Monday, September 17, 2012

எங்கேப் போனாலும் என்னை சுற்றி நடக்கும் காமெடிகள்...!

புது இடத்தில் ஹோட்டலின் எல்லா இடங்களையும் தனியாக சுற்றிப் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய ஜி எம் பணித்தபடியால் ஹோட்டலினுள் எல்லா இடங்களையும் பார்ப்பதற்காக ஒவ்வொரு மாடியாக ஏறி பார்வையிட்டு கொண்டே வந்தேன்.

ஹோட்டல் கொஞ்சம் பழமையானதும், மிகவும் பெயர் பெற்றதுமானது என்பதால் அங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் வேலைகள் இருப்பதை கணித்து, கவனத்து கொண்டே ஒவ்வொரு மாடியாக லிஃப்டில் போயி பார்த்துக் கொண்டிருக்கும் போது....

பத்தாவது மாடியில் இருந்து கீழே இறங்க லிஃப்டில் ஏறினேன், உள்ளே வாக்கிடாக்கி சகிதம் சீஃப் செக்கியூரிட்டி அவசரமாக வாக்கிடாக்கியில் ஆர்டர் பிறப்பித்துக் கொண்டிருந்தான். என்னமோ பிரச்சினை போல....அவசரமாக கீழே போக பிரயாசப்பட்டு கொண்டுருந்தபடியால் அவன் போக்குக்கு லிஃப்ட் போகட்டும் என விட்டுவிட்டேன்.

சீஃப் ரொம்ப அவசரமா பரபரவென லிஃப்ட் உள்ளே நிற்பதை பார்த்து நானே கொஞ்சம் பயந்துதான் போனேன், லிஃப்ட் கிரவுண்ட் ஃபுளோர் வந்து டோர் திறக்கவும்.......

அவன் "சார் நீங்க போங்க"

நான் "இல்லை நீங்க போங்க"

அவன் " இல்லை சார் நீங்கதான் முதல்ல போகணும்"

நான் "இல்லை சார் நீங்கதான் அவசரமா போகனும் போல, நீங்க வெளியே போங்க முதல்ல"

அவன் " சார் நாங்க உங்களை வெகுவா மதிக்கிறோம்[!] அதனால நீங்க போங்க முதல்ல"

இதற்கிடையே எந்த நாதாரியோ எட்டாவது மாடியில் இருந்து கீழே வர லிஃப்ட் பட்டனை அமர்த்த........எங்கள் லிஃப்ட் டோர் டபக் என மூடிக்கொண்டு மேலே போக.....

சீஃப் செக்யூரிட்டி என்னை பார்த்து முறைத்த முறைப்பு இருக்கே......[[நான் புது ஸ்டாஃப் வேற]] கண்டிப்பா அடிவிழும்னு ரெடியாகிட்டேன் [[ஹி ஹி]] 

ஆத்தீ எட்டாவது ஃப்ளோர் வந்ததும், கீழே போகவேண்டிய நான் எட்டாவது ஃப்ளோர்லேயே இறங்கி ஓடியே போயிட்டேன்...வயர்லஸ் அலறும் சத்தம் இப்பவும் எனக்கு சிரிப்பு சிரிப்பு அதிர்வா இருக்கு.......சரி அந்த செக்கியூரிட்டி யாருன்னு கேளுங்களேன்....?

...................ஆத்தீ நம்ம பஞ்சாப் "சர்தார்" அண்ணாச்சி..........! 
------------------------------------------------------------------------------------

ஒரு ஆச்சர்யம், எனக்கு மட்டும்தானா அல்லது உங்களுக்கும் இது நடக்குதான்னு சொல்லுங்க...?

எனக்கு வெள்ளைக் கலர் சட்டைன்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும், நான் வெள்ளைக் கலர் சட்டை வாங்கிப் போட்டால் போட்ட அன்று அல்லது, மறுமுறை எப்படியாவது அந்த சட்டையில் பார்க்க சகிக்காத வண்ணம் ஏதாவது கறை வந்து விடும், அதாவது பென் இங்க் லீக்காகி கறையாகும், இல்லைன்னா நான் நடந்து போகும்போதே காக்கா ஆயி போட்டுரும்...!

