Sunday, December 11, 2011

முல்லைப்பெரியார் பற்றி பிரபல பதிவர்களின் கமெண்ட்ஸ்...!!!

முல்லைப்பெரியார் பற்றிய போராட்டங்கள் நடக்கும் இந்த நேரத்தில், நம்முடைய பதிவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை பேட்டி எடுத்து பார்ப்போம்....



திவானந்தா : எலேய் கேரளா தண்ணி தரலைன்னா என் ஹோட்டல்ல ஒரு மலையாளிக்கும் தண்ணி தரமாட்டேன், விக்கிட்டு சாவுங்க....


சிபி : தண்ணீர் தரலைன்னாலும் ஓகே, தந்தாலும் டபுள் ஓகே, என் மானம் சூடு சொரனை எல்லாம் விக்கிகிட்டே கொடுத்துட்டேன், இனி அவன்தான் என் பங்குக்கு பொங்குவான்...வேணும்னா நான் கால்ல விழ ரெடியா இருக்கேன்...


மெட்ராஸ்பவன் : உணர்ச்சி வசப்பட்டு நாம எந்த முடிவும் எடுத்துறப்புடாது, ஏன்னா கேரளாவிலும் நம்மாளுங்க இருக்காயிங்க கவனமா செயல்படனும், இருங்க நான் போயி சாப்புட்டுட்டு வாறேன்..


ஆபீசர் : கடல்ல போற தண்ணிதானே கொஞ்சம் வயித்துக்கும் ஈயலாமே....?

பக்கி ச்சே ச்சீ விக்கி : டேய் கேரளாக்காரன் ஒற்றுமையா இருக்கான்னா, அவர்கள் கொஞ்சம் ஜனத்தொகைதான் ஆனால் தமிழர்களின் ஜனத்தொகையை பார், அதான் ஒற்றுமையா நிக்கமாட்டேங்குரானுக...


கே ஆர் விஜயன் : அரசியல்வாதிகளின் சூழ்ச்சி இது, இரு மாநிலத்தவரும் இதை புரிந்து கொள்ளவேண்டும்...


கருண் : என் ஊர் பக்கத்தில் இருந்த ஒரு மலையாளி கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள், இது நியாயமா...?


காட்டான் : நம்முடைய உரிமையை என்றுமே அவர்களுக்கு விட்டு கொடுக்கப்டாது அண்ணா....


சம்பத்குமார் : ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற தமிழக மக்களை சீண்டிப்பார்த்தவர்களை நடு ரோட்டில் வைத்து சுட்டாலும் தவறில்லை...


வீடு : ஏன் நம்முடைய அரசியல்வியாதிகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள், இவனுகளையும் விடக்கூடாது...


நண்டு நொரண்டு : நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்தலாம்னு இருக்கோம்...


"என் மனவானில்" செல்வி : கேரளாவும் தமிழ்நாடும் சண்டை போட்டுக்கொள்ளாமல், பேசி தீர்க்கவேண்டும் பிரச்சினையை...


ரூஃபினோ : சிறுமிகளை கொடுமை படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன், கேரளா நியாயமாக நடந்து கொள்ளவேண்டும்...


மனசாட்சி : கேரளாவுக்கு, இறைச்சி, பால்பவுடர், அரிசி, காய்கறிகள், ஆடுகள், மாடுகள், மணல்கள் கொண்டு போவதை உடனே நிறுத்தவேண்டும்...


மதுமதி : நல்லதே நடக்கட்டும், சண்டை போடாதீங்கப்பா...

துஷ்யந்தன் : தமிழச்சிகள் மீது கைபோட்டவன் கையை அருத்துவிட்டுதான் பேச்சு வார்த்தையே ஆரம்பிக்கணும்...


மயிலன் : நான் இதைப்பற்றி ஒரு குறும் படம் எடுக்கலாம்னு இருக்கேன்...

நிரூபன் : பாஸ் நானும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் பாஸ், அநியாயம் எங்கே நடந்தாலும் நான் அங்கே இருப்பேன் பாஸ்...


