Tuesday, March 18, 2014

உயிர் நண்பனின் ஆதரவு...!



[[மும்பை]] ஹோலி அன்னிக்கு காலையிலே லேட்டாக எழும்பும் நண்பர்கள் ரூமிற்கு போயி ஃப்ரெஷா கலர் சாணி ச்சே ச்சீ கலர் தண்ணி சர்பரைசா ஊற்றுரதுல ஒரு சூப்பர் சுகம்....

ஆனால்....

ஒருநாள் இல்ல ஒரு தடவை...அப்படி என் ரூமுக்கு வந்தவிங்க அலறியடிச்சு ஒடுனாணுவ....ஹா ஹா ஹா ஹா நாமெல்லாம் ஆரு ?

இவனுக கதவை தட்டவும் ஏற்கனவே கரைச்சு ரெடியாக வச்சிருந்த சாணியை...ஒரு நண்பன் கதவை திறக்க...அவர்கள் சற்றும் எதிர்பாராமல் ரூமுக்குள்ளே இருந்து நான் பீச்சி அடிக்க...ஓடினானுங்க பாருங்க....

இப்பவும் அந்த அட்டாக்கை சொல்லி நண்பர்கள் சிலாகிப்பார்கள்...எப்பிடிடா உனக்கு மட்டும் ஆண்டவன் இம்புட்டு அறிவை கொடுத்தான்னு ஹி ஹி...

அப்புறம் பரஸ்பரம் விளையாடிவிட்டு...சாதமும், மிளகாய் இட்ட வெங்காய பொரியலும், தயிரும் பண்ணி [[கறி வைக்க யாருக்குமே தெரியாது]] சாப்பிட்டுவிட்டு கால் நடையாகவே மும்பை ஜூ பீச்சுக்கு போகும் வழியில் எல்லார் கலர் பொடியையும் வாங்கிவிட்டு, கடல்ல குளிச்சுட்டு வருவோம்...

ஏழை நாட்கள் அவை, இனியும் அந்த சுகம் கிடைக்காது....!

அப்புறம் பைக்...கார்....இருந்தாலும் அந்தநாள் இந்தநாள் போல இல்லை...அன்று விளையாடிய நண்பர்கள்...பலபேர் இப்போ எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை !

கண்ணில் கண்ணீர் எட்டிப்பார்கிறது...என் காதல் கல்யாணத்திற்கு தடையாக இருந்தவர்களை அருவாள் முனை கொண்டு மிரட்டி வசப்படுத்திய "உலகன்" என்னும் நண்பன்...[[நெல்லை மானூர்]] கல்யாண மேடையில் ஏறி நின்று என்னைக் கட்டிப் பிடித்தது போன்ற உயிர் நண்பர்கள்....! இப்போது கொஞ்சமே குறைவுதான்...

எப்பிடிய்யா ஒரே வயசை ஒத்த நண்பர்கள் உன்னை சுத்தியே இருக்கிறார்கள் என்று பொறாமைப் படும் ஆட்களும் இருந்தார்கள்...

நண்பர்கள் சூழ இருந்தால் வெற்றி காலில் விழும்போல...ஸோ இப்போ உலகம் ரொம்ப மாறிடுச்சு இல்லையா ?!


டிஸ்கி : எங்ககிட்டே ஜாதி மதம் இருந்தலில்லை...மும்பை வாழ்க்கை அப்படி...சோறு சோறு...கஷ்டத்தில் வந்த உலகனுக்கு அந்த சோறு என் உயிரை பலமுறை காப்பாத்தி இருக்கே... அண்ணன்னுதான் என்னை கூப்பிடுவான்...

கல்யாணத்துக்கு எதிரா சீவலப்பேரி மச்சானுங்க கழுத்தை அறுக்க வந்தப்போ..அவங்களை தூக்கி எறிய சப்போர்ட் தந்ததும் அவன்தான்....

போன பதிவுல ஹோலி அன்னைக்கு ரத்த விளார்ல விழுந்து கிடந்ததும் இதே உலகன்"தான்...

