Wednesday, October 20, 2010

குற்றாலம்

கடந்த ஜூன் மாதம் நான் லீவுக்கு ஊர் போயிருந்தேன், எங்கேயாவது சுற்ற கூட்டிக்கொண்டு போங்களேன்னு மனைவியும் பிள்ளைகளும் கேட்டதால், குற்றாலம் போகலாம்னு சொன்னேன். எங்கள் ஊரிலிருந்து பஸ் பிடிச்சி நாகர்கோவில் போயி, அங்கிருந்து திருநெல்வேலி டூ குற்றாலம் போக ஏற்பாடு, வடசேரி போக பஸ்சுக்காக காத்திருந்தோம், பஸ் வர தாமதம் ஆகியது. அப்போது அந்த வழியாய் வந்த ஒரு அம்பாசிடர் கார் எங்கள் அருகில் வந்து நின்றது, டிரைவர் என்னை கேட்டார் எங்கண்ணே போறீங்கன்னு. வடசேரி போறோம்னேன். அவர் சொன்னார் வடசேரிக்கு போக பஸ்சுக்கு எவ்வளவு கொடுப்பீங்களோ அவளவு காசு எனக்கு தாங்க நான் கொண்டு போய் விடுறேன்னார். எனக்கு சற்று ஆச்சர்யம்! சரியென்று நாங்களும் வண்டியில் ஏறி புறப்பட்டோம். போய்கொண்டு இருக்கையில் டிரைவரிடம் சகஜமாக பேசிக்கொண்டு வந்தேன்[[அவரும்]] பேச்சு சுவாரஸ்மாய் இருக்கும் போது கேட்டேன், எப்படி 12 கிமீ போக 20 ரூபாய் கட்டுபடி ஆகிறதுன்னு கேட்டேன், அவர் சொன்னார், அண்ணே நாகர்கோவில்ல இருந்து கன்யாகுமரி போக ஒரு கஸ்டமரை என் முதலாளி அனுப்பினார், திரும்பி போகும் போது வண்டி சும்மாதானே போகுது அதான் உங்களை ஏற்றிக் கொண்டேன் என்றார். அப்போ நான் தரும் பணம் யாருக்கேன்றேன். அது என் கை செலவுக்குன்னு சொன்னார்![[முதலாளிகளே நோட் த பாயின்ட்]] இதன் விபரீரத்தை கடைசியில் சொல்றேன்.
                                  வடசேரி போனதும் நூறு ரூபாய் கொடுத்தேன். சந்தோஷமாய் வாங்கி கொண்டார்.
பின்பு, வடசேரியில் இருந்து நெல்லை பயணம், பஸ்ஸின் சீட் நெருக்கம் கூடுதல்!!
நெல்லை பஸ் நிலையத்தில் இறங்கியதும், என் மனைவி சொன்னாள், அத்தான் இங்கே பழ ஜூஸ் ரொம்ப சூப்பரா  இருக்கும் என்றாள்[[என் மனைவி திருவேல்வேலி]] ஐந்து ரூபாய்தான்!!! அட மக்கா......என்னே ருசி!!! அருமையாக, தாகத்துக்கு ஏற்றதாக இருந்தது.[[ நீங்களும் நெல்லை போனால் குடித்து பார்த்து விட்டு சொல்லுங்க]] எங்களை கூட்டி  செல்ல என் மைத்துனன் ஆல்பர்ட் வந்திருந்தான், அங்கே இருந்து அவன் வீடு போய் அவன் குடும்பத்தையும் வண்டியில்[[சொந்த ஆட்டோ]] ஏற்றிக்கொண்டு குற்றாலம் போவதாக ஏற்பாடு.