இது ஒருமுறையல்ல பலமுறை நடந்துருக்கு நடந்துகிட்டும் இருக்கு, ஆனாலும் விடாமல் வாங்கி போட்டுட்டுதான் இருக்கேன், கண்ணு படும்போல இருக்கு அத்தான்னு என் வீட்டம்மா சொன்னாலும், எனக்கு அதன் மர்மம் புரியவே இல்லை இன்னும்...!

அதுபோல கருப்பு கலர் பேன்ட், ரெடிமேடா வாங்கி அங்கேயே போட்டுப்பார்த்து ஓகே'ன்னு வந்தாலும், எனக்கு அது ஃபிட்டாக இருப்பதில்லை ஏதாவது எனக்கு பிடிக்காத கோளாறு கண்டிப்பாக இருக்கும் அந்தப் பேன்டில், இதுவரை கருப்பு பேன்ட் எனக்கு செட் ஆகவேயில்லை, இதுவும் ஆச்சர்யமாதான் இருக்கு...மற்ற எந்தக் கலரும் ஒரு பிரச்சினை இல்லை, இந்த ரெண்டு கலரும்தான் போட்டு வறுக்குது.....ம்ம்ம்ம் இந்த ரெண்டு கலருமே எனக்கு பிடித்தவைகள்....!
------------------------------------------------------------------------------

சரி, ஒரு சின்ன சந்தேகம்....?

கட்டபொம்மனின் வாரிசுகள் இப்போதும்  பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு பக்கம்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும், ஆனால் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள் எப்படி இருக்கிறார்கள்...? யாருக்காவது தெரியுமா...?

கட்டபொம்மனை தூக்கிலிட்ட பிறகு கண்டிப்பாக எட்டப்பனுக்கோ அவன் வாரிசுகளுக்கோ கிஞ்சிட்டும் மரியாதை இருந்து இருக்காது என்பது நிச்சயம், அப்படி இருக்கும் பட்சத்தில், எட்டப்பனும் அவன் வாரிசுகளும் ஊரை காலி செய்து போனார்களா...? 

எங்கே போனார்கள்...? எட்டப்பனின் மரணம் எப்படியாக இருந்தது...? யாருக்காவது தெரியுமா...? தெரிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.........உங்கள் பதிலைப் பார்த்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் ஃபாலோ அப் செய்கிறேன்....!

50 comments:

  1. அண்ணனுக்கு எப்பவுமே குச்சும்பு!

    ReplyDelete
  2. எனக்கு குசும்பா இல்ல சர்தாருக்கு குசும்பாடா அண்ணே...?

    ReplyDelete
  3. அண்ணே...எட்டப்பன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சா எழுதிபுடுங்கன்னே...வரலாறு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு!

    ReplyDelete
  4. விக்கியை கேட்கலாம் (மாம்ஸ் விக்கியை அல்ல) ஆனால் அதற்க்கு கொஞ்சம் நேரம் ஆகும்... அதற்கெல்லாம் பொறுமை இல்லை... இல்லாம அவருக்கு தெரியுதா இல்லையான்னும் தெரியலை!

    ReplyDelete
  5. அங்கு ரொம்ப அவஸ்தை போலே...

    ReplyDelete
  6. யோவ் வரலாறு, நானே உங்ககிட்டே கேக்குறேன் நீங்க என்கிட்டே கேக்குறீங்க...?

    நான் ஃபாலோ அப் பண்ணப்போறது வேறே மேட்டர்...

    ReplyDelete
  7. வரலாற்று சுவடுகள் said...
    விக்கியை கேட்கலாம் (மாம்ஸ் விக்கியை அல்ல) ஆனால் அதற்க்கு கொஞ்சம் நேரம் ஆகும்... அதற்கெல்லாம் பொறுமை இல்லை... இல்லாம அவருக்கு தெரியுதா இல்லையான்னும் தெரியலை!//

    ஓகே....தேடிப்பார்த்து சொல்லுங்க....