எனக்கு வந்தது அவன் ஏற்றுகிட்டான்...ஹோலி மற்றும் கணபதி விழாவில் [[கலர்]] மும்பையில் யாருண்ணே தெரியாமல் இருக்க இந்த பழி தீர்ப்பு உண்டு...காரணம் முகத்தில் கலர் அப்பி இருப்பதால் யாரென்றே தெரியாது..அடுத்து...பிளேட் வைத்து சர்ர்ர்ர் என்று கீறி சென்று விடுவார்கள்...

உலகன் என்னை கவனிச்சிட்டே இருந்துருப்பான் போல...

ஜாதி மதம் சொல்லலைன்னாலும் இவனை சொல்லலைன்னா என் உயிர்...? 

 "தேவ[ர்]ன் மகன்"

எங்கே தேடியும் இவனை கண்டு பிடிக்க முடியலை...செத்து போயிருப்பான்னு மப்புல ஒரு நண்பன் சொல்ல...அவன் ரெண்டு பல்லைக் காணலைன்னு அடுத்தநாள் செய்தி....


16 comments:

  1. கலங்க வைத்தது ....

    ReplyDelete
  2. உருக்கமான பதிவு
    நல்ல நண்பர் கிடைப்பது அதிர்ஷ்டமே

    ReplyDelete
  3. நண்பரின் சம்பவம் வேதனை...

    ReplyDelete
  4. உங்கள் நண்பன் எங்காவது நலமாக இருப்பார்.....

    ReplyDelete
  5. தங்களின் உயிர் காத்த தோழனின் அழைப்பு மணியோசை விரைவில்
    தங்கள் காதுகளிற்கு எட்ட வேண்டும் என்றே மனம் பிரார்த்திக்கின்றது
    சகோதரா .விரைவில் நட்பு உறவுகளின் தொடர்பாடல் ஏற்பட வாழ்த்துக்கள் சகோதரா .மனச் சோர்வை விட்டுத் தள்ளுங்கள் தங்களின் நல் மனதிற்கு நல்லதே நடக்கும் .பகிர்வுக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  6. உயிர் நண்பன் என்பதற்கு உதாரணம் கற்பித்து சென்ற உங்கள் உலகனின் நட்பு கண்ணீர் வரவழைத்தது! நன்றி!

    ReplyDelete
  7. ஏழை நாட்கள் அவை, இனியும் அந்த சுகம் கிடைக்காது....!/////நிதர்சன உண்மை மனோ.அந்த சுகமே சுகம்.

    ReplyDelete
  8. உம்ம வாழ்க்கையை ஒரு படமாவே எடுக்கலாம் போலிருக்கு தலைவரே

    ReplyDelete
  9. கடவுள்...இப்படிப்பட்ட அன்புள்ள நண்பனை...அவ்வளவு சீக்கிரம்...தன்னிடம் ..அழைத்து கொள்ள மாட்டார்...ஒரு நாள்..இல்லை...ஒரு நாள் ...என்னடா எப்படி இருக்கே? என்று சொல்லி வருவார்....

    ReplyDelete
  10. அடடா என்னா ஒரு நட்பு....நண்பன். நிஜ வாழ்க்கையில் எனும் போது சிலிர்குதுங்க மனோ.

    ReplyDelete
  11. உருக வைக்கும் நட்பு அண்ணாச்சி!

    ReplyDelete
  12. நட்பின் பெருந்தக்க யாவுள

    ReplyDelete
  13. கலங்காதீங்க,மனோ!எப்புடியும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்க முன்னாடி "உலகன்" வந்து நிக்கத்தான் போறார்.

    ReplyDelete
  14. வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுக்கொடுத்த பல நண்பர்கள் எனக்கு உள்ளனர். இவ்வாறான நண்பர்களை நினைக்க வைத்தது தங்களது நண்பர் பற்றிய பதிவு.

    ReplyDelete
  15. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

    ReplyDelete
  16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

    வலைச்சர தள இணைப்பு : செவ்வாயின் செவாலியர்கள்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!