Saturday, June 18, 2011

அதிரடி [[நெல்லை]] சந்திப்பு


ஏ அப்பா எப்பிடியோ பஹ்ரைன்ல இருந்து தப்பிச்சி மும்பை ஏர்போர்ட் வந்து இறங்கி [[இதுக்கு தனி பதிவு போடுறேன் தனியா என்ன]] மும்பைல இருந்து ஓடோடி நாகர்கோவில் வந்து, நாகர்கோவில்'ல இருந்து நெல்லைக்கு அடிச்சி பிடிச்சி ஓடின கதையை கொஞ்ச கொஞ்சமா சொல்லப்போறேன் ஹி ஹி ஹி ஹி தொடராக [[எப்பிடியோ பதிவை தேத்திருவோம்ல]]

அதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தை நாகர்கோவில்ல இருந்தே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் [[எலேய் சிபி கொஞ்சம் வாலாட்டாம இரு என்ன]]

பதினாறாம் தேதி ராத்திரி பயண சோர்வில் படுத்திருந்த நேரத்தில் எங்கிருந்தெல்லாமோ போன் வந்துட்டே இருந்துச்சி, சொல்லி வச்சா மாதிரி எல்லோருமே என்னிடம் கேட்ட கேள்வி "என்னை யாருன்னு உனக்கு தெரியுமா" [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]

அப்புறமா கடும் கொசுக்கடியில் உறங்க வேண்டியதா போச்சு [[கரண்ட் இல்லை]] இப்பிடியா அசந்து உறங்கிட்டு இருக்கும் பொது போன்......எடுத்தா சார் நான் ஏர் டெல் ஆபீஸ்ல இருந்து பேசுறேன்னு சொன்னதும் எனக்கு கடுப்பு [[காலை அஞ்சி மணி]]வர வந்த கேள்வி, "என்னை யாருன்னு உனக்கு தெரியுமா...? நான் யாருன்னு உனக்கு தெரியுமா..?" யார்யான்னு உருமுன உருமல்ல சரண்டர் ஆனான் தம்பி "கோமாளி"செல்வா.

அண்ணே நான் இப்பதான் வந்தேன் ஈரோட்டுல இருந்து, இம்சை அரசன் வீட்டுலதான் இப்போ இருக்கேன், இன்னைக்கு நெல்லையில சந்திப்போம்னு சொன்னான் [[அடபாவி இதை சொல்றதுக்கா என் உறக்கத்தை நாசம் பண்ணுனே]]

டேய் கொசுக்கடி பயங்கரமா இருக்குன்னு சும்மாதான் சொன்னேன் அதுக்கு அந்த ராஸ்கல் சொல்றான், ஹி ஹி அண்ணே வரும் பொது ரெண்டு கொசுவை பிடிச்சுட்டு வாங்கன்னு [[ம்ஹும் இதுக்கு அந்த கொசுவே பரவா இல்லை]]

அப்புறமா அடிச்சி பிடிச்சி பஸ் பிடிச்சி நெல்லையில் இறங்க மணி பத்தரை. ஆபீசரை நினச்சி குலை நடுங்க ஆரம்பிச்சிடுச்சி [[லேட்டாயிடுச்சே]] பாஸ்டாபுக்கு என் மச்சினன் என்னை காரில் தூக்கி போட்டு ஜானகிராம் ஹோட்டலில் கொண்டு சேர்த்தான்.

உதரலோடுதான் உள்ளே சென்றேன். ஏன்னா மணி பதினொன்னு... ஆபீசர் கண்டிப்பா பெல்ட்டை உருவப்போறாருன்னு பயந்துட்டே போனேன். உள்ளே நுழைந்ததும் என்னை அறியாமலே மயங்கி உருகி போனேன் என் உயிர் சொந்தங்களை பார்த்து.......!!!!


என்னை வாரி அணைத்து கொண்டார்கள் ஆபீசரும், இம்சை அரசனும். எனக்கும் அவர்கள் நடுவில் இருக்கை தந்து கவுரவித்த அந்த அன்புக்கும் பண்புக்கும் சிரம் தாழ்த்தி நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்....!!!


சீனா அய்யா, பாலா பட்டரை கை குலுக்கி வாழ்த்தினார்கள். கிறங்கி மயங்கி [[அன்பில்தான்]] இருந்த அந்த நேரம் சுற்றிலும் உற்று பார்த்தேன் என் தங்கை கல்பனா என்னை ஆவலோடு பாசத்தோடு பார்த்த அந்த பார்வை, இப்போது நினைத்தாலும் ஆனந்தத்தில் கண் கலங்க செய்கிறது. தங்கை இல்லாத எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா கிடைச்சிருச்சு...!!!


