Monday, December 6, 2010

ஆணவ நடிகர்


மலையாள நடிகர் குஞ்சாக்க கோபன் எங்கள் ஹோட்டலில் தங்கி இருந்தார் [[கலை நிகழ்ச்சிக்கு]]. அவரை காண ரசிகர்கள் ஏகமாக கூடிவிட்டனர். ஆனால் அவரோ, ரசிகர்களை வெளியே வந்து பார்க்கவே இல்லை!!! ரூமை விட்டு வெளியே வரவும் இல்லை.
     சரியாக புரோகிராம் தொடங்கும் [[தாமதமாக]] நேரம்தான் ஹோட்டலில் இருந்து கிளம்பினார். குஞ்சாக்க கோபன் மலையாள சினிமாவில் உச்சத்தில் இருந்த நேரமது.
                 ரசிகர்களோ குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். வெகு நேரம் காத்தும் கிடந்தனர்.
     ஹோட்டலை விட்டு வெளியே வந்தவர், ரசிகர்களை பார்த்து ஒரு ஹாய் கூட சொல்லவில்லை!! ஏன் ஏறிட்டு கூட பார்க்க வில்லை!
இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் அவர் முகம் நோக்கி ஏசினார்கள். . . . . . திட்டி தீர்த்தார்கள். பின்னும் ஆத்திரம் அடங்காமல் கெட்ட வார்த்தையால் திட்டினார்கள், நிலமைய உணர்ந்த கோபனின் உறவினர், கலை நிகழ்சிக்கு நேரமாகி விட்டது நிகழ்ச்சி முடிந்ததும் உங்களை சந்திப்பார்னு சொல்லி காரில் ஏறி பறந்து விட்டனர். ஆத்திரத்தோடு கலைந்தனர் ரசிகர்கள்.
சரி, கலை நிகழ்சி முடிந்து வந்து ரசிகர்களை சந்தித்தாரா?    
                         ஆச்சர்யம்!! அவர் திரும்பி வரும் நேரம் தெரிந்தும், ஒரு ரசிகன் கூட அவரை காண வர வில்லை!!!
          அதன் பின்பு குஞ்சாக்க கோபன் நடித்த எல்லா படமும் புட்டுகிச்சு, இப்போ ஐயா அட்ரஸ் இல்லாம இருக்கிறதா கேள்வி.
         அவர் ரசிகர்களை மதிக்காமல் தலை கனத்துடன் போனதை என் கண்ணால் பார்த்தேன். என்னே ஒரு அகங்காரம்!!
      எத்தனையோ ஹிந்தி நடிக நடிகைகளை [[நான் மும்பை ஏர்போர்ட்டில் பணி செய்த சமயம்]] பார்த்திருக்கிறேன். ஏன்னா ஏர்போர்ட்ல அடிக்கடி சூட்டிங் நடக்கும் அதுவுமல்லாது வெளிநாடு போகணும்னா இந்த ஏர்போர்ட் வழியாதான் ஹிந்தி நடிக நடிகைகள் போவாங்க. ஏன் நம்ம நதியா[[நடிகை]] மேடமே,  அடிக்கடி ஏர்போர்ட் வருவாங்க. அமிதாப், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, அக்ஷய் குமார், சன்னி தியோல், பாபி தியோல், இன்னும் அநேக நடிகை நடிகர்களை பார்த்திருக்கேன் ஆனா இந்த குஞ்சாக்க கோபனை போல தலைகனம் உள்ள நடிகரை இது வரை நான் பார்த்ததே இல்லை!!!!

4 comments:

  1. எனக்கு இவரா தெரியாதே ....

    ReplyDelete
  2. //எனக்கு இவரா தெரியாதே ....//


    மலையாளத்துல ''காதலுக்கு மரியாதை'' படத்தில் நடித்தவர்...

    ReplyDelete
  3. குடும்பத்துடன் ஹோட்டல் வாசலில் நின்றது தவறும் தேவையற்றதும்; கைகூடக் காட்டாதது ஆணவம்; அதற்காக ஓரங்கட்டினார்களே! சபாஷ்!
    மகள் கலியாணத்துக்குக் கூப்பிடவில்லையென அழுது பத்திரிகைக்குக் கடிதமெழுதிய தமிழ் ரசிகர் போலின்றிப் பாடம் புகட்டினோர் பாராட்டுக்குரியோர்.

    ReplyDelete
  4. //மகள் கலியாணத்துக்குக் கூப்பிடவில்லையென அழுது பத்திரிகைக்குக் கடிதமெழுதிய தமிழ் ரசிகர் போலின்றிப் பாடம் புகட்டினோர் பாராட்டுக்குரியோர்///
    சரியாக சொன்னீர்கள்...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!