நான் : ஹலோ எப்பிடிம்மா இருக்கே...?
மனைவி [[இன் மும்பை]] : நான் நல்லா இருக்கேன்'ப்பா நீங்க எப்பிடி இருக்கீங்க..?
நான் : நான் நல்லாயிருக்கேன், ஆமா பிள்ளைங்க எங்கே...?
மனைவி : தம்பி [[மகன்]] ஸ்கூல் போயிருக்கான், பாப்பா [[மகள்]] டியூசன் போயிருக்கிறாள்.
நான் : நீ என்ன பண்ணிட்டு இருக்கே..?
மனைவி : நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்..
நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
மனைவி : என்ன அவ்வ்வ்வ்வ்வ்...? ஏன் ரெண்டு நாளா போன் பண்ணலை...?
நான் : என்னாது போன் பண்ணலையா நேற்றுதானே போன் பண்ணுனேன்...?
மனைவி : மறந்து போச்சா உங்க போனில் நீங்க கடைசியா எனக்கு போன் பண்ணினது எப்போன்னு செக் பண்ணி பாருங்க...
நான் : [[மறந்தது நியாபகம் வந்து]] ஹி ஹி அது வந்தும்மா நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேனா அதான் மறந்து போச்சு ஹி ஹி...
மனைவி : என்ன ஹி ஹி, பக்கத்துல நான் இல்லைங்கிற தைரியமா...? எங்கே போனாலும் இங்கேதானே வரணும் அப்போ வச்சிக்கிறேன் பஞ்சாயத்தை, ஊரில் இருக்கும் போதே இன்டர்நெட்டை ஒப்பன் பண்ணி வச்சிகிட்டு காப்பி ஆறிப்போனதே தெரியாமல் ஆன்லைன்ல குடைஞ்சிகிட்டு இருந்த ஆள்தானே நீங்க தெரியாதா என்ன...? என்னைவிட உங்களுக்கு அதுதான் பெருசா போச்சா...?
நான் : செல்லம் வெரி ஸாரி, இனி காலையில முதல் வேலையே உனக்கு போன் பண்ணுறதுதான் சரியா ஹி ஹி...
மனைவி : சரி சரி சாப்புட்டீங்களா'ப்பா...?
நான் : ஆமாம் காலையிலேயே பிரேக் ஃபாஸ்ட் சாப்டாச்சு.....
பாவிகளா பேஸ்புக், வலைத்தளம், பஸ் லாரி ஆட்டோ ரிக்சா'ன்னு போயிட்டு ஊருக்கு போன் பண்றதையே மறந்துருக்கேன் அவ்வ்வ்வ்வ், யப்பா இனி வீட்டுக்கு முதல்ல பேசிட்டுதான் இங்கே வருவேன் ஹி ஹி, விக்கிக்கு அடி செவிள்ல விழுதுன்னா எனக்கு அடி வாயில விழுது, இப்போ போன்'லையும் விழ ஆரம்பிச்சுடுச்சு...!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நேற்றுதான் ஏழாம் அறிவு படம் பார்க்க முடிந்தது, சீனா, ஜப்பான், தாய்லாந்த் போன்ற நாடுகள் ஒரு தமிழனை தெய்வமாக வணங்குவது புதிய, ஆச்சர்யமான செய்தி [[இன்றைய தலைமுறைக்கும், எனக்கும் ஹி ஹி]] தமிழகத்தில் ஏராளமானோர்க்கு இது தெரியவில்லை என்பது இன்னொரு ஆச்சர்யம்...!!!! சீனாக்காரன் குழந்தைகளுக்கு தெரிஞ்ச போதி தர்மனை நம்முடைய இளம் தலைமுறைகளுக்கு தெரியவில்லை..?
கதை இதுதான், சீனாக்காரன் நம்ம தமிழனை சரியா பயன்படுத்திகிட்டான், நம்ம ஆளுங்க சாப்புட்டு தூங்கிட்டாங்க, இன்னும் தூங்குராயிங்க அம்புட்டுதான் ஹி ஹி...!!!
கதை இதுதான், சீனாக்காரன் நம்ம தமிழனை சரியா பயன்படுத்திகிட்டான், நம்ம ஆளுங்க சாப்புட்டு தூங்கிட்டாங்க, இன்னும் தூங்குராயிங்க அம்புட்டுதான் ஹி ஹி...!!!
