ஒரு ஐந்து வருஷங்கள் முன்பு நான் தங்கி இருந்த பிளாட் ரூமில் மூன்று பேருக்கு போவதற்கான ஈரோப்பியன் பாத்ரூம் இருந்தது, அந்த பாத்ரூம் மீது உட்கார்ந்து கக்கா போறதுக்கும் பதில் அதற்கு மேலே குத்தவச்சு உக்காந்து கக்கா போறவனை கண்டு பிடிக்கவே முடியலை.
ரெண்டு பேரைக் கேட்டால் நானில்லை நானில்லை என்கிறார்கள், என்மீதும் ஒருவன் சந்தேக கேள்வி கேட்டான், அந்த மேல் சீட் ஷூ கறை படிந்த அந்த சீட்டை கோபத்துடன் ஒருநாள் மப்பில் பிய்த்து எரிந்து விட்டேன்.
மறுபடியும் மறுபடியும் அதே ஷூ கறை....என்னடா செய்யவென்று நொந்து கொண்டிருந்தோம் சம்பந்தப் படாதா மற்ற ரெண்டு பேரும்.
ஒருநாள் நான் டியூட்டி முடிந்து வந்து உடைகளை களைந்து விட்டு பாத்ரூம் போனேன், அங்கே ஈரோப்பியன் பாத்ரூம் ரெண்டாக உடைந்து கிடக்க...கூடவே அநியாயத்துக்கு ரத்தமா கிடக்கு.
எனக்கு உடனே புரிந்துவிட்டது, எவம்லேய் சல்மானியா ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருக்கிறதுன்னு விசாரிச்சா எங்க மூன்று பேரில் ஒருத்தன்தான், ராஜஸ்தானை சேர்ந்தவன்...!
ஆஸ்பத்திரி போயி பார்த்து ஏண்டா ஏன்"ன்னு கேட்டுட்டு வந்தோம், அப்புறம் அவனை இந்தியன் டாய்லெட் இருக்கும் இடத்திற்கு மாற்றினோம், சுத்தம் பார்க்கவேண்டியதுதான் அதற்காக இப்பிடியா ? கொய்யால புட்டம் பதம் பார்க்கப்பட்டது !
தெரிஞ்சோ தெரியாமலோ ஈரோப்பியன் பாத்ரூம்ல போயி மேலே ஏறி உக்காந்துராதீக...ஒன்னும் மிஞ்சாது சாக்கிரத.
---------------------------------------------------------------------------
ஊர்ல எங்கவீட்டுக்கு பக்கத்துலேயே ஒயின்ஷாப் இருக்கு, பைபாஸ் ரோடு என்பதால் வாகனங்கள் வேகத்தை தடுக்க ஊருக்கு அங்கிட்டும் இங்கிட்டுமாக ஸ்பீட் பிரேக் அமைக்கப் பட்டது.
ஆக...எங்க வீட்டு முன்னாடி ஒரு ஸ்பீட் பிரேக்கர் இருக்கு, ஊர்ல முன்னாடி போயிருந்தப்போ நல்ல தூக்கத்தில் ஐயோ அம்மா ஆத்தா என்று சத்தம் கேட்க வெளியே எழும்பி வந்து பார்த்தால், பைக்கோடு விழுந்து கிடந்தவனுக்கு எங்க அம்மா தண்ணீர் குடிக்க கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அடி அவளவாக பலம் இல்லை என்றாலும், கால்முட்டு கைமுட்டு எல்லாம் ரத்தக் களறியாக இருந்தது அம்மா ஏதோ முதலுதவி மாதிரி தைலம் தடவி விட்டாள்.
அப்புறமாதான் தெரிஞ்சிது சரக்கடிச்சுட்டு வாறவன் அடிக்கடி இந்த இடத்தில் விழுவதும் அம்மா தண்ணீர் கொடுப்பதும், மருந்து தடவி விடுவதுமாக தொடர்ந்து நடக்கிறது என்று.