கவிதை வீதி சௌந்தர் : நாற்று நட்டாயா களை பறித்தாயா, வயல் அறுத்தாயா, நெல்லை இடித்து பொழித்து அரிசியாக மாற்றினாயா, மானங்கெட்டவனே தண்ணீர் மட்டும் தராமல் நீ உவ்வாவுக்கு எங்கேடா போவீங்க...?


பன்னிகுட்டி : இந்த நாதாரிகளுக்கு கக்கா காப்பி போட்டு குடுத்துற வேண்டியதுதான் வேற வழியே இல்லை...

"சிரிப்பு போலீஸ்"ரமேஷ் : ஒரு கேரளா பெண்ணை கல்யாணம் செய்து கண்கலங்காம காப்பாத்தனும்னு நினைச்சேன், இனி அது கேன்சல்...


"கோமாளி"செல்வா : அண்ணா வேணும்னா நான் போயி கேரளாவுல கொசு மருந்தை தெருவுல அடிச்சி வீட்டுக்குள்ளே போக வச்சிறட்டுமா...?

சென்னை பித்தன் : அவனில்லாமல் அணுவும் அசையாது, டேம் அசஞ்சிருமா என்ன...?


கோமதி அக்காள் : கேரளா என்ற தெய்வத்தின் நாடு இப்படி தறிகெட்டு நடக்கலாமா...??

மேனகா : இவனுகளுக்கு திங்குறதுக்கு இனி களிதான் பொங்கி குடுக்கணும்...

வெங்கட் நாகராஜ் : போச்சுடா, கேரளா சுற்றுப்பயணத்திற்கு ஆப்பு பலமா வச்சிட்டானுகளே...!!!


கக்கு மாணிக்கம் : ஒரு பயலையும் சும்மா விடக்கூடாது, அதேபோல நம்ம அரசியல்வாதிங்க ஒவ்வொருத்தன் வீட்டு தண்ணீர் பைப்புகளை உடைத்து எறியவேண்டும்...

அம்பாளடியாள் : நான் ஒரு கவிதை ஏற்றி அறம் பாடப்போகிறேன் வழியை விடுங்க...


"நாய்நக்ஸ்"நக்கீரன் : நான் வேணும்னா தமிழ்பணம் போயோரிலியை போட்டு தாக்குன மாதிரி போட்டு தள்ளட்டுமா தலைவா...?

சத்திரியன் : சிங்கப்பூர்ல ஒரு மலையாளியும் கண்ணுல அம்புடமாட்டேங்குரானுகளே, கைவேற பலமா அறிக்குது...


அவர்கள் உண்மைகள் : மனோசார் ரெளத்திரம் பழகு என்ற பதிவில் சேட்டனை வெளுத்துவாங்கிய நீங்கள் ஒரு நடை கேரளாவிற்கு போய் சேட்டனிடம் காட்டிய அன்பை அங்குள்ளவர்களுக்கும் காண்பித்து வருமாறு கேட்டு கொள்கிறேன்...


ஆமினா : பெண்களிடம் வீரத்தை காட்டிய மலையாளிகளை நினைச்சாலே அருவருப்பாக இருக்கிறது, தமிழர்கள் என்றால் அவர்களுக்கு அம்புட்டு இளக்காரமா...?

ராஜி : அண்ணே ம்ம்ம்னு சொல்லுங்க அண்ணே இப்பவே அருவாளை தூக்கிட்டு வந்துர்றேன் [[ஆஹா கொலைவெறியா இருக்கே தங்கச்சி]]


ரமணி குரு : கேரளாவுக்கு போகும் பொருட்களை தடை செய்வது என்பது, தமிழக வியாபாரிகளையும் பாதிக்கும் என்பதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...!!!

அரசன் : அப்படியே அணை உடைந்தாலும், அந்த தண்ணீர் மலைகளுக்கு இடையில் ஓடி, இடுக்கி அணைக்கே வந்துவிடும் ஒரு பாதிப்பும் இருக்காது...


சூர்யஜீவா : உணர்ச்சி வசப்படாமல் கேரளா மக்கள் யோசித்தால் அவர்களுக்கும் புரியும்... ஆனால் தமிழகமும் புரிய வைக்க முயற்சிக்கவில்லை... கேரளா அரசும் ஆதாயம் தேட பார்க்கிறது.

