Wednesday, November 23, 2011

செல்லகிளி பேச்சு கேட்கவா.......!!!

சகோதரியும், தோழியுமான மனோ சாமிநாதன் அவர்களும், மற்றும் நண்பர்கள், தோழிகளின் எல்லாரின் அழைப்பை ஏற்று குழந்தைகள் பற்றி என் சொந்த அனுபவங்களை சொல்லியுள்ளேன்.

எனக்கு பொதுவாவே குழந்தைகள் ரொம்ப பிடிக்கும் சின்ன வயசில் இருந்தே, எங்க வீட்டில் முதல் குழந்தை என் மூத்த அண்ணன் மகன் ஜோஸ்வா, நான் மும்பையில் இருந்து லீவுக்கு போகும் போதெல்லாம் அவனையும் சைக்கிளில் வைத்துதான் ஊர் சுற்றுவேன் நண்பர்களுடன், அவன் கேட்பதெல்லாம் பட்டாம்பூச்சியும், பொன்வண்டும், மீன்களும்தான்...


அவைகளை அவனுக்கு பிடித்து கொடுப்பதில் நான் படும் அவஸ்தையை கண்டு எங்க அண்ணி சிரித்து, கிண்டல் பண்ணி மகிழுவார்கள். நான் பிடித்து கொடுத்ததும் அவன் அடையும் சந்தோசம் இருக்கே, அடடா நானும் குழந்தை ஆகிவிடுவேன் அவனோடு.....நான் அப்போது கள்ளத்தனமா சிகரெட் பிடிப்பதை செய்கை மூலம் வீட்டில் போட்டு குடுத்ததும் அவன்தான்....

அடுத்து பிறந்தது என் அக்காள் மகள் மெர்ஸி, இவள் ஊரில் பிறந்து மும்பை கொண்டு வரும்போது, மும்பை தாதர் ரயில்வே ஸ்டேசனில் அக்காள் குடும்பத்தை வரவேற்க போயிருந்த போது, யாரும் வா என்று கைகாட்டினால் போகவே மாட்டாளாம், நான் கை நீட்டியதும் அவள் கைநீட்டி என்னை தூக்க சொன்னாள், அக்காளுக்கும் அத்தானுக்கும் ஆச்சர்யம்....!!!

என் மகள் ஜோஸ்லி ஸ்வீட்டி சுருக்கமாக ஜாய், அக்காள் மகன் மெல்க்கு....

மும்பையில் எனக்கு வேலை முடிந்ததும், அவளை தூக்கி வரச்செய்து ஆவலுடன் நானும் குழந்தையாக விளையாடுவேன் அவளோடு, அடுத்து என் மகன் பிறந்தான், இன்னொரு கசின் அக்கா குழந்தைகள், ஜூலியா, ஏஞ்சல் இவர்கள் எல்லாம் பிறந்து வாய் பேசும் தருணம், விதி என்னை வெளிநாட்டுக்கு துரத்தியது....

அக்காள், அண்ணன் பிள்ளைகள் மும்பை வாட்டர் கார்டன் முன்பு பந்து விளையாடுகிறார்கள்...

லீவில் ஊர்வரும்போது, என் அக்காள்கள் பிள்ளைகள் மூன்று பேரையும், அந்தந்த நேரத்துக்கு ஸ்கூல் விடுவதும், அழைத்து வருவதும் நான்தான், அக்காக்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும் அவர்களுக்கு அலைச்சல் மிச்சம்...

பைக் பின்னாடி, முன்னாடின்னு இவர்களை வைத்து கொண்டு போகும் போது, என்னை அணைத்து பிடித்திருக்கும் பிஞ்சு விரல்கள் என்னை சொர்க்கத்துக்கே கொண்டு செல்லும்...

அதுவுமல்லாமல், ஸ்கூல் முடியும் போது, என்னை நோக்கி ஓடி வரும் அழகு இருக்கே தேவதைகள் எல்லாம் அதற்கு முன்பு ஜுஜிபி, அதுவும் அல்லாமல், என்னை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி அவர்கள் மகிழும் அந்த தருணம் இருக்கே, தேனாக இனிக்கும் தருணம், ஹேய் ஸீ திஸ் இஸ் மை மனோ மாமா...


