ஆர்ப்பரிக்கும் ஆழி அலை போல
அந்த ஒற்றை பனை மரத்தை சுற்றி...
அதுவும் உன்னோடு
ஏன் "எரிந்து" போகவில்லை
நம் காதலுக்கு சாட்சி சொல்ல
நீ விட்டு போனாயா...
ஓங்கி அடிக்கும் உன் நினைவுகளை
பகிர்ந்து கொள்ள எனக்காக நீ.....
விட்டு சென்ற அந்த ஒற்றை பனை மரத்தை
காலம் இன்னும் அழிக்கவில்லையடி
என் மனதில் உள்ள காயம் போல....
இன்று என் பிள்ளைகளுக்கும் தெரியும்
அந்த ஒற்றை பனை மரத்தை....
அதை கடக்கும் போதெல்லாம் என்
மகள் சத்தமாகவே சொல்கிறாள்
இது என் டாடியின் முன்னாள்
காதலி வாழ்ந்த இடமென்று.....!!!
அக்கணம் பொங்கும் உன் நினைவு
கண்ணீராய் வெளி கொண்டு
வர முடியவில்லை....
காரணம் நான் அழக்கூடாது என
நீ வாங்கி கொண்ட சத்தியம்....!!!!!!!!
உனக்காக கண்ணீரை உள்வாங்கும் காதலன், பனிரெண்டு வருஷம் கழித்தும் மறுபடியும் சொல்கிறேன் என் தேவதையே, என் கண்ணில் கண்ணீர் வெளியே வராது உனக்காக.......!!!!
என் இதயம் உன்னை இன்று தேடுகிறது வா.........
நீ ஒரு சுயநலவாதியாடி....?
என் இதயம் உன்னை இன்று தேடுகிறது வா.........
நீ ஒரு சுயநலவாதியாடி....?
நம் காதலுக்காக
உன்னை மட்டும் எரித்து
என்னை கொன்றாய்....?!!!
அந்த சத்தியத்தை
திரும்ப வாங்குடி
அழமுடியாமல்
நெஞ்சு முட்டுகிறது...!!!
தினம் நீ வரும்
கனவிலாவது
அதை வாபஸ் வாங்கு
மனசு நாள் முழுவதும் எரிகிறது உன் நினைவில்...!!!
வலைபூ மாறி வந்துவிட்ட ஒரு பீலிங், அழ மாட்டேன் என்று கூறி எங்களை அழ வைத்து விட்டீர்கள் மனோ
ReplyDeleteமுதல் கண்ணீர்
ReplyDeleteஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...
ReplyDeleteஎல்லோர் மனதிலும் ஒளிந்திருக்கும் ஆட்டோகிராப்....
எனக்கு போட்டியா கவிதை..
ReplyDeleteஅப்ப நான் என்ன போடுறது...
அண்ணே அழாதீங்க நாங்க இருக்கோம்...ஹூம் ஹூம்!
ReplyDeleteநல்ல கவிதை...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாதலி சொல் மிக்க மந்திரம் இல்லை...
ReplyDeleteகாதலுக்கு இருக்கும் தைரியம் வேறெதுக்கும் இல்லை....
காலைப்பனிப்போல் விலகிச் செல்ல
காதல் என்ன ஒன்றும் அவ்வளவு எளிதல்ல.....
கவிதையில இறங்கி விட்டீர்களோ
ReplyDeleteசூப்பர் கவிதை
எனக்கு தெரியாது.நண்பா ஆனால் எனக்கு நண்பர் ஆஷிக் அஹமத்சொல்லி தந்தார்
ReplyDeleteவோட் எண்ணுக்கு கீழே உள்ள "இன்டலி" என்ற எழுத்தின் மீது சுட்டுங்கள். உங்கள் username, password கேட்கும். கொடுங்கள்..அவ்வளவுதான், உங்கள் ஒட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்.
"இன்டலி" என்ற எழுத்தின் மீது சுட்டினாலே உங்கள் வோட்டு பதிவு செய்யப்பட்டு விடும்,
நன்றி,
டோன்ட் ஒர்ரி'ய்யா இதுவும் கடந்து போகும்...
ReplyDeleteஉன் நெஞ்சம் படும் வேதனை புரியுதுய்யா...!!!
ReplyDeleteஆட்டோகிராப் கண்ணீர்....!!!
