அப்புறம், எனக்கு டியூட்டி FALCON INTER NATIONAL ஹோட்டல்ல [[டிரான்ஸ்பர்]]மாறுச்சி, அப்போ மலையாள நடிகை பிந்து பணிக்கர் [[தமிழ்லையும் நடிச்சிருக்காங்க]] எங்க ஹோட்டல்ல தங்கி இருந்தாங்க,
நான் ரூம் சர்வீஸ்ல டியூட்டில இருந்தேன்.
இரவு நேரம்.
பிந்து பணிக்கரிடமிருந்து போன், வேற என்னத்த கேக்க போறாங்க...... அதே ஐஸ் கியூப்ஸ்தான், கொண்டு போனேன். சமயம் இரவு 11 மணி, நன்றாக பேசினார் பிந்து, எனக்கு மலையாளம் நன்றாக பேசத் தெரியும் என்பதால், தம்பிக்கு எந்தூருன்னாங்க, கன்யாகுமரின்னேன். தமிழா நீன்னாங்க!, ஆமான்னேன். அப்புறமா பிந்து சொன்னாங்க, கன்யா குமரி, முன்பு கேரளாவில்தான் இருந்திச்சுன்னு வரலாறு சொன்னாங்க. [[கன்யாகுமரிய தமிழ் நாட்டோட இணைக்க சொல்லி போராடி, குமரி தமிழன் எத்தனை பேர் அடக்கு முறைக்கு செத்தான் என்பது பிந்துவுக்கு தெரியுமோ?]]
பிறகு பேச்சோடு பேச்சாக ரூமை நோட்டம் விட்டேன். என்னன்னு கேக்குறீங்களா? கொண்டு வந்தது ஐஸ் கியூப்ஸ் ஆச்சே!!
ஒரு ஃபுல் பாட்டில் கிளன் மேக்ரோக்கர் விஸ்கி பாட்டில் சைட் டேபிளில் சிரித்து கொண்டிருந்தான்!!
காலை மணி ஆறு,
மறுபடியும் பிந்துவிடமிருந்து போன், அட்டன்ட் பண்ணேன், டீ வேணும்னு கேட்டாங்க, கொண்டு போனேன். எழும்பி இருந்தார் கண்ணெல்லாம் சிகப்பு[[நைட்டில இருந்தாங்க]], திரும்பி போகுமுன் கண்ணை சுழற்றினேன் பாட்டில் பக்கமாக,
ஆத்தீ...........................!!!!
பாட்டல் காலிய்யா.......காலி............!!! இதுவும் கலாபவன் மணி குடிச்ச அதே விலைதான்[[250 ரூவா]] இந்த விஸ்கியை கண்டிப்பா பிந்து வாங்கி[[குடித்து]] இருக்க மாட்டார். நம்ம மணியை ஏமாத்துன அதே டெக்னிகல் ஸ்டைலில் யாரோ நண்பன் செய்த வேலை அது. பாவம் பணிக்கர்.
சும்மாவா அம்மணி இப்பிடி தடிச்சு போயிருக்காங்கன்னு அடுத்த அஞ்சு வருஷத்துல அவரை சினிமாவில் பார்க்கும் போது நினச்சிகிடுவேன்......
கிக் தொடரும்..........
உங்க ப்ளாக் வந்தா ஓபன் ஆகும்போது adult வார்னிங் வருது .. அது என்னனு பாருங்க . அப்படி இருந்தா பாதிபேர் வர மாட்டாங்க .. பணிக்கர் போஸ்ட் நல்லாத்தான் இருக்கு ..
ReplyDeleteஎழுத்தின் கலர் மாற்றம் தேவை !
ReplyDeleteபாலொயர் விட்ஜட் எங்க பாஸ்..
ReplyDeleteநல்ல எழுதுறீங்க. வித்யாசமான செய்திகள்.
ReplyDelete