எல்லாருமே என்னை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள் [[இப்போதும்]] மனோ மாமா, மனோ சித்தப்பா, வீட்டில் எல்லாருக்கும் இளையவன் என்பதாலா அல்லது பாசத்தாலா என்று இதுவரை தெரியாது, பெரியவர்களும் பிள்ளைகளை அதட்டியும் பிரயோஜனம் இல்லை, அவர்கள் பெயர் சொல்லித்தான் உறவை சொல்லுவார்கள், நல்லகாலம் என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி..எங்கள் குடும்பத்தில் வேறு யாரையும் இவர்கள் பெயர் சொல்லி அழைப்பது இல்லை என்று சொல்லி, குடும்பத்தார் ஆச்சர்யமாக மகிழ்வதை பார்த்துருக்கேன்...


ஸ்கூல் லீவு நாட்களில் என்னோடுதான் இருப்பார்கள், பூங்கா. மும்பை ஏர்போர்ட்'ன்னு பைக்ல அள்ளிப்போட்டு கொண்டு போவேன், அவர்கள் ஆசையெல்லாம், பானி பூரி சாப்பிடுவது, இலந்தை பழம், வெட்டி உப்பு போட்டு வைத்திருக்கும் மாங்காய், கடலை, குச்சி மிட்டாய் இப்பிடி போகும் லிஸ்ட்....

மும்பை, தானா சூரஜ் வாட்டர் கார்டன்..

அவர்களோடு நானும் திங்கவேண்டும் என்று வாயில் ஊட்டி விடும் தருணம் கவிதையோ கவிதை, அந்த ருசி ஜென்மத்தில் கிடைக்காது...!!! அவர்களுக்குள் நடக்கும் செல்லசண்டைகளை நாட்டாமை செய்யும்போது, நானும் குழந்தையாகி விடுவேன்...

நான் மறுபடியும் வெளிநாட்டுக்கு திரும்பும்போது, ஏர்போர்டில் இவர்கள் முகம் வாடி இருப்பதை பார்க்கும் போது, வாழ்க்கையை நினைத்து மனதுக்குள் ரத்தகண்ணீர் வடிப்பேன், எங்க அக்காமாரும் ஒரே புலம்பலா புலம்புவாங்க, மூணுமாசம் எங்களுக்கு ரெஸ்ட் கிடச்சுது நீ போனப்புறம் இனி நாங்கதான் ஸ்கூலுக்கு அலையனும்னு, போற வாரப்போல்லாம், மனோ மாமா அதை வாங்கி தந்தாங்க இதை வாங்கி தந்தாங்க நீங்களும் வாங்கி தாங்கன்னு கடுப்பெத்துவாங்களே என்று புலம்புவார்கள் சந்தோசமாக....


அடுத்து எனக்கு மகள் பிறந்தாள் கிறிஸ்மஸ் தினத்தில், குடும்பமே மகிழ்ச்சி கொண்டது இவள் கிறிஸ்மஸ் அன்று பிறந்ததால் [[ஹி ஹி எனக்கு ரெட்டை செலவு வச்சிட்டாள் என் செல்லம்]] 

ஊர்ந்து நடக்கும்போது, பேசத்தெரியாததால் என்னை ஆத்தா ஆத்தா என்று கூப்பிடுவாள், ஒருநாள் பகலில் தூங்கி கொண்டிருக்கும் போது ஆத்தா ஆத்தா என்று அழைத்தவாறே ஊர்ந்து வரவும், பயபுள்ள நம்ம கூட படுத்துறங்க பாசமா வாராளேன்னு தூக்கி பெட்டுல வச்சி தூங்கசொன்னா, அவள் பெட்டுக்கு மேலாக இருக்கும் செல்பில் உள்ள விளையாட்டு சாமான்களை எடுத்து வச்சி விளையாடிட்டு இருக்கிறாள், அதுதான் குழந்தை உலகம்...!!!


[[நானும் குழந்தைதான் ஹி ஹி, மதுரை தமிழன் என்னை பால்காரன் மனோ'ன்னு கலாயிச்சி கிராப்பிக்ஸ் பண்ணி அனுப்பிய மெயில் போட்டோ....]]

