Wednesday, February 23, 2011

சமர்ப்பணம்


நாம் கை கோர்த்து
சுற்றி திரிந்த கீரை தோட்டம்
காணாமல் போய்விட்டதடி...
 
மறைத்து கொண்டு வந்து
என்னை சூட செய்த
மல்லிகை பூ...
 
இப்போது முகர்ந்து
பார்த்தால்
மணக்கவில்லையடி...
 
நாம் காதலில்
கசிந்துருகி மெய்மறந்து
லயித்த ஸ்தலம்...
 
இப்போது பெரும் கட்டடங்களாய்
உன்னை நினைவூட்டுகின்ற
சிமிண்டாய்...
 
நாம் பறித்து தின்ற
கொய்யா செடியும்
மாமரமும்....
 
உன்னை போலவே
என்னை பிரிந்து போனது
உயிரற்று போனது....
 
நான் உனக்கு
நாவல் பழம் தந்து
உன்னை மயக்கிய....
 
நாவல் மரம்
வெட்டப்படவில்லை
அதுவும் தன்னுயிரை விட்டு விட்டது.
 
நன்றி : எடிட் செய்து, படமும் தந்து உதவிய மதுரை பொண்ணுக்கு....

என்னை கோட்டியாலேய் நீ என கொஞ்சி மறைந்த  இந்த கவிதையின் சொந்தக்காரிக்கே  இது சமர்ப்பணம்.


33 comments:

  1. நல்லாயிருக்கு

    சென்னையில் நான் கண்ட உலகம்
    http://speedsays.blogspot.com/2011/02/blog-post_23.html

    ReplyDelete
  2. எழுத்துக்களை கரைக்ட்டாக அலைன் செய்யவும்..

    ReplyDelete
  3. அந்தநாள் ஞாபகம்...
    கவிதை அருமை நண்பா..

    ReplyDelete
  4. கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....

    ReplyDelete
  5. அது என்ன நாஞ்சில் மனோவுக்கு வாரம் ஒருதடவை காதல் சோகம் வந்து கவிதையை எழுதுகிறார்? கிண்டல் இல்லை. அதைவிட்டு வாருங்க மனோ . அது எப்பவும் உள்ளில்தான் இருக்கும். அப்படியே இருக்கட்டும். இங்கு பதிவில ஏதாவது சேச்சி அங்கு வந்த கதை சொல்லுவீங்களா? அதைவிட்டு.......!!!!

    ReplyDelete
  6. //உன்னை போலவே
    என்னை பிரிந்து போனது
    உயிரற்று போனது....//

    நல்ல வரிகள்...

    ReplyDelete
  7. கவிதை அ ருமை..

    இதை விவரித்து சொல்ல வார்த்தைகளே இல்லை..
    கவிதை உயிரோட்டத்துடன் மிகவும் அழகாக வந்துள்ளது..

    வாழ்த்துக்கள்..
    என் வாக்குகள்..
    இந்த கவிதைக்கு சமர்ப்பணம்..

    ReplyDelete
  8. >>>இப்போது முகர்ந்து
    பார்த்தால்
    மணக்கவில்லையடி...

    யோவ்,, பக்கத்துல ஃபிகரு இருகறப்ப உம்மை யாரு பூவை மோந்து பாக்க சொன்னது?

    ReplyDelete
  9. கவிதை போட்டா இப்படி ட்ரை(DRY)தான் படம் போடனும்னு இல்லை. ஃபிகர் படமும் போடலாம். ஹி ஹி

    ReplyDelete
  10. >>>>
    நான் உனக்கு
    நாவல் பழம் தந்து
    உன்னை மயக்கிய....

    நாவல் பழம் குடுத்து ஒரு நாவலே எழுதர அளவுக்கு ;லவ் பண்ணியாச்சா?

    ReplyDelete
  11. எதோ ஃபேஸ்புக் இணைப்பு தர்றதா சொன்னீரே.. அதை நான் எப்படி போய் பார்க்க?

    ReplyDelete
  12. உன்னை போலவே
    என்னை பிரிந்து போனது
    உயிரற்று போனது....

    .............

    நல்லாயிருக்குங்க..

    சித்தாரா
    முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்

    ReplyDelete
  13. நான் உனக்கு
    நாவல் பழம் தந்து
    உன்னை மயக்கிய....

    நாவல் மரம்
    வெட்டப்படவில்லை
    அதுவும் தன்னுயிரை விட்டு விட்டது//

    அருமையான கவிதை..

