Saturday, June 21, 2014

யார் எதிர்த்தால் என்ன வாங்க நாம ஹிந்தி பேசுவோம் !

தலீவர் எம்புட்டு தூரத்துக்கு ஹிந்தியை எதிர்கிறாரோ, நாம அம்புட்டு சீக்கிரமா ஹிந்தி படிச்சுனும், தலீவர் ஹிந்தியை எதிர்க்க காரணம் என்னன்னா அவருக்கு கீழே உள்ள மாதிரி யாரோ சொல்லி குடுத்து மண்டையில ஆயிரம் கொட்டு கிடைச்சிருக்கும் போல...
சரி வாங்க நாம தலிவருக்கு எப்பிடி சொல்லி குடுத்தாங்கன்னு பார்ப்போம்....

ஹம் ஆப்கே ஹை கோன் - நான் கோன் ஐஸ் கிரீம் சாப்பிடுவேன் 


ஏக் மார் தோ துக்குடா - தூக்குடா அவனை

மர்த் டாங்கே வாலா - மார்த்தாண்டம் எங்கேடா இருக்கு 

தேஜாப்  - வாஜ்பாய் 

சடக் - சாவுடா 

கர்மா - வர்மா 

பத்மாஷ் - பெட்ருமாஸ் 

கபர்தார் - கழுத்தறுத்தார்

அபேய் சாலெய்  - சாலையில் பேய் 

கூப் சூரத்  - சூரத்திலும் கூவம் 

அந்தா கானூன் - அந்தா பறக்குது பலூன் 

கயாமத்சே கயாமத்தக் - பயப்பட்ட இடத்தில் இருந்து அந்த இடம் வரை 

குச் குச் ஹோத்தா ஹே  - கெட்ட வார்த்தை எவனாவது சொன்னா குச்சை கொண்டு அடி 

ஆக்ரி ரஸ்தா - ரசகுல்லா சாப்புடுரியா 

சௌதாகர் - சௌகார் ஜானகி 

சப்பல் சே மாருங்கி  - கப்பலை வித்து மாருதி வாங்குவேன்

லோக் சபா  -  நடன மாளிகை 

ராஜ்ய சபா  - காபரே மாளிகை 

ஷோலே  -  போலெய்

பந்தர்  - பந்தல் 

கபர்ஸ்தான்  - பாகிஸ்தான் 

ஷேர் கா பச்சா  -  ஷேர் ஆட்டோ 

ஹிம்மத் வாலா  -  மண் லாரி 

தர்மாத்மா  - தர்ம அடி 

ஏக் காவ் மே கிசான் ரேஹத்தாத்தா - பேய் உன் சங்கை கடிச்சு துப்ப

தம்மாரோ தம்  -  ஒரு தரம் ரெண்டு தரம் 

பாந்த்ரா - நீ பாத்தியா 

மைனே பியார் கியா  - மைனாவை பிக்கப் செய்தது யாரு 

ஒ மேரா துஷ்மன்  - மோர் வேணாம் பால் போதும்

குத்தா  -  குத்தவச்சி உக்காரு 


ஏ தில் மாங்தே மோர்  - மாங்காய் துன்னு 

முக்ய மந்திரி  -  முக்காம எந்திரி 

கலிங்கட்  -  கலிஞர் 

இனி மறுபடியும் முதல்லே இருந்து படிங்க.

16 comments:

  1. அண்ணே மும்பாயில தாதா வேலைக்கு ஆள் எடுக்குறாங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி படிச்சா புத்தி வந்துரும்னு உமக்கு பொறாமைய்யா அவ்வவ்...

      Delete
  2. ஹா... ஹா... கலக்கிட்டீங்க...

    ReplyDelete
  3. அண்ணே இந்தி இவ்வளோ ஈசியா இஉக்கும்னு இப்பதான் தெரிஞ்சது. இதுக்கு 30 நாள் தேவ இல்ல நீங்க இது மாதிரி 3 போஸ்ட் போடுங்க போடும். நானும் இந்தி பண்டிட் ஆகிருவேன்.

    ReplyDelete
  4. இந்த ஹிந்திய எங்க படிச்சிங்க மனோஜி...??
    ஒட்டகம் மேய்க்கிற வேலைய விட்டுட்டு இப்படியா....ஆவ்வ்வ்வ்

    ReplyDelete
  5. //ஏக் காவ் மே கிசான் ரேஹத்தாத்தா - பேய் உன் சங்கை கடிச்சு துப்ப //

    ஏண்டா மச்சான் இப்டி படுத்துற? அதுக்கு தலீவரு பேசிய இந்தியே பரவாயில்லே!

    ReplyDelete
  6. வணக்கம்
    அண்ணா.

    நல்லா இந்தி மொழி தெரியும் போல.. நானும் படிக்க ஆசைதான் எல்லாம் சரியான சொற்கள்தானே?பகிர்வுக்குநன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சரியான சொற்கள் இல்லை கிண்டல் சொற்கள்.

      Delete
  7. ஆகா
    இந்தி வகுப்பு ஆரம்பமாகிவிட்டதா

    ReplyDelete
  8. ச்சை....என்னவோ நினைத்து கிழிக்கலாம் என்று வந்தால் பல்பு பல்பு...பல்பு....

    ReplyDelete
  9. இந்த இந்தி ஜோரா இருக்கே! ஹாஹாஹா!

    ReplyDelete
  10. எங்களுக்கு பராக்கோ பாஷைதான் வேணும்...... இந்தியெல்லாம் வேணாம்ணே.....

    ReplyDelete
  11. தாங்கள் தனியாக இந்தி அகராதியே எழுதலாம் போலுள்ளது. அந்த அளவுக்கு பொருள் கூறியுள்ளீர்கள். முயற்சி செய்யுங்கள். நாங்களும் கற்போம்.

    ReplyDelete
  12. ஆஹா.... அருமையா சொல்லிக் கொடுத்து இருக்காங்களே..... இந்த ஹிந்தி இங்கே பேசினா “செப்பல் சே மாருங்கி” நிச்சயம் கிடைக்கும்!

    நகைச்சுவையை ரசித்தேன் மனோ.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!