எங்கள் ஹோட்டலுக்கு புரியாத புதிர்களும், புரிந்த புதிர்களும், காமெடி பீஸ், சீரியஸ் பீஸ், ஃபீலிங் பீஸ் கத்தரிக்காய் பீஸ் சரி விடுங்க, இப்படி பலதரப்பட்ட "கேரக்டர்"கள் வந்து போவதுண்டு, சுவாரஸ்யமான பீஸ்'களும் வந்து போவதுண்டு நடிகை பஸ்தூரி மாதிரி.
சரி ஒரு சோகமான கேரக்டரை பற்றி சொல்றேன்...
ஒரு அரபி [[எந்த நாடுன்னு சொல்லமாட்டேன் நீங்களே யூகிக்கவும், எங்க நம்மளை கடத்திட்டு போயிருவாங்களோன்னு பயமா இருக்கு ஹி ஹி]] இங்கே வந்தான், ஆள் பார்க்க வாட்டசாட்டமில்லை, என்னை மாதிரி கொஞ்சம் குள்ளம், ரொம்ப அழகு...[[சரி சரி நாம மேட்டருக்குள்ளே போயிருவோம்]]
ரூம் கேட்டான், சாதாரணமாக விருந்தினர் பணம் சார்ஜ் செய்தோம், அமைதியாக தங்கிவிட்டு போனான், ஒரு பத்துநாள் கழித்து இன்னொரு நண்பனுடன் வந்தான், அப்போதும் நண்பனுடன் டிஸ்கோ, பஸ்கோ என்று சந்தோஷமாக என்ஜாய் செய்து போனான்.
மறுபடியும் ஒருநாள் ஒரு அழகு பெண்ணுடன் [[அரபி குதிரை]] வந்தான், அரேபியன் இரவுகளை போல ஜோலி ஜொலிக்கும் அழகு [[வர்ணித்தது போதும் ஹி ஹி]] தேவதை...!
ரூம் கொடுத்தோம் இருவரும் கைகோர்த்து டிஸ்கோ, பஸ்கோ, பார் அப்பிடி பல இடங்களுக்கு ஓடி விளையாடினார்கள், மறுபடியும் பத்து நாள் கழித்து வந்தார்கள், அப்போது அவர்களுக்குள் ஒரு சிறிய சண்டை, அப்புறம் ராசியாகி போனார்கள்.
அவனை பார்க்க நல்ல பெரிய இடத்து ஆளாகத்தான் தெரிந்தான் பாஸ்போர்ட் செக் செய்து பார்க்கும்போது கண்டிப்பாக இவன் ராஜவம்சம் இல்லை, ஆனால் பெரிய குடும்பத்து ஆள்.
பெண்ணும் அப்படியே, வேறொரு வம்சாவளி, அரபிகளுக்கு தனி தனி வம்சாவளி இருக்கிறது, நாம் ஜாதி பிரித்து வைத்திருப்பதுபோல் இங்கேயும் அப்படி என்று நினைக்கிறேன்.
பின்பும் ஒருநாள் ஜோடியாக வந்தார்கள், ரூம் ரெண்ட் டிஸ்கவுன்ட் வேண்டுமென்று வருந்தி கேட்டதால் நாங்களும் கொடுத்தோம்.
அன்று இரவு, ரத்தகளறியாக ரிஷப்சன் வந்தான் அவன்...ஒரே அலறல்...என்னான்னு கேட்டால்...பதில் சொல்லாமல் அலறுகிறான்...எனக்கு உடனே அந்த பெண்ணின் நினைவு வர, உடனடியாக செக்கியூரிட்டியை ரூமுக்கு அனுப்பினேன், அங்கே அவள் மயங்கி கிடப்பதாக தகவல் வர...நான் ஓடினேன் அங்கு...