என்னோடு வேலை பார்க்கும் அனில் அண்ணனுக்கு போதி தர்மனை பற்றி தெரியுமாம் முன்பே, எப்பிடியோ ஒரு தமிழனை இன்றைய தலைமுறைகளுக்கு காட்டியமைக்கு முருகதாஸ்'க்கு ஒரு ராயல் சல்யூட்...!!!
ஸ்ருதி ஹாசன் நடிப்பு அவ்வ்வ்வ் ரகம், அவருடைய குரல் பயமாக இருக்கிறது, அவர் பேசிய வசனம், கண்ணில் தண்ணீரை வர வைத்துவிட்டது, " உன் லவ்வை கொண்டு போயி குப்பையில் போடு" இதே வசனத்தை ரஜினியை பார்த்தோ, விஜய்யை பார்த்தோ, அஜித்தை பார்த்தோ யாரும் கேட்டு விட முடியாதென்பது என் தாழ்மையான கருத்து...!!!
ஆமா முருகதாஸ் அண்ணே பார்வை வசியம் உண்டு ஓகே, ஆனால் கார், லாரி, கண்டெய்னர் லாரி, பைக் எல்லாம் இந்த பார்வை வைத்தியத்தில் இப்பிடி பாடாய் படுத்துதே அண்ணே அது எப்பிடி...? திஸ் இஸ் டூ மச்'னு உங்களுக்கே தெரியலையா...? சலிப்பா இருந்துச்சு அண்ணே...!!!
இதுல ஒரு வயதான துப்புரவு தொழிலாளி, சைனாகாரனின் பார்வை வசியத்துல வந்து கூங்பூ கதகளி ஆடுவார் பாருங்க, டிவி'ல உடனே ரிமோட் கண்ட்ரோல விட்டரியனும் போல இருந்துச்சு அண்ணே முடியல...!!!
அண்ணே முதல்ல வர்ற குத்துப்பாட்டு சைனா பாஷைதானே, எல்லா வார்த்தையும் அருமையா புருஞ்சுது அண்ணே, கண்ணுல தண்ணி தண்ணியா கொட்டுச்சு அந்த பாட்டை பார்க்கும்[[கேட்க]] போது...!!!
யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்னை விட்டு போனதென்னம்மா பாடல் அருமையா இருக்கு...!!!
சைனாக்காரன் இம்புட்டு கொலைகள் செய்தும் சென்னை போலீஸ் எல்லாம் ஜெயஜோதி வீட்டுலையா இருந்தாங்க...? சரியா நீங்க குழம்பி எங்களை தெளிய வச்சிட்டீங்க அண்ணே...!!!
பிடித்த வசனங்கள் [[கொஞ்சம்தான்]]
* ஸ்ருதி யானை மீது ஏறியதும், ஐயோ குத்துது...
அதுக்காக டைல்ஸ் எல்லாம் போடமுடியாது.
* நாம போறது ஒரு பேஷன்ட் மேலயா...?
அதுக்காக யானையை தூக்கிட்டு போகமுடியாது.
* மியூசியத்துல வில்லையும், வாளையும் வச்சி பூட்டிட்டோம்..!!!
* வீரத்திற்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோ..
நாம் நிறைய தடயங்கள், சுவடிகள் அறிய நூலகங்களை மிஸ் பண்ணிட்டோம் என சூர்யா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, இன்னும் இழந்துட்டுதான் இருக்கோம்...!!!
கடைசியாக சூர்யா டிவி இண்டர்வியூல சொல்ற விஷயங்களை நல்லா நடைமுறை படுத்துவோம் தமிழர்களே...!!!
என்னைப்போல போதி தர்மனை தெரியாதவங்களுக்கு, போதி தர்மனை கொண்டு சேர்த்த முருகதாஸ்'க்கும், உதயநிதிக்கும் நாஞ்சில் மனோ'வின் ராயல் சல்யூட் நன்றி...!!!
டிஸ்கி : முல்லைப்பெரியாருக்கும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும், விலைவாசி உயர்வுக்கும், ஊழலை செய்துட்டு ஜெயில்ல இருந்து மகாராணி மாதிரி வெளியே வந்து தியாகியா பில்டப் கொடுக்குறவுங்களுக்கும் ஒரு போதி தர்மன் வராமலா இருக்கப்போறான் பார்ப்போம்...!!!