இப்போ பிள்ளைகள் வளர்ந்து விட்டாலும், தூர இடங்களுக்கு இடம் மாறிவிட்டாலும், நான் ஊர் போனால் ஓடி வந்து வளைந்து கொள்வார்கள், இந்த முறை ஊர் போனபோது, அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, கார் பிடித்து, மும்பை, தானா'வில் உள்ளா சூரஜ் வாட்டர் கார்டன் அழைத்து சென்றேன்...


ஆஹா நானும் குழந்தையாக அவர்களோடு தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தேன், அங்கே மியூசிக் போட்டு செயற்கை மழை பொழிய செய்கிறார்கள், அங்கே போயி நானும் அவர்களோடு குழந்தையாக நடனம் ஆட, என் மனைவி ரசிச்சுட்டு இருந்தாங்க...!!!

[[நானும் குழந்தையாக அவர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது எங்க பெரிய அண்ணி எடுத்த போட்டோ...]]

வெளிநாட்டு வாழ்க்கை, குழந்தையோ குடும்பமோ அருகில் இல்லாமல் தனிமரமாக வாழும் வாழ்க்கை இருக்கே வேதனை, சரி இந்த வருஷம் ஊரில் செட்டில் ஆகிறலாம், அதோ அந்த வருஷம் செட்டில் ஆகிரலாம்னு, நினைக்கும் நேரம், குழந்தைகளின் வளர்ச்சி, குடும்பத்தின் தேவைகளின் அத்தியாவசியங்களும், பணத்தின் செலவுகளும், நம் கணக்கை மீறி தாண்டுவதால், என்னைபோன்றவர்கள் இங்கே தவித்து கொண்டு இருக்கிறோம்....!!!

ஒ தொடர்பதிவுக்கு ஆளை கூப்பிடனுமா....? நான் போன் பேசும் போதெல்லாம் தன் மகனுடன் விளையாடி கொண்டே, இருக்கும் குழந்தை விக்கியை அழைக்கிறேன்...

சிபி'யை அழைக்கிறேன் [[வருவானா...?]]

வேடந்தாங்கலும் குழந்தையோடு இருப்பதால், கருனை'யும் அழைக்கிறேன்......!!!


42 comments:

  1. தம்பி லேப்டாப் மனோ, க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்குடா

    ReplyDelete
  2. உங்க உணர்வுகளை அழகாக சொல்லியிருக்கீங்க.

    குழந்தைகள பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வரும் போது நம்மைப்பார்த்து சந்தோஷமா ஓடிவருவாங்களே அப்போது நாம் அடையும் சந்தோஷத்திற்கு அளவே இல்லைதான்.

    ReplyDelete
  3. தம்பி லேப்டாப் மனோ, க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்குடா
    // APPO THALLI VACHU PAARUNGANA...

    ReplyDelete
  4. மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  5. மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  6. மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  7. எங்க அண்ணா ஒரு குழந்தை
    என்பது எந்த பதிவு மூலம் தெரியவருகிறது
    பாசமான பதிவு
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. சி.பி.செந்தில்குமார் said...
    தம்பி லேப்டாப் மனோ, க்ளோசப்ல உன்னை பார்க்க பயமா இருக்குடா//

    அந்த பயம் வேணும்டா உனக்கு ஹி ஹி...

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு அண்ணே!!..

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் மனோ சார்...

    என்றும் நட்புடன் சிநேகிதி
    http://en-iniyaillam.blogspot.com/2011/11/blog-post_24.html

    ReplyDelete
  11. நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க நண்பரே...

    ReplyDelete
  12. குழந்தைகளோடு விளையாடும்போது நாமும் குழந்தைகளாகி விடுகிறோம். மறக்க முடியாத இனிய நினைவுகளை அழ்காகப் பகிர்ந்து கொண்டீர்கள்!

    ReplyDelete
  13. குழந்தைகளுடன் குழந்தையாக மாறி விளையாடும்
    அனுபவமே தனி சுகம் தான்...
    அழகான தருணங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு
    மனம் மகிழ்வான நன்றிகள் மக்களே...

    ReplyDelete
  14. குழந்தை(மனசு)பதிவர் மனோ என இனி அழைக்கப்படுவீர்கள்!

