Thursday, January 5, 2012

நாட்டு நடப்புகள்...!!!

லோக்பால் விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பார்லி.,யில் நாடகம் நடத்தி மசோதா நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது என்றும் இந்த விஷயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மகஜர் ஒன்றை பா.,ஜ., எம்.பி.,க்கள் குழுவினர் இன்று பிரதீபா பாட்டிலிடம் வழங்கினர். 



[[ ஜனாதிபதி அவிங்க ஆளுன்னு தெரிஞ்சும் வலியபோயி கொடுப்பதை நாடகம்னு சொல்லலாம்தானே...?]]

நில அபகரிப்பு புகார் தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள தி.மு.க., பொருளாளர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் அளித்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக உதயநிதி, சைதாப்பேட்டை கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


[[ கனிமொழி செய்ததை விடவா கூடுதல் செய்துட்டார் விடுங்க மைலார்ட், அப்பிடியே நிலத்தை திருப்பி கொடுத்தாலும், இவிங்க ஆட்சியில திரும்பவும் வேதாளம் முருங்கை கதைதான் ஹி ஹி ]]

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 18 ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி 30ம் தேதி கவர்னர் உரையுடன் கூட்டம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


[[ மாற்றம் ஒன்றே மாற்றமே இல்லாதது இது அம்மாவுக்கு சாலப்பொருந்தும் விடுங்க வழியை ]]

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி, தமிழக - கேரள கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கேரள அரசு தயாராக உள்ளது' என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 


[[ சுற்றி சுற்றி மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறியே சேட்டா கொஞ்சம் அடங்கி கீழே இறங்கி வாங்க ]]

ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்து துவக்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.


[[ ஏற்கனவே வாங்கி கட்டினது போதாதுன்னு மறுபடியும் திருவாய் மலர்ந்துள்ளார் ஹி ஹி நீங்க காமெடி பீசானது ரொம்ப வருத்தமா இருக்குங்க...!!!]]

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரபல தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அனில் அம்பானி, ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் ஆகியோர் ராஜாவை தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் சந்தித்தனர் என்று ஆசிர்வாதம் ஆச்சாரி 
சாட்சியம் அளித்தார்.


[[ ஆஹா "கனி" கைவிட்டது போதாதுன்னு, இவரும் கைவிட்டுட்டாரே, ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்களோ அவ்வ்வ்வ்வ்வ் ]]

உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது,'' என, கடலூரில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். "தானே' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: "தானே' புயலால், கடலூர் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக நிவாரண உதவிகளை செய்வதற்கு, அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், வீடுகள், சாலை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க, 850 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆகவே, பயிர், படகுகள், குடியிருந்த வீடுகளை இழந்திருந்தாலும், எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய, உங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, இந்த அரசு இருக்கிறது. 


[[ அருமையான உதவி நன்றிகள், அப்பிடியே உதவி தொகை சரியா மக்கள்கிட்டே போயி சேருதான்னும் வாட்ச் பண்ணுங்க, அப்புறம் இந்த விலைவாசியை கொஞ்சம்.............அங்கே என்ன சத்தம்...? ஒன்னும் இல்லை அம்மா சும்மா பேசிட்டு இருக்கோம் ]]

புதுச்சேரி, கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், 96 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன,'' என நித்தியானந்தா தெரிவித்தார். 


[[ ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை பட்ட மாதிரி இருக்கே, மனசுக்கு மனோரஞ்சிதமா இருக்கே ஹி ஹி ]]

நடிகை நமீதா தற்போது மும்பையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம்.


[[சிபி தற்கொலை முயற்சி, விக்கியால் காப்பாற்றபட்டு ரூம் போட்டு சோமபானம் குடுத்து, நாஞ்சில்மனோ'வின் ஹோட்டலில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளான் - செய்தி ]]



[[ ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ, கொய்யால இதெல்லாம் ஒரு பொழப்பு போங்கடாங்கோ...!!!]]

இந்திய அமைச்சர் மட்டும் அல்ல; அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கை வந்து கூறினாலும் அதிகாரப் பகிர்வு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.