    ReplyDelete
  8. திண்டுக்கல் தனபாலன் said...
    அங்கு ரொம்ப அவஸ்தை போலே..//

    அவஸ்தைகளையும் காமெடியா எடுத்துக்க வேண்டியதுதான் ஹி ஹி....

    ReplyDelete
  9. என்னாது எட்டப்பனா?? மக்கா, ரிப்போர்ட் எதிர்பாக்குறேன்

    ReplyDelete
  10. ஒரே காமடி போங்க.....காமடியும் வேணும் மக்கா

    ReplyDelete
  11. >>>நான் ஃபாலோ அப் பண்ணப்போறது வேறே மேட்டர்<<<

    oh.. right...pannunga!

    ReplyDelete
  12. மனசாட்சி™ said...
    என்னாது எட்டப்பனா?? மக்கா, ரிப்போர்ட் எதிர்பாக்குறேன்//

    நீங்க சொல்றதை வச்சி ரிப்போர்ட் பண்ணலாம்னு இருக்கேன்ய்யா.

    ReplyDelete
  13. மனசாட்சி™ said...
    ஒரே காமடி போங்க.....காமடியும் வேணும் மக்கா//

    வாழ்க்கையும் ஒரு நாடகமேடைதானே இங்கேயும் காமெடி தேவைதான் இல்லையா...?

    ReplyDelete
  14. வரலாற்று சுவடுகள் said...
    >>>நான் ஃபாலோ அப் பண்ணப்போறது வேறே மேட்டர்<<<

    oh.. right...pannunga!//

    விக்கிபீடியா இன்னா சொல்லுது மக்கா?

    ReplyDelete
  15. மனோ சிகப்பு கலர் பச்சை கலர்ல எல்லாம் பான்ட் செட் ஆகுமா? சும்மா லொள்ஸ் தான்

    ReplyDelete
  16. லிப்ட் ஜோக் ரொம்ப அருமை!

    \\எனக்கு மட்டும்தானா அல்லது உங்களுக்கும் இது நடக்குதான்னு சொல்லுங்க...?\\
    எனக்கும் தான்!!

    \\ஒரு சின்ன சந்தேகம்\\
    எட்டப்பனின் பரம்பரை குறித்து தெரியாது. ஆனால் படித்த புதிய தகவல்:

    கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?
    http://thalaivanankatamilan.blogspot.in/2010/04/blog-post_9082.html

    http://naickernaidu.blogspot.in/2011/10/blog-post_1467.html

    ReplyDelete
  17. \\ வரலாற்று சுவடுகள் said...

    அண்ணே...எட்டப்பன் குடும்பத்தை பத்தி தெரிஞ்சா எழுதிபுடுங்கன்னே...வரலாறு தெரிஞ்சிக்க ரொம்ப ஆவலா இருக்கு! \\

    வரலாற்று சுவடுகளா வரலாற்றைக் கேட்பது?

    ReplyDelete
  18. அண்ணே எனக்கும் எப்பவும் கருப்பு பேன்ட் செட ஆகாது ... நாம ஒரே இனம் தல

    ReplyDelete
  19. கடைசியில் ஒரு இக் வைத்து
    அடுத்த பதிவை அதிகம் எதிர்பார்க்கவைத்துவிட்டீர்களே
    நாஞ்சில் மனோவா கொக்கா?

    ReplyDelete
  20. >>>விக்கிபீடியா இன்னா சொல்லுது மக்கா?<<<

    கொஞ்சம் வேலை அதனால் இன்னும் தேடிப்பார்க்க ஆரம்பிக்கலை மனோ அண்ணே! ஏதாவது கிடைச்சா நிச்சயம் பகிர்ந்துக்கிறேன்!

    and..ஆளுங்க அருண் பரிந்துரைத்த இணைப்பையும் டைம் கிடைக்கும் போது படிச்சு பார்க்கணும்!

    ReplyDelete
  21. ஆர்வத்தை தூண்டி விட்டுட்டீங்க சீக்கிரம் சொல்லுங்க பாஸ்

    ReplyDelete
  22. அண்ணே நீங்க ரொம்ப செகப்பா இருக்கறதால வெள்ளை கலர் சட்டை உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்குது போல, அதான் காக்கா கூட பொறாமைல கக்கா போயிருக்கு.......!

