முல்லைப்பெரியார் மேட்டர் விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையாக இருந்து கொண்டு, தீர்வு எட்டாமலே சோளியை உருட்டிட்டு இருக்கிறார்கள், இரு மாநில அரசியல்பேதிகளும், அவர்களுக்கு சத்தியமாக மக்கள் மீது கொஞ்சூண்டும் அக்கறை இல்லை என்பது நமக்கு நல்லாவே தெரிகிறது...!!!
மலையாளிகள் சொல்வது, முப்பது லட்சம் மக்களின் உயிர் பிரச்சினை என்று சொல்கிறார்கள், அணை சுண்ணாம்பால் கட்டப்பட்டிருப்பதால் அடுத்து அதன்மீது சிமென்ட் வேலை செய்யமுடியாது என வாதிடுகிறார்கள்...
அடுத்து, அணை பலமாக இருக்கும் பட்சத்தில் அதை உடைத்தால், நான்கு மாவட்டம் மக்கள் தண்ணீர் பஞ்சத்தால் சாவார்கள் என தமிழ் மக்கள் சொல்கிறார்கள், மன்மோகன்சிங் ஒரு செவிடன், சிங்கிடி'ன்னு நமக்கு நல்லாவே தெரியும் வீணாக இரு மாநில மக்களும் தங்களுக்குள் அடித்துகொண்டால் மாத்திரம் பிரச்சினை தீர்ந்துவிடுமா...?
வைகோ போராடினார் உணர்வை வெளிப்படுத்திவிட்டு உள்ளே போனார், மக்களை போலீஸ் அடித்து உதைத்து 144 தடை உத்தரவு போட்டுள்ளது, கேரளாவில் இடைத்தேர்தல் நடக்கயிருக்கிறது, இதையும் இரு மாநில மக்களும் மனதில் கொள்ளவேண்டும்.
சரி இப்பிடியே சண்டை போட்டுட்டே இருப்போமா...? அல்லது தீர்வு வேண்டுமா வேண்டாமா...? இப்போது மக்கள் மனதில் இருப்பது உயிர்பயம், அதை போக்க அல்லது சரியான தீர்வை சொல்ல, அதை ஏற்க என்ன செய்யலாம்..?
கேரளாக்காரன் அணையை சோதித்துவிட்டு அணை பாதுகாப்பானது அல்ல என்கிறான், தமிழ்நாட்டுக்காரன் சோதனை செய்துவிட்டு அணை பலமாக இருக்கிறது என்கிறான், மத்தியில் உள்ளவன் வந்து பார்த்துட்டும் அணை பலமாக இருக்கிறது என்கிறான்.
அரசியல்பேதிகளும் மக்களை குழப்புகிறார்கள், சினிமாக்காரனும் மக்களை பயங்காட்டுகிறான், அரசியல்வாதி கணக்கே வேற, சினிமாக்காரன் சம்பாதிச்சுட்டு போயிகிட்டே இருப்பான்...
சரி, கேரளாவுக்கு சொந்தமாக மின்சாரம் தயாரிக்கவேண்டும், அதற்காக புதிய அணை கட்டவேண்டும், [[அப்படியாவது அவர்கள் பயம் போகட்டும்]] நமக்கு தண்ணீர் வேண்டும், அதற்க்கு பரிகாரம்தான் என்ன...?
மலையாளியை தமிழன் நம்பபோவது கிடையாது, அது போலவே அவர்களும் நம்மை நம்பமாட்டார்கள் எனும் பட்சத்தில், என்னசெய்யலாம்னு யோசிச்சத்தில், என் அறிவுக்கு தோன்றியதை சொல்கிறேன்...
இந்தியாவில் உள்ள எல்லா மாநில நிபுணர்களையும் மாநிலத்துக்கு ஒருவர் என தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைக்க வேண்டும், அதில் ஒரு தமிழனோ, மலையாளியோ இடம்பெறல் கூடாது [[தமிழக, கேரளா நிபுணர்கள்]]
இவர்களை வைத்து அணையை சோதனை செய்யவேண்டும், அவர்கள் சொல்லும் தீர்ப்பை தமிழகமும், கேரளாவும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்னய்யா சரிதானே...? இப்பிடி அவன் நம்மை அடிக்க, நாம் அவனை அடிக்க விரோதம்தான் வளர்ந்துட்டு இருக்கும்...