அப்புறம் என் உயிர் நண்பன், யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே....?? அவனேதான், [[சிபி]] கொலை வெறியா பார்த்தான் பாருங்க ஒரு பார்வை அம்மாடியோ பயந்து போனேன் ஹி ஹி.....


செல்வா தம்பி குழைந்து கொண்டே ஒரு கும்பிடு போட்டான் [[தோலை உரிச்சி புடுவேன்னு பயந்துட்டானோ ஹே ஹே]] நம்ம ஹா ஹா ஹா ஹா சிரிப்பு செல்லம் சித்ரா மேடம் அசத்தலா உக்காந்துருந்து ஒபாமா ஸ்டைல்ல கும்புடு போட்டாங்க....


கௌசல்யா மேடம், அவங்களை பற்றி இம்சை பாபு சொல்லி இருந்தார். எனவே அவங்களுக்கும் கும்புடு போட்டேன். ரொம்ப நட்பா பேசுனாங்க, ரத்னவேல் அய்யா பாந்தமாக உட்காந்து இருந்தாங்க.......


நம்ம ஆபீசர் அவருக்கே உரிய தோரணையில் அன்பும் நட்பும் கலந்த கலவையாக அமர்ந்திருந்தார், பக்கத்தில் இருந்த என் அன்பு தளபதி, இம்சை பாபு எல்லோரையும் எனக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தார்......


தொடரும் அதிரடி.......

டிஸ்கி : பதிவின் நீளம் கருதி நாளையும் தொடர்கிறேன்.....

டிஸ்கி : சந்திப்புக்கு வந்திருந்த என் அன்பு + நட்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்.....

டிஸ்கி : ஒவ்வொரு பதிவர்களும் நடத்திய கூத்துகளை ஒன்று விடாமல் சொல்லுறேன் வெயிட் பண்ணுங்க மக்கா....



58 comments:

  1. நல்ல பதிவு பகிர்வு அண்ணாச்சி
    தொடரா ஆவலாய் இருக்கிறோம்

    ReplyDelete
  2. தொடர்கிறேன் தொடர்கிறேன்....

    ReplyDelete
  3. எல்லாத்தையும் ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க!

    ReplyDelete
  4. பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  5. ஹா. ஹா .தொடருங்க

    ReplyDelete
  6. நன்றி மனோ. உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் வரவில்லைஎன்றவுடன் என் கண்கள் உங்களை தேடிக் கொண்டிருந்தன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஹ ..ஹா ..மனோஅண்ணா குற்றாலம் பத்தி பதிவு போடுங்க ..சரியா

    ReplyDelete
  8. ஆஹா ஆரம்பிச்சிட்டிங்களா..

    உண்மையை உண்மையா சொல்லனும்..
    அப்படி இல்லன்னா சிபிஐ -க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும்..

    ReplyDelete
  9. எனக்கு ரொம்பப் பொறாமையா இருக்குங்க..எவ்வளோ விஷயங்கள நான் இழந்துக்கிட்ருக்கேன்!...

    ReplyDelete
  10. சென்னை பித்தன் said...
    எல்லாத்தையும் ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க!///

    சரி தல பிச்சி ஒதரிடுறேன்....

    ReplyDelete
  11. Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    பதிவர் சந்திப்பில் நான் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ///

    உங்க பேச்சும் அருமையா ஜாலியா இருந்துச்சே நண்பா.....!!!

    ReplyDelete
  12. நா.மணிவண்ணன் said...
    ஹா. ஹா .தொடருங்க//

    சரிங்க மக்கா....

    ReplyDelete
  13. Rathnavel said...
    நன்றி மனோ. உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் வரவில்லைஎன்றவுடன் என் கண்கள் உங்களை தேடிக் கொண்டிருந்தன.
    வாழ்த்துக்கள்.//

    அன்புக்கு மிக்க நன்றி அய்யா.....

    ReplyDelete
  14. யோவ் போட்டோ என்ன போதைல எடுத்தீரா? மங்கலா இருக்கு?

    ReplyDelete
  15. அம்பது மொக்கை கமென்ட் போடும் அபூர்வ லேப்டாப் மனோன்னு பட்டம் கொடுத்தாங்களாமே? உண்மையா?

    ReplyDelete
  16. மனோ.. குற்றாலதில் நீ போலீசில் மாட்ன மேட்டரை அடுத்த பாகத்துல சொல்லிடிவியா?மறைச்சிடுவியா? ஹி ஹி

    ReplyDelete
  17. நினைவில் நிற்கும் தமிழ் பேச்சு! :))
    சந்தித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

    ReplyDelete
  18. வணக்கம் மனோ!