[[ அங்கேயும் ஒரு கருணாநிதியா ச்சே ச்சீ கலாநிதியா கொய்யால ]]

சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம், பாதியாகக் குறைக்கப்பட உள்ளது. சம்பளம் குறைக்கப்பட்டாலும் அவர்கள் தான் உலகில் அதிகளவில் சம்பளம் வாங்கும் அரசியல்வாதிகளாக உள்ளனர். அந்நாட்டு பிரதமர் லீ செயின் லூங், ஆண்டுக்கு 23 லட்சம் டாலர் சம்பளம் பெறுகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா ஆண்டுக்கு வெறும் 4 லட்சம் டாலர் மட்டும் தான் சம்பளம் வாங்குகிறார்.


[[ அதான் நம்ம அரசியல்பேதிங்க இப்பிடி அநியாயம் பண்ணுரானுகளோ...???]]

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் அவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பினர்.


[[ அட ஆச்சர்யமா இருக்கு, உலக வரலாற்றில் முதன்முறையாக கல்வீசி தாக்குதல் நடத்திய "ராணுவம்....!!!!" ]]

31 comments:

  1. /ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரபல தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அனில் அம்பானி, ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் ஆகியோர் ராஜாவை தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் சந்தித்தனர் என்று ஆசிர்வாதம் ஆச்சாரி
    சாட்சியம் அளித்தார்.
    //

    தொலைதொடர்பில் நெருங்கிய தொடர்பு ...

    ReplyDelete
  2. நான் தான் முதல் ரசிகனா ?

    ReplyDelete
  3. @"என் ராஜபாட்டை"- ராஜா

    நாடு உருப்படுமா நாசமா போறவனுக...!!!

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அண்ணே நீங்க பேப்பர் ரெகுலரா படிக்கறீங்க ஒத்துக்கர்ரேன்..அதுக்காக சிபிய போய் சோம பானம் குடிச்சான்னு சொல்லி புட்டீங்களே...வேணும்னா பாம்பு பானம் கொடுத்திடுவோம் என்ன நாஞ் சொல்ரது ஹிஹி!

    ReplyDelete
  6. விக்கியுலகம் said...
    அண்ணே நீங்க பேப்பர் ரெகுலரா படிக்கறீங்க ஒத்துக்கர்ரேன்..அதுக்காக சிபிய போய் சோம பானம் குடிச்சான்னு சொல்லி புட்டீங்களே...வேணும்னா பாம்பு பானம் கொடுத்திடுவோம் என்ன நாஞ் சொல்ரது ஹிஹி!//

    டேய் அவனே நமீதா கைவிட்டு போன டென்ஷன்ல இருக்கான் நீ வேற, பாவம் வோட்கா'வுல ரெட்புல் ஊத்தி கொடுப்போம் கொஞ்சம் தெம்பா இருக்கட்டும் ஹி ஹி...

    ReplyDelete
  7. யோவ்! நமிதா காதலிக்கிற வக்கீலு இது உனக்கே நியாயமா...?

    By

    கில்மாராணி நமீதா ரசிகர் மன்றம்

    தலைவர் சிபி

    செயலாளர் சிபி

    பொருளாளர் சிபி

    மன்றத்திக்கு அரபிகாரனுக்கு தெரியாம சோமபானம் வழங்கிய
    மனோவுக்கு நன்றி!நன்றி!நன்றி!

    ReplyDelete
  8. பாஸ் தொகுப்புக்கள் அருமை அதுக்கு நீங்க அடித்திருக்கும் கமண்ஸ் அருமையிலும் அருமை

    நமீதா வக்கீல லவ்பண்ணினா என்ன பண்ணாட்டி என்ன நமக்கு நமீதாவின் அது பார்த்தால் போது அதாவது அவங்க மச்சான்ஸ் என்று சொல்வதை பார்த்தால் போதும் அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. இன்றை நாட்டு நடப்பு..
    செய்திகளை தொகுத்து கொடுத்தது..

    உங்கள் மனோ.. மனோ...

    ReplyDelete
  10. செய்தியை விடுங்க.கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்!

