- நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....! முதல் பாகம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....தொடர்.. மூன்றாம் பாகம்
அடுத்தநாள் காலையில் வாக்கிங் போவதற்காக கிளம்பினோம், செட்டியார் புலம்பிகிட்டே இருந்தார் சுதனிடம், வாக்கிங் போறதுக்கு பேன்ட் போடப்போன ஆபீசர டவுசர் போட வச்சி கிளம்பினோம்.
[[திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் முன்பு சுதன்]]
கீழே ஒரு டீ'கடை இருக்க, டீ சாப்பிட சென்றோம் அங்கே பலகாரங்களும் இருக்க, டீ ஆர்டர் பண்ணி விட்டு நிற்கும் போதுதான் சுதன் சொன்னார், இன்னைக்கு நாம கோவளம் பீச் போறோம் அங்கே ஆயுர்வேதிக் மசாஜ் செய்யப் போறோம்ன்னு சொன்னதுதான் தாமதம், செட்டியார் கண்கள் அகன்று ரெண்டு வடையை கையில் எடுத்தார், அது வரை வடை வேண்டாம்ன்னு சொன்னவர்.
[[வெரசா வாங்கய்யா மசாஜ் போகனும்ல்ல, சுதன்]]
வடையை எடுத்தவர் உடனே சாப்பிடவில்லை வாக்கிங் போகும் போது கையிலேயே வைத்துருந்தார், "உலகிலேயே கையில் வடையை வைத்துக் கொண்டு வாக்கிங் போனவர் செட்டியார் மட்டுமே" [[அவ்வ்வ்வவ்]]
[[ஆத்"தீ"..... கையில் வடையுடன் செட்டியார் வாக்கிங்..]] திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் வழியாக வாக்கிங் போகும் வழியிலேயே செட்டியார் ஒரே தொனதொனப்பு சுதனிடம், மசாஜ்ல என்ன என்ன ஸ்பெஷல் உண்டு ? அது இது என்று கேட்டுக் கொண்டே வந்தார், சுதன் கொஞ்சம் வேகமாக போனதும் தொனதொனப்பு விஜயன் பக்கமா மாறிடுச்சு.
[[மெடிக்கல் காலேஜ் பக்கம் ஒரு பைக் மற்றும் ஸ்கூட்டர் ஷோ கிரவ்ண்ட்]]
மாறி மாறி போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம், திரும்பிய போது எல்லாரும் ஒரு சூப்பர் மார்கெட்டின் உள்ளே நுழைந்தார்கள், நானும் என்னடான்னு உள்ளே போனேன், என்னத்தையோ "பலமாக" தேடினார்கள், நானும் பராக்கு பார்த்துட்டு நின்னேன்.
கொஞ்ச நேரம் ஆகியும் அவர்கள் தேடிய பொருள் கிடைக்கவில்லை போல, அந்த பொருள் இருக்கும் இடத்தில்தான் நான் நிக்குறேன், கடையை மொத்தமாக சுத்தி வந்த செட்டியார், என் பக்கம் வர, என்னய்யான்னு கேட்டதும் அந்த பொருளை சொன்னார், ஷாக்"கான நான் அதோ இருக்குன்னு சொன்னதும் படார் என்று எடுத்தார் பாருங்க என்னா வேகம் என்னா வேகம்...
[[டைரக்டர்கள் கவனத்திற்கு.... சுதன் வில்லனுக்கும் பொருந்துவார் காமெடிக்கும் பொருந்துவார் போட்டோ ஷெசனே தேவையில்லை செம பேஸ் கட்......... ஆனா இவர் போட்டுருக்கது என் கண்ணாடி இல்லை ஹி ஹி]]
அப்புறம் காலை கடன்கள் யாவும் முடித்து காரில் கிளம்பினோம், மணிகண்டன்தான் எங்களை வழி நடத்தி செல்லும் சாரதி, போகும் வழியில் தாக சாந்தி செய்ய ஒரு பாரில் போக முடிவானதும், கார் ஒரு பார் அருகில் பார்க் செய்யப்பட, விஜயனும், ஆபீசரும் காரில் இருந்து கொள்ள, நாங்க நான்கு பேரும் பாரில் ஏறினோம்.
[[பொசுக்கு பொசுக்குன்னு போன் வருதுய்யா ஆபீசருக்கு...அண்ணியா இருக்குமோ ?]]
வெளியில் இருந்து பார்க்க ஏதோ சினிமா தியேட்டர் போல இருந்த பார், உள்ளே கேரள மொடாக் குடிகாரர்களின் கொட்டாரமாக இருக்கிறது , எந்த அயிட்டமாக இருந்தாலும் டோக்கன் கவுண்டரில் டோக்கன் வாங்கி பார்"மேனிடம் கொடுத்துதான் அயிட்டம் வாங்க வேண்டும்.
[[கோவளம் எந்த வழியா போகணும்ன்னு ரோசிக்கிறார் ச்சே யோசிக்குறார் விஜயன்]]
ரெண்டு லார்ஜ் ஏற்றிக்கொண்டு கூலி வேலை செய்துவிட்டு, அடுத்தும் உடனே வந்து ரெண்டு லார்ஜ் ஏற்றிக் கொண்டு போகும் குடிமகன்கள், அடுத்து அங்கே குடிப்பவர்களிடமே பிச்சை எடுத்து குடிக்கும் பாவங்கள், டேபிள் மேஜை எல்லாம் பகல் குடிகாரர்கள் [[ஹி ஹி]] நிரம்பி வழிகிறார்கள்...!
தாகம் தீர்ந்து காரில் ஏறி........... ஆயுர்வேதிக் டாக்டரை பார்க்கும் வேகத்தில் கார் சீறியது கேரளாவின் தலைநகரில்.....!!!
.சொல்றேன்....
தாகம் தீர்ந்த பின்பும் 'ஆயுர்வேதிக்' வேண்டுமா...?
ReplyDeleteசெம மசாஜ்'ய்யா....!
Deleteஹிஹிஹி.
DeleteIdhi too much
ReplyDeleteதாகசாந்திக்கு அப்புறம் தேக சாந்தியா? நடத்துங்க! நடத்துங்க!
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நண்பரே!
ReplyDeleteபேஸ் புக்கல படுத்தி படுத்தி எடுக்கறது போதாதுன்னுட்டு இங்கயும் வந்து எங்கள பிராண்டி எடுக்கணுமா மச்சான் ?
ReplyDelete
ReplyDeleteவடையை வைத்துக்கொண்டு வாக்கிங்கா...ஹா..ஹா...
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்
வடை என்னாச்சு அண்ணாச்சி?,
ReplyDeleteசுவாரஸ்யமாகப் போகிறது பதிவு
ReplyDelete(நினைப்பதெல்லாம் தொடர்ந்து
நடந்து கொண்டுதானே இருக்கிறது ? )
தொடர்கிறோம் தொடர வாழ்த்துக்கள்
விறுவிறுப்பானத் தொடர்
ReplyDeleteதொடருங்கள் தொடர்கிறேன்
விறுவிறுப்பு... தொடருங்கள்.
ReplyDeleteவடையோடு வாக்கிங்! :)
ReplyDeleteநடத்துங்க நடத்துங்க....
வித்தியாசமான பயணக் கட்டுரை.சுவாரசியம்
ReplyDelete