Saturday, November 12, 2011

மாமன் செய்த ஏமாற்று வித்தை....!!!

ஒரு நண்பனுக்கு நிகழ்ந்த சம்பவம் இது, பத்து வருஷம் முன்பு நண்பனின் படிப்பறிவு இல்லாத அவன் தாயிடம் தாய்மாமன் ஏமாற்றிய கதை...

இவன் தாய் கூட பிறந்தவர்கள் மொத்தம் ஆறுபேர், நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள், இதில் படித்தவர்கள் ரெண்டுபேர் மீதி ஒன்றும் படிக்காதவர்கள், ஒரு மாமன் வாத்தியார், ஒரு சித்தி ஹெட்மாஸ்டர், மீதி உள்ளவர்கள் விவசாயம் பார்த்து இவர்களை படிக்க வைத்திருக்கிறார்கள்.


இன்னொரு மாமன் சவூதி போயிட்டு வந்து பெரும் பணக்காரனாக இருக்கிறான், தகப்பனாரின் சொத்து எல்லாமே ஆண் மக்கள் எடுத்துக்கொள்ள, பெண் மக்களுக்கு ஒன்றுமே இவர்கள் கொடுக்கவில்லை, அதைபற்றி பெண்மக்களும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை...

ஆனால் தாயின் சொத்தாக ஒரு நிலம் இருந்திருக்கிறது, நாகர்கோவிலில் இருந்து கூடங்குளம் போகும் வழியின் இடையில் கூட்டப்புளி'க்கும் செட்டிகுளத்துக்கும் நடுவே கடல்கரை ஓரம் அந்த நிலம் இருக்கிறது....!!!


இது பெண்மக்கள்மாருக்கு தெரிஞ்சும் கண்டுகொள்ளவில்லை அப்போது, மொத்தம் அறுபது சென்ட் பூமி இப்பிடி இருக்க, அவர்களின் பிள்ளைகள் வளர்ந்து படித்து கல்யாணம் கட்டி குடும்பமாகிவிட்டார்கள்...இப்படி இருக்க ஒருநாள்...

படித்த [[அதான் வாத்தி]] தாய்மாமன் யாருமில்லாத நாள்பார்த்து நண்பனின் வீட்டுக்கு வந்து, அக்கா உன் கையால் மீன்கறி சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று பாசமாக பாசமலரை பொழிய பாவம் நண்பனின் தாயார் பாசத்தில் உருகிப்போனார்....


சடசடவென மீன்கறி சமைத்து பாசமாக பரிமாறியிருக்கிறார், நல்லா சாப்பிட்டுட்டு, உண்ட மயக்கத்தில் நல்ல ஒரு உறக்கமும் உறங்கிவிட்டு, அக்கா நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு, கொஞ்சம் பேப்பரை நீட்டி கையெழுத்து போடச்சொல்லி இருக்கிறான், அக்கா நீ இதில் கையெழுத்து போட்டதுக்கு நான் உனக்கு பத்தாயிரம் ரூபாய் கொஞ்சகொஞ்சமா தருவேன் என்று சொல்லி இருக்கிறான்...


கையெழுத்தை போட்டபின்தான் தாயாருக்கு கொஞ்சம் சுருக் என டவுட் வரவே, கேட்டுருக்கிரார்கள் அப்போதான் அந்த நிலத்தை பற்றி சொல்லி இருக்கிறான், கையெழுத்து போட்டாச்சே என அதிர்ந்த தாயார், இதை வெளியே யாரிடமும் சொல்லாமல் தனக்குள் அடக்கி வைத்துக்கொண்டார்...


அதே தாய்மாமன் மற்ற படிக்காத இரண்டு பேரிடமும் இப்படியே பாசமலரை பொழிந்து கையெழுத்து வாங்கி இருக்கிறான், ஆக மூன்று படிக்காதவர்களை ஏமாற்றி ரெண்டு ஆண்மக்களும் படித்த அந்த பெண்ணுமாக கூட்டணி போட்டு தனதாக்கி கொண்டார்கள்...