வீட்டுல ரைடு வரதுனால தான் சாட்க்கு வர மாட்டிங்கறிங்களா?
ReplyDelete//// நாம போறது ஒரு பேஷன்ட் மேலயா...?
ReplyDeleteஅதுக்காக யானையை தூக்கிட்டு போகமுடியாது.
////
7ம் அறிவு படத்தில் எனக்கு புடிச்ச வசனங்களில் இதுவும் ஒன்று
அருமை
ஏழாம் அறிவு பட விமர்சனம் லேட்டா போட்டிருகிங்க....
ReplyDeleteஆனா டிஸ்கி வரிகளில் உங்க ஆதங்கம் தெரியுது.
வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteவீட்டுல ரைடு வரதுனால தான் சாட்க்கு வர மாட்டிங்கறிங்களா?//
ஆன்லைனை ஒப்பன் பண்ணி வச்சிகிட்டு பப்பரப்பான்னு இருக்குற ஒரே ஆளு நாந்தேன் ஹி ஹி...
K.s.s.Rajh said...
ReplyDelete//// நாம போறது ஒரு பேஷன்ட் மேலயா...?
அதுக்காக யானையை தூக்கிட்டு போகமுடியாது.
////
7ம் அறிவு படத்தில் எனக்கு புடிச்ச வசனங்களில் இதுவும் ஒன்று
அருமை//
நானும் மிகவும் ரசித்தேன்...
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteஏழாம் அறிவு பட விமர்சனம் லேட்டா போட்டிருகிங்க....
ஆனா டிஸ்கி வரிகளில் உங்க ஆதங்கம் தெரியுது.//
படம் தியேட்டருல போயி பார்க்க நேரமும் இல்லை, லீவும் இல்லை என்னாப்பன்னுறது ஹி ஹி...
அசத்தல்.
ReplyDeleteஏழாம் அறிவு படத்தில் எத்தனை குறை இருந்தாலும் எங்கள் இளைய சமுதாயத்துக்கும் எங்களுக்கும் தமிழனின் கடந்த காலத்த காட்டி எங்களை நெஞ்சு நிமித்த வைத்துள்ளார்கள்... இப்படி நாம் அறியாத விடயங்கள் எத்தனையோ?
ReplyDeleteவணக்கம் அண்ணே,
ReplyDeleteநல்லா இருக்கிறீங்களா?
பதிவைப் படிச்சிட்டு வாரேன்.
ஒரு புது முக இயக்குனர் இயற்றி இருந்தால் இந்த படம் கொண்டாட பட்டிருக்கும்..
ReplyDeleteமுருகதாஸ் ஒரு எதிர்பார்ப்பு வலையில் சிக்கியுள்ளார்..
இனி அவரது குறைகளை மட்டுமே எல்லோரும் பேசுவார்கள்...(சச்சினின் 94 ஐ போல..).அவர் லாஜிக் மற்றும் டெக்னாலஜி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்...
நான் : நீ என்ன பண்ணிட்டு இருக்கே..?
ReplyDeleteமனைவி : நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்..//
ஹே....ஹே...
அண்ணே உங்களுக்கே பல்பா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மனைவி : மறந்து போச்சா உங்க போனில் நீங்க கடைசியா எனக்கு போன் பண்ணினது எப்போன்னு செக் பண்ணி பாருங்க//
ReplyDeleteஹே....ஹே...
அப்போ நீங்க வேற யாருக்கோ போன் பண்றீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மனோ அண்ணாவின் அண்ணி இதனைப் படிச்சால் கோவிச்சுக்க வேணாம், ஜாலியாக எடுத்துக்கவும்.
அண்ணர் ப்ளாக்கிற்காக, குடும்பத்தையே மறந்திட்டாரா..
ReplyDeleteஏழாம் அறிவு பற்றிய உங்கள் பார்வையை அசத்தலாகத் தந்திருக்கிறீங்க.
ReplyDeleteமுருகதாஸ் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துப் படம் பண்ணியிருக்கலாம் என்பது தான் என் கருத்தும்.
HAHAHA..super anney...
ReplyDelete60W Balp Vaangia Annan Mano Laptop Mano Vaalga..
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅசத்தல்.//
நன்றிய்யா..
Rathnavel said...
ReplyDeleteவாழ்த்துகள் மனோ.//
மிக்க நன்றி அய்யா...