காய்கறி விலையேற்றம் இப்பமே மலைபோல ஏறியாச்சு இனியும் கூடும் மட்டுமல்லாது, மளிகை சாமான்களுக்கு கடுமையான தட்டுப்பாடு என்று கொல்லம் மாவட்டம் நண்பன் சொன்னார்...சரி அது அங்கே, இங்கே நம்ம வியாபாரிங்க பாதிக்கபடுகிரார்களே...?
சரி அப்பிடியெல்லாம் ஏற்கமாட்டோம்னு சொன்னால், என்னுடைய பதில் அவனுக புதிய அணையை கட்டட்டும், நாம் எல்லா பொருட்களின் போக்குவரத்தை நிறுத்துவோம், சண்டை போடவேண்டாம் உள்ளூர் வியாபாரிகள், காய்கறி பொருட்களை தமிழ்நாட்டில் இருந்தே இம்போர்ட் செய்யுங்கள்...
ஏனெனில் காய்கறி முதற்கொண்டு கறிவேப்பிலை வரை, தமிழ்நாட்டில் இருந்து கேரளா போயி, அங்கிருந்துதான் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, எனவே உள்ளூர் வியாபாரிகள் இம்போர்ட் எக்ஸ்போர்ட்டில் ஈடுபடலாம்....
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை நம்பி அஞ்சி பைசா பிரயோஜனம் கிடையாது, அது செவிடன் காதில் சங்குதான், காரணம் கேரளாவில் நடக்கப்போகும் தேர்தல், தமிழகத்துக்கு ஆதரவாக பேசினால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது. அரசியல்......அரசியல்....!!!
தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு மாற்று வழியை தேடுவோம், என்னய்யா நாம மலையாளியை நம்பியா வாழுறோம் அவங்கதான் நம்மை நம்பி வாழுகிறார்கள்...!!! நம்மிடத்தில் நிபுணர்கள் இல்லையா என்ன...?
எடா யப்பா மனசுல கலங்கமில்லாமல் இரு மாநில மக்களுக்கும் உபயோகமா இருக்குமேன்னு தன் சொந்த செலவுல அணையை கட்டுன அந்த மாமனிதன் உயிரோடு இருந்துருந்தா, இந்த அரசியல்பேதிகளையும், சினிமாபேதிகளையும் காறி துப்பி இருப்பார்....!!!
டிஸ்கி : இனி மலையாளியும், தமிழனும் சேர்ந்து சொல்லுங்க "ஜெய்ஹிந்த்" [[வெளங்கிரும்]]
மனோ"தத்துவம் : நீ நூருபேருக்கு மொய் வைத்தால் உனக்கு பத்துபேர்தான் திருப்பி மொய் வைப்பான்...!!!
ஒரு செவுத்துக்கிட்ட சொன்னாக்கூட எதிரொலிக்கும் ஆனா...கரெக்ட் சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே!
ReplyDeleteஉங்க யோசனையெல்லாம் நல்லாருக்கு,பரிசீலனை பண்ணினா பரவால்ல.
ReplyDeleteநானும் ஜெய்கிந்த் சொல்லுறேன் விளங்குதா பாப்போம்.
ReplyDeleteதொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
ReplyDeleteவாழ்த்துக்களுடன்
மனோ சார் பேசமா நீங்க பஹைரைனில் இருந்து திரும்பி வந்து பேசாம சட்டம் படித்து மத்திய அரசாங்கத்தில் சட்ட ஆலோசகரக ஆகிவிடுங்கள் சார் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடும்( இந்த ஆலோசனை நான் சொன்னதற்க்காக தனியாக எனக்கு சைடுல நீங்க சம்பாதித்ததுல ஒரு பங்கு கொடுத்துடுங்க சார்)
ReplyDeleteஆலோசனைகள் எல்லாம் அசத்தலாத்தான் இருக்கு.. பொருட்களின் போக்குவரத்தை மொத்தமா கட் பண்ணிவிட்டா எல்லாமே அடங்கீருவாங்கள்
ReplyDeleteMano....
ReplyDeleteI.Na sabaikku pogavendiya aalu....
Thavaruthala engeyo poittar
நீங்க சொல்றதும் நல்ல தீர்வுதான் ...
ReplyDeleteஇங்க தான் மானங்கெட்ட அரசியல் பொறுக்கிகள் திரியாருனுவோ...
என்னத்தை பண்றது அண்ணே .. நேற்று ஒரு பேச்சு இன்னைக்கு ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு ..
