Wednesday, September 24, 2014

மதுரை பதிவர்கள் மாநாடு ஜாலி ஜாலி கும்மி 2 !


பாலகணேஷ் அண்ணன் உள்ளே இருந்து வேகமாக வெளியே ஓடி வருகிறார்..."எலேய் மனோ என்னலேய் பண்ணிகிட்டு இருக்கே ?"

"என்னண்ணே  ஆச்சு ?"

என்ன ஆச்சா ? சிபி"யை மரியாதை இல்லாம வரவேற்றதா, விக்கியை கலாயிச்சதா சரவணன் கையை பிடிச்சு இழுத்ததா, டீச்சரை வம்புக்கு இழுத்ததா கம்பிளைன்ட் வந்துருக்கு..."

"ஆஆ அதுக்குள்ளேயா ?"

"நொன்ன அதுக்குள்ளே வாயில குத்திபுடுவேன் மரியாதையா எல்லாரையும் வரவேற்கணும், இது எருமைநாயக்கன் பட்டி மீட்டிங் மாதிரி ஆக்கிபுடாதே ஜாக்கிரத"

"ஓகே டீக்கே பம்மிங் பம்மிங் அண்ணே..."

சின்ன வீடு சுரேஷ் வருகிறார்...
 

"வாங்க வாங்க சுரேஷ் எப்பிடி இருக்கீங்க பதிவுலகம் பக்கத்துலையே ஆளை காண முடியலையே ?"

ஒத்தை விரலை தூக்கி காட்டி "யோவ் நீரு [[யாரு]] மட்டும் ரொம்ப யோக்கியமோ ? எத்தனை தடவை திருப்பூர் வாரும் வாரும்"ன்னு கூப்பிட்டுருப்பேன் வந்தீரா வந்தீரா" ன்னு விரலை அப்பிடியே மடக்கி குத்த வர...

"யோவ் பொறுய்யா...அதுக்காக நாகர்கோவில் போயிகிட்டு இருக்குற ரயிலை திருப்பூருக்கு எப்பிடிய்யா திருப்ப முடியும் ?"

"மனமிருந்தால் மார்கபந்து ச்சே மார்கமுண்டு"

"ஆரம்பிச்சிட்டான்...ராசா அடைமொழி பெயருக்கு அர்த்தம் சொல்லிட்டு போ ராஜா..."

ஒரு விரலை மறுபடியும் நீட்டி, ரெண்டாவது விரலையும் தூக்கி காட்டிட்டு..."அண்ணே எனக்கு ரெண்டுன்னா ரொம்ப பிடிக்கும் அதான் சிம்பாலிக்கா சின்னவீடுன்னு வச்சிருக்கேன்"

"ரெண்டு சின்ன வீடா...சொல்லவே இல்ல..."

தமிழ்வாசி பிரகாஷ் ஒரு கையை இடுப்புல வச்சிகிட்டு லேசா நொண்டி நொண்டி நடந்து வருகிறார்...
 

"என்னய்யா ஆச்சு உங்க ஊர்ல தெருதெருவா கிட்னி களவு நடக்குறதா சொன்னாங்க, அப்பிடி ஏதும் ?"

"இல்லை மக்கா, யாருகிட்டேயும் சொல்லாதீங்க கொஞ்சம் காத காட்டுங்க"
"சொல்லுங்க"

"பைக்ல வந்துகிட்டு இருந்தேனா...ஒரு சூப்பர் ஃபிகர் நின்னுகிட்டு இருந்துச்சா...அப்பிடியே யூ டர்ன் அடிச்சு போயி நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு மட்டும்தான் மக்கா சொன்னேன், பின்னாடி இருந்த அண்ணனுங்க அழகா ஆடாம அசையாம ரோட்டுல சரிச்சி கிடத்தி வச்சி மிதிச்சானுங்க பாருங்க ஸ்ஸ்ஸ் அபா முடியல..." என்று உள்ளே போக...

"யோவ் நில்லுய்யா.."

"யோவ் மக்கா ஏற்கனவே மூச்சு விட முடியாம இருக்கேன் அடைமொழியை நானே சொல்லிருதேன், தமிழ் வாசிடா வாசிடான்னு எங்க தமிழ் வாத்தியார் அடி பின்னி எடுப்பாருண்னே என்ன செய்யலாம்ன்னு மண்ணுல உருண்டு ரோசித்ததுல, தமிழ்வாசி"ன்னு என் பெயரை நானே மாத்திகிட்டேன்"

"இதுக்கு மண்ணுல வேற உருளனுமா வெளங்கிரும், உள்ளே போங்க சாமீ"

நாய் நக்ஸ் நக்கீரன் அண்ணன் ஒரு பாட்டலோடு வரவும்....
 

"அண்ணே அண்ணே ஆல்கஹால் உள்ளே அனுமதி கிடையாது, ஆபீசரும் கணேஷ் அண்ணனும் உள்ளே இருக்காவ அடி பின்னிபுடுவாயிங்க"

"இங்கே வா தம்பி என்னாதிது ?"

"அண்ணே குவாட்டரை வாங்கி தண்ணீர் பாடடலுகுள்ளே மிக்ஸ் பண்ணி இருக்கீங்க"

அந்த பாட்டலை தூக்கி காட்டி...ஒ என்று அழுகிறார்...