இப்படி இருக்க நண்பன் வெளிநாட்டில் இருந்து வந்தபோது, நல்லா ஜாலியாக குடும்பத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அவன் தாய் தெரியாமல் மேட்டரை பற்றி உளறிவிட, விவகாரம் புரிந்து நண்பன் எரிமலையானான்....

அவன் மற்ற சகோதரர்களையும் அழைத்து விஷயத்தை சொல்ல, எல்லாருமாக அம்மாவை விசாரிக்க அம்மா எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள், வளர்ந்த பிள்ளைகள் நாங்கள் இருக்கும் போது எங்களிடம் எதுவும் கேட்காமல் எப்படி நீங்கள் கையெழுத்து போட்டீர்கள் என சத்தம் போட்டுவிட்டு....


மாமனுக்கு போனை போட்டு கேட்க, எங்க அக்காளாச்சு நாங்களாச்சு என்று பூசி மெழுகி இருக்கிறார், நண்பன் மேற்கொண்டு அவரோடு தகராறு பண்ண விரும்பாததால் மவுனமாகி விட்டான்......


ஆனால் இப்போ புது சட்டமே ஜெயலலிதா கொண்டு வந்துருக்காரே, நிலமோசடி சட்டம் நேரே அந்தந்த மாவட்ட எஸ் பி ஆபீசில் தனி பிரிவே இருப்பதாக அண்ணன் அனில் சொன்னார், இப்படி ஏமாற்றி நிலம் மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடுகிறது அதுவும் உடனடியா என சொன்னார்....!!!


இதைபற்றி இன்னும் விவரம் தேவைப்படுகிறது தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் அல்லது மெயில் அனுப்புங்கள் [[ manaseytrmanasey525@gmail.com ]]

ஏமாற்றிய தாய்மாமனுக்கு வலைவிரிப்போம் நண்பர்களே.........

பத்து வருஷத்துக்கு முன்பே அங்கே காற்றாலைகள் வந்து அந்த இடம் தங்கத்தப்போல விலையேறி கிடப்பது வேறு விஷயம்....!!!

டிஸ்கி : விக்கி தக்காளி நேற்றைக்கு அவன் பதிவில் யாரையோ போட்டு தாளிச்சானே, அது யாருய்யா....? எனக்கு இதுவரை தெரியவே இல்லை....!!!

டிஸ்கி : என் வாழ்க்கை வரலாற்றில் முதன் முதலாக, லாட்டரி அடித்திருக்கிறது வெஸ்டன் யூனியன் பேங்கில், பிலிப்பைன்ஸ் பெண் ஊழியர் போன் செய்தாள், என்ன பரிசு என கேட்டதுக்கு, அது ஒரு கிஃட் பாக்ஸாம் நான் போயிதான் திறந்து பார்க்கணுமாம், சாயங்காலம் வாறேன்னு சொல்லியிருக்கேன், ஆண்டவா ஒருகிலோ தங்கம் கிடைக்கட்டும், நான் பஹ்ரைனை காலி பண்ணிட்டு ஊர் வந்துர்றேன் ஹி ஹி, ஆக நாளை ஒரு பதிவு தேத்திருவேன் ஹி ஹி....!!!






31 comments:

  1. டிஸ்கி : விக்கி தக்காளி நேற்றைக்கு அவன் பதிவில் யாரையோ போட்டு தாளிச்சானே, அது யாருய்யா....? எனக்கு இதுவரை தெரியவே இல்லை....!!!///

    மக்கா இந்த டிஸ்கி அவசியமா... இல்ல அவசியமான்னு கேட்கறேன்.?

    நம்ம தளத்தில்:
    ஹையோ! எவ்ளோ அருமையான படங்கள்! சூப்பரோ சூப்பர்!!

    ReplyDelete
  2. அந்த மாமன் காரன் எங்கிருந்தாலும் மக்கா முன் ஆஜராக வேண்டும்.