    ReplyDelete
  15. குழந்தைகளிடம் அன்பாக இருப்பதால் . இன்று முதல் நீர் நேரு மனோ என்று அன்போடு அழைக்கபடுவீர்......
    ...........................(புலிகேசி)..............................................

    ReplyDelete
  16. மனோ....

    இதுவரை பதிவுகளில் நான் படித்தவரை எனக்கு தெரிஞ்ச மனோ வேற....

    இந்த மனோவைப்பற்றி படிக்கும்போது மனோவின் முழுமையான அன்பும் குழந்தை மனமும் குழந்தைகள் மேல் வைத்திருக்கும் அளவில்லா பாசமும் உறவுகளின் மதிப்பும், இன்னும் எத்தனையோப்பா.... ஆச்சர்யமா படிச்சுக்கிட்டே வந்தேன்...

    ஏன்னு தோணியிருக்குமே.. தோணனுமே, தோணினா தான் அது மனோ.... ஏன்னா.....

    நான் ஊருக்கு போனப்ப என் தங்கை, அம்மா கிட்ட பேச நிறைய விஷயங்கள் இருந்திச்சு, வெளிநாட்டில் இருக்கும் நம் போன்றோருக்கு பேச என்ன விஷயங்கள் இருக்கும்? நாம் சந்தித்த மனிதர்களைப்பற்றியும் வலைப்பூவில் பதிவர்களைப்பற்றியும் சொல்ல நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இருக்கும்போது....

    உங்க பதிவு பற்றியும் சொல்லி மகிழ்ந்தோம்... அப்படி பார்த்த மனோவை இப்ப இப்படி பார்க்கும்போது உங்க மேலே மதிப்பும் கூடுகிறது... அட இது தான் மனோவின் இயல்பான குணம் என்று தெரியவரும்போது சந்தோஷமும் ரெட்டிப்பாகிறதுப்பா...

    அண்ணன் அக்கா குழந்தைகளை அவர்களின் மழலையை அவர்களுடன் போடும் செல்ல சண்டைகளை இப்படி சிலாகித்து சொல்லும்போது நீங்க குழந்தைகளுடன் குழந்தையாக மாறி அவர்களுடன் சந்தோஷமாய் கழித்த நாட்களை எங்களுடன் பகிரும்போது நாங்களும் உங்களுடனே பயணித்தோம் என்பதும் உண்மை....

    ஹூம் எனக்கும் மனோ சித்தப்பா மாதிரி ஒரு சித்தப்பா இருந்திருந்தா நல்லாருந்திருக்கும் அப்படின்னு படிப்பவர்கள் அனைவரையும் நினைக்கவைக்க பதிவு மனோ இது...

    குழந்தைகளே உலகம் என்று வாழ்ந்த உங்களுக்கு இப்படி தனியாக வெளிநாட்டில் வசிக்கும்படி இருப்பது நிஜமாவே கொடுமை தாம்பா....

    ஊரில் இந்த வருடம் செட்டிலாகிவிடலாம் அடுத்த வருடம் செட்டிலாகிவிடலாம் என்று நினைக்கும்போதெல்லாம் வீட்டின் பொருளாதாரமும் அவசியங்களும் நம்மை செட்டில் ஆக விடுவதில்லை உண்மையேப்பா....

    ரசித்து படித்து மனம் நெகிழ்ந்தேன் மனோ....

    குழந்தைக்கு என் மனம் நிறைந்த அன்பு ஆசிகளுடன் கூடிய அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்பா...

    மனம் சரியில்லாதநிலையில் யாருடனும் பேசாமல் (பதிவிடாமல்) இருந்ததுக்கு எங்கே என் சோகம் என்னை மீறி என் கைவழி வழிந்து வரிகளில் தெறித்து எல்லோர் மனம் வருந்த வைத்துவிடுமோ என்ற பயம் தான் என்னை ஒதுங்கி இருக்க வைத்ததுப்பா..... அப்போதும் வந்து மன ஆறுதல் சொன்னதுக்கு அன்பு நன்றிகள்பா..... இறைவன் அருளால் என்றும் நீங்களும் உங்களை சுற்றி இருப்போரும் உறவுகளும் நட்பும் நலமுடன் இருக்க என் அன்பு பிரார்த்தனைகள் மனோ...

