந்துருங்க....
ReplyDelete////////
இதுதாங்க உண்மையான மனைவியின் அன்பு...
நான் திரும்ப வந்துட்டேன்...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteங்ணா உங்க ஆட்டோகிராப்ல ஒரு பக்கத்தை போட்டுட்டீங்க, அப்படியே அடுதடுத்த பக்கங்களையும் போடுறது...?//
ஆமாமா சுகன்யா பதிவுக்கே ஆட்டோ இல்லை லாரியே வந்துச்சு தெரியுமுல்ல, எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் ஹா ஹா ஹா ஹா...
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஹா ...ஹா ...ஹா...//
ஹி ஹி ஹி....
///////MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்ணா உங்க ஆட்டோகிராப்ல ஒரு பக்கத்தை போட்டுட்டீங்க, அப்படியே அடுதடுத்த பக்கங்களையும் போடுறது...?//
ஆமாமா சுகன்யா பதிவுக்கே ஆட்டோ இல்லை லாரியே வந்துச்சு தெரியுமுல்ல, எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் ஹா ஹா ஹா ஹா...
//////
ஆஹா..... அப்போ உண்மையிலேயே இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கா?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம், எப்பிடிடா இந்த ஆதிவாசி மாதிரி இருக்குற பாண்டிக்கு இந்த கிளி சிக்குச்சுன்னு//////
கன்பர்மா தலைவரு மப்புலதான் எழுதி இருக்காப்ல..... இல்லேன்னா இப்படி ஆதிவாசின்னு உண்மைய உளறி இருக்க மாட்டாரே?//
சத்தியமா உம்மை பூமிதிக்க அனுப்பிருவேன்...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////என் பேஸ்புக்ல தேவதை வந்துருக்கா, என் பேஸ்புக் அக்கவுட்ன்ல அவள் போட்டோவும் இருக்கு கண்டுபிடிக்கிறவங்க கண்டு பிடிச்சிக்கோங்க/////////
இப்போ வெளங்கிருச்சு....... நீங்க உங்க தேவதை ரொம்ப அழகு, அதுவும் மீனா மாதிரின்னு சொன்னது எல்லாரையும் குழப்பிவிடத்தானே//
அவள் தேவதையா....!!! என் பேஸ்புக்ல போயி பாருங்கோ...
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteதி கிரேட் எஸ்கேப்...//
ஒடுலேய் ஒடுலேய்...
கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஜீவி- யில் வரும் என் காதல் படிக்கட்டகள் தொ்டர் போன்று சுவாரஸ்யமாக இருந்தது...
எப்படியோ தப்பிச்சிங்க...//
ஹா ஹா ஹா ஹா இப்போ நினச்சா ஆச்சர்யமா இருக்குய்யா....!!!
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஅவளிடம் சொன்னதும் ஈசியா சொல்லிவிட்டாள், நோ பிராப்ளம் அத்தான், எனக்கு கொள்ளிவைக்க வந்துருங்க....
////////
இதுதாங்க உண்மையான மனைவியின் அன்பு...///
ஒருவேளை இவள் இந்த வார்த்தையை உபயோகிக்காமல் இருந்தால் நானும் ரெண்டு பொண்டாட்டிக்காரன் ஆகிருப்பெனோ...???
# கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteநான் திரும்ப வந்துட்டேன்//
அமெரிக்காவுல இருந்தா...???
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete///////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ங்ணா உங்க ஆட்டோகிராப்ல ஒரு பக்கத்தை போட்டுட்டீங்க, அப்படியே அடுதடுத்த பக்கங்களையும் போடுறது...?//
ஆமாமா சுகன்யா பதிவுக்கே ஆட்டோ இல்லை லாரியே வந்துச்சு தெரியுமுல்ல, எதுக்கும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம் ஹா ஹா ஹா ஹா...
//////
ஆஹா..... அப்போ உண்மையிலேயே இந்த மாதிரி இன்னும் நிறைய இருக்கா?//
பெட்டிசோறு கட்டிட்டு வாங்க ஒரு பெரிய சினிமாவே எடுக்கலாம், நாப்பத்தெட்டு மணிநேரத்துக்கு....