காட்டான் said...
ReplyDeleteஏழாம் அறிவு படத்தில் எத்தனை குறை இருந்தாலும் எங்கள் இளைய சமுதாயத்துக்கும் எங்களுக்கும் தமிழனின் கடந்த காலத்த காட்டி எங்களை நெஞ்சு நிமித்த வைத்துள்ளார்கள்... இப்படி நாம் அறியாத விடயங்கள் எத்தனையோ?//
ஆமாம்ய்யா இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கும் போல...!!!
நிரூபன் said...
ReplyDeleteவணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?
பதிவைப் படிச்சிட்டு வாரேன்.//
வாங்க வாங்க...
மயிலன் said...
ReplyDeleteஒரு புது முக இயக்குனர் இயற்றி இருந்தால் இந்த படம் கொண்டாட பட்டிருக்கும்..
முருகதாஸ் ஒரு எதிர்பார்ப்பு வலையில் சிக்கியுள்ளார்..
இனி அவரது குறைகளை மட்டுமே எல்லோரும் பேசுவார்கள்...(சச்சினின் 94 ஐ போல..).அவர் லாஜிக் மற்றும் டெக்னாலஜி விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம்...//
பிரபலம் என்றாலே கண்டிப்பாக எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்...!
நிரூபன் said...
ReplyDeleteநான் : நீ என்ன பண்ணிட்டு இருக்கே..?
மனைவி : நான் உங்க கூட பேசிட்டு இருக்கேன்..//
ஹே....ஹே...
அண்ணே உங்களுக்கே பல்பா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
என்கூட சேர்ந்துட்டு அவளும் ரொம்ப காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாள் ஹா ஹா ஹா ஹா...
நிரூபன் said...
ReplyDeleteமனைவி : மறந்து போச்சா உங்க போனில் நீங்க கடைசியா எனக்கு போன் பண்ணினது எப்போன்னு செக் பண்ணி பாருங்க//
ஹே....ஹே...
அப்போ நீங்க வேற யாருக்கோ போன் பண்றீங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மனோ அண்ணாவின் அண்ணி இதனைப் படிச்சால் கோவிச்சுக்க வேணாம், ஜாலியாக எடுத்துக்கவும்.//
நல்லவேளை மொரோக்காகாரி'ன்னு சொல்லாம விட்டீங்க ஹி ஹி...
நிரூபன் said...
ReplyDeleteஅண்ணர் ப்ளாக்கிற்காக, குடும்பத்தையே மறந்திட்டாரா..//
குடும்பத்துக்காக பிளாக்கை மறக்காமல் இருந்தால் சரி ஹி ஹி...
நிரூபன் said...
ReplyDeleteஏழாம் அறிவு பற்றிய உங்கள் பார்வையை அசத்தலாகத் தந்திருக்கிறீங்க.
முருகதாஸ் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்துப் படம் பண்ணியிருக்கலாம் என்பது தான் என் கருத்தும்.//
தமிழ், தமிழர் உணர்வை அற்புதமாக கொண்டு வந்துருக்கலாம் மிஸ் பண்ணிட்டார்...!
siva said...
ReplyDeleteHAHAHA..super anney...//
ஹா ஹா ஹா ஹா
siva said...
ReplyDelete60W Balp Vaangia Annan Mano Laptop Mano Vaalga..//
அடப்பாவிகளா...
//விக்கிக்கு அடி செவிள்ல விழுதுன்னா எனக்கு அடி வாயில விழுது, இப்போ போன்'லையும் விழ ஆரம்பிச்சுடுச்சு...!!!
ReplyDelete//
அடி பலமா ?
உங்கள் பார்வைக்கு இன்று
ReplyDeleteஅண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?
மனோ,, மக்கா கிரேட் சல்யூட் எதுக்கா??
ReplyDeleteடிஸ்கி தான் கை லைட்
சீனாக்காரன் நம்ம தமிழனை சரியா பயன்படுத்திகிட்டான், நம்ம ஆளுங்க சாப்புட்டு தூங்கிட்டாங்க, இன்னும் தூங்குராயிங்க
ReplyDeleteஎப்போ எழுவார்கள்?
வாயில குத்து வாங்கறதையெல்லாம வலையில எழுதுவீங்க. அதையெல்லாம் தடுக்க எங்களால முடியாது சாமியோவ்.