ReplyDeleteஎன்னடே இன்னைக்கு சோகம் பிளியுது, நேற்றைக்கு அமெரிக்கா'காரி ஃபீலிங் பண்ணிவிட்டதின் அட்டாக்காடா இது, கொன்னேபுடுவேன் மரியாதையா டுட்டியை பாரு, எத்தியோப்பியா'காரியை அனுப்பி இருக்கேன் சால்வ் பண்ணு.....
ReplyDeleteநேற்று அமெரிக்கா.....அமெரிக்கா சத்தம் ஊரே கேட்டுச்சு ராஸ்கல், விளங்குவே நீ, ஸ்ஸ்ஸ் முடியல, எப்பிடிப்பா உன்னால இப்பிடியெல்லாம் முடியுது அவ்வவ்...
ReplyDeleteகருமாந்திரம் பிடிச்சவனே குளிச்சியாடா...?
ReplyDeleteஅமெரிக்கன் மணம் ச்சே....
ReplyDeleteஎன்ன தலைவா....
ReplyDeleteபோட்டு தாக்குரிங்க ??
ம் ...
ReplyDeleteநேசித்தவர்களை பிரிந்திருப்பதென்பது மிக துன்பகரமானது தான் ...மனோ மாஸ்டரின் ஆசை நிறைவேற வாழ்த்துகள் ...
ReplyDeleteபிரிவின் துயரம்
ReplyDeleteபுரியுது எனக்கு.
அரிதான கவிதை
ஆறுதல் உமக்கு.
பிரிவின் வலியை விட
ReplyDeleteபிரிந்து போன உயிரின்
நினைவு தரும் வலிகள் கொடுமை தான்..ஆனாலும் ஆற்றுதல் வேண்டுகிறோம்....
//நீ ஒரு சுயநலவாதியாடி....?
ReplyDeleteநம் காதலுக்காக
உன்னை மட்டும் எரித்து
என்னை கொன்றாய்....?!!!//
இந்த வரிகள் செமையா இருக்கு தோழரே
தீட்டிய வரிகளில்
உதிர்ந்து விழுகிறது
பிரிவின் வலிகள்
கவித...கவித...சூப்பர் தம்பி!!
ReplyDeleteபிரிவின் வலிகள்
ReplyDeleteமக்கா!
ReplyDeleteஎனக்கு எதுவும் சொல்லத்தோனல!
வலி!
காதல்
ReplyDeleteபிரிந்தாலும்
மனதில் வாழும்
காதல்
என்றும் மறையா
காதல்
வேதனை
தீரா
வேதனை
கலங்கிய கண்களுடன்
செந்தமிழ் கவிதை-துயர்
ReplyDeleteசிந்திய வரிகள்
சிந்தனை மொழிகள்-நீர்
சிந்திய விழிகள்
நொந்தது போதும்-மனோ
நுவன்றிட பேதம்
வந்ததா இடையில்-மரணம்
வந்திட தடையில்
புலவர் சா இராமாநுசம்
-
அந்த சத்தியத்தை
ReplyDeleteதிரும்ப வாங்குடி
அழமுடியாமல்
நெஞ்சு முட்டுகிறது...//
அழ வைத்த வரிகள்
This comment has been removed by the author.
ReplyDeleteஅண்ணே...... நைட்டு உக்காந்து கொசுவத்தி சுத்தீட்டீங்க போல?
ReplyDeleteவணக்கம் மனோ உங்களிடம் இருந்து இப்படி ஒரு கவிதையை எதிர்பார்கவில்லை ம்..........!!! எல்லோருக்கும் இன்னுமோர் பக்கம் இருக்கும்போல...!! மனதை கனக்க வைத்த பதிவு..
ReplyDeleteகவிதை நன்றாக இருக்கிறது.. காதலின் தோல்வியில் தான் அழகான கவிதைகள் பிறக்கின்றன. அப்ப வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்று நினைக்கிறீர்களா? இந்த மாதிரி சோக கவிதைகளை படித்து ரசித்து விட்டு அதற்கு இப்படி கமெண்ட்ஸ் போடுவோமல..
ReplyDeleteதை எங்க வீட்டுகாரம்மாவிடம் போட்டு கொடுத்து விடாதிங்க அப்பறம் வலைப்பக்கம் வர முடியாது.
காதல் வலி இங்கே கண்ணீர்க கவிதையாய்...
ReplyDelete:(!
ReplyDeleteகாதலின் தடமாக, தோல்வியின் நினைவாக இருக்கும் ஒற்றைப் பனை மரத்தடி நினைவுகளைச் சுமந்தபடி கவிதை நகர்ந்திருக்கிறது.
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்தியிருக்கலாம்.