Friday, December 23, 2011

கிறிஸ்மஸ் அன்று என் மகளுக்கும் பிறந்தநாள்....!!!

கிறிஸ்து பிறந்த இன்று
எங்களை மகிழ்விக்க வந்த 
எங்கள் செல்வமே.....


எங்கள் குல குத்துவிளக்காய் 
நீ பல்லாண்டு வாழ்ந்து
சுடர் விடவேண்டும்....


இன்பம் துன்பம் 
எதையும் மிகைபடுத்தாமல் 
நீ வாழவேண்டும்...


அநீதி கண்டால் நீ
ரௌத்திரம் கொண்டு
தீமையை வெல்லவேண்டும்...


அப்பா நான் உன்னை 
பிரிந்து ஏன் இங்கே தனிமையாக
வாழ்கிறேன் புரிந்து கொள்ளவேண்டும்...


குடும்பங்களை நட்புகளை
பேணி உன் தனித்தன்மையை 
இந்த உலகுக்கு காட்டவேண்டும்...


பெண் குழந்தை என்றால் 
முகம் சுளிக்கும் இவ்வுலகில் 
என் வீட்டிற்கு ஒளியேற்ற வந்தவளே....


நீ என்னை வாழ வைக்கும்
தீபச்சுடராய் என்றும்
என் நெஞ்சில் நிறைந்துள்ளாய்...


கோபச்சினுங்கள்களையும் 
அடம்பிடித்து விரும்பியதை
வாங்கிக்கொள்ளும் அதிகாரங்களையும்...


கண்டு கழிக்க 
நான் உன்னருகில் இல்லை
என்றாலும் என் உயிர் உன்னையே சார்ந்திருக்கும்...


வாழ்க வளமுடன் சுகமுடன்
எங்கள் குல குத்துவிளக்கே
சுடர் விடும் சுடராக.....!!!


டிஸ்கி : கிறிஸ்து பிறந்த இன்று என் மகளுக்கும் பிறந்தநாள்...!!!

56 comments:

  1. ரவுத்திரம் பழகச்சொன்ன மொத அப்பா நீதான்யா!!!

    :-)

    ReplyDelete
  2. அருமை...அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தங்கை பல்லாண்டு சந்தோஷத்துடன் வாழ வாழ்த்துகள்!!

    ReplyDelete
  4. சாண்டா க்ளாஸ் வேஷம் போட்டு சின்னப்பொண்ண பயமுறுத்தாதீங்க தல.

    ReplyDelete
  5. May the good Lord shower your daughter with many blessings on her special day

    ReplyDelete
  6. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  7. மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. மாப்ள பாப்பா பேரு என்னென்னு சொல்லவே இல்ல...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  9. பூக்களின் வித்து புன்னகையின் சொத்து , பெண்களுக்கெல்லாம் முத்து உலக அன்னையர்களுக்கு கொடுத்த தத்து உங்கள் தேவதை...!
    இதுவரை நிலவு ஓன்று என்றுதான் அறிந்து இருந்தேன் ஆனால் உங்கள் குழந்தையின் அழகான படத்தை பார்த்த பின் இரண்டு நிலவுகள் உள்ளன என அறிந்து கொண்டேன். அந்த நிலவை உங்களோடும் மற்ற நல்ல உள்ளங்களோடும் சேர்ந்து நானும் இந்த இனிய பிறந்த நாள் அன்று வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு என.

    ReplyDelete
  10. நம் வீட்டு குட்டி தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  11. மனோ...மற்றும் மனே அண்ணன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்,
    குட்டி பாப்பா...and ஜூனியர் மனோ சாருக்கும்....கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...குழந்தைக்கு பிறந்த நாள்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அன்பான குழந்தைக்கு எனது வாழ்த்துகள்..


    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் மனோ உங்க குட்டி செல்வத்துக்கு!....வாழ்த்துக்கள் கிறிஸ்த்துமஸ்!

    ReplyDelete
  14. தங்கள் மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...........

    ReplyDelete
  15. ஹாப்பி பர்த்டே டு யு
    ஹாப்பி பர்த்டே டு யு
    ஹாப்பி பர்த்டே டு யு
    குட்டி பாப்பா.
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  16. கவிதை
    கலக்கல்
    சூப்பரா இருக்கு மனோ அண்ணா

    ReplyDelete
  17. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. பூத்து வந்த புதுமலராய்
    புதுப்பொலிவு கொண்டாய் நீ!
    மிளிர்ந்துவரும் நட்சத்திரமோ
    தலை நாணி நின்னதம்மா!
    நங்கை உந்தன்
    பேரழகால் வெட்கமேகி
    தன்முகம் மறைத்ததம்மா!
    காவியங்கள் ஆயிரமும்
    விழிவாசல் நிற்குதம்மா
    ஏனென்று நான் கேட்டேன்??!!
    பிள்ளைத்தமிழ் பாடிடவே
    சந்தர்ப்பம் கேட்குதம்மா!!!!

    என்னருமை மருமகளுக்கு
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    நீடூழி வாழிய நீ!
    என் செல்வத் திருமகளே!!

    ReplyDelete
  19. செல்லக்குட்டி பாப்பாவுக்கு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் - உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. உங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் மனோ....