"தமிழ்தோட்டம்"யூஜின் : கேரளா அரசு ஆரம்பம் தொட்டே நம்மை வஞ்சித்து வருகிறது இனியாவது நாம் விழித்துகொள்வோம்...


ராம்வி : தண்ணீரும் தராமல் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சு இப்போ பொம்பளை மேலேயே கையை வச்சிட்டானுகளா, இதை இப்போதே ரெண்டுல ஒன்னு பார்த்துரனும்...

"கலியுகம்"தினேஷ் : இதுக்கு ஒரே வழி பாரளும்மன்றத்துல உட்காந்துகிட்டு இருக்குற எம்.பிக்களை கல்லைக்கட்டி தண்ணில எறக்கி விடுங்க எல்லா பிரச்சனைக்கும் வழி பிறக்கும் [[அய் இது நல்ல ஐடியாவா இருக்கே]]


கோகுல் : தமிழ்நாட்டுல இருந்துதான் தண்ணீர் உருவாகி முல்லைபெரியார் அணைக்கு போகுதுன்னா, ஏன் நாமளே ஒரு அணையை கட்டக்கூடாது...?

என் ராஜபாட்டை : அவர்கள் நம்மை வஞ்சிக்கும் போது, நாமும் அவர்களை வஞ்சிப்பதில் தவறில்லை, எல்லா செக்போஸ்ட்டையும் இழுத்து மூடுங்கலேய்...


ஜெய்லானி : இருங்க நான் சவூதி அரசாங்கத்துகிட்டே பேசி அவனுக அந்நிய செலவானிக்கு ஆப்பு வைக்கிறேன்..

மொக்கைமாமா ராசு : காமெடி கிங் அண்ணன் சந்தானம் அவர்கள், டி ராஜேந்தரை கேரளா அனுப்பி கேரளாவை பயமுறுத்த போகிறார் என்பதை மக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்..



சிவா : இனி ஒருக்கா தமிழன், தமிழச்சி மேல கையை வச்சீங்க ராஸ்கல் நான் ஷகீலா படத்துக்கு தடை வாங்கிருவேன் ஜாக்கிரதை...


யானைகுட்டி ஞானேந்திரன் : எலேய் தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாங்கலேய் பாப்போம்...


வடிவேலை ஒரு சினிமாவில் காலேஜ் ஸ்டுடண்ட்ஸ் எல்லாரும் வரிசையின் நின்னு மண்டையில கொட்டி வீங்க வைப்பான்களே, அப்பிடியே அதை இந்த சிங்கிடி டர்பனை கழட்டிட்டு கொட்டுனா என்னான்னு தோணுது ம்ஹும்...!!!

49 comments:

  1. ரசித்தேன்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தமிழகத்தின் மன உணர்வை எடுத்துக்காட்டிய அருமையான பகிர்வு..

    பாராட்டுக்கள். .

    ReplyDelete
  3. நீங்க இங்கே வந்து ரெண்டு முறை முறைசிங்கன்னா பிரச்சினை முடிஞ்சுடும்னு நினைக்கிறேன்கூடவே அடி வாங்குன டாக்சி டிரைவரை கூட்டி வந்திங்கன்னா அவரே உங்களைப்பத்தி சொல்லி பிரச்சினைக்கு முடிவு கட்டிடுவார்.

    ReplyDelete
  4. தொகுப்பு அருமை

    ReplyDelete
  5. இந்த விடயத்தில் அரசியல் கட்சிகள் பத்திரிகையாளர்கள் என்று இப்போ நாங்களும் (பதிவர்கள்) ஒர்றுமையாத்தான் இருக்கோம் என்பது இந்த ரண நேரத்திலும் இருக்கும் சந்தோஷம்

    ReplyDelete
  6. வணக்கம் அண்ணாச்சி..

    ONE STOP SHOP மாதிரி பதிவர்கள் மனதில் இருப்பது அப்படியே..

    //கேரளாவுக்கு போகும் பொருட்களை தடை செய்வது என்பது, தமிழக வியாபாரிகளையும் பாதிக்கும் என்பதையும் கொஞ்சம் நினைவு வைத்துக்கொள்ளுங்கள்...//

    இதில் சிறு மாற்றம்.மாறாக தமிழகத்தில் விலைகுறைந்துள்ளதே உண்மை

    அந்த ஏரியாவில் விளையும் விளைச்சல் அனைத்தும் தேனி சந்தையை தாண்டி ஒட்டன்சத்திரம் சந்தைக்குதான் வந்துகொண்டிருக்கிறது இவையனைத்தும் முதலில் கேரளாவுக்குத்தான் சென்று கொண்டிருந்தது.தற்போது முற்றிலும் தடைபட்டுள்ளது.