    வாசிக்கும் போதே ரொம்ப சுவாரசியமா இருக்கே, கலந்துக்கிட்ட நீங்க எவ்வளவு ஜாலியா இருந்திருப்பீங்க? கலகலப்பான அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்!

    ReplyDelete
  19. அண்ணே வணக்கம் ...

    வெள்ளிகிழமை வேலை வச்சுட்டாணுக நம்ம ஆளுக அதான் நேரடி ஒளிபரப்பில் பார்க்கமுடியவில்லை ... சரி எல்லாம் நலம் தானே சந்திந்த பதிவர்கள் அனைவரும் ... நமக்குதான் ஒருத்தரையும் சந்திக்குற பாக்கியம் கிட்ட மாட்டுது ....

    ReplyDelete
  20. //சிரிப்பு செல்லம் சித்ரா மேடம் அசத்தலா உக்காந்துருந்து ஒபாமா ஸ்டைல்ல கும்புடு போட்டாங்க....//

    அசத்தலான நேர்முக வர்ணனை போன்ற அழகிய பதிவு. ஆஹா, நாம் கலந்து கொள்ளாமல் மிஸ் பண்ணிப்புட்டோமே என்று தோன்ற வைத்தது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. இம்சைஅரசன் பாபு.. said...
    ஹ ..ஹா ..மனோஅண்ணா குற்றாலம் பத்தி பதிவு போடுங்க ..சரியா//

    சிபியும் கோமாளியும் நொந்துற போராணுக மக்கா.....ஹே ஹே ஹே ஹே விடமாட்டேன்ல போடுறேன் பதிவை அந்த ராஸ்கல்ஸ் பற்றி ஹிஹிஹி.....

    ReplyDelete
  22. என் ராஜபாட்டை"- ராஜா said...
    Nanum varalama next time?//

    இதெல்லாம் ஒரு கேள்வியாய்யா, நம்ம வீட்டுக்கு வர யார்ட்டயும் கேட்கணுமா என்ன...?

    ReplyDelete
  23. கவிதை வீதி # சௌந்தர் said...
    ஆஹா ஆரம்பிச்சிட்டிங்களா..

    உண்மையை உண்மையா சொல்லனும்..
    அப்படி இல்லன்னா சிபிஐ -க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும்..//

    மக்கா சிபிஐ'யா.....சிபி'யா விளக்கமா சொல்லும் ஒய்.....?

    ReplyDelete
  24. M.G.ரவிக்குமார்™..., said...
    எனக்கு ரொம்பப் பொறாமையா இருக்குங்க..எவ்வளோ விஷயங்கள நான் இழந்துக்கிட்ருக்கேன்!..//

    மக்கா இருந்த பிஸி'ல உங்க அப்பா ஸ்டோர் பக்கம் போக முடியாம போச்சுய்யா ஸாரி மக்கா....

    ReplyDelete
  25. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    யோவ் போட்டோ என்ன போதைல எடுத்தீரா? மங்கலா இருக்கு?//


    எலேய் மக்கா போட்டோ நான் எடுக்கலைலேய் இம்சை'தான் எடுத்தான் ஹி ஹி ஹி ஹி [[நான் தப்பிச்சென் இனி நீங்க ரெண்டு பெரும் சண்டை போட்டுக்கோங்க கிகிகிகிகிகிகி]]]

    ReplyDelete
  26. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அம்பது மொக்கை கமென்ட் போடும் அபூர்வ லேப்டாப் மனோன்னு பட்டம் கொடுத்தாங்களாமே? உண்மையா?//

    தோலை உரிச்சிபுடுவேன் ராஸ்கல், ம்ஹும் யாருகிட்டே.....[[அவ்வ்வ்வ்வ்வ்]]

    ReplyDelete
  27. சி.பி.செந்தில்குமார் said...
    மனோ.. குற்றாலதில் நீ போலீசில் மாட்ன மேட்டரை அடுத்த பாகத்துல சொல்லிடிவியா?மறைச்சிடுவியா? ஹி ஹி//

    நா.........' உருப்படுவியா நீ, என்னை ஒத்தைக்கு குத்தாலத்துல உட்டுட்டு போனியேடா....நாசமா போவே நீ ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  28. சி.பி.செந்தில்குமார் said...
    மனோ.. குற்றாலதில் நீ போலீசில் மாட்ன மேட்டரை அடுத்த பாகத்துல சொல்லிடிவியா?மறைச்சிடுவியா? ஹி//

    பாவமன்னிப்பு நீ என்கிட்டயும் கேக்க வேண்டும்டா மூதேவி ஸ்டுப்பிட்.....

