புது இடத்தில் ஹோட்டலின் எல்லா இடங்களையும் தனியாக சுற்றிப் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய ஜி எம் பணித்தபடியால் ஹோட்டலினுள் எல்லா இடங்களையும் பார்ப்பதற்காக ஒவ்வொரு மாடியாக ஏறி பார்வையிட்டு கொண்டே வந்தேன்.
ஹோட்டல் கொஞ்சம் பழமையானதும், மிகவும் பெயர் பெற்றதுமானது என்பதால் அங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் வேலைகள் இருப்பதை கணித்து, கவனத்து கொண்டே ஒவ்வொரு மாடியாக லிஃப்டில் போயி பார்த்துக் கொண்டிருக்கும் போது....
பத்தாவது மாடியில் இருந்து கீழே இறங்க லிஃப்டில் ஏறினேன், உள்ளே வாக்கிடாக்கி சகிதம் சீஃப் செக்கியூரிட்டி அவசரமாக வாக்கிடாக்கியில் ஆர்டர் பிறப்பித்துக் கொண்டிருந்தான். என்னமோ பிரச்சினை போல....அவசரமாக கீழே போக பிரயாசப்பட்டு கொண்டுருந்தபடியால் அவன் போக்குக்கு லிஃப்ட் போகட்டும் என விட்டுவிட்டேன்.
சீஃப் ரொம்ப அவசரமா பரபரவென லிஃப்ட் உள்ளே நிற்பதை பார்த்து நானே கொஞ்சம் பயந்துதான் போனேன், லிஃப்ட் கிரவுண்ட் ஃபுளோர் வந்து டோர் திறக்கவும்.......
அவன் "சார் நீங்க போங்க"
நான் "இல்லை நீங்க போங்க"
அவன் " இல்லை சார் நீங்கதான் முதல்ல போகணும்"
நான் "இல்லை சார் நீங்கதான் அவசரமா போகனும் போல, நீங்க வெளியே போங்க முதல்ல"
அவன் " சார் நாங்க உங்களை வெகுவா மதிக்கிறோம்[!] அதனால நீங்க போங்க முதல்ல"
இதற்கிடையே எந்த நாதாரியோ எட்டாவது மாடியில் இருந்து கீழே வர லிஃப்ட் பட்டனை அமர்த்த........எங்கள் லிஃப்ட் டோர் டபக் என மூடிக்கொண்டு மேலே போக.....
சீஃப் செக்யூரிட்டி என்னை பார்த்து முறைத்த முறைப்பு இருக்கே......[[நான் புது ஸ்டாஃப் வேற]] கண்டிப்பா அடிவிழும்னு ரெடியாகிட்டேன் [[ஹி ஹி]]
ஆத்தீ எட்டாவது ஃப்ளோர் வந்ததும், கீழே போகவேண்டிய நான் எட்டாவது ஃப்ளோர்லேயே இறங்கி ஓடியே போயிட்டேன்...வயர்லஸ் அலறும் சத்தம் இப்பவும் எனக்கு சிரிப்பு சிரிப்பு அதிர்வா இருக்கு.......சரி அந்த செக்கியூரிட்டி யாருன்னு கேளுங்களேன்....?
...................ஆத்தீ நம்ம பஞ்சாப் "சர்தார்" அண்ணாச்சி..........!
------------------------------ ------------------------------ ------------------------
ஒரு ஆச்சர்யம், எனக்கு மட்டும்தானா அல்லது உங்களுக்கும் இது நடக்குதான்னு சொல்லுங்க...?
எனக்கு வெள்ளைக் கலர் சட்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும், நான் வெள்ளைக் கலர் சட்டை வாங்கிப் போட்டால் போட்ட அன்று அல்லது, மறுமுறை எப்படியாவது அந்த சட்டையில் பார்க்க சகிக்காத வண்ணம் ஏதாவது கறை வந்து விடும், அதாவது பென் இங்க் லீக்காகி கறையாகும், இல்லைன்னா நான் நடந்து போகும்போதே காக்கா ஆயி போட்டுரும்...!
இது ஒருமுறையல்ல பலமுறை நடந்துருக்கு நடந்துகிட்டும் இருக்கு, ஆனாலும் விடாமல் வாங்கி போட்டுட்டுதான் இருக்கேன், கண்ணு படும்போல இருக்கு அத்தான்னு என் வீட்டம்மா சொன்னாலும், எனக்கு அதன் மர்மம் புரியவே இல்லை இன்னும்...!