    ReplyDelete
  3. தலைவரே, அந்த அம்மா கடந்த அஞ்சு வருட ஆட்சியில் நடந்ததற்கு தான் நில அபகரிப்பு வழக்குன்னு சொல்லிடுச்சு, அதுக்கும் மேல போனா அந்த அம்மாவே உள்ள போக வேண்டியிருக்குமாம்... சிறுதாவூர் நினைவிருக்கா

    ReplyDelete
  4. உள்ள தூக்கி போடணுமா..போட்ருவோம் ஹிஹி!

    ReplyDelete
  5. எந்த கோயில் மனோ வேளாங்கண்ணி?

    ReplyDelete
  6. சடுகுடு விளையாடுவோமா?

    ReplyDelete
  7. //
    டிஸ்கி : விக்கி தக்காளி நேற்றைக்கு அவன் பதிவில் யாரையோ போட்டு தாளிச்சானே, அது யாருய்யா....? எனக்கு இதுவரை தெரியவே இல்லை....!!!///

    தெரிஞ்சா எனக்கும் சேதி சொல்லி அனுப்புங்க மக்கா...

    ;-)

    ReplyDelete
  8. பாடம் சொல்லிக் கொடுக்கும் பதிவு! நன்றி

    ReplyDelete
  9. கிட்ட தட்ட இதே கதை தான் எனக்கு தெரிஞ்ச உறவினருக்கு! ஒரே மகன்... 5 பெண்கள்...

    5 பெண்களிடமும் இது போலவே அக்கா பாசம் காட்டி பூர்வீக சொத்தை எழுதி வாங்கிட்டார். அப்போது (40 வருஷத்துக்கு முன்) சட்டங்கள் கடுமையாக இல்லாததால் கோர்ட்டிலும் கேஸ் நிக்கல...


    அப்பறம் லாட்டரில ஒரு குயர் பேப்பர் மட்டுமே கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஹி..ஹி..ஹி..

    ReplyDelete
  10. rufina rajkumar said... 13 14
    எந்த கோயில் மனோ வேளாங்கண்ணி?//

    இது கூட்டபுளி சர்ச்'ன்னு நினைக்கிறேன், கூகுள்ல சுட்டது....

    ReplyDelete
    Replies
    1. athu kootapuli church than.....festival foto...innoru foto kootapuli siluvai kovil

      Delete
  11. ஆமினா said... 23 24
    கிட்ட தட்ட இதே கதை தான் எனக்கு தெரிஞ்ச உறவினருக்கு! ஒரே மகன்... 5 பெண்கள்...

    5 பெண்களிடமும் இது போலவே அக்கா பாசம் காட்டி பூர்வீக சொத்தை எழுதி வாங்கிட்டார். அப்போது (40 வருஷத்துக்கு முன்) சட்டங்கள் கடுமையாக இல்லாததால் கோர்ட்டிலும் கேஸ் நிக்கல...


    அப்பறம் லாட்டரில ஒரு குயர் பேப்பர் மட்டுமே கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஹி..ஹி..ஹி..//

    என்னாது குயர் பேப்பரா...? எட்றா அந்த அருவாளை, இருங்க பொருள் என்னான்னு பார்த்துட்டு வந்து வச்சிக்கிறேன் கச்சேரியை ம்ஹும்...

    ReplyDelete
  12. இந்த மாதிரி ஆட்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
    அதே போல வேலாயுத விசை மாதிரி பாசக்கார சகோதரர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
    ஏமாற்றுக் கார சகோதரர்களை ஏதாவது வழி பண்ணினால்தான் உண்டு..
    ஆனால் அதை அவர்களது சகோதரிகள் எதுவும் செய்ய மாட்டார்கள் ...

