- நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்....! முதல் பாகம்
- நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...! தொடர்......இரண்டாம் பாகம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...நான்காம் பாகம்
- நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...தொடர்...ஐந்தாம் பாகம்
சுதன் ஒரு அறைக்குள் செல்ல, நான் பரப்பரப்பாக அந்த அறைக்குள் நுழைந்ததும், டிரெஸ்ஸை கழட்ட சொன்னார் டாக்டர், அப்புறமாக உள்ளாடையை கழட்டிவிட்டு இதை கட்டிக்கோ என்று ஒரு வெள்ளை துண்டு பீஸை கொடுத்து கட்டிக்கோன்னு சொன்னதும் நடுங்கிப் போனேன்.
[[தாயின் அன்பு உள்ளத்தோடு திருநெல்வேலியில் எனக்காக வந்து வாழ்த்தி வழியனுப்பி சென்ற என் செல்லம் ஆபீசர்...]]
கூச்சத்துடன் வேண்டாம் என்று சொன்னாலும் விட்டாதானே...பலவந்தமாக கழட்டி மாட்டி விட்டு, ஒரு சின்ன ஸ்டூலை போட்டு அதில் உட்கார சொன்னார்கள், உட்க்கார வைத்து நவரத்தின எண்ணைன்னு நினைக்கிறேன் மணமும் அப்பிடிதான் இருந்தது.
தலை நிறைய ஊற்றி தலையில் ஆரம்பித்தது மசாஜ், உச்சி குளிர்ந்து மூளை பப்பரப்பா ச்சே பரவசமாகியது, மசாஜ் வேணாம்ன்னு கோவளம் பீச் போன விஜயன், ஆபிசரின் நினைப்பெல்லாம் இங்கே அல்லவா இருக்கும் என்று எண்ணி சிரித்துக் கொண்டேன்.
தலையை கசக்கி பிழிந்தார் டாக்டர்....
[[கம்பீரமாக ஆபீசர், அவர் தோளில் கைபோட தந்த சுதந்திரம் ஆஹா...கண் வலியிலும் சிலாகித்தேன்...!]]
நரம்புகள் தென்னி மூர்ச்சை ஆகிறக் கூடாது என்பதற்காக பேசிக் கொண்டே இருக்கிறார்கள் டாக்டர், நம்மை ரியாக்ஷனைக் கண்டு செயல்படுகிறார்கள், நமக்கு ஏற்கனவே உள்ளடிகள் பட்டு வலிக்கும் இடங்களில் அவர்கள் கை வைத்ததும் நமக்கு வலிக்கிறது என்பதை கண்டறிந்து, அந்த இடத்தில் அழகாக தேய்த்து வலியை போக்குகிறார்கள்.
[[இது எவம்லேய்..?]]
"என்னாச்சு என்னாச்சு ?" மலையாளத்தில்...
"தயவு செய்து இடுப்பில் கைவச்சிறாதே, இடுப்புல கைவச்சா சப்புன்னு அடிக்குறது என் [[குடும்ப]] வழக்கம்"
"ஏன் ?"
"ரொம்ப கூச்சமா இருக்கும் அதான்" [[ஹி ஹி]]
டாக்டருக்கும் நான் புதுசா தெரிய, அவங்க சிரிச்ச சிரிப்பு கோவளம் வரை கேட்டுருக்கும்னு நினைக்கிறேன் அம்புட்டு சிரிப்பு...மறுபடியும் படுக்க வைத்து இடுப்பில் கைவைக்கவும் நான் ஜம்ப் செய்வதும் டாக்டர் சிரிப்பதுமாக மசாஜ் தொடர்ந்தது...
"நீ இதுக்கு முன்னாடி மசாஜ் பண்ணினது கிடையாதா ?"
"இந்த கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் எனக்கு புதுசு"
"இந்த மசாஜ் பண்ணுனதுக்கு அப்புறமா பாரு உடம்பும் மனசும் லகுவாகிடும்"
"சும்மாவா பின்னே அம்புட்டு காசு குடுத்துருக்கேனே"
நரம்புகளை எல்லாம் மீட்டி, மறைந்து இருக்கும் நரம்புகளை வெளியே வரவைத்து, நரம்பை பலம்கொண்ட மட்டும் உருவி உருவி தேய்க்கிறார்கள், வலிக்கவும் செய்கிறது, சுகமாகவும் இருக்கிறது, கலைஞரின் குடும்பமும் அரசியலும் போல...
[[கிறுக்கு பய மாதிரி இருக்கும் என்னை, விஜயன் ஹீரோ ஆக்கி எடுத்த போட்டோ, அவருக்குள்ளே இருக்கும் போட்டோ ரசனை வெளியே வந்த நிமிடம் இது...!]]
அப்பாடா எப்படியோ ஒன்னரை மணிநேரம் மசாஜ் முடிந்ததும், இதமான சூடு தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள், சோப்பு டவல் இன்னபிற இத்யாதிகள் செய்து தருகிறாகள்.