கதை ரொம்ப நன்னாயிருக்கு.அடுத்தது எப்போ?
ReplyDeleteமனோ மீது மையல் கொண்ட மலையாள மயில்! ன்னு தலைப்பு வைச்சிருக்கலாம் மக்கா!
ReplyDeleteமனோ,உங்களை என்னவோ காமெடி பீஸ்னு நினைச்சுட்டேனே??மனோவுக்குள் ஒரு மலையாளிபெண்குட்டி!உங்கள் ‘ஜெண்டில்மேன்’குணம் .பாராட்டியே ஆகணும்!
ReplyDeleteமக்கா... எப்படி இப்படிஎல்லாம்??
ReplyDeleteRAMVI said...
ReplyDeleteகதை ரொம்ப நன்னாயிருக்கு.அடுத்தது எப்போ?//
யோவ் நான் என்ன ராமாயணமா சொல்லிட்டு இருக்கேன் அவ்வ்வ்வ்...
கோகுல் said...
ReplyDeleteமனோ மீது மையல் கொண்ட மலையாள மயில்! ன்னு தலைப்பு வைச்சிருக்கலாம் மக்கா!//
அட தலைப்பு நல்லா இருக்கே....!!!
என் மன வானில் said...
ReplyDeleteமனோ,உங்களை என்னவோ காமெடி பீஸ்னு நினைச்சுட்டேனே??மனோவுக்குள் ஒரு மலையாளிபெண்குட்டி!உங்கள் ‘ஜெண்டில்மேன்’குணம் .பாராட்டியே ஆகணும்!//
என்னாது காமெடி பீசா...? எலேய் அந்த அருவாளை இங்கிட்டு தா.....
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteமக்கா... எப்படி இப்படிஎல்லாம்??//
நாங்களும் சொல்லுவோம்ல....
மனு சாரே.. சூப்பர்
ReplyDeleteஅருவா, சுத்தி-ன்னு திரிஞ்ச அண்ணனுக்கு காதலா?
ReplyDeleteஅடி பொலி சேட்டா
ReplyDeleteசேட்டன் செய்தது செரியான்னு.
நிங்ஙலோட ஃபாரிய பரஞ்ஞது கேட்டு
செரியான டிசிசன் எடுத்து .
நன்னி.
t.m voted
ReplyDeleteநல்லா இருக்கே கதை
ReplyDeleteரசித்துப் படித்தேன்
இது போன்று தொடராதிருக்க
வாழ்த்துக்கள்
FOOD said...
ReplyDeleteசைலண்டா போகவேண்டிய மேட்டரை இப்படி சட்டுன்னு கவுத்திட்டீங்களே! ///
இப்பிடி கவுக்கவேண்டிய மேட்டர் இன்னும் நிறைய இருக்கு ஆபீசர்....
குடிமகன் said...
ReplyDeleteமனு சாரே.. சூப்பர்//
நன்றி சாரே...
செங்கோவி said...
ReplyDeleteஅருவா, சுத்தி-ன்னு திரிஞ்ச அண்ணனுக்கு காதலா?//
ஹி ஹி காதல் யாரைத்தான் விட்டது...
செங்கோவி said...
ReplyDeleteஅருவா, சுத்தி-ன்னு திரிஞ்ச அண்ணனுக்கு காதலா?//
ஹி ஹி காதல் யாரைத்தான் விட்டது...
M.R said...
ReplyDeleteஅடி பொலி சேட்டா
சேட்டன் செய்தது செரியான்னு.
நிங்ஙலோட ஃபாரிய பரஞ்ஞது கேட்டு
செரியான டிசிசன் எடுத்து .
நன்னி.//
ஹி ஹி ஹி ஹி மலையாளம் எனக்கேவா....?
Ramani said...
ReplyDeleteநல்லா இருக்கே கதை
ரசித்துப் படித்தேன்
இது போன்று தொடராதிருக்க
வாழ்த்துக்கள்//
ஹா ஹா ஹா ஹா குரு.....