இதுல ஒரு காமெடியும் நடந்துச்சு, நாம சரக்கடிப்பது எங்க வீட்டாருக்கு நல்லாவே தெரியும், இருந்தாலும் இதுல ஒரு பரிசுத்தவான் வேஷம் போட்டவனின் வேஷமும் இங்கேதான் கலைந்தது.
எங்க பெரியப்பா மகளை [[அக்கா]] கட்டிய அத்தான் ஒருவன் இதே ஸ்டைலில் விழ அங்கேயும் அம்மாவும் எங்க அண்ணனும் ஹாஜர் ஆக...பரிசுத்தவான் வேஷம் தொக்கடீர்ன்னு கலைஞ்சி போச்சு...!
இப்போ அந்த ஸ்பீட் பிரேக்குகள் அகற்ற பட்டுவிட்டன, இப்போ என்னன்னா கோழி ஆடுகள் பலி ஆகிகொண்டும், சரக்கடிச்சுட்டு வாறவன் ஆட்டுக்குட்டியை [[பைக்ல வாரவனுக]] லபக்கிட்டு போறதுமா இருக்கு, விளையாடி திரியும் குழந்தைகளை காப்பாற்று தெய்வமேன்னு வேண்டிக்குவேன்.
நம்ம ஆட்கள் பலருக்கும் வெஸ்டர்ன்னாலே அலர்ஜி தான்!
ReplyDeleteஹஹஹா.. கடைசில மாட்டிகிட்டானா?
ReplyDeleteஇங்க பாகிஸ்தானி எல்லாருமே மேலதான் ஏறி உக்காருறானுங்க...
ReplyDeleteபரிசுத்தவான் மாட்டிக்கிட்டாரா?
வணக்கம்
ReplyDeleteபோதை ஏறினால் எல்லா வந்து விடும் இறுதில் தெரிந்து விட்டது....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Very good post. Enjoyed reading it. Why don't you put a notice near the toilet, like how to use it? At least some people will be able to educate themselves.
ReplyDeleteஅனுபவ பகிர்வுக்கு ..
ReplyDeleteநன்றி...
இந்த குத்த்தவச்சு ஒக்காந்தவங்க சரித்த்திரம் நானும் நிறய கேள்விப்பட்டிருக்கேன்.
ReplyDeleteஒரே ரத்தக் களறியாக இருக்கு....! ஹிஹி...
ReplyDeleteOk
ReplyDeleteகாலேஜ் டூர் போனப்ப வட இந்திய ஹோட்டல்களில் எல்லாம் வெஸ்டன் டாய்லட் இருப்பதை பார்த்து கிட்டத்தட்ட 3 நாள் அடக்கிவச்ச அனுபவம் எல்லாம் ஞாபகத்துக்கு வருது.
ReplyDeleteசிரிச்சு மாளலை ! பல நாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுதானே ஆக வேண்டும்?
ReplyDeleteதங்களின் அனுபவம் மற்றவர்கள் பாடமாகக் கொள்ள உதவியாக இருக்கும் என நம்புவோம்.
ReplyDeleteதங்களின் அனுபவம் மற்றவர்களுக்குப் பாடம்
ReplyDeleteஇந்த மாதிரி குந்த வைக்கிற விஷய்த்த பத்து பதினைஞ்சி வருசத்துக்கு முன்னாலதான் கேள்விப்பட்டிருக்கேன். இன்னமுமா? இப்பத்தான் பட்டி தொட்டியிலல்லாம் ஃபேமஸா ஆயிருச்சே.
ReplyDeleteசிரிப்பு வெடிதான்!
ReplyDelete:)))))
ReplyDeleteஇங்கே தில்லியிலும் இந்த மாதிரி ஒருத்தன் கீழே விழுந்து ரத்தகளரி... விஷயம் கேட்டப்ப, அவனை நினைத்து பரிதாபப் படுவதற்கு பதிலாய் சிரித்தோம்.....