உடம்பும் மனசும் டாக்டர் சொன்னது மாதிரியே இலகுவாக தெரிந்தது, சுதனுக்கு இன்னும் "ஆபரேஷன்" முடியாததால் ஆஸ்பத்திரில இருந்து வெளியே வந்து, மணிகண்டனும் நானும் சுதனுக்கு காத்து நிற்கும்போது ஒரு சர்பத் கடை தெரிய, ஒரு லெமன் ஜூஸ் குடிப்போமென்று கடைக்கு போனோம்.
[[நண்பன் ராஜகுமாருடன் விஜயன்...]]
நீ காசே தரவில்லை என்கிறார், மணிகண்டனுக்கு ஷாக்...எனக்கு புருஞ்சி போச்சு என்னடா கேரளா தலைநகர்ல ஒருத்தனும் இன்னும் நம்மளை ஏமாத்தலையே ஒரு வேளை நம்மை பார்த்து பயந்துட்டாங்களோன்னு நினைச்சேன் சரியாப்போச்சு.
அப்புறம் என்ன மறுபடியும் பணம் கொடுத்துட்டுதான் வந்தோம் ம்ஹும் நாமெல்லாம் ஆரு ?
[[விஜயன் ஆபீஸ் முன்பாக]]
சுதன் வர...மறுபடியும் ஆட்டோ இருபது நிமிஷமாக ஓட..... ரோட்டுலதாங்க, கோவளத்தில் இருந்து ஆபீசரும் விஜயனும் செட்டியாரும் வந்துசேர, செமையா சாப்புட்டுட்டு நாகர்கோவில் நோக்கி விரைந்தது கார்.
மசாஜின் தாக்கமோ என்னமோ காரில் செமையா கிறக்கமும் உறக்கமும், பேச்சும் சந்தோசமுமாக வர, நண்பன் ராஜகுமார் போன்...
"லே மக்கா எங்க இருக்க ?"
"மார்த்தாண்டம் தக்கலை தாண்டி வந்துட்டு இருக்கேன் மக்கா"
"நான் நாகர்கோவில் வரணுமா உன்னை பிக்கப் பண்ண ?"
"ம்ம்ம் சரி அப்போ நீ நம்ம விஜயன் ஆபீஸ் வந்துரு"
ராஜகுமார் விஜயனுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆகி இருந்தாலும் அவனுக்கு ஆபிசரை பார்க்க மிகவும் ஆசையாக இருந்தான், இரவு நேரங்களில் நான் இல்லாமல் எங்கேயும் போகமாட்டான், காரணம் நகைகள் வாங்க விற்க தொழில் செய்கிறான், இவனிடம் தாலிக்கொடி செய்து கொடுக்க சென்டிமென்ட் பார்க்கும் பெண்கள் நிறைய உண்டு, நல்ல கைராசி என்று சொல்வார்கள் சுத்துபட்டு கிராமங்களில்...!
[[விஜயன் ஆபீஸ் கொஞ்சம் தள்ளி இருக்கு, அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதி, உமன் காலஜ் சற்று தள்ளி இருக்கு, நாகர்கோவில் பஸ் நிலையம் போகும் சாலை]]
மறுநாள் விஜயன் சொன்னதுபோல டிக்கெட் புக் செய்து வைத்து இருந்தார், அதுவும் கன்பார்ம் டிக்கட் என்பது ஆச்சர்யம் [[நன்றி மக்கா]], அவரிடம் பிரிண்டர் இல்லாமையால் அவர் நண்பர் ஆபீஸ் போனோம், கரண்டு கட்டாகிருச்சு...அப்போதுதான் மின்வெட்டினால் எவ்வளவு மக்கள் கஷ்டபடுகிறார்கள் என்பதை நேரில் அறிந்தேன்...!
"நான் ஊர் வந்து மூன்று நாளாகியும் எங்க ஊர்ல கரண்ட் கட்டே ஆகலை விஜயன்...!"
"ஆ...அப்படியா" என்று வடிவேலு மாதிரி ஷாக் ஆகிட்டார்.
அப்புறமா கீழே இருந்த ஜெராக்ஸ் கடையில போயி பிரிண்டர் எடுத்து விஜயன் ஆபீஸ் போயி போட்டோக்களுக்கு போஸ் குடுத்து, விஜயனிடம் பிரியா விடை பெற்று வீட்டுக்கு வந்தால்....
வீட்டுல கரண்ட் இல்லை, ஆ..அப்பிடியான்னு விஜயன் ஷாக் ஆனது பட்டென்று நினைவில் வந்து போனது [[அதுக்குள்ளேவா பொறாமை பத்திக்குச்சு ?]]