    ReplyDelete
  17. அருமையாக நினைவுகளை பகிர்ந்தது அழகாக உள்ளது.குழந்தைகளோடு செலவழிக்கும் நேரத்துக்கு அளவே இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கும். உங்கள் இந்த பதிவை படிக்கும்போது ஏதோ இனம்புரியாத சந்தோசம் மனதில் குடிகொண்டுள்ளது.

    நல்ல பகிர்வு மனோ..

    ReplyDelete
  18. குழந்தைகளோடு குழந்தையாய் மாறிய தருணங்களை வாசிக்கும் போது ரொம்பவே ஏக்கமா இருந்துச்சு. குழந்தை பருவத்தில் நமக்கும் இப்படியொரு சொந்தம் இல்லையே என :-(

    உங்களுக்கு தோழியும் சகோதரியும் நான் தான். ஆமினா கூட என் பேரு தான். ஆனா தொடர்பதிவுக்கு உங்களை அழைத்த ஆமினா நானா :-)

    ReplyDelete
  19. நண்பா கலக்கலா அதே நேரத்துல சில வேதனைகளையும் சொல்லி இருக்கீங்க...அசத்தல் பதிவு!..நான் ரெண்டு நாள் கழிச்சி எழுதறேன்..மன்னிக்க!

    ReplyDelete
  20. என்னை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி அவர்கள் மகிழும் அந்த தருணம் இருக்கே, தேனாக இனிக்கும் தருணம், ஹேய் ஸீ திஸ் இஸ் மை மனோ மாமா...


    மகத்தான மழலைகள் உலகத்தில் மனோமாமா.. வாழ்த்துகள்..

    ReplyDelete
  21. மிக்க நன்றி மஞ்சு, பதிவுக்குள் பதிவு போட்டு மெய்சிலிர்க்க வச்சிட்டீங்க, உங்க அன்புக்கும், நட்புக்கும் தலைவணங்குகிறேன், உடம்பை நல்லமுறையில் பார்த்துகொள்ளுங்கள், உங்களுக்காக பிரார்த்திக்கிறேன், நீங்கள் மீண்டும் அதிக உற்சாகத்துடன் வந்து கலக்கப்போகிறீர்கள், உங்கள் குடும்பத்தையும், எங்களையும், வாழ்த்துக்கள் நன்றி....

    ReplyDelete
  22. அஞ்சா சிங்கம் said...
    குழந்தைகளிடம் அன்பாக இருப்பதால் . இன்று முதல் நீர் நேரு மனோ என்று அன்போடு அழைக்கபடுவீர்......
    ...........................(புலிகேசி)......................//

    என்னாது நேரு'வா அவ்வ்வ்வ்வ்வ்....

    ReplyDelete
  23. ஆமினா said...
    குழந்தைகளோடு குழந்தையாய் மாறிய தருணங்களை வாசிக்கும் போது ரொம்பவே ஏக்கமா இருந்துச்சு. குழந்தை பருவத்தில் நமக்கும் இப்படியொரு சொந்தம் இல்லையே என :-(

    உங்களுக்கு தோழியும் சகோதரியும் நான் தான். ஆமினா கூட என் பேரு தான். ஆனா தொடர்பதிவுக்கு உங்களை அழைத்த ஆமினா நானா :-)//

    ஆஹா குழப்பம் வந்துருச்சே....!!! இருங்க செக் பண்ணுறேன் ஹி ஹி...

    ReplyDelete
  24. பதிவுலகின் பவர் ஸ்டார் மனோ வாழ்க...

    ReplyDelete
  25. ஆமினா said...
    குழந்தைகளோடு குழந்தையாய் மாறிய தருணங்களை வாசிக்கும் போது ரொம்பவே ஏக்கமா இருந்துச்சு. குழந்தை பருவத்தில் நமக்கும் இப்படியொரு சொந்தம் இல்லையே என :-(

    உங்களுக்கு தோழியும் சகோதரியும் நான் தான். ஆமினா கூட என் பேரு தான். ஆனா தொடர்பதிவுக்கு உங்களை அழைத்த ஆமினா நானா :-)//

    ஸாரி ஆமீனா மேடம், அது நீங்க இல்லை மனோ சாமிநாதன், இப்பவே மாத்துருதேன்...

