Friday, June 24, 2011

நாஞ்சில் நாட்டு பதிவர் சந்திப்பு தொடர்ச்சி

நாகர்கோவில் தாண்டி பார்வதிபுரம் வரை கொஞ்சம் டிராஃபிகாத்தான் இருந்துச்சி, ஆனாலும் விஜயன் சிறப்பாக சைக்கிளை ஓட்டினார் அசால்ட்டாக அவர் சைக்கிள் ஒட்டிய விதம் ரசிக்கும் படியாக [[கொலை நடுக்கம்னு சொல்ல மாட்டேன்]] இருந்தது...!!!


போலீசாரின் கவனத்திற்கு....

கன்யாகுமரி மாவட்டத்தில் நூறில் இருபது பேர்கள்தான் பைக்கில் சைட் மிரர் வைத்திருக்கிறார்கள்...!!! மீதி பேர் மிரரே இல்லாமல்தான் பைக் ஓட்டுகிறார்கள்...!!!??? [[அடபாவிகளா, ஹெல்மேட்தான் வைக்கிறது இல்லை மிரராவது வச்சிட்டு பைக் ஓட்டுங்க அடிங்.....]] 


பார்வதிரம் தாண்டியதும் அழகான மலைகள், வாழை......வாழை......வாழை தோப்புக்கள் ம்ஹும் பார்க்க கண்கள் ஆயிரம் வேண்டும் அழகு அழகு அழகு...!!! அதை தாண்டி போகும் வழியில் ஒரு குளம் இருக்கு. அந்த குளத்தில்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தை சூட் பண்ணிட்டு செம்மையாக "வாங்கி" கட்டிட்டு போனதாக பாரதி ராஜாவை சொல்வார்கள்...!!!


அப்புறமா தக்கலை'ல இருந்து வலப்பக்கமா திரும்பி, பத்பனாபுரம் கோட்டை தாண்டி சைக்கிள் வேகம் எடுத்தது, இடையிடையே விஜயனுக்கு போன் வந்துட்டே இருந்தது, பைக்கை நிறுத்தி விட்டு போன் பேசிய நண்பனை பாராட்டியே ஆக வேண்டும்...!!!

ஏ யப்பா அப்புறமா ஒரு பதினஞ்சி கிலோமீட்டராவது இருக்கும் ரோடு இருக்கும் விதம் கோலம் கண்டீங்கன்னா பக்கத்துல ரப்பர் தோட்டத்துல இறங்கி போயி தற்கொலை பண்ணத்தான் தோணும் போல இருக்கு ரோடு....!!! கண்டிப்பா பழக்கம் இல்லாத ஆளுங்க கூட போனீங்கன்னா திரும்பி வரும் போது பைக் வீல் ரெண்டையும் தோல்லதான் சுமந்துட்டு வரணும் ஜாக்குரதை!!!


முட்டைகாடு, குமாரபுரம், குலசேகரம், திற்பரப்பு வாழ் மக்கள் கண்டிப்பாக தெய்வ அனுக்கிரகம் பெற்றவர்கள்தான் சான்சே இல்லை, காரணம் அங்கே இருக்கும் இயற்க்கை சூழல் அழகு குளுமை அருவி நீரின் பால் போன்ற  வெள்ள ஓட்டம் அடடா அழகு அழகு .......!!!!


அப்பாடா ஒருவழியா அருவிக்கு வந்து சேர்ந்தோம். சைக்கிள் [[பைக்]] பார்க்கிங்குக்கு அஞ்சி ரூபா மொய், அருவியில் குளிக்க ஒரு ஆளுக்கு மூன்று ரூபா மொய் குடுத்தோம்.


சல சல சல'ன்னு அருவி வஞ்சனை இல்லாமல் பொங்கி வழியுது பால் போல, மக்கள் சந்தோசமா குளியல் போடுறாங்க, என்ன குற்றாலம் மாதிரி இல்லைன்னாலும் குடும்பமா பாதுகாப்பா குளிக்கலாம். "உற்ச்சாக" ஆட்கள் மிக குறைவு என்பது சந்தோஷமான விஷயம்.


பாரதிராஜா வாங்கி கட்டிய குளம்...

