Thursday, December 6, 2012

கேரளாவுக்கு தமிழக தலைவர்கள் கிடுக்கிப்பிடி...!

நடைபயிற்சி மேற்கொள்வது எப்படி...?


பத்து நிமிஷத்தில் டாஸ்மாக் கடை பூட்டிவிடும் என்றால், சரக்கு வாங்க எப்படி யாருக்கும் தெரியாமல் [[ஓடமுடியாது]] வேகமாக நடப்பமோ அவ்வண்ணம் தினமும் அரைமணி நேரம் நடந்தால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் உண்டாகும்...!
-----------------------------------------------------------
டாக்டர் : "இம்புட்டு சுகரும், பிரஷரும் இருக்குற நீ ஐ சி யூல இருக்க வேண்டியவன்  ஆச்சே எப்பிடிய்யா நடமாடிட்டு திரியுதே...?"

பேஷன்ட் : "அதான் டாக்டர் எனக்கும் புரியல, உங்க செக்கிங் மெஷின் நல்லா ஒர்க் ஆகுதா இல்லையான்னு இன்னும் பத்துபேரை செக் பண்ணிட்டு சொல்லி அனுப்புங்க அப்புறமா வாறன் வர்ட்டா...."[[நான் இல்லைங்கோ]]
-----------------------------------------------------------
நண்பர் ஒருவர் :"குளிர் காலத்துல ஆறுமாசம் குதேபியாவுல [[பஹ்ரைன்]] இருந்து சல்மானியா ரோடு வழியா வாக்கிங் போ, போகிற வழியில் நிறைய வேப்பமரங்கள் நிக்குது அதின் இலைகளை பறிச்சு தின்னுட்டு தினமும் நடய்யா சுகர் காணாமப்போயிரும்...
அடுத்து, சூடு காலத்துல சுகர் லோ ஆகிருச்சுன்னா, மனாமா மெரீ னா பீச் ஹைவே வழியா வாக்கிங் போ, போகிற வழியில் நிறைய பேரீச்சம் மரம் நிக்குது, அதன் பழங்களை பறிச்சு சாப்புட்டுட்டே தினமும் நடய்யா சுகர் லெவல் ஆகிரும்..."
நானும் முதலில் சொன்ன இடத்துக்கு முதல்நாள் வாக்கிங் போனேன், கொய்யால ஒரு வேப்பமரத்துலேயும் ஒரே ஒரு இலைகூட இல்லை அங்கே...!

ரெண்டாவது சொன்ன இடத்துக்கும் சூடு நேரம் பார்த்துப் போனேன், அங்கே பேரீச்சம் மரமெல்லாம் பனைமரம் உயரத்துக்கு நிக்குது, எப்பிடி பறிக்கமுடியும்...?! சின்ன மரத்துல இருக்குற ஒன்னையும் காணோம்...!

ஆக...அம்புட்டு சுகர் அண்ணாச்சிங்க இருக்காயிங்க போல இங்கே, ஏன்ய்யா பச்சைபுள்ளையை இப்பிடி அலையவைக்குறீங்க...?
---------------------------------------------------------

எங்கள் கேரளாவில் விவசாயம் பரிவர்த்தனைகள் செய்ய மக்களுக்கு பிடிக்கவில்லையா அல்லது அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லையான்னு தெரியவில்லை ஆனால், கேரளாவில் 42 நதிகள் இருக்கிறது [[சரியான்னு தெரியலை]] அதன் நீர்கள் வேஸ்டாகவே ஓடுகிறது, அந்த தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுப்பதில் என்ன பிரச்சினை என்றும் புரியவில்லை...
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பதால் எங்களுக்கு அங்கேயுள்ள விவசாயிகள் அரிசியும் காய்கறிகளும், பூக்களும் தருகிறார்கள் சொல்ப பணத்திற்கு, தமிழர்கள் கடும் உழைப்பாளிகள் என்பது மறுக்கமுடியாத உண்மை.....!!!

ஒரு மெத்தபடித்த அரபியிடம் பேசிய ஒரு சேட்டனின் உள்ளான அபிப்பிராய கருத்து இது...!
இதைத்தானேய்யா கேரளா பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சக்கரியாவும் எழுதியும் சொல்லியும் வருகிறார்...!
------------------------------------------------------------

அடுத்தும் காங்கிரஸ் கூட்டணியே நடுவில் ஆட்சி அமைக்கும் என்ற பேச்சுகள் வயிற்றில் புளியை கரைக்கிறது, பா ஜா க'வில் மக்களை கவர்ந்த ஸ்டார் தலைவர்கள் இல்லை என்பதே இவற்றிற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது...!!

