ஒரு ஆங்கிலேயன் நம்ம காந்திகிட்டே கேட்ட கேள்வி இது. இந்தியர்கள் நீங்கள் எல்லோரும் ஏன் வித்தியாசமான கலர்களில் இருக்கிறீர்கள்...? எங்களை பார் நாங்கள் எல்லோரும் ஒரே கலரில் இருக்கிறோம்.
காந்தி சொன்னார் : உயர் தர குதிரைகள் வித்தியாசமான கலரில்தான் இருக்கும். ஒரே கலரில் இருப்பது "கழுதை மட்டுமே"
நான் என் ஆரம்ப கால பதிவில் இட்ட ஒரு கவிதை [இல்லை]
பொங்கி வரும்
காதலை
அள்ளி தெளிக்க
பூக்கள் ஏராளம்
உள்ளது
வீட்டம்மா சம்மதிக்கனுமே...
[[அவ்வ்வ்வ் அடிக்க வராதீங்க தமாஷ் தமாஷ்]]
உங்களுக்கு இந்த ஜோக் தெரிஞ்சிருக்கலாம் எனவே தெரியாதவங்களுக்கு...
ஒரு மலையாளி சேட்டன் நம்ம ஊர்ல வந்து நம்மாள் ஒருத்தன் கிட்டே இங்கே சின்னவீடு கிடைக்குமான்னு கேட்க போக, நம்மாளு ஸ்டெப்பினியைத்தான் சின்னவீடுன்னு கேக்குறான்னு அடிக்க பாய, அக்கம் பக்கம் இருந்தவர்கள் விலக்கி விசாரிக்கும் போது மலையாளி சேட்டன் சொன்னானாம் இவன் சம்சாரம் [[பேச்சு]] சரியில்லைன்னு. இதை கேட்ட மொத்த கூட்டமும் மொக்கிரிச்சி அவனை.....
டிஸ்கி : இது மீள் பதிவு மக்கா....
டிஸ்கி : நண்பன் "கலியுகம்"தினேஷுக்கு நேற்று நிச்சயதார்த்தம் இனிதே நடந்தேறியது வாழ்த்துவோம்....
டிஸ்கி : பஹ்ரைன் கலவரத்தில் முதன் முதலாக ஒரு இந்தியா மலையாளி கொல்லபட்டிருக்கிறார். வழக்கம் போல நம்ம இந்தியன் எம்பசி "ங்கே"!!!!???
கொல்லபட்ட மலையாளி வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரித்தும் இவர் ரூம் ஜன்னலை [[கலவர இடம்]] திறந்து வச்சு போலீசின் தாண்டவத்தை செல்போனில் வீடியோ எடுக்க, கடுப்பான ஒரு போலீஸ் புல்லட்டை இந்த பக்கமா திருப்பிட்டான்னு சொல்றாங்க..