                    ஆட்டோ நல்ல விஸ்தாரமாக இருந்தது[[மும்பையில் ரொம்ப மோசங்க]] நெல்லை டூ அம்பை ரோடு......ரொம்ப ரொம்ப மோசமோ மோசம்!!! சாலை பராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக கிடக்கிறது, போகும் வழியில் பதனி கிடைக்கும்னு மைத்துனன் சொன்னான். ஆனால் கிடைக்க வில்லை[[சாயங்காலம் ஆகியிருந்தது]] அனால் நொங்கு கிடைத்தது....தென்காசி பக்கம், ஹோ சூப்பரோ சூப்பர்....எங்க இருவரின் பிள்ளைகளும் நொங்கை ரசித்து சாப்பிட்டார்கள்.
                  பின்பு நாங்கள் நேரே போனது மெயின் அருவிக்குதான். நேரம் இரவு ஆகிவிட்டது, அங்கே போகும் வழியில் இருந்த வாட்ச்மேன்கள் சொன்னார்கள் மெயின் அருவியில் தண்ணீர் இல்லைன்னு, நொந்து போனேன், காரணம் எனது வாழ்க்கையில் சுற்றுலான்னு ஒரு இடமும் நானோ என் மனைவி பிள்ளைகளோ போனதில்லை [[பணியின் காரணமாக]] என் மனைவி எப்போதும் இதை குத்தி காட்டுவாள்.
அப்புறம் சரின்னுட்டு ஐந்தருவிக்கு போனோம். . . . . .  ம்ம்ம்ம் கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா...............அதே கதைதான், அங்கேயும் அருவியில் தண்ணீர் விழ வில்லை!!!
வந்தவர்கள் ஏமாந்து போகப்புடாதுன்னு ஒரு ஓஸ் பைப்பை மேலே போட்டு, அதின் வழியாய் தண்ணீர் வர செய்திருந்தார்கள்!  ஒரு ஆள்தான் அதில் குளிக்க முடியும்! ஆனா வந்திருக்றவங்க குடும்பம் குடும்பமாய்......., என்ன செய்ய ஒரு ஆள் குளிக்கும் இடத்தில் கும்பல் கும்பலாய் குளிக்க போட்டி!!! சமாளித்து குளித்தோம் அப்பாடா....இரவு வேறயா, தண்ணி சும்மா ஜில்ல்ல்லல்லுனு இருந்திச்சு.........
மைத்துனன் சொன்னான், அத்தான் நாளை பாபநாசம் போவோம்ன்னு, 
இரவு சாப்பாடு ஒரு ஹோட்டலில் பரவாயில்லை கொஞ்சம் சுத்தமாக இருந்தது. பரோட்டா முட்டை இருப்பதாக சொன்னார்கள். பரோட்டா சாப்பிட்டேன் அடேங்கப்பா அப்பிடி ஒரு ருசியில என் வாழ்வில் நாகர்கோவில், மும்பை, பஹ்ரைன்னு[[வேற எங்கயும் போனதில்லைங்க]] பரோட்டா சாப்பிட்டதே இல்லை! அவளவு சாப்ட்!!! பின்பு ஒரு லாட்ஜ்ல ரூம் போட்டு தங்கினோம்.
                 மறுநாள் காலை எழும்பி ஜன்னலை திறந்தால் எல்லாம் குரங்குகள் மயம்!!! வெகு சுவாரஸ்யமாக குடும்பம் நடத்தி கொண்டிருந்தன!!! பிள்ளைகள் குஷியாகி விட்டார்கள். அப்புறம் காலை உணவு,
பெரும்பாலும் அங்கே லாட்ஜ் நடத்துபவர்கள் ஒன்று செய்கிறார்கள். அது, அந்த லாட்ஜ்தான் அவர்கள் வீடாகவும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். கீழ் போர்ஷனை அவர்கள் உபயோகிக்கிறார்கள், மேலே உள்ள மாடிகள் விருந்தினருக்காக, மற்றும் வரும் விருந்தினருக்கு காலை டிபன், மாலை உணவு, இரவு உணவு, கடைகளுக்கு போய் உதவன்னு, இவங்க குடும்ப உறுப்பினர்களே செய்து தந்து காசு வாங்கிக் கொள்கிறார்கள்[[டூ இன் ஒன்]] அது எனக்கு நல்ல பாதுகாப்பு போல தெரிஞ்சது.