    இன்று தக்காளி விலை 1 1 /2 கிலோவுக்கு பத்து ரூபாய்,அதே இடுக்கியில் 120 ரூபாய்.அதுவும் கிடைப்பதில் பெரும்பாடாய் உள்ளதாம்.இதே நிலைமை மூன்று மாதம் நீடித்தால் அவர்கள் வழிக்கு வந்தே ஆகவேண்டும் இதுவே நிஜம்

    ReplyDelete
  7. பதிவினை சுவாசிக்கும் நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்.நண்பர் சசியின் இந்த பதிவின் வழியே சென்று டர்பன் அணிந்தவருக்கு கொட்டுவையுங்கள்


    மலையாளிகளா இல்ல மானங்கெட்ட நாய்களா [இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே]


    மிக்க நன்றி நண்பர்களே

    ReplyDelete
  8. //இருங்க நான் போயி சாப்புட்டுட்டு வாறேன்..//

    தெய்வமே, நான் சாப்புட போறது சரவண பவன். கேரளா பவன் இல்ல. அதை தெளிவா சொல்லுங்க. அவ்வ்!!

    ReplyDelete
  9. //கக்கு மாணிக்கம்: நம்ம அரசியல்வாதிங்க ஒவ்வொருத்தன் வீட்டு தண்ணீர் பைப்புகளை உடைத்து எறியவேண்டும்...//

    அடேங்கப்பா. கக்கு பட்டைய கெளப்பறாரு.

    ReplyDelete
  10. இவ்ளோ அமளி துமளி நடக்கும்போது விசய் டி.வி. நீயா நானால ரஜினி பத்தி ப்ரோக்ராம். சாதாரண நாள்ல போட்டா தப்பில்ல. நிலைமை புரியாம நாள் முழுக்க இதையே போட்டா? அதே டைம்ல புதிய தலைமுறை தேனி விவசாயிகள், வக்கீல்கள் வச்சி ஒரு ப்ரோக்ராம் போட்டாங்க. முல்லை பெரியாறு பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சுது. இந்த முறை காய்கறி கேரளாக்கு போகலைன்னாலும் பரவால்ல. நாங்க நஷ்டத்த தாங்கிக்கறோம்னு விவசாயிங்க சொன்னாங்க. இப்ப கேரளாவுல தக்காளி(விக்கி மாம்ஸ் இல்லை) கிலோ 150 ஓவாயாம். இன்னும் நாலு நாள் இப்படியே இருந்தா அவங்களுக்குதான் நஷ்டம். அனுபவிக்கட்டும். ஆனா சம்மந்தமே இல்லாமே ரெண்டு தரப்பு அப்பாவி மக்களையும் துன்புறுத்துறதை ஏத்துக்க முடியாது. நடுவுல ஆட்டம் போட்ட மிருகங்களை பிய்ய பிய்ய அடிக்கணும்.

    ReplyDelete
  11. பன்மோகனை பத்தி பேசுறதுக்கு நான் செவுத்த பாத்தே பேசிடுவேன். அவரு பேர எடுக்காதீங்க. வெறி ஆயிடுவேன்.

    ReplyDelete
  12. தமிழின் நீச்ச மொழியை உச்சரித்துக் கொண்டிருக்கும் மலையாளிகள் தனக்கென்று மொழிகூட இல்லாத புல்லுருவிகள். எம் குலப்பெண்களை
    மான பங்கப்படுத்துவதா? முடிந்தால் உம வீட்டில் இருக்கும் பெண்களிடம் இந்த சேட்டையைச் செய் சேட்டனே. ..
    தமிழனாம் எமக்கு வாழ் வைத்துத்தான் பழக்கம், யாரையும் கெடுத்துப் பழக்கமில்லை. அரசாங்க விவகாரம் விசாரணையில் உள்ள நிலையில் இது போன்ற சகவாசங்களில் ஈடுபடுதல் உங்களுக்கே கேடு விளைவிக்கும்.