    ReplyDelete
  29. 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
    நினைவில் நிற்கும் தமிழ் பேச்சு! :))
    சந்தித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்!//

    ஷங்கர்....... ஐ லவ் யூ செல்லம், எனக்கு உங்க கூட தனியா பேச முடியலை மக்கா, ஸாரி பட் உங்க பேச்சு எல்லாம் நச், ரசிச்சேன் மக்கா....!!! இனி தொடர்ந்து பாலாபட்டரை நாஞ்சில் கையில் நர்த்தனம் ஆடும்....[[நாறும்னு எவம்லேய் சொல்றது அங்கே ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி ம்ஹும்]]

    ReplyDelete
  30. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    வணக்கம் மனோ!

    வாசிக்கும் போதே ரொம்ப சுவாரசியமா இருக்கே, கலந்துக்கிட்ட நீங்க எவ்வளவு ஜாலியா இருந்திருப்பீங்க? கலகலப்பான அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்!//

    குற்றாலத்துல சிபி'யும் செல்வாவும் நாறி போனேதேல்லாம் இருக்கு மக்கா வெயிட்......

    ReplyDelete
  31. தினேஷ்குமார் said...
    அண்ணே வணக்கம் ...

    வெள்ளிகிழமை வேலை வச்சுட்டாணுக நம்ம ஆளுக அதான் நேரடி ஒளிபரப்பில் பார்க்கமுடியவில்லை ... சரி எல்லாம் நலம் தானே சந்திந்த பதிவர்கள் அனைவரும் ... நமக்குதான் ஒருத்தரையும் சந்திக்குற பாக்கியம் கிட்ட மாட்டுது ....//

    அதான் நான் நேர்ல சொன்னேனே மக்கா, நான் மட்டும் இந்த சந்திப்புக்கு வரலேன்னா என்ன நடக்கும்னு அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  32. சந்தித்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்!

    June 19, 2011 1:32 AM


    ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    வணக்கம் மனோ!

    வாசிக்கும் போதே ரொம்ப சுவாரசியமா இருக்கே, கலந்துக்கிட்ட நீங்க எவ்வளவு ஜாலியா இருந்திருப்பீங்க? கலகலப்பான அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்!

    June 19, 2011 1:45 AM


    தினேஷ்குமார் said...
    அண்ணே வணக்கம் ...

    வெள்ளிகிழமை வேலை வச்சுட்டாணுக நம்ம ஆளுக அதான் நேரடி ஒளிபரப்பில் பார்க்கமுடியவில்லை ... சரி எல்லாம் நலம் தானே சந்திந்த பதிவர்கள் அனைவரும் ... நமக்குதான் ஒருத்தரையும் சந்திக்குற பாக்கியம் கிட்ட மாட்டுது ....

    June 19, 2011 1:48 AM


    வை.கோபாலகிருஷ்ணன் said...
    //சிரிப்பு செல்லம் சித்ரா மேடம் அசத்தலா உக்காந்துருந்து ஒபாமா ஸ்டைல்ல கும்புடு போட்டாங்க....//

    அசத்தலான நேர்முக வர்ணனை போன்ற அழகிய பதிவு. ஆஹா, நாம் கலந்து கொள்ளாமல் மிஸ் பண்ணிப்புட்டோமே என்று தோன்ற வைத்தது.

    பாராட்டுக்கள்.//


    மிக்க நன்றி அய்யா, நாம் எல்லாம் ஒருநாள் கண்டிப்பா மீட் பண்ணுவோம்ன்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு...

    ReplyDelete
  33. மக்கா.... ஆரம்பிச்சுட்டாரு....

    ReplyDelete
  34. நல்ல அனுபவம். உங்க profile போட்டோ பார்த்து வந்ததற்கும் நேரில் நீங்கள் இருந்ததற்கும் 6 வித்தியாசம்

    ReplyDelete
  35. இப்போது நினைத்தாலும் ஆனந்தத்தில் கண் கலங்க செய்கிறது. தங்கை இல்லாத எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா கிடைச்சிருச்சு...!!!ஹையோ! புல்லறிக்குது. எனக்கு ஒரு அங்கிள் ( நீங்க தான் ) கிடைச்சாப்போல அவங்களுக்கு ஒரு அண்ணா.
    தொடருங்கோ....

    ReplyDelete
  36. //தங்கை இல்லாத எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா கிடைச்சிருச்சு...!!!//

    மலர்ந்தும் மலாராத பாதி மலர் போல ....