அதுபோல கருப்பு கலர் பேன்ட், ரெடிமேடா வாங்கி அங்கேயே போட்டுப்பார்த்து ஓகே'ன்னு வந்தாலும், எனக்கு அது ஃபிட்டாக இருப்பதில்லை ஏதாவது எனக்கு பிடிக்காத கோளாறு கண்டிப்பாக இருக்கும் அந்தப் பேன்டில், இதுவரை கருப்பு பேன்ட் எனக்கு செட் ஆகவேயில்லை, இதுவும் ஆச்சர்யமாதான் இருக்கு...மற்ற எந்தக் கலரும் ஒரு பிரச்சினை இல்லை, இந்த ரெண்டு கலரும்தான் போட்டு வறுக்குது.....ம்ம்ம்ம் இந்த ரெண்டு கலருமே எனக்கு பிடித்தவைகள்....!
------------------------------ ------------------------------ ------------------
சரி, ஒரு சின்ன சந்தேகம்....?
கட்டபொம்மனின் வாரிசுகள் இப்போதும் பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு பக்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும், ஆனால் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள்...? யாருக்காவது தெரியுமா...?
கட்டபொம்மனை தூக்கிலிட்ட பிறகு கண்டிப்பாக எட்டப்பனுக்கோ அவன் வாரிசுகளுக்கோ கிஞ்சிட்டும் மரியாதை இருந்து இருக்காது என்பது நிச்சயம், அப்படி இருக்கும் பட்சத்தில், எட்டப்பனும் அவன் வாரிசுகளும் ஊரை காலி செய்து போனார்களா...?
எங்கே போனார்கள்...? எட்டப்பனின் மரணம் எப்படியாக இருந்தது...? யாருக்காவது தெரியுமா...? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.........உங்கள் பதிலைப் பார்த்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ஃபாலோ அப் செய்கிறேன்....!
அண்ணனுக்கு எப்பவுமே குச்சும்பு!
ReplyDeleteஎனக்கு குசும்பா இல்ல சர்தாருக்கு குசும்பாடா அண்ணே...?
ReplyDeleteஅண்ணே...எட்டப்பன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சா எழுதிபுடுங்கன்னே...வரலாறு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு!
ReplyDeleteவிக்கியை கேட்கலாம் (மாம்ஸ் விக்கியை அல்ல) ஆனால் அதற்க்கு கொஞ்சம் நேரம் ஆகும்... அதற்கெல்லாம் பொறுமை இல்லை... இல்லாம அவருக்கு தெரியுதா இல்லையான்னும் தெரியலை!
ReplyDeleteஅங்கு ரொம்ப அவஸ்தை போலே...
ReplyDeleteயோவ் வரலாறு, நானே உங்ககிட்டே கேக்குறேன் நீங்க என்கிட்டே கேக்குறீங்க...?
ReplyDeleteநான் ஃபாலோ அப் பண்ணப்போறது வேறே மேட்டர்...
வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteவிக்கியை கேட்கலாம் (மாம்ஸ் விக்கியை அல்ல) ஆனால் அதற்க்கு கொஞ்சம் நேரம் ஆகும்... அதற்கெல்லாம் பொறுமை இல்லை... இல்லாம அவருக்கு தெரியுதா இல்லையான்னும் தெரியலை!//
ஓகே....தேடிப்பார்த்து சொல்லுங்க....
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஅங்கு ரொம்ப அவஸ்தை போலே..//
அவஸ்தைகளையும் காமெடியா எடுத்துக்க வேண்டியதுதான் ஹி ஹி....
என்னாது எட்டப்பனா?? மக்கா, ரிப்போர்ட் எதிர்பாக்குறேன்
ReplyDeleteஒரே காமடி போங்க.....காமடியும் வேணும் மக்கா
ReplyDelete>>>நான் ஃபாலோ அப் பண்ணப்போறது வேறே மேட்டர்<<<
ReplyDeleteoh.. right...pannunga!
மனசாட்சி™ said...
ReplyDeleteஎன்னாது எட்டப்பனா?? மக்கா, ரிப்போர்ட் எதிர்பாக்குறேன்//
நீங்க சொல்றதை வச்சி ரிப்போர்ட் பண்ணலாம்னு இருக்கேன்ய்யா.
மனசாட்சி™ said...
ReplyDeleteஒரே காமடி போங்க.....காமடியும் வேணும் மக்கா//
வாழ்க்கையும் ஒரு நாடகமேடைதானே இங்கேயும் காமெடி தேவைதான் இல்லையா...?
