பறவைகள் அனைத்தும் எங்கள் பந்தங்கள் என்கிறார்கள் ஆரப்பள்ளம் கிராமத்தினர். மைனா, குருவி, காக்கை, மடையான், கொக்கு, சிறவி, நாரை என்று ஆரப்பள்ளத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் மரங்களில் விதவிதமான பறவையினங்கள் தங்க இடம் அளித்திருக்கிறார்கள் இந்த மக்கள். லட்சக் கணக்கான பறவைகளின் புகலிடமாக இருக்கிறது இந்தக் கிராமம். பறவைகள் சரணாலயம் என்று இதைச் சொல்ல முடியாது.
ஏனென்றால், சரணாலயம் என்றால், சீஸனுக்கு மட்டும்தான் பறவைகள் வந்து தங்கிச் செல்லும். இது பறவைகளின் வசிப்பிடம். இங்கேயே பிறந்து வளர்ந்து, வாழ்நாள் முழுவதும் இங்கேயே தங்கி காலத்தைக் கழிக்கின்றன இங்கு உள்ள பறவைகள்!
நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் இருக்கிறது இந்த ஆரப்பள்ளம் கிராமம். சுமார் 200 வீடுகளைக் கொண்ட சிறியகிராமம் தான். தென்னை, பூவரசு, கிளுவை, ஒதியம் ஆகிய மரங்கள் நிறைந்தும் சுற்றிலும் பசுமையான வயல்வெளிகளால் சூழப்பட்டும் காட்சி தருகிறது. இந்த அமைதியான சூழல்தான் பறவைகள் தங்கள் உறைவிடம் இதுதான் என்று தேர்வுசெய்யக் காரணம்.
''தென்னை மரம் அடர்த்தியா இருந்த ஊர் இது. அந்த மரங்கள்ல முதல்ல கூடு கட்டினது காக்காதான். ஊரோட பரபரப்பு எதுவும் இல்லாம ராத்திரி அமைதிக்கு எந்த இடைஞ்ச லும் இல்லாம இருந்த இந்த இடம் அதுங் களுக்கு ரொம்பப் பிடிச்சுட்டுதுபோல. அது மட்டும் இல்லாம, அதுங்க இரை தேடிப்போக சுத்துவட்டாரத்தில் ஏகப்பட்ட இடங்கள் இருக்கு. எங்க ஊரைச் சுத்தி குளம், குட்டை, வாய்க்கால்னு ஏகப்பட்ட நீர்நிலைகள் இருக்கு.
அதனால, இங்க தங்குற பறவை களோட எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சு இப்ப ஒவ்வொரு மரத்திலும் மரம் கொள்ளாத அளவுக்குப் பறவைங்க வந்துடுச்சு. அதுங்க கிளம்புற காலை நேரத்திலும், வந்து சேருகிற மாலை நேரத்திலும் தவிர, மத்த நேரங்களில் எங்களுக்குத் தொந்தரவு ஏதும் இல்லைங்கிறதால நாங்க இதைப் பெருசா எடுத்துக்கிறது இல்லை. என்ன ஒண்ணு, ஏதாவது காயவெச்சா, சாயங்காலம் அதுங்கள்லாம் வர்றதுக்குள்ள எடுத்து வீட் டுக்குள்ள வெச்சிடணும். மறந்தும் வெளிய வெச்சிடக் கூடாது. அவ்வளவுதான்'' என்று தங்கள் கிராமத் துக்கும் பறவைகளுக்கும் உள்ள தொடர்பின் நேசத்தைச் சொல் கிறார் அம்சு.
காலை 4 மணிக்கு எல்லாம் விழித்துக்கொள்கின்றன பறவைகள். அவற்றின் இரைச்சல்களால் அங்கு உள்ள மனிதர்களும் விழித்துக்கொள்கிறார்கள். ஒரு மணி நேரம் இரைச்சல் முடிந்து 5 மணிக்கு வெளியே கிளம்ப ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு திசைகளைத் தேர்ந்தெடுத்துப் பறக்கின்றன. 6 மணிக்கு முன்னதாக அவை ஊரைக் காலிசெய்து பறந்துவிடுகின்றன. அதன் பின் மாலை 5 மணிக்கு ஊர் திரும்புகின்றன.