    :-)

    ReplyDelete
  37. சந்திப்புக்கு வாழ்த்துகள்.

    போட்டோவெல்லாம் மங்கலா தெரியுதே தூக்க கலக்கத்துல எடுத்ததா? :)

    ReplyDelete
  38. நல்ல பகிர்வு!!

    ReplyDelete
  39. நாகர்கோவில்'ல இருந்து நெல்லைக்கு அடிச்சி பிடிச்சி ஓடின கதையை கொஞ்ச கொஞ்சமா சொல்லப்போறேன் ஹி ஹி ஹி ஹி தொடராக [[எப்பிடியோ பதிவை தேத்திருவோம்ல]]//

    எல்லோரும் ஒரு நோக்கத்தோடு தான் களமிறங்கியிருக்கிறீங்க இல்லே,
    ஹி...ஹி...
    இருங்க பதிவினைப் படித்து விட்டு வருகிறேன்,

    ReplyDelete
  40. அதுக்கு முன்னாடி நடந்த விஷயத்தை நாகர்கோவில்ல இருந்தே ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் [[எலேய் சிபி கொஞ்சம் வாலாட்டாம இரு என்ன]]//

    ஏன் அண்ணே அவரை நாய்க்கு ஒப்பிடுறீங்க...
    நல்ல மனுசன் தானே அவரும்;-))

    ReplyDelete
  41. பதினாறாம் தேதி ராத்திரி பயண சோர்வில் படுத்திருந்த நேரத்தில் எங்கிருந்தெல்லாமோ போன் வந்துட்டே இருந்துச்சி, சொல்லி வச்சா மாதிரி எல்லோருமே என்னிடம் கேட்ட கேள்வி "என்னை யாருன்னு உனக்கு தெரியுமா" [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்]]//

    அவ்....நானும் கேட்டிருக்கேனில்ல..

    நம்ம சகோ, நான் போன் பண்ணியதும் தூக்கம் கலைஞ்சு ரயினிலை ஓட வெளிக்கிட்டாராம்.

    ஹா..ஹா..

    ReplyDelete
  42. டிஸ்கி : பதிவின் நீளம் கருதி நாளையும் தொடர்கிறேன்.....//

    நம்ம சகோ, சஸ்பென்ஸ் வைத்து ஆவலைத் தூண்டி அசத்தலாகப் பதிவினைத் தொடருகிறார்,.
    அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  43. very interesting post,Mano. Going 2 chennai. So, english comment from mobile

    ReplyDelete
  44. I need a guide to operate the clock u gifted. Ha Ha Ha. Ellorum note pannikonga! Thanks 4 ur timely gift.

    ReplyDelete
  45. சிபி சார் என்ன காத்துல கையாலயே படகோட்டுறார்.

    ReplyDelete
  46. naan miss pannitten .:-(((((((((((

    ReplyDelete
  47. யோவ் நீ ஒராளுதான் உண்மைய சொல்லுவ போல இருக்கு... ம் கண்டினியூ.....!

    ReplyDelete
  48. யோவ் முக்கியமா குற்றாலத்துல சிபி என்ன பண்ணாருன்னு மறைக்கா சொல்லிடனும் ஆமா.......

    ReplyDelete
  49. மாப்பூ இவ்வளவு விசயங்களை சேமிச்சசு இனி என்ன வலையில் ஒரே பாசப்பிறப்புக்களுக்கு கொண்டாட்டம்தான்!

    ReplyDelete
  50. vaalga valamudan..
    nigilichiyana sambavam

    marakamudiatha anupavangal..

    vaaltha vaysila makka erunthalum pagirvukku nandrigal..

    ReplyDelete
  51. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா.... ஆரம்பிச்சுட்டாரு....//

    எதை....?

    ReplyDelete
  52. நாய்க்குட்டி மனசு said...
    நல்ல அனுபவம். உங்க profile போட்டோ பார்த்து வந்ததற்கும் நேரில் நீங்கள் இருந்ததற்கும் 6 வித்தியாசம்//

    அந்த வித்தியாசத்தை சொல்லுங்களேன் ஹே ஹே ஹே ஹே ஆர்வமா இருக்கேன், அப்பிடின்னா நிறைய பேர் முகம் காட்டாம இருப்பது இதுக்குதானோ டவுட்டு.....

    ReplyDelete
  53. பதிவர் சந்திப்பை பெருமை படுத்திய பதிவு!!

    ReplyDelete
  54. உங்க செல்லும் மப்புல இருந்ததா? மங்கலா தெரியுது. ஹே.. ஹே.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!