    ReplyDelete
  13. ஆண்டவா ஒருகிலோ தங்கம் கிடைக்கட்டும், நான் பஹ்ரைனை காலி பண்ணிட்டு ஊர் வந்துர்றேன் ஹி ஹி, ஆக நாளை ஒரு பதிவு தேத்திருவேன் ஹி ஹி....!!!
    >>>
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  14. நாளாஇ ஞாயிற்றுகிழமை. எனக்கு ஆபிசு லீவ். நான் தப்பிச்சுடுவேன். மத்தவங்க நிலமை நினைச்சு பார்த்தேன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ’லம்பா’க் கெடைக்கும்!!

    ReplyDelete
  17. K.s.s.Rajh said...
    ////என் வாழ்க்கை வரலாற்றில் முதன் முதலாக, லாட்டரி அடித்திருக்கிறது வெஸ்டன் யூனியன் பேங்கில், பிலிப்பைன்ஸ் பெண் ஊழியர் போன் செய்தாள், என்ன பரிசு என கேட்டதுக்கு, அது ஒரு கிஃட் பாக்ஸாம் நான் போயிதான் திறந்து பார்க்கணுமாம், சாயங்காலம் வாறேன்னு சொல்லியிருக்கேன், ஆண்டவா ஒருகிலோ தங்கம் கிடைக்கட்டும், நான் பஹ்ரைனை காலி பண்ணிட்டு ஊர் வந்துர்றேன் ஹி ஹி, ஆக நாளை ஒரு பதிவு தேத்திருவேன் ஹி ஹி....!!!////

    வாழ்த்துக்கள் பாஸ்

    அப்பறம் உங்கள் நண்பனின் தாயாருக்கு நீதி கிடைக்க வேண்டும்

    ReplyDelete
  18. ஆக நாளை ஒரு பதிவு தேத்திருவேன் ஹி ஹி....!!!//

    பரவாயில்லை நண்பரே பதிவுக்கான
    விஷயம் உங்களை தேடி வருகிறது .

    ReplyDelete
  19. பணமா பாசமா...அட போங்க மனோ.இதுதான் இப்ப எல்லா இடமும் நடக்குது !

    ReplyDelete
  20. பணமா பாசமா...அட போங்க மனோ.இதுதான் இப்ப எல்லா இடமும் நடக்குது !

    ReplyDelete
  21. ம்ம் இந்தமாதிரி ஏமாத்து பேர்வழி நிறைய இருக்குதுகள்

    ReplyDelete
  22. இப்பெல்லாம் கூடப் பிறந்தவங்களப் பார்க்கவே பயமா இருக்கு
    சகோ .இப்படி மோசடி செய்பவர்களுக்கு தகுத்த நடவரடிக்கை
    எடுக்க வேண்டும் .அது சரி உங்களுக்கு ஒரு கிலோ தங்கம் காணுமா?..
    போங்க சகோ விழுகிறதுதான் விளட்டுமே ஒரு ஐந்து கிலோ .எதுக்கும்
    வாழ்த்துக்கள் சகோ .கிடைச்சதும் எங்கள மறந்திராதீங்க ஒக்கே ........
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
  23. கிடைச்சுதா தங்கம்?

    ReplyDelete
  24. தங்க மனசுக்காரருக்குத் தங்கம் மேல வந்த ஆசை!

    ReplyDelete
  25. உறவுகளுக்குள் உள்குத்து ஓராயிரம் இப்படி இருக்கு. ஹும், பணம் ஒன்றே பெரிசாப் போச்சு!

    ReplyDelete
  26. நல்ல வேளை... எனக்கு தாய் மாமனே கிடையாது ...

    ReplyDelete
  27. /// ஆண்டவா ஒருகிலோ தங்கம் கிடைக்கட்டும், நான் பஹ்ரைனை காலி பண்ணிட்டு ஊர் வந்துர்றேன் ///

    யோவ்......கிருத்துமஸ்/புதுவருஷ வாழ்த்துக்களா இருக்கும் அதிக பட்சம் சாக்லேட் தான் இருக்கும். ரொம்பவும் பீல் பண்ணாத தம்பி. அப்புறம் குந்திகினு அயுவாத.அக்காங்....

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!