    ReplyDelete
  13. மனோ.....நெசமாவே வெளுத்து ,வெளுத்து கட்ட ஆரம்பிசேட்டைய்யா. கொஞ்ச நாளாவே பதிவெல்லாம் எப்படியோ இருக்கு.
    நடக்கட்டும்..

    ReplyDelete
  14. உங்களைத் தான் எல்லாரும் கலைப்பாங்க.... இந்தவாட்டி முந்திக்கிட்டிங்க...
    நன்று.

    ReplyDelete
  15. நன்றி மானோ நான் ஆபாசமா அவங்கள திட்டியதைக்கூட மரியாதையா போட்டதுக்கு.. இதுதான் தமிழன்..!!

    ReplyDelete
  16. Thavarunu therindhal, yaaraaga irundhalum thatti ketkum en kunathai appadiye padhivu senju irukkeenga. Nanri anna!

    ReplyDelete
  17. பதிவர்களின் கமெண்ட்ஸ் நச்

    ReplyDelete
  18. அருமை அருமை
    பிரச்சனையை பதிவர்கள் மன நிலையில் மிக அழகாக
    யோசித்து அருமையாகக் கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்
    எதையும் வித்தியாசமாக யோசிக்கிற தங்கள் திறன்
    அதிக வியப்பளிக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. எல்லாத்திலேயும் சூப்பர் கடைசியில் வடிவேலு பற்றிய வரிகள் தான். சிபி சொன்னதுக்கு போட்டு இருக்கிற படத்தில ஏதும் உள்குத்து இருக்கா?

    ReplyDelete
  20. மனோசார் நானெல்லாம் கத்துகுட்டி சார் என்னையும் பிரபல பதிவாளர்கள் லிஸ்டில் சேர்த்துவிட்டீர்களே. பாருங்க உங்கள் நண்பர்கள் எல்லாம் கொதித்து எழுந்து உங்களுக்கு நல்லா தர்ம அடி கொடுக்க போறாங்கப்பா பார்த்து எழுதுங்க சார்

    "உங்களின் வித்தியாசமான இந்த சிந்தனைக்கு எனது பாராட்டுகள்"

    ReplyDelete
  21. வணக்கம் பாஸ் கடந்த சில நாட்களாக பதிவுலகப்பக்கம் வரமுடியவில்லை

    உங்கள் பதிவு நச்

    ஒரே நாட்டு மக்கள் என்ற ஒன்றுமை இன்மைதான் இப்படியான பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம்

    ReplyDelete
  22. மக்கா அந்த மானங்கெட்ட மன்மோகன் சிங்கிற்கு அது பத்தாதுயா..

    ReplyDelete
  23. வந்தேமாதரம் சசியின் வலைதளத்திக்கு சென்று தமிழர்களாகிய நாம் நம் கடமையை செய்யவேண்டும் நண்பர்களே!!
    இன்று முதல் மலையாளிகளின் தேனீர் கடை,ஜவுளிகடை,வணிக நிறுவனங்களை பயன்படுத்தமாட்டேன் என உறுதியெடுக்கவேண்டும் தோழர்களே!

    ReplyDelete
  24. பூச்சாண்டியின் ..சீ...சீ ...உம்மஞ்சாண்டியின் உருவபொம்மையை ஏரித்தால் மட்டும் போதாது ....
    அவருக்கு ஒஸ்தி படத்தை ஒன்பதுமுறை பார்க்கவைக்க வேண்டும் .....
    அப்போதான் என் மனசு ஆறும் .............

    ReplyDelete
  25. சேட்டண்ட சேட்டைகளா இது ஹிஹி!

    ReplyDelete
  26. ஆஹா!

    கமெண்ட்ஸ் “மிமிக்ரி” மேன் மனோ வாழ்க! வாழ்க!

    (யோவ்... இங்க கை நீட்னா உள்ள போட்ருவாய்ங்கய்யா)

    ReplyDelete
  27. நங்குநக்குடி நங்குநக்குடின்னு மண்டைல குத்தனும்....