விஜயன் வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தார். என்னையும் போஸ் குடுக்க வச்சி நாரடிச்சதை பார்த்த மக்கள் கல்லை தேடுவது தெரிஞ்சதும் நான் உஷார் ஆகிட்டேன் ஹாய் ஹாய்....


அருவியில போயி தலையை வச்சதும் சந்தோசம் தாங்க முடியலை சும்மா பலமா மசாஜ் செய்வது போன்ற சட சட அடிகள் போல அருமையா இருந்தது, குளிக்காமல் கரையில் இருந்து நண்பர்களை போட்டோ எடுத்துட்டு இருந்த ஒரு தம்பி இடம் தன் கேமராவை குடுத்து போட்டோ எடுக்க சொன்னார் விஜயன், அந்த தம்பி சூப்பரா மனம் கோணாமல் போட்டோ எடுத்து தந்தான் அந்த முகம் தெரியா தம்பி  [[நன்றி தம்பி]]


நல்லா குளிச்சொம்ய்யா  குளிச்சோம் குளிச்சோம், அருவியில் குளிச்சுட்டு இருந்த ஒரு சொட்டை மண்டை ஆளை என்னிடம் காட்டி விட்டு சொன்னார் விஜயன், யோவ் இவர் தலையில அருவி தண்ணி விழுந்தா என்ன ஆகும்னு கிண்டல் பண்ணினார்....


அப்புறமா குளிச்சிட்டு இருக்கும் போதே நல்லா பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி, சாப்பிட கிளம்பினோம். அருவியை விட்டு வெளியே வந்தால் வலப்பக்கமாக இருக்கிறது ஒரு ஹோட்டல் அருமையாக இருந்தது சாப்பாடு, சாப்பிட்டு காசை கொடுத்துட்டு நன்றி சொல்லி கிளம்பினோம்.


ஹி ஹி ஹி ஹி மறுபடியும் அருவியில போயி சாடினோம். அப்பாப்பா சாயங்காலம் வரை ஒரே குளியல் குளியல் குளியல்தான், குற்றாலத்துல மெயின் அருவியில சரியான மூடுல நண்பர்கள் இல்லாததால் சரியா குளிக்க முடியாத ஆதங்கத்தை நண்பன் விஜயன் தீர்த்து வைத்தார் ஆனந்தமாக  குளிச்சோம்...!!!


மறுபடியும் நாகர்கோவில் பயணம் [[அந்த ரோடு அவ்வ்வ்வவ்வ்வ்வ்]] இயற்க்கை அள்ளி கொடுத்துருக்கும் வளம் [[வனம்]] அருமையா இருக்கு அங்கே..ஆனால் அதை பயன்படுத்த தெரியாத அரசாங்கங்களை திட்டி தீர்த்து கொண்டே பயணித்தோம்....!!!


நாகர்கோவில் பஸ் ஸ்டாண்ட்க்குதான் கூட்டிட்டு போறார் விஜயன்னு நினச்சா மக்கா நேரே மறுபடியும் அவர் வீட்டுக்கே கூட்டிட்டு போயிட்டார் [[பாசம்]] அங்கே அவர் குழந்தைகள் ஸ்கூல்'ல இருந்து வந்திருந்தார்கள், என்னை அவர்களுக்கு அறிமுக படுத்தினார். விஜயன் மனைவியும் அதே இன்முகத்துடன் வரவேற்றார்...

ஒருபையன் பெயர் அர்ஜூன், ஒரு பெண் குழந்தை பெயர் மூனிஷா, விஜயனும் அவர் மனைவியும் நல்ல அழகு, ஆனால் அவங்க ரெண்டு பேரோடவும் குழந்தைகள் ரொம்ப ரொம்ப அழகு, ஆண்டவன் அமரிக்கையான வாழ்க்கையை கொடுத்துருக்கார், கொஞ்சமா இருந்தாலும் நிறைவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை தொடர வேண்டிகொண்டது மனசு....

அர்ஜூன் சூப்பரா தொட்டியில அழகழகான மீன்கள் வளர்கிறான். அப்புறமா அஞ்சி குட்டி  குருவிகளையும் வளர்க்கிறான் ஆர்வமாக....!!! வீடும் ரொம்ப சுத்தமா அழகா இருக்கு....!!!