"டேய் மனோ...நான் தண்ணிய நேற்றைக்கே விட்டுட்டேன் தெரியுமா ? [[அவ்வ்வ்வ்]] வயிறு சரியில்லை அதான் வீட்டம்மா சீரக தண்ணீர் கொடுத்து விட்டுருக்கா அவ்வ்வ்வ்"

"அண்ணே அழாம மெதுவா உங்க அடைமொழியை சொல்லிட்டு போங்க பிளீஸ்"

"ம்ம்ம்ம் அது வந்து [[திடீர்ன்னு ஆவேசமாக]] நீ நாய்கிட்டே கடி வாங்கிருக்கியா வாங்கிருக்கியா ?" என்று விரலை கண்ணுக்குள்ளே குத்த வர...

"யோவ் இது என்னய்யா ஆரஞ்சு மிட்டாய் வாங்கிருக்கியான்னு கேட்ட மாதிரி இருக்கு ?"

"நான் வாங்கிருக்கேன் நான் வாங்கிருக்கேன் பல தடவை வாங்கிருக்கேன், பல விதத்துல வாங்கிருக்கேன், பல ரூபத்துல வாங்கிருக்கேன், அதுக்கு பிறகுதான் இந்த யோசனை வந்துச்சு "நாய் நக்ஸ்"ன்னு வச்சிட்டேன் இப்போ ஒரு நாயும் என் பக்கத்துல வாறதில்லை"

"அண்ணே போங்க போங்க"
 

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும்" பாட்டோடு தூரத்தில் "என் ராஜபாட்டை"ராஜா வெறியோடு வருவதை பார்த்து மனதினுள் "ஆஹா ஆபீசர் வீட்டு கல்யாணத்துக்கு வந்து அருகில் இருந்து "அண்ணே இங்கே நாங்க ரெண்டே ரெண்டுபேர் மட்டுமே ஹீரோ எப்பிடின்னு சொல்லுங்க பார்க்கலாம் ?"

"வாத்தி இங்கே ஒரே ஒரு ஹீரோதான் அது மாப்பிளை மட்டும்தான்"

"நான் சொல்லட்டுமா ?"

"சொல்லி தொலை"

"மாப்பிளை பேரும் ராஜா, என் பெயரும் ராஜா"ன்னு சொல்லி காதுல ரத்தம் பார்த்தவனாச்சே..."

"வா வா வா வாங்க வாத்தி நலமா ?"

"அண்ணே நாம இருக்குறது மதுரை..."மறித்து 

"பிச்சிபுடுவேன் பிச்சி, மரியாதையா அடைமொழிக்கு அர்த்தம் சொல்லிட்டு அப்பிடியே உள்ளே போயிரு ஆமா..."

முட்டுல கைவைத்து குனிந்து நின்று யோசிக்குறார்.

"நம்மளை நாமே என்னைக்கும் தாழ்த்திக்க கூடாது என்பதற்காக...அது என்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்பது என் ஆசை அதன் விளைவு இந்த பெயரு, அண்ணே அந்த மதுரை..."

"போய்யா போ கிளம்பிட்டாங்க..." என்று அலற...

"என்ன சத்தம் அங்கே ?" ஆபீசர் ஓடி வர..."
 

"என்ன மனோ ஒரே சத்தமா இருக்கு யாரோ அடிச்ச மாதிரி ?"

"ஆஹா இது வேறயா ஆபீசர்ர்ர்ர்ர் அது ஒண்ணுதான் பாக்கி, பஹ்ரைன்ல இருந்து வல்கரா தூக்கிட்டு  வந்து மாட்டிகிட்டு முழிக்குறேன்...இன்னும் எதெல்லாம் வந்து வயித்தை கலக்கப் போகுதோ..."

"அதோ தூரத்துல வாறது நம்ம மெட்ராஸ் பவன் சிவா மாதிரி இருக்கே மனோ..."

"அய்யய்யோ ஆபீசர், போன்லயே நான்ஸ்டாப்பா பேசுவானே ஆபீசர், இன்னைக்கு என்னவாகபோகுதோ ?"

தொடரும்...

நோ சீரியஸ் கூல்....

7 comments:

  1. ஹாஹாஹாஅ....மனோ செம கும்மிதான் போங்க....தாங்கலைங்க! இன்னும் யாரெலாம் மாட்டிக் கிழியப் போறாய்ங்களோ! சூப்பர்...கலக்குங்க....

    ReplyDelete
  2. நாங்க ரெண்டு பேரு எழுதருமல...நாரோயில்லதான் படிச்சோம்.....இந்து காலேஜ்ல.....எங்க ரெண்டு பேருல கீதா, திருப்பதிசாரம்...தேரேகால் புதூர் பக்கத்துல.....

    ReplyDelete
  3. வாசிக்கு இப்படி அடி எதிர்பார்க்கவில்லை:))) பகிர்வு சூப்பர் கமடி!

    ReplyDelete
  4. எங்க மதுரைல, தங்க மதுரைல எல்லாத்தையும் வரவேற்று சூப்பரான வேலை பண்ணியிருக்க மனோ... தமிழ்வாசிக்கும் நாய் நக்ஸ்க்கும் இப்புடி ஒரு டெரரான பேக்ரவுண்ட எதிர்பாக்கவே இல்ல... அதுசரி... நக்கீரனை விடவா மெட்ராஸ் பேசிடப் போறாரு...? மைல்டா ஒரு டவுட்டு?

    ReplyDelete
  5. சந்திப்பிற்கு போவதற்கு முன்னமே....
    அழகான முன்னோட்டம் மக்களே...
    அண்ணன் நக்கீரன்...கோவை சரளாவோடு வாராரா??!!! ஹா ஹா ..
    ஆபீசர் வந்தவுடன் களைகட்டுது போங்க...

    ReplyDelete
  6. ஹா... ஹா... அண்ணா கலாய்தல் சிறுகதை போல இருக்கு.. தொடருங்கள்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!