எங்கு பார்த்தாலும் அலைபேசி ஹேக்கிங் என்ற செய்தி பரவலாக உள்ளது.உங்கள் அலைபேசி பாதுகாப்பானதா ?இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்.ஆம் யார் வேண்டுமானாலும் உங்கள் அலைபேசியின் உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை பெற இயலும்.
பிஷ்ஷிங்(Phishing) என்ற முறை இங்கும் பயன்படுகின்றது.உங்கள் நண்பர்களே உங்கள் மின்னஞ்சலுக்கு தொடுப்புகளை(links) அனுப்பினாலும் கவனமாக இருங்கள்.பலருக்கு இது பற்றி தெரிந்திருந்தும் கவனக்குறைவாக இருந்து விடுகிறார்கள்.
பரவலாக உங்கள் அலைபேசி ஹாக் செய்யப்படுவதற்கு காரணம் நீங்கள் தரவிறக்கும் பயன்பாட்டான்களே(Applications).
நீங்கள் நோக்கியா பயன்படுத்தினால் நோக்கியா ஸ்டோர் அல்லது Symbianking.com தளத்தில் இருந்து பயன்படுத்துங்கள்.
ஐ- போன் பயன்படுத்துபவர்கள் உங்கள் போனை ஜெயில் பிரேக் செய்யாவிட்டால் பிரச்சினை எதுவும் இல்லை.
நீங்கள் ஆன்ட்ராய்டு பயன்படுத்துவர் என்றால் உங்களுக்கு தலைவலி தான்.கணினியில் எப்படி விண்டோசில் ஏகப்பட்ட வைரசுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டோ அதோ போல் தான் ஆன்ட்ராய்டு.இதன் ஸ்டோர் தேவையற்ற பயன்பாட்டான்களை உடனே நீக்குவதில்லை.இதனால் பாதிக்கபட்டவர்கள் ஏராளம்.
உங்கள் போன்களை கவனமாக பயன்படுத்தும் காலம் வந்து விட்டது.
உஷார்!!
டிஸ்கி : இது நண்பன் "புதியயுகம்" எனக்கு அனுப்பிய மெயில்..............................................................!!!
மும்பையில் நண்பர்களுடன் நான்....