அரை வட்டமாக வருகின்றன நாரைகள். படகுபோல் அணிவகுத்து வருகின்றன சிறவிகள். கிரீச்... கிரீச் என்று கத்திக்கொண்டு வட்டமாக வருகின்றன குருவிகள். கா... கா... என்று காது கொள்ளாத இரைச்சலோடு வரும் காக்கா கூட்டம், நேராகத் தங்கள் இருப்பிடத்துக்குப் போவது இல்லை. அருகில் உள்ள வரப்பில், மின்சார லைனில், சாலையில் சிறிது உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைக் கொஞ்சநேரம் அலசிக்கொண்டு இருந்துவிட்டு, சற்று இருட்டியவுடன் மரங்களை நோக்கிக் கிளம்புகின்றன. மரங்களில் அடையும்போது கேட்கும் சத்தம் இசைபோல் இனிக்கிறது.

''எங்கள் ஊருக்குள் வேட்டைக்காரங்க யாரும் வர முடியாது. ஊரே சேர்ந்து விரட்டி அடிச்சுடுவோம். எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்தப் பறவைங்க எங்க குடும்பத்துல ஒரு அங்கம். ரேஷன் கார்டுல பேர் இல்லையே தவிர, எங்க வீட்டு மரத் தில் வந்து தங்கும் பறவைகளை எங்களால் இனம் கண்டுக்க முடியும். அதுங்க சாகும் வரை ஒரே இடத்தில்தான் தங்கும். அதனால, சாயங்காலத்துல சில பறவைங்க திரும்பலைன்னா மனசு பதறும்'' என்று நெகிழ்கிறார் கல்லூரி மாணவர் வினோத்.
தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் மட்டைகளைக் கீற்று முடைந்து விற்பதுதான் இவர்களின் முக்கிய வருமானம். பல சமயங் களில் கீற்று முழுவதும் பறவை எச்சங்களாக ஆகிவிடுவதால் வேலை பாதிக்கப்படுமாம். அதுபோல், தானியங்களை வெளியே காய வைப்பதும் சிரமமாம். ஆனாலும் அதற்காக இங்குள்ள யாரும் பறவைகளை வெறுக்க வில்லை. பறவைகளின் வாழ்க்கையோடு இயைந்து, தங்கள் வாழ்க்கையை வாழப் பழகிவிட்டார்கள் ஆரப்பள்ளத்துக்காரர்கள்!!!!!
டிஸ்கி : ஆபீசர் தலைமையில் இன்றும் நெல்லையில் மினி பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது, சிறப்பு விருந்தினராக நம்ம துபாய் ராஜா வருகிறாராம். இதில் கலந்து கொள்ளும் எல்லாருக்கும் நாஞ்சில்மனோ'வின் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...[[ பெல்ட் பத்திரமா இருக்குதானே...??? ஹி ஹி...]]
நன்றி : விகடன்.
நல்ல ஊர்... நல்ல மக்கள்...
ReplyDeleteதகவல் பகிர்ந்ததற்கு நன்றி மனோ...
மக்கா காக்கா குருவிகள் சவுக்கியமா?
ReplyDeleteநெல்லை மினி(சந்திப்பு)க்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநம்ம தளத்தில்:
வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
அண்ணே வணக்கம்னே...வாழ்த்துக்கள் மினி பதிவர் சந்திப்புக்கு அண்ணே!
ReplyDeleteநல்ல பதிவு.... நல்ல மக்கள்...
ReplyDeleteமினி சந்திப்புக்கு வாழ்த்துக்கள்....
பசுமையான அந்த கிராமத்து மக்களுக்கு வாழ்த்துக்கள்..........
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபகிர்விற்கு நன்றி
ReplyDelete//கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...
ReplyDelete//
நான் கத்தியால குத்துவேன்
பறவை நேய மக்கள் வாழ்க!