                          அடுத்து பாபநாசம். கிளம்பினோம் காலையிலே, அங்கே சுத்தம் ரொம்ப குறைவுன்னுதான் சொல்லுவேன். அவளவு கழிவு குப்பைகளை அகற்றாமல் அப்படியே கிடந்தது நாறுகிறது!!!
அருவியில் சின்ன சின்ன அருவிகளாய் ஜொலிக்குது, மக்கள் பெரும்பாலும் குடும்பமாகத்தான் வந்திருந்தார்கள், மத்தியானம் வரை அந்த குளிர்ந்த நீரில் குளித்து மகிழ்ந்தோம்..... என் மைத்துனன் ஒரு தகவல் சொன்னான், அதாவது அருவிகரையிலே நாம் சமைத்து சாப்பிடலாமாம், பாத்திரங்கள் அடுப்புகள் அங்கே வாடகைக்கு கிடைக்குமாம்[[முயற்ச்சி செய்யுங்க]] இங்கே மட்டுமல்ல காரையார் போகும் வழியிலும் [[புலிகள் ஜாக்கிரதை]] அதே போல சாப்பிடலாமாம்......
                          இனி நேரே காரையார் அணை போறோம்..........
ஐயா மலை ஐயா மலை!!! மலைய சுத்தி சுத்தி போனோம். ஆட்டோல போனதால ரொம்ப்ப்பப்ப மெதுவாதான் போக முடிஞ்சது. இடையிடையே வளைவுகளில் புலிகள் ஜாக்கிரதை போர்டுகள் பயமுறுத்தின, வனங்கள் வனங்கள் பார்க்க ரம்மிய[[பயமாக]]மாக இருந்தது........ஒருவழியா போட்டோல்லாம் எடுத்துட்டு போய் சேர்ந்தோம்.
அங்கே நிறைய நடை பாதை கடைகள்......கடைகள், நிறைய வித விதமான மீன்களை பொரித்து வைத்து இருந்தார்கள். மீன் சாப்பாடும் உண்டு, ஆனா நிறைய பேர் சொல்ற மாதிரி, அங்கே விற்கும் மீன்கள் எல்லாம் காரையார் அணையில் மட்டும் பிடிக்கிற மீன்கள் இல்லையாம்!!! எல்லாம் கலந்த கலவைதானாம்! மைத்துனன் சொன்னான் [[கவனிக்க, மைத்துனன் சொந்தமாக நாலு ஆட்டோவும், ஒர்க்ஷாப்பும் வைத்திருக்கிறான்]] எனவே ஒரு மீன்கூட நாங்க வாங்கி சாப்பிட மைத்துனன் அனுமதிக்க வில்லை!!!
  அப்புறம் போட் பயணத்திற்கு டிக்கெட்டும், கேமராவுக்கு தனி டிக்கெட்டும் [[கேமிராவை மறந்து ஆட்டோவிலேயே விட்டுட்டு அக்கறைக்கு போய் அலறியது தனிக்கதை]] வாங்கி, வரிசையில் நின்று போட்டில் ஏறினோம், 
காரையார் அணை!!!, பத்திரிகைகளிலும், இணையத்திலும், ஆனந்தவிகடன்  கிரிஷ்ணவேணி தொடரிலும்   படித்து மலைத்த அணை, என் முன்பு பிரமாண்டமாக!!! ஆனால் தண்ணீர் சற்றே குறைவு என்றார்கள்!!!
போட்டில் ஏறினோம், அருமையான காற்றும் மூலிகைகளின் மணமுமாக ஆஹா அற்புதமான பிரயாணம். போட்டில் போய்கொண்டிருக்கும் போது அணையின் ஆழம் பற்றி நாங்கள் ஒவ்வொரு அபிப்பிராயம் சொல்லிகொண்டிருக்க, அதை கவனித்த போட் ஓட்டுனர் சொன்னார், அணையின் நடுவே கையை காட்டி, அதோ தெரிகிறதே அணைக்குள் கொஞ்சூண்டு செடி போல, அது ஒரு அறுபதடி மரம்!!!!