ReplyDeleteஅண்ணே, அந்த டிஸ்கி மேட்டருதான்னே ரொம்ப புடிச்சிச்சி.
ReplyDelete"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDelete//விக்கிக்கு அடி செவிள்ல விழுதுன்னா எனக்கு அடி வாயில விழுது, இப்போ போன்'லையும் விழ ஆரம்பிச்சுடுச்சு...!!!
//
அடி பலமா ?//
பலமான்னு சொல்லிட்டு மறுபடியும் அடி வாங்குறதுக்கா சும்மா போங்கய்யா...
மனசாட்சி said...
ReplyDeleteமனோ,, மக்கா கிரேட் சல்யூட் எதுக்கா??
டிஸ்கி தான் கை லைட்//
அப்பிடியா...?
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசீனாக்காரன் நம்ம தமிழனை சரியா பயன்படுத்திகிட்டான், நம்ம ஆளுங்க சாப்புட்டு தூங்கிட்டாங்க, இன்னும் தூங்குராயிங்க
எப்போ எழுவார்கள்?//
இன்னும் உறக்கம்தான்...!
சத்ரியன் said...
ReplyDeleteவாயில குத்து வாங்கறதையெல்லாம வலையில எழுதுவீங்க. அதையெல்லாம் தடுக்க எங்களால முடியாது சாமியோவ்.//
தடுக்க வாரவங்களுக்கும் கொள்ளி கட்டை அடி விழுமே ஹி ஹி..
சத்ரியன் said...
ReplyDeleteஅண்ணே, அந்த டிஸ்கி மேட்டருதான்னே ரொம்ப புடிச்சிச்சி.//
ஹா ஹா ஹா ஹா இனி ஒரே டிஸ்கியா போட்டுற வேண்டியதுதான்...
தூரத்தில இருந்து கணவனைக் கட்டுப்படுத்தினால் சீதனம் வாங்கினதாலதான் இப்பிடியெல்லாம் ஆட்டிப்படைக்கிறாங்கன்னு பதிவு போடுவீங்க.ஆனா உங்களை மாதிரி ஆட்களை என்ன பண்றது மனோ !
ReplyDeleteஏழாம் அறிவு ஒரு சரித்திரத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.ஆனால் படத்தில் நிறையவே தேவையில்லாதவைகளின் ஆட்சி !
அண்ணே அடிவாங்குறது கன்பார்ம் ஆயிடுச்சில்ல...நாளைக்கு நீங்க எவ்ளோ நல்லவருன்னு ஒரு பதிவு போட்ரவா ஹிஹி!
ReplyDeleteலேப்டாப்பு!! உனக்கு வீட்டுல இருக்குடா ஆப்பு!!
ReplyDeleteஇனிமேல் காலை எழுந்ததும் ஒழுங்கா வீட்டுக்குப் ஃபோன் பண்ணிட்டு பின் மத்த வேலையைப் பாருங்க மனோ!
ReplyDeleteஉங்க பார்வையில் போதி தர்மன் நன்றாக இருக்கிறார்.
ReplyDeleteஅப்பாடா மனோ இனி அப்படியே அடங்கிருவாப்ல...... எலேய் யாருலேய் அது, அந்த அருவாளை அப்படி தூக்கி ஓரமா போடுலேய்ய்ய்....
ReplyDeleteபழைய ஈயம் பித்தாளைக்கு பேரிச்சம்பழம்...... அண்ணே பழைய அருவா கிருவா இருக்காண்ணே.... எடைக்கு எடுத்துக்கிறேண்ணே...
ReplyDeleteஎன்னது ஏழாம் அறிவு படமா....? அதுக்குள்ள ரிலீஸ் ஆகிடுச்சா?
ReplyDeleteடைட்டில அடிக்கடி மிஸ் பண்றீங்க.குமட்டில் குத்து வாங்கிய பதிவர்னு போட்டிருக்கலாம்,ஹி ஹி
ReplyDelete/
ஏழாம் அறிவுப்பார்வை நல்லாருக்கு.
கன்டைனர் காட்சி எல்லோருக்கும் எரிச்சலைத்தான் உண்டாக்குசு.எல்லாரும் சொன்னாங்க.