அங்கே அவள் குப்புற விழுந்து கிடக்கிறாள், ரூம் கண்ணாடிகள், டேபிள்கள், டிவி மற்றும் போன் இத்தியாதிகள் யாவும் நொறுங்கி கிடக்கிறது, அதிர்சியான எனக்கு, அவள் உயிரோடு இல்லை என்று நினைத்து...
அவளை நெருங்கி மல்லாக்க படுக்கவைக்க சொன்னேன் செக்யூரிட்டியோடு, மெதுவாக மூக்கில் கைவைத்து பார்த்தேன், ஆஹா மூச்சு இருந்தது ஆனால் நாற்றம்...சரக்கு நன்றாக குடித்து இருக்கிறாள்.
அப்புறம் ஆசுவாசமாக அறையை நோட்டினேன் [[அதாம்பா நோட்டம் விட்டேன்]] மினி பார் வசதி கொண்ட ரூம் என்பதால், அந்த மினி பார்'ல் ஒரு பாட்டலுமில்லை எல்லாம் நொறுக்கப்பட்டிருந்தது.
திருப்பியும் அந்த அரபியை கூட்டி வர செய்து [[அவனும் நல்ல சரக்கில்]] என்ன இது என்று கேட்டேன், சற்றே சுதாரித்தவன்....
சரக்கு தொடரும்...
டிஸ்கி : நாங்களும் தொடர் எழுதுவோம்ல்ல.

பீஸ்கள் தொடரட்டும் அண்ணே...!
ReplyDeleteஷேக்கு கதை ஷோக்கா இருக்கும்போல கீதே...
ReplyDeleteஅய்யய்யோ, அய்யய்யோ, சஸ்பென்ஸ் தாங்காதே நமக்கு. அடுத்த பார்ட் எப்போ?
ReplyDeleteதிரில்லிங்!தொடருங்கள்
ReplyDeleteஆஹா சஸ்பென்ஸ் தொடரா....
ReplyDeleteகுடிச்சிட்டு போட்டு உடைச்சாங்களா இல்ல உடைச்சிட்டு குடிச்சாங்களா? ரெண்டுல ஏதோ ஒன்னு நடந்துருக்கு!
ReplyDeleteஉங்களுக்குன்னே இந்த மாதிரி ஆட்கள் வந்து வாய்ப்பாங்க போல!!
ReplyDeleteவாழ்க்கை தான்
ReplyDeleteஇவங்கெல்லாம் யாரு? ஆமா நீங்க யாரு? இப்போ பதில் சொல்லலைனா யாராவது வந்து உங்க கண்ண குத்திருவாங்க
ReplyDeleteஅப்புறம் என்னாச்சுண்ணே?
ReplyDeleteஅடப்பாவி தொடரா... ஏன் ஏன் இப்படி... ஏலே மக்கா நியாயமா...
ReplyDeleteஅண்ணன் இப்பதாம்யா நம்ம லைனுக்கு வந்திருக்காரு, எத்தன வருசமா கேட்டுக்கிட்டு இருக்கேன்......
ReplyDeleteஅண்ணே எதிர்பார்ப்பை நல்ல ஏத்தி விட்டுட்டு இப்படி தொடரும் போட்டுடிங்களே
ReplyDeleteதொடருங்கள் . காத்திரருக்கிறேன்
ReplyDeleteதொடருங்கள் அண்ணே...
ReplyDeleteஓவர் சரக்கின போதையில எல்லாத்தையும் நொறுக்கிடுச்சா அந்த அரபி? அப்புறம் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்க ஆர்வத்தோட காத்திருக்க வெச்சுட்டியளே பிரதர்! சீக்கிரம் தொடருங்க...!
ReplyDeleteஅடடே.... தொடரா மக்கா.... சீக்கிரமே அடுத்த பார்ட் போட்டுடுங்க... சஸ்பென்ஸ் தாங்காது நமக்கு!
ReplyDeleteArabian Nights of Manoj ஓட தமிழ் வெர்ஷனா? :-)
ReplyDelete