கிழவர்  பொல்லாதவர்தான் போல ம்ம்ம்ம் பயங்கரமாக அரசியல் கணிப்பு கணிச்சிருக்கார்....!
-------------------------------------------------------------

சாட்டிங்கில்....

"அண்ணே, பேஸ்புக்ல போட்டோ அப்லோட் ஆகமாட்டேங்குது என்ன செய்யனும்...?"

"கம்பியூட்டரை கீழே தூக்கிப்போட்டு நாலுமிதி மிதிக்கவும்..."
[[கீழே பர்சனலா அவன் சொன்னது]]
"ஓ அப்பிடியா அண்ணே, எங்கே போனாலும் மும்பை வந்துதானே ஆகனும், அன்னைக்கு வச்சுக்குறேன்"

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....
-------------------------------------------------------------

முல்லைப்பெரியார் மேட்டரில் கேரளாவுக்கு சரியான கிடுக்கிபிடிபோட்டு செமையா முட்டுகட்டை போட்டே வைத்துள்ளார்கள் நம் தமிழக தலைவர்கள், வைகோ அண்ணன் உட்பட, இது கேரளா நண்பர்கள் பேச்சில் நன்றாகவே தெரிகிறது...!
என்னதான் தமிழக தலைவர்களை நாம் திட்டினாலும், இதற்காக வாழ்த்தையும் சொல்ல கடமைபட்டுள்ளோம் நிச்சயமாக...!
------------------------------------------------------------

பாராளுமன்றம் கேன்டீனில் சாப்பிடவாவது ஒருமுறை எம் பி ஆகிவிட வேண்டும்...! அம்புட்டு விலை குறைவாம்...!

மீன்கறி சாப்பாடு வெறும் பதினேழு ரூபாய்...! [[விஜயன் கவனத்திற்கு]]
------------------------------------------------------------

வரிகளை மரியாதையா கொடுக்காதவனேல்லாம் இன்னைக்கு தலைவனும், நேதாக்களுமாக இருந்து தேசியம் பேசுவதுதான் ஆச்சர்யமாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது...! சரத்பவாருக்கு கோடிக்கணக்கில் வரிபாக்கி இருக்கிறதாம்...!

[[பக்கி நீ நல்லாயிருடே...அவனுக்கு சுகந்த ஒயின் குடிக்ககொடு, நாடு உருப்படும்]]

18 comments:

  1. வணக்கம்..

    நன்றி...

    மேலதிக தகவல்களுக்கு, http://www.cybercellindia.com/

    மீண்டும் நன்றி!

    ReplyDelete
  2. என்ன இன்னிக்கு ஒரே கேரளா மயம்?

    ReplyDelete
  3. ////நடைபயிற்சி மேற்கொள்வது எப்படி...?//////

    நடந்துதான்.......

    ReplyDelete
  4. தொகுப்புக்கள் அழகா இருக்கு மனோ....நல்ல பதிவுதான்.

    ReplyDelete
  5. அடுத்த சிபியா?????????

    ReplyDelete
  6. //பத்து நிமிஷத்தில் டாஸ்மாக் கடை பூட்டிவிடும் என்றால், சரக்கு வாங்க எப்படி யாருக்கும் தெரியாமல் [[ஓடமுடியாது]] வேகமாக நடப்பமோ அவ்வண்ணம் தினமும் அரைமணி நேரம் நடந்தால் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் உண்டாகும்...!
    //

    சொந்த அனுபவமா தல ...

    ReplyDelete
  7. // என்ன இன்னிக்கு ஒரே கேரளா மயம்?

    December 6, 2012 2:43 AM
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////நடைபயிற்சி மேற்கொள்வது எப்படி...?//////

    நடந்துதான்.......
    //

    யார் கூட ???

    ReplyDelete
  8. அருமையான பல்சுவைத் தொகுப்பு
    பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. பாந்தமான பல்சுவைத்தொகுப்பு. நல்லாருக்குங்க.

    ReplyDelete
  10. பல்சுவைத் தொகுப்புஅழகா இருக்கு

    ReplyDelete
  11. உங்களின் பக்கம் வந்தாலே கலக்கல் தான் பாருங்களேன் ஒரு அக்கா அப்படி ஒரு கலக்கு கலக்குது ...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!