Friday, May 25, 2012

கன்னியாகுமரியின் அதிசயம்....!!!

வாரவனையும் வரவிடமாவிடமாட்டேங்குறான் இவனும் வரமாட்டேங்குறான், போறவனையும் போகவிடமாட்டேங்குறான் இவனும் போகமாட்டேங்குறான் என்னடா உலகம் இது.....????!!!

சரி, நாம பத்னாபபுரம் அரண்மனையை சுற்றி பார்ப்போம் வாருங்கள்.....!!

 ராஜாவை கொலை செய்ய எத்தனிக்கும் எத்தர்களின் வரைபடத்தில் என் நிழலும் தெரியவைத்து வரலாற்றில் இடம் பெற செய்த விஜயனுக்கு நன்றிகள்...

 மார்த்தாண்ட வர்மா குளிக்கபோகும் தங்கத்தால் ஆன கிணறு......[[இவைகள் அங்கே வரைந்து வைத்திருக்கும் சித்திரங்கள் அழகோ அழகு....!!!


 எல்லாம் மரத்தால் ஆன படிகள்..............[[விஜயன் மகன் அர்ஜூன்]]

 அரண்மனையை கட்டும் போது வாஸ்து எல்லாம் பார்த்து கூடவே இருந்து கவனிக்கும் ராஜா மார்த்தாண்ட வர்மா.....!!! [[விஜயன் இவரை பார்த்துட்டு மந்திரவாதி'ன்னு சொல்லவே இல்லை ஹி ஹி]]

 அரமனை உள்ளடி கதவு....!!! [[டேய் நான்தாண்டா மகாராஜா எங்கப்பன் வெறும் கூஜா - அர்ஜூன்]]

 எல்லாம் மரத்தால் செய்யப்பட்டவை முன்னூற்றி அம்பது வருஷமா அப்பிடியே இருக்குய்யா.....!!!

 சுண்ணாம்பு, கருப்பட்டி, முட்டைகளால் கட்டப்பட்ட தளங்கள், சுவர்கள்....!!! கொஞ்சம் உடைந்து இருந்ததை நான் போட்டோ எடுக்க சொல்லி விஜயன் எடுத்த போட்டோ.


 என் மகன் தோளை விட்டு இறங்கவே மாட்டேன்னு அடம்பிடிக்கும் மோனிஷா குட்டி, விஜயனின் தங்கச்சி மகன் அஸ்வின்.

 மகாராஜாக்கள், மகாராணிகள் தங்கும் அறைகள் மிக சிறியதாகவே இருக்கிறது இங்கே, ஆனால் வெளிநாட்டவர்கள் தங்கி போவதற்கு மிகவும் விஸ்தாரமான அறைகளும் பிரமாண்டமான முற்றங்களையும் செய்து வைத்துள்ளார்கள்....!!!

 மோனிஷா [[பூ]] முகத்தை பார்த்தால் எவ்வளவு சங்கடம் மனசில் இருந்தாலும் பறந்தே போயிரும் அவள் சிரிப்பின் அழகு அப்படி, அழுதாலும் சிரிப்பதை போல இருக்குமாம், விஜயன் அதை போட்டோ எடுத்து உங்க மிஸ்'கிட்டே காட்டிருவேன்னு சொன்னதும் பயந்து அழுகையை நிப்பாட்டிருவாளாம். மோசஸ், மோனிஷா குட்டி....!!!

 அங்கே மகாராஜா மாமனார் வீட்டுக்கு போகும் வழியில் இடதுபுறம் உள்ள தெப்பக்குளம், அருகில் அஸ்வின்.

 அர்ஜூன்.

 தெப்பக்குளத்தில் குளித்து கரையேறி இருக்கும் நீர்காக்கை...!!!

 மகாராஜாக்கள் சின்ன சின்ன பொருட்கள், புக் படிக்க வசதியாக ஸ்டேன்ட்.....!!!

 அரிசி, நெல் போட்டு வைக்கும் குதில்கள்...!

 அந்தகால அளவைகள், மரக்கால், பக்கா என்று சொல்லுவோம்...!

 பலவகையான பூக்களை மரத்தால் செய்து வைத்துள்ளார்கள், அநேகமான உள்ளறைகளும் மர்மமாகவே இருக்கிறது, அவைகளை எல்லாம் பூட்டி வைத்துள்ளார்கள்...!

சீனா'வின் ராஜா கொடுத்த வெகுமானம் இந்த சேர்.....!

பேச்சு பேச்சாதான் இருக்கணும், இந்த கோட்டை தாண்டி நானும் அங்கிட்டு வரமாட்டேன், நீயும் இங்கிட்டு வரக்கூடாது எப்பூடீ [[அஸ்வின், என் வீட்டம்மா, நான்..... .[[என்னை இப்பிடி கைபுள்ளையா போட்டோ எடுத்து நாரடிச்ச போட்டோ கிராபர் ஒழிக ஹி ஹி...]]

