Monday, January 27, 2014

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....தொடர்.. மூன்றாம் பாகம்

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...நான்காம் பாகம்.

கார் கோவளம் நோக்கி சீறிப் பாய்கிறதுன்னு நினச்சிட்டு இருந்த எனக்கு, வண்டி "மேடு" பள்ளம்"ன்னு சிறிய சாலையில் கரடு முரடா போயிகிட்டு இருக்கு, ஒ ஷாட் கட்டா போறாங்க போலன்னு நினச்சிட்டு இருந்ததும் கார் ஒரு இடத்தில் நின்றது.
[[விஜயன் மற்றும் சுதன், ஆட்டோவுக்காக வெயிட்டிங்]]

ஒரு தெரிந்த ஆட்டோக்காரர் வந்தார், மணிகண்டனும், செட்டியாரும் அதில் கிளம்பி போனார்கள்...நானும் விஜயனும், ஆபீசரும், சுதனும் காரில் இருந்து கீழே இறங்கி பேசிக் கொண்டும் போட்டோக்கள் எடுத்த வண்ணமாக இருந்தோம்.

கொஞ்ச நேரத்தில் அந்த ஆட்டோ மட்டும் திரும்பி, ஒரு "உருவ" ஒற்றுமை வைத்து ஒரு நபரைக் கூப்பிட...அந்த நபரும் ஆட்டோவில் கிளம்பிப் போனார்...போனவர்கள் திரும்ப நேரமானதால், அருகே வீடுகளில் வசிப்பவர்கள் சந்தேகப் படக்கூடாது என்று [[கேரளா ஆச்சே கேக்கவா வேண்டும் ?]] கார் ரிப்பேர் ஆனது போல பாவ்லா செய்து கொண்டிருந்தோம்.
[[ஆயுர்வேதிக் மசாஜ் எப்பிடி இருக்கும் என்ற சிந்தனையில் இருக்காரோ விஜயன் ? டிரைவர் மற்றும் சுதன்]]

கேரளா தலைநகரில் ச்சூச்சூ போறதுக்கு ஒரு கக்கூசும் இல்லாததால் சுதன் கார் பக்கத்துலேயே தன கடமையை நிறைவாக செய்து முடித்தார்.

நானும் விஜயனும் அப்பாலிக்கா கொஞ்சதூரம் நடந்து, செடிகளுக்கு ஜல உரம் கொடுத்து வந்தோம், அங்கே வீடுகள் நெருக்கமாக இல்லாமல் மிகவும் தள்ளி தள்ளியேதான் இருக்கிறது, கேரளா மக்கள் எப்போதும் செடி கொடி மரங்கள் சூழவேதான் வாழ்கிறார்கள், வீட்டையும் அப்படியே வைத்துள்ளார்கள்...! ரொம்ப நேரமா போனவிங்களைக் காணோம், சுதன் கடுப்பாகிட்டே இருக்கார் [[நானும்தான் ஹி ஹி...]]

அப்பாடா ஒருவழியா ஆயுர்வேதிக் மசாஜ் முடிஞ்சி வந்தாங்க பாருங்க, அவங்க எங்களை நெருங்கியதும் குப்பென்று ஆயுர்வேதிக் தைலக் கலவையின் மணம் நாசியை துளைத்தது, நம்ம செட்டியார் நான்கு கையால் அங்கே பரதம் ஆடியதாக [[?]] மணிகண்டன் அவரை கலாயித்து கொண்டே வந்தார்.
சரி இனி மனோ அண்ணனை கோவளம் பீச் பக்கம் ஸ்பெஷலா கூட்டிட்டு போவோம்னு சுதன் வண்டியை கிளப்ப சொன்னார், [[இங்கே கொஞ்சம் சென்சார் இருக்கு]] போற வழியிலேயே என்னையும் சுதனையும், மணிகண்டனையும் இறக்கி விட்டுட்டு ஆபீசரும், விஜயனும் போய்விட...

யோவ் சுதன் என்னைய்யா இது"ன்னு கேட்டேன், அவங்க கோவளம் பீச் போறாங்க, அப்போ நாம ? நாம வேறொரு பீச்சிக்கு போறோம் அண்ணே வாங்க..
[[கிளுகிளுப்பாக ஆட்டோவில் மணிகண்டன்]]

இனி வேற ஒரு ஆட்டோ பிடிச்சு இன்னொரு பீச்சிக்கு வண்டி கிளம்புச்சு [[பீச் பேரு மறந்து போச்சு]] ஒரு இருபது நிமிட நேரப்பயணம்....அந்த ஆயுர்வேதிக் ஹாஸ்பிட்டல் முன்பு என்னையும் சுதனையும் இறக்கி விட்டுட்டு, மணிகண்டன் போயிட்டார்.


[[ஆட்டோ வந்து யூ டர்ன் அடிக்குது, ஆபீசருக்கு இடைவிடாமல் அண்ணியின் போன் வந்துட்டே இருக்கு...ஆஹா...]]

உள்ளே போனதும் ஒரே தைலம் வாசனை...என்னமோ...புத்துணர்ச்சி தந்து கொண்டிருந்தது, டாக்டர் இன்னும் வரவில்லை என்றார்கள், கொஞ்சம் வெயிட்...டாக்டர்கள் வர........அவசரமா படபடப்பாக இருக்கும்போதே விக்கி"யும், கேசவப்பிள்ளையும் கான்பரன்ஸ் கால்"ல வாராங்க அண்ணே உங்க கூட பேசணுமாம்"ன்னு சுதன் போனை தர..."யோவ்...எந்த இடத்துல எப்பிடி... படபடப்பா உக்காந்துட்டு இருக்கோம்ன்னு தெரியாம, பிஸின்னு போனை கட் பண்ணும்ய்யா டாக்டர்ஸ் வந்தாச்சு..."

பணம் பே செய்து விட்டு ஆளுக்கொரு அறையில் போனோம்...அங்கே....? தடவும் ஸாரி தொடரும்.....!

8 comments:

  1. ஹிஹி... அண்ணே அடுத்த பதிவு புல்லா சென்சார் தானா....

    ReplyDelete
  2. கொஞ்ச சென்சாரை பதிவிடாமல் வேறு பீச்சுக்கு சென்றதை வன்மையாக கண்டிக்கிறேன்... ஹிஹி...

    ReplyDelete
  3. எங்க சென்சர் பண்ணுவது என்பது எங்க வேலை.....அதனால சென்சர் பண்ணாம எழுதுங்க இல்லைன்னா நீங்கள் சென்சர் பண்ணுறாப்பல நாங்க பின்னுட்டம் போட ஆரம்பிச்சிடுவோம் மதுரக்காரன் சொன்னா சொன்னதுதான்

    ReplyDelete
  4. அஹா,,,அடுத்த பதிவில்
    நினைத்ததெல்லாம் நடக்கத் துவங்கிடும்னு
    நினைக்கிறேன்

    ReplyDelete
  5. ப்ச்...நல்ல சீன் வரும்போதா லைட்டை போடறது!

    ReplyDelete
  6. அட இப்ப சீன் வரும் என்று பார்த்தால் தொடரும் என்று போடுவதா!ஹீ தொடரட்டும் தொடர்.

    ReplyDelete
  7. தொடரும்..... :) நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!