உன்னை எண்ணும் வேளையில்
காரிருள் என்னுள் பரவுதடி
அதற்குள் உன்னை ஏன் தேடுகிறேன்...
நீ
கிடைக்க மாட்டாய் என தெரிந்தா...
கடும் இருளில் இருந்த என்னை
வெளிச்சம் காண்பித்து விட்டு...
நீ
காரிருளில் கரைந்து போனதென்ன
அந்த இருளில் உன்னை தேடி
கரையும் என் மனசு
யாருக்கு தெரியும் உன்னை தவிர...
நீ
தீண்டி விட்டு போன
இந்த உடல் தகிக்க
என்னை ஏங்க வைத்து போனதென்ன...
நீ
உன்னை காண எதிர் பார்த்து
முன்பு ஏழு ஜென்மம் ஏங்கினேன்
பாடலை என்னோடு சேர்ந்து ரசித்தாயே
அது இதற்குத்தானா....
நீ
வாங்கிய சத்தியம்
என் இதயத்தை கீறி ரணம் செய்கிறதே
அதற்கும் மருந்தாய்தான்
அத்தனை முத்தம் தந்தாயோ...
நீ
சுலபமாய் சாம்பலாகி விட்டாய்
என்னையும் சாம்பலாக்கி விடு...
ஆனால் அந்த ஒற்றை பனை மரம்
உன் மறைவுக்கு பின் இன்னும்
கனி கொடுக்கவில்லையடி............!!!!
காதலர் தினம் : இந்த கவிதை உருவாக காரணமானவளுக்கு என் அஞ்சலி....
நல்ல கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்
.
.
ஆனால் அந்த ஒற்றை பனை மரம்
ReplyDeleteஉன் மறைவுக்கு பின் இன்னும்
கனி கொடுக்கவில்லையடி.//
என்னவொரு அற்புதமான வரிகள். இந்த வரிகள் அவளின் முகத்தில் சாட்டையால் அடிப்பது போலிருக்கும் என்பதில் ஐயமில்லை. கவிதை ஒரு சந்த நடையில் செல்கிறது. அஞ்சலி நினைவினை மீட்டிப் பார்க்கும் ஒரு கவிதாஞ்சலி.
மற்றொரு காதல்... மற்றொரு வலி... மற்றொரு கவிதை...
ReplyDeleteமக்கா கவிதா கலக்கல் ....
ReplyDeleteவாழ்க்கையின் நிஜ சோகமா??
ReplyDeleteகாதல் இழப்பின் வலி ஒவ்வொரு வரிகளிலும்,, நல்ல கவிதை, வாழ்த்துக்கள்.
ஹே ஹே.. ஜூப்பரப்பு..
ReplyDeleteசோகம் கசியும் கவிதை .நன்று
ReplyDeleteகவிதைக்கு காரணமானவருக்கு... என் அஞ்சலிகள்.
ReplyDelete>>>நீ
ReplyDeleteவாங்கிய சத்தியம்
என் இதயத்தை கீறி ரணம் செய்கிறதே
அதற்கும் மருந்தாய்தான்
அத்தனை முத்தம் தந்தாயோ...
கடைசியில் காதலில் மிஞ்சுவது வாங்கிய முத்தங்களும் ,கவிதையும் தானே..
கலக்கல் தல
கவிதா அல்ல அல்ல கவித கவித.............ரொம்பஅழுகாச்சியா வருது........
ReplyDeleteகாதலர் தினம் : இந்த கவிதை உருவாக காரணமானவளுக்கு என் அஞ்சலி....
ReplyDeleteசமர்பனம்னு தானே பொதுவா சொல்லுவாங்க மக்கா
ஆனால் அந்த ஒற்றை பனை மரம்
ReplyDeleteஉன் மறைவுக்கு பின் இன்னும்
கனி கொடுக்கவில்லையடி............!!!!//
காதலித்தற்க்கு பரிசாக கவிதையை கொடுப்பது பெண்கள், அதன் தாக்கத்தால் தன் வாழ்க்கையையே கெ(கொ)டுப்பவர்கள் தான் ஆண்கள்
காதல் தரும் வலியில்தான் கவிதையே பிறக்கிறது!