அடுத்தநாள் ரயில் பிடிக்க அரைகுறை நிறைகுறைய நண்பனின் காரை வரவச்சி [[லேட்டாகிருச்சு]] ரயில்வே ஸ்டேஷன் வந்தால் [[நேற்று ராத்திரி கண்ணுக்குள்ளே ஏதோ விழுந்து உறுத்திகிட்டே இருந்துச்சு]] ஒரு போலீஸ் என்னை நிப்பாட்ட...... ஏற்கனவே கண்ணு எரிச்சல்ல நான் வந்துட்டு இருக்கேன்.
[[டிக்கட் பிரிண்டர் எடுக்கப் போன விஜயன் நண்பனின் ஆபீஸ்]]
"ஹலோ மனோ இப்போ ரயில் எந்தப்பக்கம் வந்துட்டு இருக்கு ?"
"வள்ளியூர் தாண்டி வந்துட்டு இருக்கேன் ஆபீசர்"
"என் கம்பார்மேன்ட் நம்பர் எஸ் ஃபோர்"
"அது நேற்றே விஜயன் தந்துவிட்டார், ஆமா உங்களுக்கு ரயில் இஞ்சின் எந்தபக்கமா இருக்கு ?
"தெரியலையே ஆபீசர்" [[கண்டிப்பாக ஆபீசர் நொந்து போயிருப்பார்ன்னு நினைக்கிறேன் ஹி ஹி]] நானே ரயிலுக்கு மேலேயும் கீழேயுமா முந்தயநாள் நடு ராத்திரி வரை முங்கிட்டு எழும்பமுடியாம வந்துட்டு இருக்கேன் அவ்வ்வ்வவ்...
"மனோ சாப்பிட என்ன வேணும் ?"
"மெது வடையும், இட்லியும் ஆபீசர்" நான் ஆபீசர் ஆபீசர்"ன்னு போன்ல பேசிட்டு இருக்குறதை கேட்டுட்டு பக்கத்தில் இருந்தவர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போனார்கள். எனக்கு கண்வலி தாங்கலை, எப்படா திருநெல்வேலி வரும் ஆபிசரை பார்த்துவிட்டு படுத்து தூங்கவேண்டும் போல இருந்துச்சு.
[[அழகு விஜயன்..!]]
சரி போட்டோ எடுப்போம் என்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டு பிரியா விடை பெற்றோம்...ஆபீசர் ரயிலில் என் சீட்டில் வந்து அமர்ந்துவிட்டுதான் போனார்[[இது எப்பவும் வழக்கமே]], அவரை கவனித்த டிக்கட் பரிசோதகருக்கு என்ன தோணிச்சோ தெரியலை ரயிலில் எல்லாரிடமும் டிக்கட் கேட்ட பரிசோதகர்கள், மும்பை வரும்வரை என்னிடம் யாரும் டிக்கட் கேட்கவில்லை, நானாக கொடுத்தும் வேண்டாம் என்று சொன்னார் ஒரு பரிசோதகர், ம்ம்ம் ஆபிசரின் கம்பீரம் அப்படி...!!!
டிஸ்கி : ஒரு பைசா செலவில்லாமல் கேரளா தலைநகரை சுற்றி காட்டிய ஆபீசர், சுதன், மணிகண்டன், செட்டியார், விஜயன் மற்றும் நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்....
டிஸ்கி 2 : மீண்டும் சென்னை நண்பர்கள் ஒருமுறை கூட மன்னிச்சு.
முற்றும்
// அம்புட்டு காசு குடுத்துருக்கேனே... // அதானே...!
ReplyDeleteஅடடா...! மசாஜ் மூலம் அண்ணன் தம்பி ஆகி விட்டாரே... ஹிஹி... விஜயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
// எனக்கு கண்வலி தாங்கலை//மசாஜ் சென்டரில் என்னத்த பார்த்தீரோ? அவ்...
ReplyDeleteநல்லவேளை இடுப்பு மேட்டரை சொன்னீங்க,நோட் பண்ணிக்கோங்கப்பா!
ReplyDeleteஅனுபவங்களை நகைச்சுவைத் தொடராக
ReplyDeleteபடங்களுடன் அசத்தலான கமெண்டுகளுடன்
பகிர்ந்த விதம் அருமை
மிகவும் ரசித்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நகைச்சுவையாக சொல்லிச் சென்ற மஜாஜ் பயண அனுபவம் அருமை.... பூரிக் கட்டையால் அடிவாங்கி கொண்டிருக்கும் எனக்கு அந்த விலாசம் தந்தால் இந்தியா வரும் போது மஜாஜ் செய்ய வசதியாக இருக்கும்
ReplyDeleteதொடர் சும்மா கிளப்பலா இருக்குது நண்பர் மனோ..
ReplyDeleteதொடருங்கள்...
எல்லா பாகங்களையும் படித்துவிடுகிறேன்...
ஆபிசரின் கம்பீரமான புகைப்படமும்...
நண்பர் விஜயனின் பாந்தமான நிழற்படமும்
மிக அருமை...
அருமை.....
ReplyDeleteநல்ல எஞ்சாய் பண்ணி இருக்கீங்க போல!