    ReplyDelete
  23. //////ஹோட்டல் கொஞ்சம் பழமையானதும், மிகவும் பெயர் பெற்றதுமானது என்பதால் /////

    இங்கேயும் நம்மூரு நடிகைகள்லாம் வந்து கலைச்சேவை பண்ணுவாங்களாண்ணே?

    ReplyDelete
  24. சிரிச்சிட்டேன்.....ஆனாலும் பேய்ச்சிரிப்பை எதிர்பார்த்தேன் மனோ.ரூமுக்குப் பேய் வரலியா ?

    ReplyDelete
  25. rufina rajkumar said...
    மனோ சிகப்பு கலர் பச்சை கலர்ல எல்லாம் பான்ட் செட் ஆகுமா? சும்மா லொள்ஸ் தான்//

    இருங்க இருங்க, அடுத்த முறை ஊர் வந்து உங்களை சந்திக்கும் போது பச்சை சிகப்பு கலர்ல நான் மட்டும் இல்லை, விஜயனையும் ஆபீசரையும் கலர் மாத்தி கூட்டிட்டு வந்து உங்களை அலறவைக்கிறேன் ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  26. கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?
    http://thalaivanankatamilan.blogspot.in/2010/04/blog-post_9082.html//

    எலேய் தம்பி வரலாறு, இந்த லிங்க் எனக்கு சரியாப் பட்டாப்ல தெரியுது பிளீஸ் செக்....

    ReplyDelete
  27. http://naickernaidu.blogspot.in/2011/10/blog-post_1467.html//

    இதில் ஜாதி மணம் கூடுதலாக இருக்கிறது...இருந்தாலும் ஆராய்ச்சி பண்ணலாம், ஆராய்ச்சி பண்ணு வரலாற்று மன்னனே..

    ReplyDelete
  28. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி, விஜயநகரம் போன்ற பகுதிகளில் இருந்து இசுலாமியர்களின் படையெடுப்பில் இருக்கும் இடங்களில் இருந்து ஒரு நாட்டின் ஆயிரகணக்கான ஒரே சாதியினை சேர்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயருகிறார்கள் . அவர்கள் தான் தற்போதைய கம்பளத்தார் வீர மக்கள் . 1000 வருடங்களுக்கு முன்பும் இவர்கள் தெலங்கான , ஆந்திர பகுதியை ஆட்சி செய்தவர்களே , இப்படி வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்த காரணத்தால் தமிழகதிற்கு வந்தும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணினார்கள். //

    வருடங்கள்.....? இஸ்லாமியர்கள்...?

    தமிழ் மாமன்னன் ராஜராஜன் காலம்.....இடிக்குதே எங்கேயோ ஆளுங்க அருண்...?

    ReplyDelete
  29. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    அண்ணே எனக்கும் எப்பவும் கருப்பு பேன்ட் செட ஆகாது ... நாம ஒரே இனம் தல//

    எலேய் வாத்தீ......சரிதாம்லேய்...

    ReplyDelete
  30. Ramani said...
    கடைசியில் ஒரு இக் வைத்து
    அடுத்த பதிவை அதிகம் எதிர்பார்க்கவைத்துவிட்டீர்களே
    நாஞ்சில் மனோவா கொக்கா?,,

    எனக்கு சில தகவல்கள் அறிந்து கொள்ள ஆசை குரு அதான்...ஆனால் கொஞ்சம் கிளிக் ஆகி வருது ஒரு வரலாறு...!

    ReplyDelete
  31. T.N.MURALIDHARAN said...
    ஆர்வத்தை தூண்டி விட்டுட்டீங்க சீக்கிரம் சொல்லுங்க பாஸ்//

    வாரேன் வாரேன் பாஸ்....