ReplyDeleteநன்று மனோ!
///சுலபமாய் சாம்பலாகி விட்டாய்
ReplyDeleteஎன்னையும் சாம்பலாக்கி விடு... ////
அருமையான வரிகள் நண்பரே!
இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி
நல்ல கவிதை. வரிகள் அருமை
ReplyDeleteநக்கலும் நையாண்டியும் , கூடவே இந்த மௌனமான வலியும்....... சாரி மனோ.
ReplyDeleteகவிதை உருக்கம்.
அருமை... மௌனமான வலி..!
ReplyDeleteஎப்படிச் சொல்ல வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅருமை.. அருமை... அருமை..
என்னப்பா இது ஆளாளாக்கு இப்படி பண்ணா நான் என்னசாமி பண்ணறது..
ReplyDeleteஉருக்கமான அருமையான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்..
உங்களுக்கு கவிதைக்கூட அருமையா வருகிறது.. தொடருங்கள்..
இன்னைய பாடல் இதையும் கொஞ்சம் பாருங்கள்
ReplyDeletehttp://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post_14.html
இழப்பு இழப்பு தானே!
ReplyDeleteஅஞ்சலி!!
கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....உங்களுக்காக வெயிட்டிங்....
ReplyDelete//நீ
ReplyDeleteவாங்கிய சத்தியம்
என் இதயத்தை கீறி ரணம் செய்கிறதே
அதற்கும் மருந்தாய்தான்
அத்தனை முத்தம் தந்தாயோ...
//
புரியுது அண்ணா உங்க பீலிங் . இருந்தாலும் சில சமயங்களில் சில விசயங்கள் நம்மக்கு பாதகமாக அமைந்து விடுகிறது .. இன்னிக்கு நான் படிக்கும் சோகமான கவிதயை இது ..
வருந்துகிறேன் :(
ReplyDeleteகாதலின் பிரிவு எப்பொழுதுமே உயிர் திண்ணும் வலி தான்..
அப்படி பிரிந்தாலும் எங்கோ அவர் நன்றாக இருக்கிறார் என்றால் அதுலும் சிறு சுகம் இருக்கத்தான் செய்யும்..
ஆனால் உலகத்தை விட்டு பிரிந்து நம் இதயத்தை விட்டு பிரியாத காதல் மிகவும் கொடுமையானது :(
உலகத்தை விட்டு பிரிந்த உங்கள் காதலுக்கு வருந்துகிறேன் :(
இதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.. ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.. :(
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்...
ReplyDeleteஅருமை
ReplyDeleteஅப்படியே நம்ம பதிவு பக்கமும் வாங்க
ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்
http://speedsays.blogspot.com/2011/02/ipl.html
தேடிக்கண்டுபிடிச்சு வந்துவிட்டேன்.
ReplyDeleteகடைசிவரி கவிதையின் கூடுதல் பெலம்.
கவிதை அருமை.
ReplyDeleteTo meet is to part...is the saddest
ReplyDeletetale of every human heart.Time only
can heal. Cherish those memories.
Live in them.They are forever..
நல்லா இருக்கு சார்!
ReplyDeleteஅண்ணே அவங்கதான் உங்ககூடவே இருக்காங்களே மறைந்தும் உம்மை மறவாமல்
ReplyDeleteசுவாசிக்கும் காற்றினுள் தங்கள்
சுவாசமாய் இன்றும்.........
அருமையான கவிதை.. கண்களில் பனை மரம் கண்டது செல்கின்றது... ஆமா.. நீங்க எப்படி கவிதை எழுத தொடங்கினால் மதுரை பொன்னின் கவிதைகளை யார் படிக்கிரதாம்.. :( நல்ல இருங்க..
ReplyDeleteகவிதை மிக அருமைணே..!!!
ReplyDelete