    ReplyDelete
  11. Mano.....
    Neenga kalakkunga....
    Aanaa
    NAMI
    matter than.....
    He....he

    ReplyDelete
  12. //[[ ஜனாதிபதி அவிங்க ஆளுன்னு தெரிஞ்சும் வலியபோயி கொடுப்பதை நாடகம்னு சொல்லலாம்தானே...?]]//

    சொல்லலாம் சொல்லலாம்

    ReplyDelete
  13. நாட்டு நடப்புகளை தொகுத்து வழங்கியதற்கு நன்றி..

    ReplyDelete
  14. //நில அபகரிப்பு புகார் தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள தி.மு.க., பொருளாளர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் அளித்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக உதயநிதி, சைதாப்பேட்டை கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.//

    பேசாம ஒருனால் ஜெயிலுக்கு போயிட்டு வந்தா பாராட்டு விழா எடுத்து அரசியல்வியாதி சே, அரசியல்வாதி ஆகிராமில்ல.......

    ReplyDelete
  15. //[[ மாற்றம் ஒன்றே மாற்றமே இல்லாதது இது அம்மாவுக்கு சாலப்பொருந்தும் விடுங்க வழியை ]]//

    அம்மா வழி தனி வழி.......

    ReplyDelete
  16. //[[ சுற்றி சுற்றி மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறியே சேட்டா கொஞ்சம் அடங்கி கீழே இறங்கி வாங்க ]]//

    அவனுகளும் அரசியல் பன்னனுமில்ல அண்ணே..........

    ReplyDelete
  17. //[[ அருமையான உதவி நன்றிகள், அப்பிடியே உதவி தொகை சரியா மக்கள்கிட்டே போயி சேருதான்னும் வாட்ச் பண்ணுங்க, அப்புறம் இந்த விலைவாசியை கொஞ்சம்.............அங்கே என்ன சத்தம்...? ஒன்னும் இல்லை அம்மா சும்மா பேசிட்டு இருக்கோம் ]]//

    அதானே , அம்மா முன்னாடி என்ன சத்தம்..........

    ReplyDelete
  18. //நடிகை நமீதா தற்போது மும்பையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம்.//

    விவாகரத்து வாங்க வேர பக்கம் போகத்தேவையில்லையே...

    ReplyDelete
  19. மக்கா நாட்டு நடப்பு அறிந்து கொண்டேன்....

    ReplyDelete
  20. மக்களே,
    நமிதா தீவிரமா காதலிக்கிறாரா
    இல்ல
    தீவிரவாதமா காதலிக்கிறாரா.....????

    ReplyDelete
  21. நாட்டு நடப்புகள் சும்மா நச்சுன்னு உங்க கமெண்ட்ஸ்
    சேர்த்து கலக்கலா இருக்குது மக்களே...

    ReplyDelete
  22. //
    கவர்ச்சிக்கு ஒத்தாசையாக இருக்காரு என் கணவர்! - ஸ்வேதா மேனன்


    [[ ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ, கொய்யால இதெல்லாம் ஒரு பொழப்பு போங்கடாங்கோ...!!!]]//

    பேசாம அவங்கள "தொழில்" செய்யவிடுங்க பாஸ்

    ReplyDelete
  23. நாட்டு நடப்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  24. நாட்டு நடப்பை ஒரு பதிவிலேயே சொல்லீட்டிங்க மனோ அண்ணே...

    அம்மாவ வாரினதுதான் எனக்கு புடிக்கல்ல... (நாம அம்மா கட்சி ஆக்கும் :)

    மனோ அண்ணே. மெயிலுக்கு தேங்க்ஸ்... ரெம்ப............................................... :)

    ReplyDelete
  25. செய்திகளும் அதற்கான பின்னுரைகளும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. பேப்பர்ல சிபி நியூஸ்ம் வருதா?

    ReplyDelete
  27. மனோ,
    கலக்கி விட்டீர்கள்.
    இந்தியா, இலங்கை, சிங்கபூர் - ன்னு
    புகழ் பெற்ற செய்திகளைத் தொகுத்தது அழகு..

    ReplyDelete
  28. காக்டெயில் மிக்ஸிங்க்லாம் இன்னிக்கு சரியா இருக்கு போல

    ReplyDelete
  29. நாட்டு நடப்பு எல்லாம் விவகாரமாத்தான் இருக்கு. உங்க நக்கல் கமெண்ட் அனைத்தும் அருமை.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!