அப்புறம் எல்லாருக்கும் விடை கொடுத்து கிளம்பும் போது விஜயன் மனைவி சொன்னார், அடுத்த முறை வரும் போது குடும்பத்தை கூட்டிட்டு வாங்கன்னு [[கண்டிப்பா கூட்டிட்டு வாருவேன் மேடம்]]

அப்புறமா நாகர்ோவில் பேரூந்து நிலையம் கொண்டு வந்து விட்டார் நண்பன் விஜயன். 

டிஸ்கி : பதிவுலகம் என்றால் என்னவென்று [[சிலருக்கு]] தெரியாத இந்த உலகில், பதிவுலகம் எல்லாருக்கும் தெரியும் முன் என் நண்பர்கள் வட்டம் ஆலமரம் போல் விரிந்திருக்கும் என்பது என் கண் முன் தெரிகிறது......உங்களுக்கு.....???!!!

டிஸ்கி : நன்றி நண்பா........

டிஸ்கி : இனி  அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடரும் "அந்த காதல் ஜோடியை பற்றி"

டிஸ்கி : நாளை நானும் விஜயனும், எனது மாற்று திறனாளி நண்பன் ராஜகுமாரும் கன்யாகுமரி சுற்றி பார்க்க போகிறோம்....







59 comments:

  1. வாங்கண்ணே வாங்க என் கமாண்டுக்கு பின்னாலே...

    ReplyDelete
  2. நாஞ்சில் புயல் தற்போது இரண்டாலு முறையாக கறையை கடக்கிறது..

    என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி நன்னே ச்சே அண்ணே!

    ReplyDelete
  4. //////
    விஜயன் சிறப்பாக சைக்கிளை ஓட்டினார் அசால்ட்டாக அவர் சைக்கிள் ஒட்டிய விதம் ரசிக்கும் படியாக [////////

    சைக்கிள் ஓட்டியதற்க்கே இவ்வளவு பில்டப்பா...

    ReplyDelete
  5. //////
    ர்ஜூன் சூப்பரா தொட்டியில அழகழகான மீன்கள் வளர்கிறான். அப்புறமா அஞ்சி குட்டி குருவிகளையும் வளர்க்கிறான் ஆர்வமாக....!!! வீடும் ரொம்ப சுத்தமா அழகா இருக்கு....!!!//////


    அவைகளிடம் சொல்லி விட்டு வந்தீர்களா..

    ReplyDelete
  6. சூப்பர் அனுபவ கட்டுரை !!

    ReplyDelete
  7. அதுக்குள்ளே ஊர் வாறது ஒரு மாசம்,,அதுல உள்ளூர்காரன போலீசில மாட்டி விடுறாரு மாப்ளே!!

    ReplyDelete
  8. # கவிதை வீதி # சௌந்தர் said...
    வாங்கண்ணே வாங்க என் கமாண்டுக்கு பின்னாலே...//

    மறுபடியும் எடிட் பண்ணி போட்டோ போட்டுருக்கேன் பாருங்கையா...

    ReplyDelete
  9. # கவிதை வீதி # சௌந்தர் said...
    நாஞ்சில் புயல் தற்போது இரண்டாலு முறையாக கறையை கடக்கிறது..

    என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்து விட்டு வருகிறேன்...//

    ஹி ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  10. விக்கியுலகம் said...
    பகிர்வுக்கு நன்றி நன்னே ச்சே அண்ணே!//

    அண்ணே டேய் அண்ணே.....

    ReplyDelete
  11. கவிதை வீதி # சௌந்தர் said...
    //////
    விஜயன் சிறப்பாக சைக்கிளை ஓட்டினார் அசால்ட்டாக அவர் சைக்கிள் ஒட்டிய விதம் ரசிக்கும் படியாக [////////

    சைக்கிள் ஓட்டியதற்க்கே இவ்வளவு பில்டப்பா...//

    யோவ் அதி பைக்'குய்யா......

    ReplyDelete
  12. கவிதை வீதி # சௌந்தர் said...
    //////
    ர்ஜூன் சூப்பரா தொட்டியில அழகழகான மீன்கள் வளர்கிறான். அப்புறமா அஞ்சி குட்டி குருவிகளையும் வளர்க்கிறான் ஆர்வமாக....!!! வீடும் ரொம்ப சுத்தமா அழகா இருக்கு....!!!//////


    அவைகளிடம் சொல்லி விட்டு வந்தீர்களா..//

    ஆமாய்யா ஆமா......