    கிறிஸ்துமஸ் வாழ்த்துகளும்....

    ReplyDelete
  21. உங்கள் செல்ல குட்டிப் பாப்பாவிற்க்கு

    மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி..

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள்.....
    என் இனிய பிறந்த நாள்
    வாழ்த்துக்கள் ....ஐ
    குழந்தைஇடம்
    சொல்லிவிடவும் ....

    ReplyDelete
  23. உங்கள் மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  24. பாப்பாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    தனிதன்மை பெற்று நீடூழி வாழ வாழ்த்தும்

    அன்பு அத்தை
    ஆமினா

    ReplyDelete
  25. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்து செல்லக்குட்டிக்கு.ரௌத்திரம் கொள்ளச் சொல்லி வீரமாய் வளர்க்கும் அப்பாவுக்குக்கூட என் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  26. தெய்வத்திருமகளா அண்ணே..? பொறாமை கலந்த வாழ்த்துக்கள்...:)))

    ReplyDelete
  27. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செல்லம்

    ReplyDelete
  28. many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many many
    happy returns of the day

    ReplyDelete
  29. என்னுடைய வாழ்த்துகள் புதிதாய் உங்கள் கவிதைக்கும்,உங்கள் குழந்தைக்கும்.

    ReplyDelete
  30. அண்ணே என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்க ....
    மகளுக்கு கவி படைத்தாய்
    கவிதை வரிகளில் இன்னும்
    பல கவிதைகள் வடித்து
    புதுக்கவி மனோ வாக
    வளம் வரம் வேண்டும் ....

    ReplyDelete
  31. தங்கள் குட்டிச் செல்லத்துக்கு
    இந்த அன்புத் தாத்தாவின்
    வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!
    வளர்க நலமுடன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. மருமகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை எங்கள் சார்பிலும் சொல்லிடுங்க அண்ணா.... ஹாப்பி கிறிஸ்துமஸ் அண்ணா....

    ReplyDelete
  33. கிறிஸ்து பிறந்த நன் நாளில் பிறந்து வந்த
    தங்கள் செல்வ மகள் எல்லா வளங்களையும்
    எல்லா நலங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக
    இன்றுபோல் என்றும் வாழ எல்லாம் வல்லவனை
    பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் மக்கா, உங்களுக்கும் உங்க செல்ல மகளுக்கும்...........!

    ReplyDelete
  35. அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  36. மக்கா,என்னால தம்பி பிறந்தநாளும் மறக்கமுடியாது ஏன்னா எனக்கு அன்னைக்கு பிறந்தநாள்.,தங்கச்சி பிறந்தநாளும் மறக்கமுடியாது உலக ரட்சகனின் பிறந்த தினத்தில் பிறந்ததால்,
    எனது வாழ்த்துகளையும் சொல்லிடுங்க.

    ReplyDelete
  37. சில வரிகளில் மனம் நெகிழ வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  38. கிரிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் மனோ... செல்லக்குட்டி தேவதைக்கு குழந்தைக்கு எல்லா சௌக்கியங்களும் நலனும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்று என்றும் பல்லாண்டு காலம் வாழ மஞ்சு அத்தையின் அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....

    குழந்தையின் சிரிப்பு மனதை நிறைக்குதுப்பா.....

    வாழ்வின் எல்லா சந்தோஷங்களும் குழந்தைகளுக்கு கிடைக்கட்டும்பா...

    ReplyDelete
  39. எல்லா நலனும் பெற்று நீண்ட நாள் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவான். உங்கள் வீட்டு தேவைதைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... மற்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  40. உங்கள் மகளுக்கு இந்த அண்ணாவின் பிறந்த நாள் வாழ்த்தையும் சொல்லிவிடுங்கோ
    ...

    ReplyDelete
  41. அப்பா நான் உன்னை
    பிரிந்து ஏன் இங்கே தனிமையாக
    வாழ்கிறேன் புரிந்து கொள்ளவேண்டும்...<<<<<<<<<<<<<<

    என்னை ரெம்ப தொட்ட வரிகள்...
    இதில் உங்களின் பிரிவின் வேதனை ஆழமாய் தெரியுது..
    படிக்கவே கஸ்ரமா இருக்கு பாஸ்...
    எல்லாம் கடந்து போகும்... நல்ல நாள் சீக்கிரம் வரும் பாஸ்...

    ReplyDelete
  42. மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் எனது
    கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க
    நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  43. அன்பு செல்ல குட்டிக்கு லண்டன் அத்தையின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  44. உங்கள் செல்ல மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வாழ்வில் எல்லா நலன்களும் இனிதாய் பெற்று நீங்கள் எண்ணிய வண்ணம் வளர்த்திட வ்ாழ்த்துகள்

    ReplyDelete
  45. அண்ணே, இப் பதிவிற்கான கமெண்டை உங்களின் நத்தார் பார்ட்டி பற்றிய புதிய பதிவில் போட்டு விட்டேன்!


    மீண்டும் வாழ்த்துகிறேன்!
    சுட்டியின் எதிர்காலம் வளமானதாக அமைய வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  46. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    அன்பு மகளுக்கு..

    ReplyDelete
  47. வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள், உங்கள் யாவருக்கும் என் வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!