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அண்ணே நீங்க ரொம்ப செகப்பா இருக்கறதால வெள்ளை கலர் சட்டை உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்குது போல, அதான் காக்கா கூட பொறாமைல கக்கா போயிருக்கு.......!//

    எலேய் தம்பி, இம்சை அரசா....நாம சிகப்பாம்லேய்....பன்னி சொல்லுது ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  33. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //////ஹோட்டல் கொஞ்சம் பழமையானதும், மிகவும் பெயர் பெற்றதுமானது என்பதால் /////

    இங்கேயும் நம்மூரு நடிகைகள்லாம் வந்து கலைச்சேவை பண்ணுவாங்களாண்ணே?//

    இங்கே வருவது வி வி ஐ பி'கள் மக்கா....ஆண்டவன் கிருபையால் கொஞ்சம் ஸ்டார் தாண்டி போயிருக்கேன் வாழ்கையில்...

    கொஞ்சம் ஹாலிவூட், ஈரான், ரஷ்யன் ஆக்டர், ஆக்டர்ஸ் வாறாங்க ஆனால் இவிங்க யாருன்னு எனக்கு தெரியல.....

    நம்மாளுங்கன்னா கேரளா முதல்வரின் மகன் அடிக்கடி வருவாராம் [[நானும் நேரில் தற்சமயம் பார்த்தேன்]] கங்குலி, அசாருதீன் மற்றும் பலர் அரசியல்வியாதிகள் உள்பட [[பெயர் வேணாம்]] வருகிறார்களாம் அடிக்கடி.......

    அதான் நான் இங்கே வந்தாச்சுல்ல ஹே ஹே அப்டேட் பண்ணிட்டே இருபேன்...டோன்ட் வொர்ரி...

    ReplyDelete
  34. ஹேமா said...
    சிரிச்சிட்டேன்.....ஆனாலும் பேய்ச்சிரிப்பை எதிர்பார்த்தேன் மனோ.ரூமுக்குப் பேய் வரலியா ?//

    நானே ஒரு பேய்.....எனக்கும் ஒரு பேயா அவ்வ்வ்வ்வ்......

    ReplyDelete
  35. ரெம்ப லொள்ளு பாஸ் உங்களுக்கு :)))))

    அதென்ன என் ஹேமா அக்காச்சி , ரூம் பேய் என்கிறா ???

    நீங்க ரூமில் பேய் எல்லாம் வளர்க்கிறீங்களோ??ஆவ்வ்வ்

    ReplyDelete
  36. லிஃப்ட் - :)))

    எட்டப்பன் - நீங்களும், வரலாற்று சுவடுகள்-ம் என்ன பதிவு போடப்போறீங்கன்னு எதிர்பார்க்க வச்சுட்டீங்களே....

    ReplyDelete
  37. //ம்ம்ம்ம் இந்த ரெண்டு கலருமே எனக்கு பிடித்தவைகள்....!//
    நடத்துங்க ராசா!!!

    ReplyDelete
  38. //சீஃப் செக்யூரிட்டி என்னை பார்த்து முறைத்த முறைப்பு இருக்கே......[[நான் புது ஸ்டாஃப் வேற]] கண்டிப்பா அடிவிழும்னு ரெடியாகிட்டேன் [[ஹி ஹி]] //
    நம்ப அருவாகிட்ட, சின்ன கத்தியெல்லாம் எடுபடுமா? ஹா ஹா ஹா.

    ReplyDelete
  39. உம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அந்த எட்டப்பனின் குடும்பங்கள் இப்போ வலைத்தளம் பக்கம் வந்துவிட்டதாக எனக்கு தகவல் கசிந்துள்ளது. மனோ....அவர்களை நீங்கள் தான் கண்டுபிடித்து பதிவு இட வேண்டும்

    ReplyDelete
  40. துஷ்யந்தன் said...
    ரெம்ப லொள்ளு பாஸ் உங்களுக்கு :)))))

    அதென்ன என் ஹேமா அக்காச்சி , ரூம் பேய் என்கிறா ???

    நீங்க ரூமில் பேய் எல்லாம் வளர்க்கிறீங்களோ??ஆவ்வ்வ்//

    நாங்க ரெண்டுபேருமே கொடுமையான பேயிங்க அதான் ஹி ஹி....

