Sunday, January 12, 2014

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....தொடர்....

 கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...! தொடர்......இரண்டாம் பாகம்

கார் போகுது போகுது போயிகிட்டே இருக்கே"ன்னு நினச்சிட்டே இருக்கும் போது சுதனுக்கு போன் வர, மேக்கரையில்தான் ரூம் கிடைக்கவில்லை என்றால், திருவனந்தபுரத்திலும் ஹோட்டலில் ரூம் [[நாங்கள் எதிர்பார்த்த]] கிடைக்கவில்லை என தெரியவர, பின்பு சுதன் மற்றும் ஆபிசரின் நண்பர் மணிகண்டன் அவர்கள் அப்பார்ட்மென்ட் பிளாட்டில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ரெண்டு பெட்ரூம் கொண்ட பிளாட் அது திருவனந்தபுரம் மெயின் ரோட்டுலேயே அழகாக இருக்கிறது, நாங்கள் அங்கே போனதும் உற்சாகமாக எங்களை வரவேற்றார், பழைய நண்பன் போலவே பரஸ்பரம் பேசிக்கொண்டோம், அவர் தாடி சூப்பர்...
[[பூட்டப்பட்ட ரூம் அடுத்தநாள் திறந்தபோது ஒரு கிளிக்]]

அவரவர் உடைகளை களைந்து விட்டு சற்றே ரிலாக்ஸ் ஆனோம், சாப்பாடு பந்தி பரிமாறும் போதுதான் பல விஷயங்கள் பேசப்பட்டது, பிளாட்டில் ரெண்டு பெட்ரூம்னு சொன்னேனில்லையா ? அதுல ஒரு ரூம் பூட்டி கிடக்க, என்னய்யா மணிகண்டன் அந்த ரூம் பூட்டி கிடக்கே என்ன சமாச்சாரம் என்று ஆபீசர் கேட்க....
[[மணிகண்டன் மற்றும் விஜயன்]]

"அது" வந்து.....அந்த டோர் லாக்காகி திறக்க மாட்டேங்குது, நாளைக்கு கார்பெண்டரை கூப்பிட்டு சரி பண்ணனும் என்றார், சுதன் நம்பவே இல்லை, திடீர்ன்னு நாம வந்ததால அயிட்டத்தை ரூமுக்குள்ளே வச்சி மணிகண்டன் பூட்டிவிட்டதாக சொல்ல, முதல் பலி ஆடு மணிகண்டன் ஆனார்.
 
[[சுதன் மற்றும் செட்டியார்]]

ரூமை திறந்து அயிட்டத்தை காண்பி என்று ஒரே கோஷம்.....அப்பிடியே மேட்டர் "அந்த" விஷயத்திற்கு தாவியது, ஆயக்கலை அறுபத்து நான்கு'தானே உங்களுக்கு தெரியும் ? எங்களுக்கு எழுபத்து நான்கு கலைகள் தெரியுமே [[எங்களுக்குன்னு என்னை எதுக்கு ஓய் கை காட்டுநீரு அவ்வவ்]] என்று சொல்ல, மொத்த நண்பர்களும் செட்டியாரை ஆ....... எனப் பார்க்க...

அவரு சொன்னாரு பாருங்க....... "நீங்கெல்லாம் வெறும் மாவுதான், அதுல வெறும் தோசைதான் போடுவீங்க, நாங்க [[மறுபடியும் என்னை எதுக்குய்யா கை காட்டுதீரு]] அப்பிடியில்ல, மாவுல தக்காளி போட்டு தக்காளி தோசை பண்ணுவோம், வெங்காயம் போட்டு வெங்காய தோசை பண்ணுவோம், தேங்காய் போட்டு "தேங்காய்" தோசை பண்ணுவோம், வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு மிக்ஸ் தோசை பண்ணுவோம்...."ன்னு அடிக்கிகிட்டே போக மொத்தபேருக்கும் தலை கிரர்ர்ர்ரர்ர்ர்ர்......
[[ஆவேசமாக ஆபீசர் போனில்]]

செமையா சிரிச்சு சிரிச்சு உருண்டோம், பல பல பேச்சுகள் என நேரம் போவது தெரியாமல் ஜாலியானோம்......அப்புறம்தான் சுதன் சொன்னார், மனோ அண்ணே...நீங்க பார்க்க வேண்டிய இடம் [[கண்டிப்பாக]] நாளை காலையிலதான் இருக்கு என்று உசுப்பேத்த....

அடுத்த நாள் காலையில போகவேண்டிய இடத்தை சொன்னதும் நம்ம செட்டியார் வாக்கிங் போனபோது ரெண்டு வடையை பத்திரமாக கையில் கொண்டு வந்ததையும்.....

சொல்றேன்.....


9 comments:

  1. படங்களுடன் சொல்லிப் போகும் விதம்
    உடன் பயணிக்கும் சுகம் தருகிறது
    தொடர்கிறோம்....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நாளை காலை தெரிந்து விடுமா...? ஆவலுடன்...

    ReplyDelete
  3. பூட்டி வைத்த அறையினுள் உண்மையிலும் இருப்பது (ஒரு வேள ஆவியோ! )என்ன ?????!!!!!! மர்மத் தொடர் நாளையும் தொடரும் என்று முடித்து விட்டாரே இருப்பினும் அதைச் சொல்வாரா :)))))))

    ReplyDelete
  4. அழகான பயணக் கட்டுரை அண்ணா...
    படங்களுடன் பகிர்வு அருமை... தொடருங்கள்...
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சொல்லுங்க சீக்கரம் ஆவலுடன்...!

    ReplyDelete
  6. அழகான கட்டுரை. தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. அழகான பயணக் கட்டுரை...
    படங்களுடன் பகிர்வு அருமை..

    ReplyDelete
  8. சிறப்பான கட்டுரை..... எங்கே சென்றீர்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!