இது போல நிறைய மரங்கள் அனைக்குள்ளே இருக்கிறது என்றார்!!! எனக்கு கைகாலெல்லாம் உதறலெடுக்க.......[[ஆத்தீ இத முதல்லையே சொல்லியிருக்க பூடாதா]] கிருஷ்ணவேணி தொடர் [[ஆனந்த விகடன்]] நியாபகமும் வர......தூரத்தில் மலையில் பால் போல அருவி பாய்வது தெரிய, திர்லிங் திர்லிங்தான் போங்க.........!!!!
                          ஒரு வழியா அக்கறைய அடைஞ்சோம். தண்ணி குறைவா இருந்ததால நிறைய சகதியும், துர்வாடயுமா இருந்தது. அப்பிடியே கொஞ்சம் மலையேறினால்,  ஆஹா!!!!! அழகான[[ஆபத்தான]] பான[[வான]]தீர்த்தம் அருவி!!!  வாழ்க்கையில் முதன் முதல் அருகிலும், குளித்ததுமான அருவி, மலைப்பாய் குளித்தேன், மெய் மறந்தேன். கூட்டம்தான் கொஞ்சம் அதிகம்.
அந்த அருவியிலே தண்ணீர் நிறைந்து ஓடும் தடாகம் உள்ளது. பார்க்க ரொம்ப சாதுவாக தெரிகிறது ஆனால், மிகவும் ஆபத்தான சுழிகள் உள்ளனவாம் அதிலே, எனவே அதில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
 குளித்து முடித்து [[பிரிய மனமே இல்லை நேரமும் மங்கி கொண்டிருந்தது]] கீழே இறங்கும் போது, மோர் வியாபாரி ஒருவர் மோர் விற்றுக் கொண்டிருந்தார், ஒரு கிளாஸ் வாங்கி குடித்து பார்த்தேன் ஆஹா சூப்பர், எங்கள் குழந்தைகளும் நாங்களுமாக குடித்து மோர் பானையை காலி செய்தோம்.
   அப்படியே கீழிறங்கி போட்டில் பயணித்து இக்கரை திரும்பினோம்.....அற்புதமான பயணம் அது!!!
                 சரி இனி நம்ம டிரைவர் பற்றி,
இப்ப எங்களை குற்றாலம் சுற்றி காட்டினானே என் மைத்துனன். இவனுக்கு ஏற்க்கனவே நான்கு ஆட்டோ, ஒரு சொந்த கேரேஜ் உண்டு. திடீர் என ஒரு ஆசை பஸ் வாங்க வேண்டுமென்று, வாங்கியே விட்டான் மினி பஸ். அதற்க்கு ஒரு டிரைவரை நியமித்தான்...... டிரைவரிடம் இவன் சொன்னது, எங்கே ஓட்டம் போனாலும், ஓட்டத்தோடுதான் திரும்ப வேண்டுமென்று.........., ஆனால், ஒரு நாளும் டிரைவர் ஓட்டத்தோடு திரும்பவில்லை, சந்தேகித்த மைத்துனன் சோதனை செய்யும் போது மாட்டிகிட்டான் டிரைவர்.  அதிர்ந்த மைத்துனன், பஸ்ஸை உடனே விற்று விட்டானாம்!!!
மைத்துனன் சொன்ன காரணம், "முதல் போட்டு பஸ் வாங்கினது  நான், முதலே இல்லாமல் சம்பாதிப்பது இவனுங்க" பின்னே என்ன ......... க்கு எனக்கு பஸ்........!


                           ஸோ, நான் மேலே சொன்ன டிரைவர் வாங்கியது, கை செலவுக்கு அல்ல...............அவனுடைய எல்லா எல்லா செலவுக்கும்தான்....!!!!
                 
                

1 comment:

  1. நல்ல பதிவு..நேரில் உங்களோடு பயணித்தது போன்ற ஒரு உணர்வு. கமெண்ட் செக்சனில் உள்ள வேர்டு வெரிவிகேசனை எடுத்து விடவும்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!