வரலாற்று சுவடுகள் said...
ReplyDelete>>>நான் ஃபாலோ அப் பண்ணப்போறது வேறே மேட்டர்<<<
oh.. right...pannunga!//
விக்கிபீடியா இன்னா சொல்லுது மக்கா?
மனோ சிகப்பு கலர் பச்சை கலர்ல எல்லாம் பான்ட் செட் ஆகுமா? சும்மா லொள்ஸ் தான்
ReplyDeleteலிப்ட் ஜோக் ரொம்ப அருமை!
ReplyDelete\\எனக்கு மட்டும்தானா அல்லது உங்களுக்கும் இது நடக்குதான்னு சொல்லுங்க...?\\
எனக்கும் தான்!!
\\ஒரு சின்ன சந்தேகம்\\
எட்டப்பனின் பரம்பரை குறித்து தெரியாது. ஆனால் படித்த புதிய தகவல்:
கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?
http://thalaivanankatamilan.blogspot.in/2010/04/blog-post_9082.html
http://naickernaidu.blogspot.in/2011/10/blog-post_1467.html
\\ வரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteஅண்ணே...எட்டப்பன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சா எழுதிபுடுங்கன்னே...வரலாறு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு! \\
வரலாற்று சுவடுகளா வரலாற்றைக் கேட்பது?
அண்ணே எனக்கும் எப்பவும் கருப்பு பேன்ட் செட ஆகாது ... நாம ஒரே இனம் தல
ReplyDeleteகடைசியில் ஒரு இக் வைத்து
ReplyDeleteஅடுத்த பதிவை அதிகம் எதிர்பார்க்கவைத்துவிட்டீர்களே
நாஞ்சில் மனோவா கொக்கா?
>>>விக்கிபீடியா இன்னா சொல்லுது மக்கா?<<<
ReplyDeleteகொஞ்சம் வேலை அதனால் இன்னும் தேடிப்பார்க்க ஆரம்பிக்கலை மனோ அண்ணே! ஏதாவது கிடைச்சா நிச்சயம் பகிர்ந்துக்கிறேன்!
and..ஆளுங்க அருண் பரிந்துரைத்த இணைப்பையும் டைம் கிடைக்கும் போது படிச்சு பார்க்கணும்!
ஆர்வத்தை தூண்டி விட்டுட்டீங்க சீக்கிரம் சொல்லுங்க பாஸ்
ReplyDeleteஅண்ணே நீங்க ரொம்ப செகப்பா இருக்கறதால வெள்ளை கலர் சட்டை உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்குது போல, அதான் காக்கா கூட பொறாமைல கக்கா போயிருக்கு.......!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//////ஹோட்டல் கொஞ்சம் பழமையானதும், மிகவும் பெயர் பெற்றதுமானது என்பதால் /////
ReplyDeleteஇங்கேயும் நம்மூரு நடிகைகள்லாம் வந்து கலைச்சேவை பண்ணுவாங்களாண்ணே?
சிரிச்சிட்டேன்.....ஆனாலும் பேய்ச்சிரிப்பை எதிர்பார்த்தேன் மனோ.ரூமுக்குப் பேய் வரலியா ?
ReplyDeleterufina rajkumar said...
ReplyDeleteமனோ சிகப்பு கலர் பச்சை கலர்ல எல்லாம் பான்ட் செட் ஆகுமா? சும்மா லொள்ஸ் தான்//
இருங்க இருங்க, அடுத்த முறை ஊர் வந்து உங்களை சந்திக்கும் போது பச்சை சிகப்பு கலர்ல நான் மட்டும் இல்லை, விஜயனையும் ஆபீசரையும் கலர் மாத்தி கூட்டிட்டு வந்து உங்களை அலறவைக்கிறேன் ஹே ஹே ஹே ஹே....
கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?
ReplyDeletehttp://thalaivanankatamilan.blogspot.in/2010/04/blog-post_9082.html//
எலேய் தம்பி வரலாறு, இந்த லிங்க் எனக்கு சரியாப் பட்டாப்ல தெரியுது பிளீஸ் செக்....
http://naickernaidu.blogspot.in/2011/10/blog-post_1467.html//
ReplyDeleteஇதில் ஜாதி மணம் கூடுதலாக இருக்கிறது...இருந்தாலும் ஆராய்ச்சி பண்ணலாம், ஆராய்ச்சி பண்ணு வரலாற்று மன்னனே..