    ReplyDelete
  13. மைந்தன் சிவா said...
    சூப்பர் அனுபவ கட்டுரை !!//

    நன்றி மக்கா....

    ReplyDelete
  14. மைந்தன் சிவா said...
    அதுக்குள்ளே ஊர் வாறது ஒரு மாசம்,,அதுல உள்ளூர்காரன போலீசில மாட்டி விடுறாரு மாப்ளே!!//

    உயிருக்கு உலை வைக்கும் மேட்டராச்சே அதான் சும்மா இருக்க முடியலை அதை பார்த்துட்டு....

    ReplyDelete
  15. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Enjoy brother

    June 24, 2011 11:14 PM


    "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Jolly ya erunthekala?//

    ஆமாம் ஆமாம்....

    ReplyDelete
  16. ங்கொய்யால இத்தன போட்டொ எதுக்கு? கண்ண கட்டுதுய்யா........

    ReplyDelete
  17. மேட்டர் சுத்த சைவமா இருக்கே? எனி ப்ராப்ளம்?

    ReplyDelete
  18. /////டிஸ்கி : இனி அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடரும் "அந்த காதல் ஜோடியை பற்றி"///////

    வெளங்கிரும்.......

    ReplyDelete
  19. ஹ ..ஹ ..நாங்களும் வரோம் எங்க ஊரு பார்த்து ....நாகர்கோவில் தான்

    ReplyDelete
  20. /////டிஸ்கி : நாளை நானும் விஜயனும், எனது மாற்று திறனாளி நண்பன் ராஜகுமாரும் கன்யாகுமரி சுற்றி பார்க்க போகிறோம்....////////

    யோவ் நீ கன்யாகுமரிக்கு போ இல்ல, காரைக்குடிக்கு போ, இப்படியெல்லாம் போட்டோ போட்டேன்னா பிச்சிபுடுவேன் பிச்சி.......! வேற ஏதாவது ’நல்ல’ போட்டாவா எடுத்து போடப்படாதா?

    ReplyDelete
  21. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ங்கொய்யால இத்தன போட்டொ எதுக்கு? கண்ண கட்டுதுய்யா........

    கவுண்டரே கண் கட்ட அவுத்து விட்டு பாருங்க ...

    ReplyDelete
  22. /////தினேஷ்குமார் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ங்கொய்யால இத்தன போட்டொ எதுக்கு? கண்ண கட்டுதுய்யா........

    கவுண்டரே கண் கட்ட அவுத்து விட்டு பாருங்க ...//////

    ஏன் கண்ணு தீஞ்சு போறதுக்கா?

    ReplyDelete
  23. விடுப்பை இனிமையாகக் கழித்துக் கொண்டிருக்கிறீர்கள்!உங்கள் எழுத்துக்களின் மூலமாக நாங்களும் அந்த இனிமையை அனுபவிக்கிறோம்!

    ReplyDelete
  24. அந்த கண்ணாடிய கழட்டாமலேயே எங்க ஊரு இவ்வளவு அழகுன்னா ......................///////////

    ReplyDelete
  25. //பதிவுலகம் என்றால் என்னவென்று [[சிலருக்கு]] தெரியாத இந்த உலகில், பதிவுலகம் எல்லாருக்கும் தெரியும் முன் என் நண்பர்கள் வட்டம் ஆலமரம் போல் விரிந்திருக்கும் என்பது என் கண் முன் தெரிகிறது......உங்களுக்கு.....???!!!//
    எனக்கும் அதே அதே

    ReplyDelete
  26. "உற்ச்சாக" ஆட்கள் // இது தெரியாமதான் போய் மாட்டிகிட்டிங்களா?

    ReplyDelete
  27. அழகான பயணக்கட்டுரை மாப்பூ அடிக்கடி இப்படி போனால் மனசு எவ்வளவு இன்பம் என்ன செய்வது ??

    ReplyDelete
  28. நல்லா என்ஜாய் பண்ணுங்க...மறக்காமல் பதிவுல போடுங்க..சூப்பர்..