ReplyDeleteஒத்தைக் காக்காவைப் பார்த்தால் பள்ளி நாட்களில் one for sorrow என்று வருத்தப் படுவோம்!! :-))
சற்று முன் கிடைத்த தகவல் படி ......
ReplyDeleteபதிவு உலக ..........
அன்பின் நண்பர்கள் ,
அன்பின் தோழிகள் ,
அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
இன்று
"ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
நேரம் :மாலை 5 மணி .
வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
அன்புடன்
யானை குட்டி
http://yanaikutty.blogspot.com

:)
ReplyDeleteநல்ல பதிவு பாஸ்!
ReplyDeleteநல்ல பதிவு...
ReplyDeleteபகிர்ந்ததற்கு நன்றி.
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஆமா, அந்த பெல்ட் எதுக்கு?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி....
ReplyDeleteநல்ல ஊர்..நல்ல மக்கள்....நல்ல மனசு....
பறவைகளை உறவுகளாக்கி கொண்ட மனிதர்கள். மகிழ்ச்சி.
ReplyDeleteதீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மாட்டாங்க அப்படின்னு படிச்சேன், அது இந்த ஊர் தானா அண்ணே...
ReplyDeleteமத்த உயிர்கள தன் உயிர் போல பேணும் அக்கிராமத்தவரை பார்த்து நாமும் மனித நேயத்தை கற்று கொள்ள வேண்டும் சகோ
ReplyDeleteநல்ல மக்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணே.. மினி பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநெல்லை மண்ணே தனிதான்.
ReplyDeleteஆரப்பள்ளத்துக்காரர்களுக்கு எனது நன்றிகள்....
ReplyDeleteமக்களே...
ReplyDeleteஅந்த ஊர் இருக்கும் திசை நோக்கி
விழுந்து கும்பிடனும்..
மனிதாபிமானம் அறவே இழந்திருக்கும்
இவ்வேளையில் இப்படியும் மக்களா????
பகிர்வுக்கு நன்றி. அந்த நன்மக்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.............
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே ,கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது
ReplyDeleteநான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கேன். இருந்தும் உங்கவலையில் பதிவாப் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteபடங்கள் மனதை வசீகரிக்கிறது. அதுவும் அந்த தென்னைமரம் உள்ள படம்.. கண்ணுக்கு குளிர்ச்சி..!!வாழ்த்துக்கள் மனோ சார்..
எனது வலையில் இன்று:
ReplyDeleteஉங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
இப்படிகூட மக்களா??? நல்ல பதிவு. மனிதாபிமானம் இன்னும் இருக்கு அந்த ஊரில்.
ReplyDelete( வலது புறம் உங்க வீடியோ போட்டு... சூப்பர் போங்கள் )
உண்மையில் இந்த ஜீவன்களை பாதுகாக்கும் அந்த மக்களை பாராட்டனும்!
ReplyDeleteநெல்லைப்பதிவாளர் சந்திப்பு இனிய தொடராக வந்தால் இன்னும் மகிழ்வேன் முன்னர் நாஞ்சில் தொடர் எழுதியது போல யாரு மக்கா பெல்டை உருவுவது !அவ்வ்
ReplyDeleteஅழகான பதிவு,பகிர்வுக்கு நன்றிங்க...
ReplyDeleteசந்தோஷமாயிருக்கு மனோ.இவர்களது இயல்பு வாழ்க்கை மாறாமலிருக்கவேண்டும் !
ReplyDeleteஇனிய காலை வணக்கம் அண்ணே,
ReplyDeleteபறவைகளை ஆதரிக்கும் ஆரப்பள்ளம் மக்களுக்கு வாழ்த்துக்கள்!
மினி பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல தகவலை பகிர்ந்ததற்கு நன்றி மனோ சார்...
ReplyDeleteமனித நேயமே அற்றுவரும்
ReplyDeleteஇக் காலத்தில் பறவைகளின் பால்
பாசம் காட்டும் அக் கிராம மக்கள்
வணக்திற்கு உரியவர் மனோ!
வாழ்க! அவர்கள்!
புலவர் சா இராமாநுசம்
நன்றி மாப்ஸ்....
ReplyDelete