    ReplyDelete
  26. குழந்தைகள் எப்பொழுதும் நம்மை அழ வைபதில்லை .........

    நானும் என் குழந்தை பற்றி எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் என் பதிவுக்கும் வந்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    http://pidithavai.blogspot.com/2011/11/blog-post_24.html

    ReplyDelete
  27. பாஸ் இப்படி ஒரு சிறப்பான சுவாரஸ்யமான பதிவு உங்களிடம் இருந்து வரும் என்றுதான் உங்களை எழுத அழைத்தேன் சிறப்பாக சுவாரஸ்யமாக இருக்கு

    ReplyDelete
  28. ////என் மகன் என்னை மனோ அப்பா என்று சொல்லவில்லை ஹி ஹி.////

    ஹா.ஹா.ஹா.ஹா.......

    ReplyDelete
  29. எல்லோரின் அன்பும், ஆசிகளும், பிரார்த்தனைகளும் உடன் இருக்க இதோ உங்களின் அன்பு பதிவும் கண்டேன்... அன்பு நன்றிகள் மனோ...

    ReplyDelete
  30. உங்கள் சந்தோஷமான தருணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .உணர்வு பூர்வமாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்
    //அக்கா குழந்தைகள், ஜூலியா, ஏஞ்சல் இவர்கள்// எல்லார் வீட்லயும் ஒரு ஏஞ்சல் இருக்கு .
    முதல் படத்தில் இருக்கும் குட்டி உங்க மகளா so chweeet.

    //வெளிநாட்டு வாழ்க்கை, குழந்தையோ குடும்பமோ அருகில் இல்லாமல் தனிமரமாக வாழும் வாழ்க்கை //
    இந்த வரிகள் மிகவும் வலித்தது நாங்களும் அனுபவித்திருக்கிறோம் பிள்ளைகளாக இருக்கும்போது .

    ReplyDelete
  31. பதிவர்களில் பச்ச மண்ணாக இருக்கும் அப்பாவி மனோ அவர்கள்தான் இந்த வருடத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரம்!!

    ReplyDelete
  32. மனோ மக்கா குழந்தைகள் பற்றிய சிலிர்ப்புகள், பிரிவுகள், பாசம், அன்பு என அனைத்தையும் கலந்து ஒரு சிறந்த பதிவை தந்திருகிங்க... அருமை



    நம்ம தளத்தில்:
    மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Windows version 1.0 to 8.0

    ReplyDelete
  33. நல்ல பதிவு மனோ.... குழந்தைகளை விட்டு வெளிநாட்டு வாசம்.... கஷ்டம் தான் மனோ....

    ReplyDelete
  34. குழந்தைகளுடன் பழகுவது ஒரு தனிக் கலை . பல பேருக்கு சரியாக வருவதில்லை

    ReplyDelete
  35. ! சிவகுமார் ! Says:

    November 25, 2011 1:15 AM
    /Online Works For All said...
    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html/

    ReplyDelete
  36. தலைவா, எதுக்கு அடிக்கடி ப்ளாக் டிஸைன மாத்திக்கிட்டே இருக்கீங்க. வேற எங்கயோ வந்துட்டேன்னு நெனச்சேன். அடுத்த ஆறுமாசத்துக்குள்ள ப்ளாக் டிசைன் மாத்துனீங்க அப்பறம் ஆன்லைன் டேட்டா ஆளை வச்சி ஆயிரம் கமன்ட் போடுவேன்.

    November 25, 2011 1:15 AM
    /Online Works For All said...
    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html/

    ReplyDelete
  37. சொந்த அனுபவங்களோடு அருமையான பதிவு மனோ !

    ReplyDelete
  38. அண்ணே, என் அக்காக்களின் பிள்ளைகளை பிரிந்திருப்பது கவலை அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் skypeஇல் அவர்களை பார்ப்பேன்!

    ReplyDelete
  39. மறுபடியும் தொடர்பதிவு தொல்லை ஆரம்பிச்சாச்சா??????

    ஆனாலும் தலைப்பு நல்லாயிருக்கு மனோ சார்.

    ReplyDelete
  40. குழந்தைகள் பிடிக்காதார் யாருமுண்டோ? எனக்கும் ரொம்ப பிடிக்கும்

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!