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி, விஜயநகரம் போன்ற பகுதிகளில் இருந்து இசுலாமியர்களின் படையெடுப்பில் இருக்கும் இடங்களில் இருந்து ஒரு நாட்டின் ஆயிரகணக்கான ஒரே சாதியினை சேர்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயருகிறார்கள் . அவர்கள் தான் தற்போதைய கம்பளத்தார் வீர மக்கள் . 1000 வருடங்களுக்கு முன்பும் இவர்கள் தெலங்கான , ஆந்திர பகுதியை ஆட்சி செய்தவர்களே , இப்படி வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்த காரணத்தால் தமிழகதிற்கு வந்தும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணினார்கள். //
ReplyDeleteவருடங்கள்.....? இஸ்லாமியர்கள்...?
தமிழ் மாமன்னன் ராஜராஜன் காலம்.....இடிக்குதே எங்கேயோ ஆளுங்க அருண்...?
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஅண்ணே எனக்கும் எப்பவும் கருப்பு பேன்ட் செட ஆகாது ... நாம ஒரே இனம் தல//
எலேய் வாத்தீ......சரிதாம்லேய்...
Ramani said...
ReplyDeleteகடைசியில் ஒரு இக் வைத்து
அடுத்த பதிவை அதிகம் எதிர்பார்க்கவைத்துவிட்டீர்களே
நாஞ்சில் மனோவா கொக்கா?,,
எனக்கு சில தகவல்கள் அறிந்து கொள்ள ஆசை குரு அதான்...ஆனால் கொஞ்சம் கிளிக் ஆகி வருது ஒரு வரலாறு...!
T.N.MURALIDHARAN said...
ReplyDeleteஆர்வத்தை தூண்டி விட்டுட்டீங்க சீக்கிரம் சொல்லுங்க பாஸ்//
வாரேன் வாரேன் பாஸ்....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅண்ணே நீங்க ரொம்ப செகப்பா இருக்கறதால வெள்ளை கலர் சட்டை உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்குது போல, அதான் காக்கா கூட பொறாமைல கக்கா போயிருக்கு.......!//
எலேய் தம்பி, இம்சை அரசா....நாம சிகப்பாம்லேய்....பன்னி சொல்லுது ஹே ஹே ஹே ஹே....
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete//////ஹோட்டல் கொஞ்சம் பழமையானதும், மிகவும் பெயர் பெற்றதுமானது என்பதால் /////
இங்கேயும் நம்மூரு நடிகைகள்லாம் வந்து கலைச்சேவை பண்ணுவாங்களாண்ணே?//
இங்கே வருவது வி வி ஐ பி'கள் மக்கா....ஆண்டவன் கிருபையால் கொஞ்சம் ஸ்டார் தாண்டி போயிருக்கேன் வாழ்கையில்...
கொஞ்சம் ஹாலிவூட், ஈரான், ரஷ்யன் ஆக்டர், ஆக்டர்ஸ் வாறாங்க ஆனால் இவிங்க யாருன்னு எனக்கு தெரியல.....
நம்மாளுங்கன்னா கேரளா முதல்வரின் மகன் அடிக்கடி வருவாராம் [[நானும் நேரில் தற்சமயம் பார்த்தேன்]] கங்குலி, அசாருதீன் மற்றும் பலர் அரசியல்வியாதிகள் உள்பட [[பெயர் வேணாம்]] வருகிறார்களாம் அடிக்கடி.......
அதான் நான் இங்கே வந்தாச்சுல்ல ஹே ஹே அப்டேட் பண்ணிட்டே இருபேன்...டோன்ட் வொர்ரி...
ஹேமா said...
ReplyDeleteசிரிச்சிட்டேன்.....ஆனாலும் பேய்ச்சிரிப்பை எதிர்பார்த்தேன் மனோ.ரூமுக்குப் பேய் வரலியா ?//
நானே ஒரு பேய்.....எனக்கும் ஒரு பேயா அவ்வ்வ்வ்வ்......
ரெம்ப லொள்ளு பாஸ் உங்களுக்கு :)))))
ReplyDeleteஅதென்ன என் ஹேமா அக்காச்சி , ரூம் பேய் என்கிறா ???
நீங்க ரூமில் பேய் எல்லாம் வளர்க்கிறீங்களோ??ஆவ்வ்வ்
லிஃப்ட் - :)))
ReplyDeleteஎட்டப்பன் - நீங்களும், வரலாற்று சுவடுகள்-ம் என்ன பதிவு போடப்போறீங்கன்னு எதிர்பார்க்க வச்சுட்டீங்களே....