Wow what a love story
ReplyDeleteசூப்பர் காதல் கதை .ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteஎன்னா சேட்டை!!
ReplyDeleteதலைவா, நீங்க போட்டுருக்குற தொப்பி எம்.ஜி.ஆர். ஆபீஸ்ல சுட்டதா?
ReplyDeleteநல்ல கலக்கல்.
ReplyDeleteஎன் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteWow what a love story//
கிரேட் லவ் ஸ்டோரி..
kobiraj said...
ReplyDeleteசூப்பர் காதல் கதை .ஓட்டு போட்டாச்சு//
மிக்க நன்றி...
சிவகுமார் ! said...
ReplyDeleteஎன்னா சேட்டை!!
September 18, 2011 8:19 AM
! சிவகுமார் ! said...
தலைவா, நீங்க போட்டுருக்குற தொப்பி எம்.ஜி.ஆர். ஆபீஸ்ல சுட்டதா?//
நமீதா வீட்ல சுட்டது...
கும்மாச்சி said...
ReplyDeleteநல்ல கலக்கல்.
கும்மாச்சி said...
ReplyDeleteநல்ல கலக்கல்.//
ஹா ஹா ஹா ஹா...
உண்மையா கற்பனையா
ReplyDeleteஎது எப்படி இருந்தாலும்
எழுதியுள்ள பாங்கு விரசமில்லை
புலவர் சா இராமாநுசம்
மனதில் "விகாரம்" இல்லாத வரை தப்பே இல்லை!
ReplyDelete/////எல்லாருக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம், எப்பிடிடா இந்த ஆதிவாசி மாதிரி இருக்குற பாண்டிக்கு இந்த கிளி சிக்குச்சுன்னு//////
ReplyDeleteI like This.
ஏன் இதை நீங்க ஒரு படமா எடுக்கக் கூடாது.
@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteநமீதா மனோ வாழ்க!
லீவு நாளுன்னா முழுசா ஒரு குப்பிய உள்ள தள்ள வேண்டியது. மூஞ்சி புத்தகத்து உக்காந்து நோண்ட வேண்டியது.
ReplyDeleteசரி மனோவுக்கு ஒரு ஷாக் வைத்தியம்.
ராஜா நீ ரொம்ப அழகா தண்டா இருக்கே!
அதனால தா மலையாள குட்டிகள் எல்லாம் நம்ம மனோவ சுத்தி வருதுக! இந்த கருமத்த நா சொல்ல வேண்டியதா போச்சே!!
அவளுக்காகவே தனியாக மேக்கப் போட்டுகொண்டுவரும் மானேஜர்கள், மற்றைய ஸ்டாப்'கள், ஆனால் எனக்காகவே தன்னை அலங்கரித்துக்கொண்டு, என்னிடம் மட்டும் வந்து கேட்பாள்//
ReplyDeleteஅவ்.வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அண்ணே உங்களுக்குள்ளும் ஒரு காதல் புயலா...
மெய் சிலிர்க்க வைத்திருக்கிறது இக் கதை.
ReplyDeleteஉடனே உங்க facebook அக்கவுன்ட்டுக்கு பறக்கிறேன்...
ReplyDeleteஅண்ணே... நான் அண்ணி யாருன்னு கண்டுபுடிச்சிட்டேன்...
ReplyDeleteஅடடே! நாஞ்சிலார் காதல் கதைகள் சூப்பரா இருக்கே!
ReplyDeleteஅண்ணா, அப்பிடியே இத தொடர்பதிவா மாத்தி (மாட்டி) விட்டீங்கண்ணா... இன்னும் பலரோட ”ஆட்டோகிராஃப்” கதைகளும் கேட்டா மாதிரி இருக்கும்.
அண்ணா ஆரம்பிச்சி விடுங்ணா...!
குட்டி மீனா மாதிரி இருப்பா -ன்னுதான் சொல்லியாச்சே! அப்புறம் ஏன்யா இத்தன போட்டோ!
ReplyDeleteமீனா வூட்டுக்காரான் அருவாளோட அலையரானாம்!