படங்கள் இன்னும் தொடரும்........

டிஸ்கி : போட்டோக்கள் உபயம் விஜயன் [[நன்றி மக்கா]]


16 comments:

  1. போட்டோவும் அருமை.... போட்டோகிராபரும் அருமை.....
    பதிவும் அருமை....................
    பதிவரும் அருமை....................
    ராஜா உபயோகித்த பொருள் என்று வைத்திருக்கும் முக்கால்வாசி பொருளும் தற்காலத்தில் வாங்கப்பட்டவை தான்...எல்லாம் டூபாக்கூர். கைத்தடி... விசிறி .... இங்க் பாட்டில்...எல்லாமே டுபாக்கூர்.

    ReplyDelete
  2. அரண்மனைல அந்தப்புரம்னு ஒண்ணு இருக்குமே அந்தப்புறமே போகலையா?

    ReplyDelete
  3. //////ராஜா உபயோகித்த பொருள் என்று வைத்திருக்கும் முக்கால்வாசி பொருளும் தற்காலத்தில் வாங்கப்பட்டவை தான்...எல்லாம் டூபாக்கூர். கைத்தடி... விசிறி .... இங்க் பாட்டில்...எல்லாமே டுபாக்கூர்./////////

    என்ன கொடும சார் இது? இருந்தாலும் அரண்மனை ஒரிஜினல்தானே?

    ReplyDelete
  4. அப்படியா விஜயன்..அதானே பார்த்தேன். இருப்பினும் பகிர்வுகள் புகைப்பட்ங்கள் எல்லாம் அருமை. வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள் மனோ... அவர்களின் வாரிசுகள் யாரும் இப்போது இல்லையா? இங்கே நிகழ்ந்த மர்மங்கள் என்ன? யார் இந்த ராஜா? என்ன வரலாறு.. ?? சும்மா மேலோட்டமாகச் சொல்லுங்கள்..லிங்க் இருந்தால் கொடுங்கள்.. படிக்கலாமே.. நன்றி

    ReplyDelete
  5. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
    பல தகவல்களை அறிந்து கொண்டேன் படங்கள் சிறப்பு அடுத்த முறை இந்தியா போகும் போது கண்டிப்பாக இதை பார்க்கவேண்டும்

    ReplyDelete
  6. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    அரண்மனைல அந்தப்புரம்னு ஒண்ணு இருக்குமே அந்தப்புறமே போகலையா?//

    அந்தப்புரம் என்ன அந்தப்புரம், பாத்ரூமையே போட்டோ எடுத்து தந்திருக்கார் விஜயன் பொறுங்க பொறுங்க...

    ReplyDelete
  7. ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி //

    J P Josephine Baba http://josephinetalks.blogspot.in/2011/04/blog-post_7939.html

    ஜோஸபின் கதைக்கிறேன்!: பத்மநாப அரண்மனை உங்களை வரவேற்கிறது!!!

    ReplyDelete
  8. போட்டு தாக்குங்க ..!

    ReplyDelete
  9. ஒரு நிமிசம் நினைச்சு பாருங்க, அந்த ராஜா வாழ்ந்த காலத்துல நாம அந்த இடத்துல போய் நின்னிருக்க முடியுமா? இப்ப அங்க நிக்கும் போது எப்படி இருந்தது என்று சொல்ல முடியுமா? மனோ அண்ட் விஜயன் சார்?

    ReplyDelete
  10. படங்கள் கண்களைக் கவர்கின்றன
    மக்களே..

    ReplyDelete
  11. படங்கள் அனைத்தும் அசத்தல் !

    ReplyDelete
  12. படம்களும் பதிவு சூப்பர் அடுத்த  முறை எப்படியும் போகணும் என்ற ஆசை எனக்கும் பாரர்ப்போம் அரண்மனை கூஜாவை!

    ReplyDelete
  13. படம் பிடித்த வருக்கும் அதை பதிவாக்கினா அருவாள் மன்னன் மனோவுக்கும் வாழ்த்துக்கள்! இந்தப்படியைத் தாண்டி நானும் வரமாட்டம் மக்கா ஹீஈஈ

    ReplyDelete
  14. நம்ம வீட்டம்மா மற்றும் பெண் இன்னும் கன்யாகுமரி போகலை. போகணும்னு சொல்லிட்டு இருக்காங்க. போகணும். உங்கள் படங்கள் அருமை

    ReplyDelete
  15. எல்லாம் அருமை...
    நாங்க அங்கே போன போதும், எதையும் தொட விடவில்லை...

    "சாமி" படத்தில் வருவது போல, இங்க தான் ராஜா தூங்குவார், இங்க தான் ராஜா நடப்பார் என்று சொல்லி ஒவ்வொரு அறையாகக் காட்டினார்கள். ஆனால், அறைகளில் ஒன்றும் இல்லை..

    ராஜா பயன்படுத்திய பொருட்கள் பற்றிய கேள்விக்கு பதிலே இல்லை!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!