Sunday, November 20, 2011

புலியின் வீரமும் தமிழனின் அன்பும்...!!!


 ஒரு காட்டுக்குள்ளே புலி இருக்குறதா தகவல் கிடைச்சதும், ஐநா சபை ஒரு டெஸ்ட்டுக்காக அமெரிக்கன் போலீஸ், ரஷ்யன் போலீஸ், இந்தியன் போலீஸ் டீமை தேர்ந்தேடுத்துச்சாம்....


முதலில் பேரிக்காய் ச்சே ச்சீ அமெரிக்க போலீசை காட்டுக்குள் அனுப்பினார்களாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு திரும்பி வந்துட்டாயிங்களாம்...


அடுத்து ரஷ்யன் போலீஸ் டீம் போனதாம், அவர்களும் போயி பார்த்துட்டு புலி இல்லைன்னு சொல்லிட்டு திரும்பிட்டாங்களாம்...

கடைசியா களம் புகுந்த நம்ம இந்தியன் டீம், ரொம்ப நேரமாகியும் திரும்பலையாம், அதிர்ச்சி ஆன ஐநா தலைவர், இவங்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துருச்சுன்னு பார்க்கலாம் வாருங்கள் என காட்டுக்குள் போயி பார்த்தால்.....

நம்மாளுங்க ஒரு கரடியை பிடிச்சி கட்டி வச்சி அடி பின்னிட்டு இருந்துருக்காங்க, நான்தான் புலி'ன்னு சொல்லு சொல்லுன்னு அடிச்சிட்டு இருந்துருக்காங்க.....[[ஹா ஹா ஹா ஹா ஹா எப்பூடி]]

கொசுறு : எங்கேயோ படிச்சது...!!!


டிஸ்கி : சம்மந்தமே இல்லாத என் நண்பனை என்கவுன்டரில் கொன்ற மும்பை போலீஸ்.....!!!

டிஸ்கி : நானும் இந்தியன்தான், கருத்து சொல்றவன் இங்கே வந்து கருத்து சொல்லு பதில் சொல்ல ஆளுங்க ரெடியா இருக்காங்க ஹி ஹி....


டிஸ்கி : புலின்னு சொன்னாலே மலையாளிகளுக்கு கொலை நடுங்குது, ஏன்னு என் உண்மை பேசும் மலையாளி நண்பன்கிட்டே கேட்டேன், அவன் சொன்னது ஆச்சர்யமா இருந்தது, பொறாமையும், கடுப்பும், இயலாமையும்தான் காரணம்னு சொன்னான்....!!!!


22 comments:

  1. அண்ணே உங்க நன்பர்(என்கவுண்டர்ல இறந்தவர்) பத்தி ஒரு பதிவு போடுங்க

    ReplyDelete
  2. என்னப்பா இது மனோ குட்டிக்கதைகளா போட்டு அசத்துறாரு...

    ReplyDelete
  3. இந்தியரின் குணம் எதையும் மாற்றும்..

    இப்படி கரடியை புலியா மாத்தினமாதிரி இல்லிங்க...

    தரணியெங்கும் இந்தியருக்கென்று தனி மதிப்புண்டு. அதன் விளைவாகத்தான் இந்தியன் மற்றநாடுகளில் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறான்.

    ReplyDelete
  4. அந்த என்கவுண்டர் பற்றி சொல்லுங்க மனோ...

    போலிஸின் அராஜகம் இப்படித்தான் தலைவிரித்தாடுது.

    ReplyDelete
  5. கவிதை வீதி... // சௌந்தர் // said... 7 8
    அந்த என்கவுண்டர் பற்றி சொல்லுங்க மனோ...

    போலிஸின் அராஜகம் இப்படித்தான் தலைவிரித்தாடுது//

    இதை சொன்னா சிலருக்கு தேசபற்று[[!]] கொதிக்குது.....!!!

    ReplyDelete
  6. உங்க கதை மல்லிகைக்காரர்களை வைத்து எழுதியது போல் உள்ளது.

    உங்கள் நண்பர் பற்றிய இடுகைக்கு காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  7. பதில் சொல்ல ஆளுங்க ரெடியா இருக்காங்க ஹி ஹி....//

    எல்லாம் ப்ளான் பண்ணி வைச்சிட்டா தொடங்குறது மாம்ஸ்!

    ReplyDelete
  8. சிரிக்க வைத்தாலும் - சிந்திக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  9. பூனையை புலியாக்கிய கதையை படிச்சிருக்கேன்..
    கரடி என்றால் எதோ உள்குத்து இருக்கு அப்படின்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  10. ஒத்துக்கிட்டா பாப்பாங்க இல்லேன்னா புலியை(?) சுட்டுடோம் னு ஆனா உடல் கிடைக்கலைன்னு அறிக்கை விடுவாங்க.

    ReplyDelete
  11. வெரும் நகைச்சுவை அல்ல. கருத்துச்சுவை.

    ReplyDelete
  12. அண்ணே தப்பா எடுக்கக் கூடாது... இக்கதை ராஜீவ் கொலையாளிகளை நினைவுபடுத்தலயா?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete
  13. குட்டிக் கதை சொல்லத் தொடங்கிட்டீங்களா மனோ !

    ReplyDelete
  14. ப்ச் ரொம்ப பழைய மேட்டர்...

    ReplyDelete
  15. இந்த பதிவுல என் அனுமதி இல்லாம போட்டோ போட யாரு ரைட்ஸ் குடுத்தா?

    ReplyDelete
  16. நிஜம்தான் புலியை பிடிச்சு சிங்கம்னு சொல்லுன்னு அடிச்சாலும் அடிப்பாங்க மனோ..:)

    ReplyDelete
  17. இதான் காரணமா... தேங்க்ஸ் அண்ணாத்த

    ReplyDelete
  18. என்கவுண்டர் பற்றிய பதிவைப்போடுங்க மாப்பூ!

    ReplyDelete
  19. குட்டிக்கதைகள் அழகு புதிய டெம்பிளேட்டுப் போல ! மாற்றங்களுடன் டென்பிளேட் மின்னுது மனோ!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!