அண்ணே அருமை
ReplyDeleteஅடடா லேட் ஆகிவிட்டது
இதுபோல உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர்ப்பார்க்கிறோம்
வாழ்க வளமுடன்
நீங்களும் அவங்களும் :)
ஏனுங்க மீனா கேரளா பொண்ண அண்ணா?
ReplyDeleteஅவளுக்கு இப்போது இரண்டு குழைந்தைகள் இருக்காம் [[வாழ்க செல்லம் வளமுடன்]] இப்பவும் ஐ லவ் யூ'டான்னு சொல்லி என்னை கலாயிக்கிறாள் ஹா ஹா ஹா ஹா....!!!!//
ReplyDeleteம் டச்சிங் அண்ணே
என்ன ஆச்சு திடிர்னு ஒரு ஆட்டோகிராப் ?
சுப்பர் அண்ணே..மனதை வருடிய கதை..ஒருவேளை உங்களுக்கு..கல்யாணம் ஆகாமல் இருந்து இருந்தால் அந்த அழகான காதலை.மிஸ்பன்னி இருக்கமாட்டீங்க..ஆமா..இப்ப அவங்க உங்க கூட பேஸ்புக்கில் சாட் பன்னுறது....அவங்க புருசன்..ஏத்துகொள்கின்றாரா...ஏன்னா ஓங்க கூட பேச கூடாதுனு சொன்னவரு....
ReplyDeleteஇன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ள மேட்டர் ஒன்று நம்ம பதிவுல சொல்லீருக்கேன்..அவைவரும்..வருக..அதரவை.தருக..
மெயின் விஷயங்களை கட் பண்ணி புட்டியே...ஹிஹி!
ReplyDeleteஇரட்டை வால் குருவி
ReplyDeleteAwesome expressions anne!
ReplyDelete:)
ஆட்டோகிராப் நல்லாயிருக்கு...
ReplyDeleteஇன்னும் நிறைய இருக்கோ.... இருந்தா இப்பிடிக்கா ஜொள்ளுங்க....
நாங்க ரசிக்கிறோம்.
நம்ம பக்கமெல்லாம் வாரதேயில்லை...
கும்மி குரூப்ல இருந்து வேற தளங்களுக்கு போகக்கூடாதுன்னு அண்ணன் பன்னிக்குட்டி ராமாசாமி (எதோ நம்மால முடிந்தது) சொல்லியிருக்காரோ?
அடேய், காலையில மனு சார் கடைல மசால் வாடா சாப்புட்டேன், பருப்பு வேகல, நூல் நூலா வந்திச்சு...
ReplyDelete//////சே.குமார் said...
ReplyDeleteஆட்டோகிராப் நல்லாயிருக்கு...
இன்னும் நிறைய இருக்கோ.... இருந்தா இப்பிடிக்கா ஜொள்ளுங்க....
நாங்க ரசிக்கிறோம்.
நம்ம பக்கமெல்லாம் வாரதேயில்லை...
கும்மி குரூப்ல இருந்து வேற தளங்களுக்கு போகக்கூடாதுன்னு அண்ணன் பன்னிக்குட்டி ராமாசாமி (எதோ நம்மால முடிந்தது) சொல்லியிருக்காரோ?
///////
ங்ணா....... அவரு லவ் மூடுல இருக்காருங்ணா... ரெண்டுநாளு உக்காந்து ”ஃபுல்”லா கிளியர் பண்ணிட்டுத்தான் இனி வெளிய வருவாருங்ணா.......
இன்னைக்கு காலைல என்னுடைய முகநூலில் பிறன் மனை நோக்கா பேராண்மை,ஒழுக்கம் அப்படி இப்படின்னு போட்டிட்டேன். சத்தியமா அது உம்மை வச்சி போட்டதில்லை ஓய். அது என் சொந்த பிரச்சனை. இந்த கதை நல்லாத்தான் இருக்கு. எதுக்கும் “கோமணத்தை” இறுக பற்றிக்கொள்வது நல்லது ஓய்.உம்ம பாதுகாப்புக்குதான் சொல்றேன்.