இப்படி அன்னைய பொறம்போக்கு அரசியல நடத்திட்டுத்தான் போறானுங்க ..
நிரந்தர தீர்வு என்னைக்கு வருவது என்னைக்கு மக்கள் பிரச்சினை தீரப்போவுது ...
விரைவில் பண்டிகை எல்லாம் வருது.. இந்த நேரத்துல இப்படி இருந்தா எத்தனை வீட்ல பண்டிகை கொண்டாடுவாயிங்க....
வெளங்கிடும் ...
நல்ல பதிவுக்கு நன்றிங்க அண்ணே
My comment may be in spam...
ReplyDeletecheck out
விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்...
ReplyDeleteவாசிக்க:
முல்லைப்பெரியாருக்கு ஆதரவாக மதுரையில் கடைகள் முழுஅடைப்பு, ஆட்டோக்கள் ஓடவில்லை.
ஆலோசனைகள் அருமை பாஸ் ஆனால் அதை செயற்படுத்துவார்களா என்ன?
ReplyDeleteபாவம் மக்கள்
////எடா யப்பா மனசுல கலங்கமில்லாமல் இரு மாநில மக்களுக்கும் உபயோகமா இருக்குமேன்னு தன் சொந்த செலவுல அணையை கட்டுன அந்த மாமனிதன் உயிரோடு இருந்துருந்தா, இந்த அரசியல்பேதிகளையும், சினிமாபேதிகளையும் காறி துப்பி இருப்பார்....!!!////
ReplyDeleteநிச்சயம் செய்திருப்பார் எங்கோ ஒரு தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அப்போது இருந்த அக்கறையில் ஒரு துளிகூட
இப்ப இருப்பவர்களுக்கு சொந்த நாட்டுமக்களிடமே இல்லை என்பது கவலைக்குறிய விடயம்
படங்களுடன் அருமையான விளக்கம் மக்கா...
ReplyDeleteபடங்கள் பிரமாதம்..
ReplyDeleteடிஸ்கி:
: இனி மலையாளியும், தமிழனும் சேர்ந்து சொல்லுங்க "ஜெய்ஹிந்த்" [வெளங்கிரும்]
டாப்பு..
அன்போடு அழைக்கிறேன்..
இறப்பதை எதிர்பார்க்கிறோம்
good post thambi
ReplyDeleteநீங்க சொல்ற ஐடியாவெல்லாம் நல்லாஇருக்கு...
ReplyDeleteஆனா எவன் காதுல வாங்கபோறான்....
இருதரப்பிலும் பாதிக்கப்படுவது மக்கள்தான் இதில் ஒன்றும் சந்தேகம் இல்லை...
டேய் அண்ணா.. ரொம்ப நல்ல பதிவு இது...
உண்மையான அலசல்
ReplyDeleteஎன்ன சொல்வது
எப்படி நாமலும் புலம்பிட்டே இருக்க வேண்டியதுதானா மனோ அண்ணா
பாருப்பா...என்ன ஒரு தெளிவு..பய புள்ள அரசியல் அச்சாணி போல தெரியுதே!
ReplyDeleteஆனாலும் கடைசில சொல்லி இருக்க பாரு..நீ நூறு பதிவுக்கு போனாலும் உனக்கு இம்புட்டு தான் ஹிஹி!
நல்ல யோசனைதான் மனோ!
ReplyDelete(கடைசியில் பதிவுலகின் எழுதப்படாத விதியோடு முடிச்சிட்டீங்க!)
வாழ்த்துகள் மனோ.
ReplyDeleteநல்லா தான் இருக்கு சொல்றது, ஆனா இதெல்லாம் நடக்குமா?
ReplyDeleteநான் மொய் வச்சுட்டேன் என் id jobonline or Thenmozhi னு இருக்கும். உங்களுக்கு மொய் வைக்காம வேற என்ன வேலை?
வணக்கம் மனோ அண்ணா.
ReplyDeleteநலம்தானா?
நீங்கள் சொல்லும் ஜோசனை நல்லது தான் ஆனால் இன்றைய விவசாயிகளும் விற்பனையாளர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் தற்போதைய நிலையில் மத்திய அரசு தூங்குவது வேதனைதான்!
மனோ தத்துவம் 100% உண்மை அண்ணாச்சி நானும் உனர்ந்து கொண்டது!ஹீ ஹீ
ReplyDeleteஉங்கள் ஆலோசனை உரியவர்களைச் சேர்ந்தால் நானும் சந்தோஸப்படுவேன்!