    ReplyDelete
  14. அடுத்தது சதம் தானே... (பொலோவெர்ஸ்) வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. நன்றி : எடிட் செய்து, படமும் தந்து உதவிய மதுரை பொண்ணுக்கு//

    மக்கா.. இதுக்கு எடுத்துக்கு நன்றியெல்லாம்.. ஒரு பிரியாணி பார்சல் பண்ணுங்க ஆமா.. சொல்லிட்டேன்..

    ReplyDelete
  16. வரிகள் நன்றாக இருக்கிறது அருமைங்க..

    ReplyDelete
  17. நாம் பறித்து தின்ற
    கொய்யா செடியும்
    மாமரமும்....

    உன்னை போலவே
    என்னை பிரிந்து போனது
    உயிரற்று போனது....]அருமையான கவிதை..

    ReplyDelete
  18. காதலில் சம்பந்தப்பட்ட இடங்களை பார்க்கும், நினைக்கும் போதெல்லாம்,வலி இருந்து கொண்டு தான் இருக்கும்,மனோ!
    அருமை!

    ReplyDelete
  19. சார் அருமையான வரிகளை கொண்ட கவிதை ...
    ரொம்ப ரசித்தேன்

    ReplyDelete
  20. நாம் பறித்து தின்ற
    கொய்யா செடியும்
    மாமரமும்....

    உன்னை போலவே
    என்னை பிரிந்து போனது
    உயிரற்று போனது..//

    மிக ரசித்த வரிகள் சார்

    ReplyDelete
  21. //நன்றி : எடிட் செய்து, படமும் தந்து உதவிய மதுரை பொண்ணுக்கு//

    மக்கா.. இதுக்கு எடுத்துக்கு நன்றியெல்லாம்.. ஒரு பிரியாணி பார்சல் பண்ணுங்க ஆமா.. சொல்லிட்டேன்.//

    என்னது காக்கா பிரியாணியெல்லாம் சாப்பிடுவீங்களா சொல்லவே இல்லை..மனோ அங்கே அதான் சாப்பிட்டுகிட்டு இருக்காரு :-))

    ReplyDelete
  22. February 23, 2011 5:31 AM
    ஜெய்லானி said...
    //நன்றி : எடிட் செய்து, படமும் தந்து உதவிய மதுரை பொண்ணுக்கு//

    மக்கா.. இதுக்கு எடுத்துக்கு நன்றியெல்லாம்.. ஒரு பிரியாணி பார்சல் பண்ணுங்க ஆமா.. சொல்லிட்டேன்.//

    என்னது காக்கா பிரியாணியெல்லாம் சாப்பிடுவீங்களா சொல்லவே இல்லை..மனோ அங்கே அதான் சாப்பிட்டுகிட்டு இருக்காரு :-))

    என்னது காக்கா பிரியாணியா நாங்க காக்காவை நம்ம நாட்ல பார்த்ததோட சரி....

    இங்க காக்கா வந்தா கண்டிப்பா நரி புடுங்கின வடை எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடிக்க சொல்லி ஆர்டர் போடச்சொல்லிடுவோம் நம்ம பஹ்ரைன் ராசாகிட்ட .....

    ReplyDelete
  23. என்னை கோட்டியாலேய் நீ என கொஞ்சி மறைந்த இந்த கவிதையின் சொந்தக்காரிக்கே இது சமர்ப்பணம்.


    ....
    அவங்களுக்கு இந்த லிங்க் அனுப்பிட்டீகளா, மக்கா?

    ReplyDelete
  24. ம்ம், ரெண்டு நாளா ஆளக்ககாணோம்? பஹ்ரைன்ல நெலம எப்படி??

    ReplyDelete
  25. திரு மனோ அவர்களுக்கு
    அருமையான கவிதை
    வாசித்த ஒரு திருப்தி
    நன்றி
    நன்றி
    நன்றி

    ஒரு ஒரு வரிகளும்
    வார்த்தைகளும்
    மிக அருமை நண்பரே
    வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு

    ReplyDelete
  26. நான் தான் உங்களது 100 th follower


    ur blog very intersting
    http://karurkirukkan.blogspot.com/2011/02/blog-post_2679.html#comments

    ReplyDelete
  27. உயிர் விட்டுப் போனதெல்லாம் துளிர் விட்டுப் போகுமுங்க ...

    ReplyDelete
  28. காதலில் தோத்தா பெரீய்ய்ய்யயயய ஆளா வரலாம்! கவலப்படாதீங்க!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!