    ReplyDelete
  29. ஐயா கள்யாகுமாரியில் சுனாமியாம் பாத்துப்போங்கப்பு

    ReplyDelete
  30. // குளிச்சிட்டு இருக்கும் போதே நல்லா பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி//

    தொப்பை கம்மியா இருக்கும் போதே தெரியுதுங்க மனோ சார், சரி ஏன் இந்த பதிவுக்கு 18 + போடல, ஒரே ஆபாசம் போங்க :-)))

    ReplyDelete
  31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ங்கொய்யால இத்தன போட்டொ எதுக்கு? கண்ண கட்டுதுய்யா........//

    அதான் கூலிங் கிளாஸ் போடணும்னு சொல்றது, சும்மாவா அந்த நாதாரி சிபி கிளாஸ் போட்டுருக்கான் இதுக்குதான் ஹி ஹி...

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    மேட்டர் சுத்த சைவமா இருக்கே? எனி ப்ராப்ளம்?//

    யோவ் இதென்ன கொடைகானல்'ன்னு நினச்சீரா...??? என்கிட்டே மாட்றவிங்க எல்லாமே சைவமா இருக்காயிங்க நான் இன்னா பண்றது...???

    ReplyDelete
  33. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////டிஸ்கி : இனி அதிரடி [[நெல்லை]] சந்திப்பு தொடரும் "அந்த காதல் ஜோடியை பற்றி"///////

    வெளங்கிரும்.......//

    படிச்சுட்டு அப்புறமா சொல்லும்ய்யா....

    ReplyDelete
  34. இம்சைஅரசன் பாபு.. said...
    ஹ ..ஹ ..நாங்களும் வரோம் எங்க ஊரு பார்த்து ....நாகர்கோவில் தான்//

    வாலேய் வாலேய் மக்கா.....

    ReplyDelete
  35. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////டிஸ்கி : நாளை நானும் விஜயனும், எனது மாற்று திறனாளி நண்பன் ராஜகுமாரும் கன்யாகுமரி சுற்றி பார்க்க போகிறோம்....////////

    யோவ் நீ கன்யாகுமரிக்கு போ இல்ல, காரைக்குடிக்கு போ, இப்படியெல்லாம் போட்டோ போட்டேன்னா பிச்சிபுடுவேன் பிச்சி.......! வேற ஏதாவது ’நல்ல’ போட்டாவா எடுத்து போடப்படாதா//

    நல்ல போட்டோவா போடனும்னுதான் ரெடி ஆனேன் ஆனால் விஜயன் ஷகீலா மாதிரி இருக்கு வேணாம்னு சொல்லிட்டார் ஹி ஹி....

    ReplyDelete
  36. ஜீவா ஓவியக்கூடம் said...
    Enjoyed it!!!!//

    நன்றி.....

    ReplyDelete
  37. தினேஷ்குமார் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ங்கொய்யால இத்தன போட்டொ எதுக்கு? கண்ண கட்டுதுய்யா........

    கவுண்டரே கண் கட்ட அவுத்து விட்டு பாருங்க ..//

    நானும் அதைத்தான் சொல்லிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  38. தினேஷ்குமார் said...
    ஹையா வடை//

    ஹய்யோ ஹய்யோ.....

    ReplyDelete
  39. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    /////தினேஷ்குமார் said...
    பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ங்கொய்யால இத்தன போட்டொ எதுக்கு? கண்ண கட்டுதுய்யா........

    கவுண்டரே கண் கட்ட அவுத்து விட்டு பாருங்க ...//////

    ஏன் கண்ணு தீஞ்சு போறதுக்கா?//

    அப்போ காஞ்சி போயிதான் கிடக்கீரா ஒய் பிச்சிபுடுவேன் பிச்சி ஆமா....

    ReplyDelete
  40. சென்னை பித்தன் said...
    விடுப்பை இனிமையாகக் கழித்துக் கொண்டிருக்கிறீர்கள்!உங்கள் எழுத்துக்களின் மூலமாக நாங்களும் அந்த இனிமையை அனுபவிக்கிறோம்!//

    மிக்க நன்றி தல......