உம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அந்த எட்டப்பனின் குடும்பங்கள் இப்போ வலைத்தளம் பக்கம் வந்துவிட்டதாக எனக்கு தகவல் கசிந்துள்ளது. மனோ....அவர்களை நீங்கள் தான் கண்டுபிடித்து பதிவு இட வேண்டும்
ReplyDeleteதுஷ்யந்தன் said...
ReplyDeleteரெம்ப லொள்ளு பாஸ் உங்களுக்கு :)))))
அதென்ன என் ஹேமா அக்காச்சி , ரூம் பேய் என்கிறா ???
நீங்க ரூமில் பேய் எல்லாம் வளர்க்கிறீங்களோ??ஆவ்வ்வ்//
நாங்க ரெண்டுபேருமே கொடுமையான பேயிங்க அதான் ஹி ஹி....
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteலிஃப்ட் - :)))
எட்டப்பன் - நீங்களும், வரலாற்று சுவடுகள்-ம் என்ன பதிவு போடப்போறீங்கன்னு எதிர்பார்க்க வச்சுட்டீங்களே....//
எட்டப்பன் வரலாறு தேடிப் படிக்கும்போது நிறையவே முரண்பாடுகள் இருக்கிறது என்னவோ உண்மை...!
FOOD NELLAI said...
ReplyDelete//சீஃப் செக்யூரிட்டி என்னை பார்த்து முறைத்த முறைப்பு இருக்கே......[[நான் புது ஸ்டாஃப் வேற]] கண்டிப்பா அடிவிழும்னு ரெடியாகிட்டேன் [[ஹி ஹி]] //
நம்ப அருவாகிட்ட, சின்ன கத்தியெல்லாம் எடுபடுமா? ஹா ஹா ஹா.//
ஆபீசர், அவன் என்கிட்டே இருந்து அடிவிழுமோன்னு பயந்துருப்பனோ ஹே ஹே ஹே ஹே...
Avargal Unmaigal said...
ReplyDeleteஉம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அந்த எட்டப்பனின் குடும்பங்கள் இப்போ வலைத்தளம் பக்கம் வந்துவிட்டதாக எனக்கு தகவல் கசிந்துள்ளது. மனோ....அவர்களை நீங்கள் தான் கண்டுபிடித்து பதிவு இட வேண்டும்//
அவங்க இங்கேயும் வந்துட்டாங்க, அதனால ஓடிறாதீக மதுர....
எனக்கும் வெள்ளைச் சட்டைக்கும் உள்ள பொருத்தம்தான் தங்களுக்கும்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
\\மார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி, விஜயநகரம் போன்ற பகுதிகளில் இருந்து இசுலாமியர்களின் படையெடுப்பில் இருக்கும் இடங்களில் இருந்து ஒரு நாட்டின் ஆயிரகணக்கான ஒரே சாதியினை சேர்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயருகிறார்கள் . அவர்கள் தான் தற்போதைய கம்பளத்தார் வீர மக்கள் . 1000 வருடங்களுக்கு முன்பும் இவர்கள் தெலங்கான , ஆந்திர பகுதியை ஆட்சி செய்தவர்களே , இப்படி வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்த காரணத்தால் தமிழகதிற்கு வந்தும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணினார்கள். //
ReplyDeleteவருடங்கள்.....? இஸ்லாமியர்கள்...?
தமிழ் மாமன்னன் ராஜராஜன் காலம்.....இடிக்குதே எங்கேயோ ஆளுங்க அருண்...?\\
வருடங்களின் எண்ணிக்கை தவறு தான். மிகைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 500 வருடங்கள் என்பதே சரியாக இருக்கும்.
எட்டப்பனைப் பற்றிய தகவலுக்காகத் தான் பதிந்தேன்.
தவறுக்கு மன்னிக்கவும்!
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அருண்...!
ReplyDeleteஉங்கள் புது வேலை அனுபவங்கள் காமெடியாக உள்ளன.. அப்புறம் எனக்கு தெரிஞ்சு, இன்னிக்கு தேதிக்கு ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது 10 எட்டப்பன் வாரிசுகள் இருக்குறாங்க...(ஹீ ஹீ)
ReplyDeleteமருதுவின் கோட்டோவியம்
ReplyDeleteவீரத்தின் கதைசொல்லும் காட்சி
நினைவூட்டியமைக்கு நன்றி
தமிழ் நாத்தம்.
ReplyDeleteதமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே.