Thursday, October 21, 2010

தமிழ் நாடு டூ கேரளா

           என்னோடு பணி செய்யும் மலையாளி நண்பனின் ஒரு அதிர்ச்சி தகவல், என்னை கிலி கொள்ள வைத்தது, இது உண்மையா இல்லையா  என்பதை வாசகர்கள் கையில் விடுகிறேன்.
       பல வருஷமாக இந்த நண்பன் என்னோடு கூட வேலை செய்கிறான். முல்லைபெரியார் பிரச்சினைய சொல்லி சொல்லி அவனை நான் கலாய்ப்பதுண்டு, 
  மலையாள எழுத்தாளர், சக்கரியா அவர்கள் ஒரு பத்திரிக்கையில் இப்படியாக எழுதி இருந்தார், கறிவேப்பிலையில் இருந்து, குருவாயூர் கோவிலுக்கு செலுத்தும்
பூக்கள் வரை தமிழ்நாட்டில் இருந்துதான் வருகிறது, பின்னே ஏன் தண்ணீர் தர மறுக்கிறார்கள்  என!!![[உண்மைதானே]]
            நண்பன் என்னோடு பேசும் போது இதெல்லாம் அரசியல் மனோ, என சொல்லி விடுவான்,
            இப்படி இருக்கும் வேளையில் அவன் லீவில் ஊர் போனான், போய்விட்டு திரும்பி வந்தவுடன் அவன் சொன்ன காரியம்தான் நான் மேலே சொன்ன அதிர்ச்சி!!
            இவனும் நண்பர்களுமாய் ஊட்டி சுற்றுலா போனார்களாம்......போகும் வழியில் இயற்கையை ரசித்து கொண்டே போனவனுக்கு என் நினைவு [[தமிழ் நாடு போன பின்தான் என்னை நினைச்சிருக்கான் பாருங்க]] வர, முல்லைபெரியாரும் நினைவுக்கு வந்து தொலைக்க, இவன் காய்கறி தோட்டங்களை கூர்மையாக கவனித்தும் ரசிப்புமாக போகும் போது, ஒரு இடத்தில் விவசாயிகள் தோட்டத்தில்[[பூசணி]] வேலை செய்வதை கண்டு, காரை நிறுத்தி விட்டு அவர்களை பார்ப்பதற்காக [[நன்றி உணர்ச்சியாம்]] போனானாம்.
போய் பார்த்து அவர்களோடு பேசி இருக்கிறான்[[இவனுக்கு தமிழ் நன்றாக தெரியும், காரணம் ஒட்டன்சத்திரத்தில் படித்தவன்]] பேச்சின் ஊடே கவனிக்கும் போது, அவர்கள் தோட்டத்தில் பூச்சி மருந்து அடித்து கொண்டிருந்தார்களாம், மருந்தை அவன் கவனித்த போது அதிர்ச்சி அடைந்தவனாய் கேட்டிருக்கிறான் இந்த மருந்தை ஏன் தெளிக்கிறீர்கள் என கேட்க்க, இந்த மருந்தை அடித்தால் சீக்கிரமாக செடி வளரும் என சொல்லியிருக்கிறார்கள். ஐயோ இது  மனிதனுக்கு அதிக கேட்டை விளைவிக்கும் மருந்தல்லாவா என்று இவன் அலற,
   விவசாயிகள் கூலாக சொன்ன பதில், "இந்த காய்கறிகளை நாங்க சாப்பிட மாட்டோம்", கேரளாவிற்கு அனுப்பி [[விற்க]]விடுவோம்னு சொன்னார்களாம்!!!!
       இப்போ நண்பன் என்னிடம் கேட்டான், முல்லைபெரியார் தண்ணீர் வேணுமா வேண்டாமான்னு,  இப்போ இதை சொல்லி சொல்லியே  என்னை பயங்கரமாக கலாய்கிறான்.....




  என்ன வாசகர்களே பதில் சொல்லுங்கப்பு....
   

3 comments:

  1. //தமிழ் நாடு போன பின்தான் என்னை நினைச்சிருக்கான் பாருங்க]] //

    ஹஹஹ அப்படியாவது ஞாபகம் வச்சுருக்காரே...:(

    அந்த விவசாயி சொன்னது செம காமெடியா இருக்கு...ஆமா இதுல நீங்க ஏன் அதிரச்சியாகறீங்க...
    உங்க மலையாள நண்பரதானே அதிர்ச்சியாகனும்....:))

    ReplyDelete
  2. //என்ன வாசகர்களே பதில் சொல்லுங்கப்பு....//

    அண்ணாச்சி கடை தொறந்து வச்சுகிட்டு வாசகர்களே பதில் சொல்லுங்கன்னா எப்படி வருவாங்க...?
    பதிவை தமிழிஷ், இன்ட்லி எல்லாத்துலயும் இணைங்க அப்பத்தான் வருவாங்க...
    என்னமோ போங்க அண்ணாச்சி....:))

    ReplyDelete
  3. "இந்த காய்கறிகளை நாங்க சாப்பிட மாட்டோம்", கேரளாவிற்கு அனுப்பி [[விற்க]]விடுவோம்னு சொன்னார்களாம்!!!!//

    இது சாதாரண மனித இயல்பு. "ஐம்பதாயிரம் கிலோ மீட்டர் ஒட்டிடேன், செலவு வச்சுடும் போல இருந்தது, அதான் தள்ளிவிட்டுடேன்" என்பார்கள்.
    பயன்படுத்துவது இவர்கள், செலவு செய்ய மற்றவர்கள். இது போன்ற மன நிலை மாற வேண்டும்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!