////பாவிகளா பேஸ்புக், வலைத்தளம், பஸ் லாரி ஆட்டோ ரிக்சா'ன்னு போயிட்டு ஊருக்கு போன் பண்றதையே மறந்துருக்கேன் அவ்வ்வ்வ்வ், யப்பா இனி வீட்டுக்கு முதல்ல பேசிட்டுதான் இங்கே வருவேன் ஹி ஹி, விக்கிக்கு அடி செவிள்ல விழுதுன்னா எனக்கு அடி வாயில விழுது, இப்போ போன்'லையும் விழ ஆரம்பிச்சுடுச்சு...!!!///////
ReplyDeleteபோங்க சார் போய் பொண்டாட்டி புள்ளைகளுக்கு போன பண்ணுங்க சார்.... அவ்வ்
போதி தருமர்... அவர பத்தி தெரிஞ்சிகலன்னா என்னா ஒலகமே அழிஞ்சிடுமா? விடுங்க சார், முருகதாஸ், உதயநிதி எல்லாரும் சேர்ந்து நம்ம தலைல நல்லா மொளகா அரைசிட்டாங்க
ReplyDeleteபாஸ் கொஞ்சம் லேட் தான் (நிறையவோ??) ஆனாலும் ரசித்து படித்தேன்..... டிஸ்கி தான் ரெம்ப ரசித்தேன்... மகாராணிக்கு ஆப்பு எப்பயோ ??? ;(
ReplyDeleteலேட்டா வந்தாலும்...லேட்டஸ்டா விமர்சனம் பன்னியிருக்கிங்க...நானும் லேட்டா வந்திட்டேன்...ஆல் பிளாக்கர்ஸ் வீட்டுல அடிவாங்கிறவங்களா இருக்காங்க...அங்க அடி வாங்கி டிரைனிங் எடுத்ததாலதா...எவ்வளவு அடிச்சாலும் தாங்கறமப்பா... அவ்வ்வ்வ்வ்வ்வ்.............
ReplyDeleteஎன்ன மனோ அண்ணே விமர்சனம் இவ்வளவு லேட்டா வருகுது.
ReplyDeleteமனோ நல்ல வேளை,அண்ணி ‘எவளுக்கு போன் பண்ணிட்டு ,எனக்கு பண்ணினதா சொல்றிங்கன்னு கேட்காம போனாங்களே????மாட்டினிங்களா??
ReplyDeleteஅண்ணிக்கிட்ட செம டோஸ் போல
ReplyDeleteகண்டிப்பா வீடு தான் முதல்
ReplyDeleteபடம் பற்றிய அருமையான சிந்தனை நண்பரே
விக்கிக்கு அடி செவிள்ல விழுதுன்னா எனக்கு அடி வாயில விழுது, இப்போ போன்'லையும் விழ ஆரம்பிச்சுடுச்சு...!!!//
ReplyDeleteபப்ளிக்..பப்ளிக்..
ஏழாம் அறிவு
ReplyDeleteஇந்த பெயரில் தமிழ் உணர்வுகளைத் தூண்டி விட்டு பணமாக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்... அதனைவை அறியாமல் நாம் முட்டாள்களாக படத்தைப் பார்த்து புகழ்ந்து கொண்டிருக்கிறோம்..
போதிதர்மர் தமிழில் தமிழராகவும், தெலுங்கில் தெலுங்கராகவும், இந்தியில் பொதுவான இந்தியராகவும் மாறிவிட்டார்...
தமிழர்களுக்கு அவரைத் தெரியவில்லை என்று சாடும் முருகதாஸ், பிற மொழிகளிலும் அவரைத் தமிழராக காட்டி இருக்கலாமே? போதிதர்மர் மொழி மாற காரணம் என்ன?? (வசூல் தான்!)
அவர் தமிழரா இல்லைத் தெலுங்கரா??
விடை சொல்வாரா முருகதாஸ்?
அதே போல, தமிழ் பதிப்பில் "தமிழ்" "தமிழ்" என முழங்கும் வசனங்கள் பிற மொழி பதிப்புகளில் மொழி மாறுகிறன!! இது ஏனோ?
பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு... ஆனால், ஒரு மொழி/ சமூகத்தினரின் உணர்வுகளைத் தூண்டி விட்டு சம்பாதிக்க தான் வேண்டுமா??
(இதில் பேரனும் உடந்தை.. தமிழை இப்படித் தான் வாழ வைக்கிறார்கள்!)