    ReplyDelete
  41. வெங்கட் நாகராஜ் said...
    லிஃப்ட் - :)))

    எட்டப்பன் - நீங்களும், வரலாற்று சுவடுகள்-ம் என்ன பதிவு போடப்போறீங்கன்னு எதிர்பார்க்க வச்சுட்டீங்களே....//

    எட்டப்பன் வரலாறு தேடிப் படிக்கும்போது நிறையவே முரண்பாடுகள் இருக்கிறது என்னவோ உண்மை...!

    ReplyDelete
  42. FOOD NELLAI said...
    //சீஃப் செக்யூரிட்டி என்னை பார்த்து முறைத்த முறைப்பு இருக்கே......[[நான் புது ஸ்டாஃப் வேற]] கண்டிப்பா அடிவிழும்னு ரெடியாகிட்டேன் [[ஹி ஹி]] //
    நம்ப அருவாகிட்ட, சின்ன கத்தியெல்லாம் எடுபடுமா? ஹா ஹா ஹா.//

    ஆபீசர், அவன் என்கிட்டே இருந்து அடிவிழுமோன்னு பயந்துருப்பனோ ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  43. Avargal Unmaigal said...
    உம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....அந்த எட்டப்பனின் குடும்பங்கள் இப்போ வலைத்தளம் பக்கம் வந்துவிட்டதாக எனக்கு தகவல் கசிந்துள்ளது. மனோ....அவர்களை நீங்கள் தான் கண்டுபிடித்து பதிவு இட வேண்டும்//

    அவங்க இங்கேயும் வந்துட்டாங்க, அதனால ஓடிறாதீக மதுர....

    ReplyDelete
  44. எனக்கும் வெள்ளைச் சட்டைக்கும் உள்ள பொருத்தம்தான் தங்களுக்கும்.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    ReplyDelete
  45. \\மார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி, விஜயநகரம் போன்ற பகுதிகளில் இருந்து இசுலாமியர்களின் படையெடுப்பில் இருக்கும் இடங்களில் இருந்து ஒரு நாட்டின் ஆயிரகணக்கான ஒரே சாதியினை சேர்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயருகிறார்கள் . அவர்கள் தான் தற்போதைய கம்பளத்தார் வீர மக்கள் . 1000 வருடங்களுக்கு முன்பும் இவர்கள் தெலங்கான , ஆந்திர பகுதியை ஆட்சி செய்தவர்களே , இப்படி வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்த காரணத்தால் தமிழகதிற்கு வந்தும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணினார்கள். //

    வருடங்கள்.....? இஸ்லாமியர்கள்...?

    தமிழ் மாமன்னன் ராஜராஜன் காலம்.....இடிக்குதே எங்கேயோ ஆளுங்க அருண்...?\\

    வருடங்களின் எண்ணிக்கை தவறு தான். மிகைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 500 வருடங்கள் என்பதே சரியாக இருக்கும்.

    எட்டப்பனைப் பற்றிய தகவலுக்காகத் தான் பதிந்தேன்.
    தவறுக்கு மன்னிக்கவும்!

    ReplyDelete
  46. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி அருண்...!

    ReplyDelete
  47. உங்கள் புது வேலை அனுபவங்கள் காமெடியாக உள்ளன.. அப்புறம் எனக்கு தெரிஞ்சு, இன்னிக்கு தேதிக்கு ஒவ்வொரு ஊருக்கும் குறைந்தது 10 எட்டப்பன் வாரிசுகள் இருக்குறாங்க...(ஹீ ஹீ)

    ReplyDelete
  48. மருதுவின் கோட்டோவியம்
    வீரத்தின் கதைசொல்லும் காட்சி

    நினைவூட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  49. தமிழ் நாத்தம்.
    தமிழ் மணம் திரட்டியின் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தி தமிழ்10, இன்ட்லி, தமிழ்வெளி, வலைபூக்கள், உழவன், தேன்கூடு, ஹாரம், போன்ற திரட்டிகளுக்கு மக்களை வரவேற்பதே.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!