ReplyDeleteமலையாளியும், தமிழனும் சேர்ந்து சொல்லுங்க "ஜெய்ஹிந்த்" /// இப்படி சொன்னா இந்த பிரச்சனையே வந்திருக்காதே...
ReplyDeleteசொன்னா நல்லா இருக்கும் மக்கா...
// மன்மோகன்சிங் ஒரு செவிடன், சிங்கிடி'ன்னு நமக்கு நல்லாவே தெரியும் வீணாக இரு மாநில மக்களும் தங்களுக்குள் அடித்துகொண்டால் மாத்திரம் பிரச்சினை தீர்ந்துவிடுமா...?
ReplyDelete//
இது செவிடன் காதில் உதிய சங்கு தான்
செத்தபின் மருத்துவம் பார்க்கும் வைத்தியர் நம்ம மன்மோகன் சிங்
ReplyDeleteபடித்து கருத்துகளை சொல்லுங்கள்
ReplyDelete2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?
படைப்பு அருமை!..மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
ReplyDeleteநல்ல யோசனை தான் நண்பரே அருமை
ReplyDeleteமனோ"தத்துவம் : நீ நூருபேருக்கு மொய் வைத்தால் உனக்கு பத்துபேர்தான் திருப்பி மொய் வைப்பான்...!!!
ReplyDeleteஇது என்னவோ அனுபவ (வேதனையான )உண்மைதான் நண்பரே
செவிட்டு பய சிங்கு இருக்குற வரைக்கும் வெளங்காது அண்ணே...
ReplyDeleteஅங்க படிக்கிற நம்ம பயகள அடிக்கிறாய்ங்கலாம்.. ஆனா நம்ம கூட படிக்கிற மலையாள பக்கிக மேல கோவமே வரல..அவிங்களுக்கும் நம்மளுக்கும் வித்தியாசம் இருக்குண்ணே...நாம நல்லவைங்க...
நல்ல யோசனைதான்.... கேட்டாத்தானே....
ReplyDeleteஇந்த பிரச்சினைய வைகோ மட்டுமே உணர்வுப்பூர்வமாக உண்மையான அக்கறையுடன் அணுகுவதாக தெரிகிறது. மற்றவர்களெல்லாம் வெறும் அரசியல்தான் செய்வதாக நினைக்கிறேன்
ReplyDeleteஆலோசனை நல்லாதான் இருக்கு ..ஆனா இதெல்லாம் செவிடன் காதுல சங்கு ஊதின கதைதான்...
ReplyDeleteஆலோசனை அருமை... படங்கள் நல்ல தேர்வு மனோ சார்
ReplyDeleteநல்ல யோசனைகள்தான் பாஸ்... ஆனால் நடைமுறைக்கு வரணுமே... :(
ReplyDeleteஎடா யப்பா மனசுல கலங்கமில்லாமல் இரு மாநில மக்களுக்கும் உபயோகமா இருக்குமேன்னு தன் சொந்த செலவுல அணையை கட்டுன அந்த மாமனிதன் உயிரோடு இருந்துருந்தா, இந்த அரசியல்பேதிகளையும், சினிமாபேதிகளையும் காறி துப்பி இருப்பார்....!!!<<<<<<<<<<<<<<<<<<
ReplyDeleteஎத்தனை உண்மை :(((((
இந்த பிரச்சனையை பதிவுகள் மூலம் தொடர்ந்து பேசுறீங்க....சூப்பர் பாஸ் ... ரியலி கிரேட்
ReplyDeleteதலையிலிருந்து கால் வரை
ReplyDeleteஅத்தனை பொருட்களுக்கும் நம் தமிழ்நாட்டை
நம்பி இருப்பவர்கள்..
ஏனிந்த முரட்டு பிடிவாதம் கொள்கிறார்கள்....
நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...
நீங்க சொல்லுறது சரிதான் யார் கேட்கிறது....அடிச்சிகிட்டாத்தானே ஒரு டெம்ப் இருக்கும்...
ReplyDeleteவணக்கம் அண்ணே,
ReplyDeleteமனோ தத்துவம் மூலமா நம்ம மனசை உடைத்து விட்டீர்களே....
அணைக்கட்டுப் பிரச்சினையினை எளிய முறையில் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன் வைத்திருக்கிறீங்க.
ReplyDeleteநம்ம அரசியல்வாதிகள் உணர்ந்து செயற்பட்டால் எல்லாம் நன்மையில் முடியும் அல்லவா?