ReplyDelete@கே. ஆர்.விஜயன்
ReplyDelete/// எதுக்கும் “கோமணத்தை” இறுக பற்றிக்கொள்வது நல்லது ஓய்.உம்ம பாதுகாப்புக்குதான் சொல்றேன்.//
ஹையோ ஹையோ...................பாவம் விஜி .....விட்டுடுங்க. மனோ நம்ம ஆளு தானே.
யாரோ அவரு கோமணத்தை புடிச்சி இழுக்கிற மாதிரியே இருக்கு .
மனோவுக்குள்ளும் ஒரு மலையாள மயக்கம் என்று வைத்திருக்கலாம்! கதை ரசித்தோம் உங்கள் உணர்வு புரிந்தோம் !
ReplyDelete10 வருடங்கள் என்றாலும் நேற்றைய நிணைவுகள் போல் இருக்கு!
ReplyDeleteNice experience Mr.Mano sir!
ReplyDeleteunmaivrumbi.
Mumbai.
யோவ் மனோ.... பிள்ள குட்டிகள காப்பாற்ற உம்மை பாரின் அனுப்புனா நீர் என்ன செய்திருக்கணும்,சொல்லும் நீர் என்ன செய்திருக்கணும் ஒழுங்க வேலைய பார்த்தோமா வாங்கின சம்பளத்த வீட்டு அனுப்புனோமான்னு இல்ல இருந்திருக்கணும். இவரு சும்மாதான் இருந்தாராம் அது இவரையே பார்த்துதாம். யோவ் மீனா மாதிரி இருந்த அது குணத்திலயும் மீனா மாதிரிதான் இருக்கும். நீர் தான் கழுவுற மீனில் நழுவுற மீனா இல்லாம பொண்டாட்டிகிட்ட சொன்னாராம் அதுவும் ஓகே செல்லிச்சாம்.பிள்ள குட்டிகள பார்க்க வேலைக்கு போகச்சொன்ன நீர் குட்டிகளை பார்க்கதே வேலையா வெச்சிருந்து அது என்ன ஓய் செய்யும். அப்படிதான் சொல்லும்.காதல் செய்து தொலஞ்சிரிச்சே வேறு என்ன சொல்ல. ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஓய்... எவனெல்லாம் காதல் கல்யாணம் செய்தானோ ஒரு பயலும் காதல் செய்வதை அந்த கல்யாணத்தோடு நிறுத்துவதில்லை. எப்படி ஓய் நிறுத்தமுடியும் அவன் வேலையே அதுதானே. சரி ஓய் ஒரு முடிவுக்கு வருவோம் உமக்கு பிறக்க போற குழந்தைக்கு அவளுக்க பேரை வைப்போம். பேருக்க்கு பேர் சரியா போச்சு.ஒழுங்க உருப்படக்கூடிய வழியைப்பாரும்.கடைசியா ஒரு கேள்வி இந்த பதிவை எழுதும் போது நீர் “அடிச்ச” ஐட்டத்தின் பெயர் என்ன , நம்ம கக்கு அண்ணன் கிட்டேயும் சில ரகசியங்களை வரவழைச்சி எனக்கும் ஒரு ஆட்டோகிராப் பதிவு போட வேண்டியிருக்கு.
ReplyDeleteமனோ ஒரு டவுட்டு#ஏன் ,லிஃப்ட் இருந்தும்,நீங்க படியில் இறங்கி போனீங்க???ஏதோ இருக்குதானே??
ReplyDeleteஉனக்களைத்தட்டி எழுப்பி உங்கள் கனவைக் கலத்தது யாரு அதைச் சொல்லவே இல்லையே....[வீட்டம்மாவா...?]
ReplyDeleteஅண்ணே பார்ட்டி கீர்ட்டி எதாவது ?????
ReplyDeleteஎன்னத்தை சொல்றது... :)
ReplyDeleteதிடீர்னு கனவுன்னு ஏதாவது போடுவீங்கன்னு பார்த்தேன் அதுவும் இல்லை..... எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க மக்கா!