Friday, March 7, 2014

கேரக்டரே இல்லாத ஒரு லூசு"வின் அலப்பறை !

முதன் முறையாக பஹ்ரைன் வந்து எங்கள் ஹோட்டலுக்கு மனைவியுடன் வந்து தங்கி விட்டுப்போன கவைத் [[பெயர் மாறிருக்கு]] நாட்டின் ராஜ பரம்பரையில் ஒருத்தர், இங்கே இருக்கும் ஜல்லாலங்காடி ஜில்லாலங்காடி சுகம், ஜாலி எல்லாம் பார்த்து அதிசயித்து போனவர்....மனைவியை அழைத்துக்கொண்டு கோபமாக [[மனைவி இருந்ததால்] கவைத் போய் விட்டார்.

அப்புறம்தான் ஆச்சர்யம், அடுத்தமுறை தனியாக வந்தவர் காசை அள்ளி ஏறிய ஆரம்பித்தார் [[பின்னே ஷேக் ஆச்சே]] டிஸ்கோ, டிஸ்கோதே, பாஸ்கோ, ரஷ்யன், தாய்லாந்த், சீனா, ஈராக், எகிப்து, மஸ்ரி என்று வரவழைத்து என்ஜாய் பண்ணினவருக்கு குஷி தாங்க முடியவில்லை.

ரிஷப்சனில் வந்து நின்று சிரியாக சிரிக்க ஆரம்பிச்சார்ன்னா நாங்க கதி கலங்கி போவோம். பார்க்காத உலகத்தை புதுசாக அவர் பார்கிறார் என்பது அவர் பேச்சில் செயல்களில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

இடையிடையே அவர் மனைவிக்கும் போன் பண்ணி கொஞ்சி விளையாடுவார், மனைவியும் இவர் செல்போன் எடுக்காத பட்சத்தில் எங்கள் ஹோட்டலுக்கு போன் செய்து விசாரிப்பார்.

அடுத்து இவர் போற இடமெல்லாம் அலப்பறை பண்ண, டிஸ்கோ பாஸ்கோ"வில் எல்லாம் இவரை அனுமதிக்க வில்லை, பணத்தை வீசி எறிந்தாலும் பிரயோஜனம் இல்லாது போனது, அப்புறம் ரூம் மற்றும் காபி ஷாப் என அடங்கினாலும் வெளியே போயி கில்மா விளையாடிவிட்டு வந்து, எங்களைப் பார்த்து பயங்கரமாக சிரிப்பார் அதான் எங்களுக்கு கிலியாக இருக்கும்.

எப்போதும் மப்பில்தான் இருப்பார், பகலில் நேரம் போகவில்லை என்றால், ரிஷப்சன் அம்மணிகளுக்கு போன் செய்து கலாயிப்பார், அது சரியில்லை இது சரியில்லை என்று கத்துவார், ரூமில் போயி பார்த்தால் எல்லாம் சரியாகவே இருக்கும், அப்புறம் நம்ம வீரப்பா மாதிரி சிரிப்பார் [[அவ்வ்வ்வ்]]

இவர் ஒரு கேரக்டர் ரோல் என்றுதான் முதலில் அவதானித்தேன், அப்புறம்தான் தெரிந்தது இது ஒரு லூசு என்று...!

அப்புறம் அவருடைய வயது சொல்லனுமே ? ஏன்னா பாஸ்போர்ட் நம்மகிட்டேதானே இருக்கு, வயது எழுபது, எல்லாரும் ஒரு ஊன்றுகோல்தானே வச்சிருப்பாயிங்க ? இவர் எப்போதும் இரண்டு வச்சிருப்பார்...!

இவர், தான் இங்கே வந்திருப்பது யாருக்குமே தெரியாது என்று நினைத்திருக்க, கவைத் ராயல் குடும்பத்து பாதுகாவலர்கள் அவரை அன்டர்டேக் எடுத்திருப்பது அவருக்கே தெரியாது என்பதுதான் ஆச்சர்யம்...!

மெடிக்கல் செக்கப் என்று பொய் சொல்லி இங்கே வந்ததாக கேள்வி...!

டிஸ்கி : அப்பாடா ஒரு பதிவு தேத்தியாச்சு.

14 comments:

  1. அங்க தனியா இருக்கீங்க.... வேற என்னத்த எழுதறது.... ஹிஹி....

    ReplyDelete
  2. ///ரஷ்யன், தாய்லாந்த், சீனா, ஈராக், எகிப்து, மஸ்ரி என்று ////

    70 வயசுல இப்படியா...? அப்படி என்ன லேகியம்யா அது..... டீட்டெயில் ப்ளீஸ்.....

    ReplyDelete
  3. எழுபதிலே இந்த ஆட்டம் என்றால்...!

    ReplyDelete
  4. ////எல்லாரும் ஒரு ஊன்றுகோல்தானே வச்சிருப்பாயிங்க ? இவர் எப்போதும் இரண்டு வச்சிருப்பார்...!////

    அடங்கொன்னியா.........

    ReplyDelete
  5. அடப்பாவி கிழவா...
    அப்பாவி மனோ அண்ணனுக்கு பதிவு கொடுத்ததுக்காக கிழவரை மன்னிக்கலாம்...

    ReplyDelete
  6. 70 வயதில் இப்படியா !ஹீ இது ஏதோ குளறுபடி ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  7. வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை
    சுவாரஸ்யமான பதிவாக்கி தந்தமைக்கும்
    தொடரவும் (பதிவை ) நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இத்தகைய ஷேக்குகளை மும்பை நட்சத்திர ஹோட்டல்களிலும் இப்போதெல்லாம் பார்க்க முடிகிறதாம்.

    ReplyDelete
  9. பயங்கர சுவாரசியம் மச்சான். இந்த மாதிரி ஆளுங்கள ரசிக்கணும்.

    ReplyDelete
  10. அருவா லால அறுத்து போட வேண்டியது தானே .

    ReplyDelete
  11. கதையில் வரும் வித்தியாசமான ஒரு பாத்திரத்தைப் போல உள்ள நபரை தங்களின் பாணியில் விவாதித்துள்ள விதம் ரசிக்கும்படி உள்ளது.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!