    கலக்கல்...
    :)

    ReplyDelete
  28. தம்பி ரொம்ப கோவப்பட்டு உடம்பை கெடுத்துக்குவே போல இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  29. ///கருண் : என் ஊர் பக்கத்தில் இருந்த ஒரு மலையாளி கடையை அடித்து நொறுக்கி விட்டார்கள், இது நியாயமா...?

    பக்கி ச்சே ச்சீ விக்கி

    மதுமதி : நல்லதே நடக்கட்டும், சண்டை போடாதீங்கப்பா...

    கவிதை வீதி சௌந்தர் : நாற்று நட்டாயா களை பறித்தாயா, வயல் அறுத்தாயா, நெல்லை இடித்து பொழித்து அரிசியாக மாற்றினாயா, மானங்கெட்டவனே தண்ணீர் மட்டும் தராமல் நீ உவ்வாவுக்கு எங்கேடா போவீங்க...?

    பன்னிகுட்டி : இந்த நாதாரிகளுக்கு கக்கா காப்பி போட்டு குடுத்துற வேண்டியதுதான் வேற வழியே இல்லை...

    சூர்யஜீவா : உணர்ச்சி வசப்படாமல் கேரளா மக்கள் யோசித்தால் அவர்களுக்கும் புரியும்... ஆனால் தமிழகமும் புரிய வைக்க முயற்சிக்கவில்லை... கேரளா அரசும் ஆதாயம் தேட பார்க்கிற////

    அவரவர் பாணியில் கொன்னுட்டீக... சூப்பரண்ணே..

    லிஸ்ட் ல இந்த சின்ன பயலையும் சேத்துகிட்டதுக்கு ஒரு இரகசிய தேங்க்ஸ்...:):)

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. தாமதமாய் வந்து வாசித்ததற்கு வருந்துகிறேன்..பதிவர்களின் மனநிலையை துல்லியமாய் முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கையாண்டது சிறப்பாயிருந்தது.

    ReplyDelete
  33. சொல்ல மறந்துவிட்டேன்..படங்கள் பிரமாதம்..

    ReplyDelete
  34. http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html

    நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001

    ReplyDelete
  35. கமண்ட் அருமை நண்பரே

    ReplyDelete
  36. மிகவும் சிறப்பான படைப்பு இப்படி பெட்டி கண்டு பதிவுலகத்திற்கு பெருமை சேர்த்த உங்களுக்கு அகில உலக பதிவர்களின் மிகசிறந்த பரிசு கொடுக்க முயல வேண்டும் ... உண்மையில் இந்த பதிவு மாறுபட்ட கோணத்தில் இருந்தாலும் பாராட்டுகளுக்கு உரியதே ....

    ReplyDelete
  37. இன்று என் வரிகளில்..காதலாய்....பெண்ணாதிக்கம்...

    ReplyDelete
  38. அண்ணே நம் உணர்வுகளை அழகாய் வெளிபடுத்த இந்த பதிவு ...
    மிகச்சிறப்புங்க அண்ணே ...
    '
    அந்த கடைசி மண்டையில கொட்டுறது வேண்டாம் உடைச்சி உடைச்சி விளையாடலாம் ...

    ReplyDelete
  39. ஒ.. இவங்கெல்லாம் பிரபல பதிவர்களோ..

    நான் அப்பரண்டீஸ்ங்க..

    ReplyDelete
  40. கமெண்ட்ஸ்ல பதிவர்களின் ஒற்றுமை தெரிகிறது..
    தொகுப்புக்கு நன்றி சார்!

    ReplyDelete
  41. நான் ஒரு பதிவின் மூலமே இணைந்து கொள்கிறேன் சகோ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

    ReplyDelete
  42. என்ன ஒரு கற்பனை.கலக்குறீங்க மனோ !

    ReplyDelete
  43. எல்லாமே செமையாக இருக்கு.

    மைன்ட் வாய்ஸ் தெரிஞ்சிக்க ஏதாவது கோர்ஸ் இருக்கா என்ன? # டவுட்டு

    ReplyDelete
  44. நன்றி மனோ,என் ஒருவளின் எண்ணம்(பிரச்சனையைப் பேசி தீர்ர்க்கலாமே)எங்கள் ஊரையே பெருமை பட செய்தது!!நான் நினப்பதுவும் அதுவே!!!நல்ல பகிர்வு!!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!