    ReplyDelete
  41. கே. ஆர்.விஜயன் said...
    அந்த கண்ணாடிய கழட்டாமலேயே எங்க ஊரு இவ்வளவு அழகுன்னா ......................///////////

    ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே....

    ReplyDelete
  42. FOOD said...
    //பதிவுலகம் என்றால் என்னவென்று [[சிலருக்கு]] தெரியாத இந்த உலகில், பதிவுலகம் எல்லாருக்கும் தெரியும் முன் என் நண்பர்கள் வட்டம் ஆலமரம் போல் விரிந்திருக்கும் என்பது என் கண் முன் தெரிகிறது......உங்களுக்கு.....???!!!//
    எனக்கும் அதே அதே//
    ஹே ஹே ஹே ஹே சேம் பிளட் ஆபீசர்.....

    ReplyDelete
  43. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    "உற்ச்சாக" ஆட்கள் // இது தெரியாமதான் போய் மாட்டிகிட்டிங்களா?
    //

    யோவ் அந்த மேட்டரிலையே இருக்கீரே மக்கா உருப்படுமா...?

    ReplyDelete
  44. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அடுத்து குமரியா?//

    ஹே ஹே ஹே ஹே ஹே ஆமாய்யா....

    ReplyDelete
  45. Nesan said...
    அழகான பயணக்கட்டுரை மாப்பூ அடிக்கடி இப்படி போனால் மனசு எவ்வளவு இன்பம் என்ன செய்வது ??//

    ஆமாய்யா நல்லாத்தான் இருக்கு...!!!

    ReplyDelete
  46. குணசேகரன்... said...
    நல்லா என்ஜாய் பண்ணுங்க...மறக்காமல் பதிவுல போடுங்க..சூப்பர்..//

    சரி மக்கா.....

    ReplyDelete
  47. VELU.G said...
    ஐயா கள்யாகுமாரியில் சுனாமியாம் பாத்துப்போங்கப்பு//

    சுனாமிக்கே சுனாமி'யாய்யா....???

    ReplyDelete
  48. இரவு வானம் said...
    // குளிச்சிட்டு இருக்கும் போதே நல்லா பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சி//

    தொப்பை கம்மியா இருக்கும் போதே தெரியுதுங்க மனோ சார், சரி ஏன் இந்த பதிவுக்கு 18 + போடல, ஒரே ஆபாசம் போங்க :-)))//

    அடபாவி அருவியிலையும் கூலிங் கிளாஸ் போடா சொல்லுதீரே அவ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  49. அண்ணே, ஏன் இந்தியா வந்ததுல இருந்து ஊர் ஊராப் போய்க் குளிச்சுக்கிட்டே இருக்கீங்க? ஒருவேளாஇ பஹ்ரைன்ல இருந்தவரைக்கும் குளிக்கவே இல்லையோ?

    ReplyDelete
  50. செங்கோவி said...
    அண்ணே, ஏன் இந்தியா வந்ததுல இருந்து ஊர் ஊராப் போய்க் குளிச்சுக்கிட்டே இருக்கீங்க? ஒருவேளாஇ பஹ்ரைன்ல இருந்தவரைக்கும் குளிக்கவே இல்லையோ?//

    சரி சரி விடுங்கய்யா விடுங்கய்யா பப்ளிக் பப்ளிக்.....

    ReplyDelete
  51. உங்கள் எழுத்துக்களின் மூலமாக நாங்களும் அந்த இனிமையை அனுபவிக்கிறோம்!

    ReplyDelete
  52. சே.குமார் said...
    உங்கள் எழுத்துக்களின் மூலமாக நாங்களும் அந்த இனிமையை அனுபவிக்கிறோம்!//

    ஹா ஹா ஹா ஹா அனுபவிங்க அனுபவிங்க மக்கா....

    ReplyDelete
  53. யோவ் நீர் இங்கெல்லாம் சரிபட்டு வரமாட்டீர் திரும்ப பஹ்ரைன் அனுப்பி விட வேண்டியது தான்.

    ReplyDelete
  54. நாஞ்சில் நாட்டுக்காரர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்.
    உங்க ஊரு அழகு...
    பிகரு அதைவிட அழகு...
    அடுத்தப்பிறவி உங்க ஊர்லதான்.
    முடிவே பண்ணிட்டேன்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!