Friday, January 27, 2012

உன் துணையின்றி நான்.....!!!

தேனும் தெளிதேனும் இருந்தும்
அது எனக்கு இனிக்கவில்லையடி 
என்னவளே நீ என்னருகில் இல்லாமல்...

பஞ்சணையும் சுக
தலையனையும் கந்தவர்க்க
மணமிருந்தும்.....

மல்லிகையால் அலங்கரிக்கப்பட்ட 
மெல்லிய மெத்தை 
வெள்ளைப்போளம் இருந்தும்....


மதிமயங்கும் மது இருந்தும்
நம்மை காண நிலா காத்திருந்தும்
இருளின் மேகங்கள் சுற்றி வந்தும்...

திரளான கப்பல்கள் 
தினம்தோறும் வந்து என்னை பார்த்து
கேலி செய்கிறது...


ஆயிரம் நறுமணம் 
கமழும் பூக்கள் இருந்தும் 
என் மஞ்சம் அந்த பூக்களை நெருங்க விடவில்லை...

உன்னைப்போல பெண்ணை 
நான் இதுவரை கண்டதில்லை 
என்றேன்....

உன் கண்கள் அழகாக 
இருக்கிறது என்றாய் 
என் கண் மூலம் காதலை கண்டவளே....

வெண்ணிலவே என்றேன்
நிலவில் கருப்பாக 
தெரிவது நீ என்றாய்....


தென்றலே என்றேன்
அதில் ஆடும்
மரம் நீ என்றாய்....

தேன்மொழியே என்றேன்
அங்கே பேசும்மொழி
நீ என்றாய்...

கனியே கனியமுதே
என்றேன்
அதின் விதை நீ என்றாய்...

எப்போதும் என் கனவில் 
நீ என்றேன்
அந்த கனவே நீ என்றாய்...


இனிக்கும் மாம்பழமே என்றேன்
அதுதான்
நீ வண்டாக வந்துவிட்டாயோ என்றாய்...

நீயில்லாமல் கண்ணீரின்
துணை கொண்டு வாழ்கிறேன் என்றேன்
அந்த கண்ணீரே நான்தான் என்றாய்...

எத்தனையோ சுகங்கள்
என்னருகில் என்னை மயங்க வைத்து இருந்தும்
என் மஞ்சம் வெறுமையாக, நீ இல்லாமல்......!!!!

டிஸ்கி : ஹா ஹா ஹா ஹா என்னாது யுத்தமா....?  சிப்பு சிப்பா வருது அண்ணே.....நான் சொன்னது ஈராக் அமெரிக்கா யுத்தத்தை ஹீ ஹீ ஹீ ஹீ.....[[எலேய் நீயும் உள்குத்தா டிஸ்கி போடுறியே மனோ]]





Wednesday, January 25, 2012

குளியலும் நாட்டு நடப்பும், எனது கோபமும்....!!!

ஒரு சிம்பிளான உடல்பயிற்சி, எல்லாரும் காலை மாலை குளிக்கிறீங்கதனே [[ சிபி குளிப்பதில்லை எனவே அவனை ஆட்டத்தில் சேர்க்கவேணாம் ]] பாத்ரூம் ஷவர்ல குளிக்கிறவிங்க இன்னையில் இருந்து பக்கெட்டில் தண்ணி பிடித்து, மக்கால தண்ணியை மோந்து தலையில் ஊற்றி குளியுங்கள்.



வலது கையால் ஒருமுறை தலையில் தண்ணி ஊற்றி விட்டு அடுத்து இடது கையால் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றுங்கள், இது நல்ல ஒரு பயன்தரும் எளிமையான உடல்பயிற்சி....!!!


உடலில் சோப்பு போட்டு தேய்க்கும் பொது உடம்பில் நன்றாக அழுத்தமாக தேயுங்கள், முறுக்கேறிய நரம்புகள் லேசாகும், அடுத்து சோப்பு போடும்போது ஒவ்வொரு காலாக மேலே தூக்கி வைத்துகொண்டு காலில் சோப்பு போடாமல் நீங்களே குனிந்து காலுக்கு சோப்பு போடுங்கள் இதுவும் ஒரு அருமையான உடல்பயிற்சிதான்...!!!


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுடில்லி: ஆண்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் உட்பட 4 பேர் எதிர்காலத்தில் அரசு பதவியில் நீடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய இஸ்ரோ தலைவர் ஹிட்லர் போல் செயல்படுகிறார் என முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார். 


நாஞ்சில்மனோ : எங்கே போனாலும் கொசு தொல்லை மாதிரி இந்த மலயாளிங்க ஆட்டம் தாங்க முடியல சித்தப்பு....?!

நாடு சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆன பின்னும், நடைபாதைகளிலும், திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில் பொதுமக்கள் படுத்துத் தூங்கும் நிலை உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது. வீடுகள் இல்லாத மக்கள் தூங்குவதற்கு, இரவு நேர தற்காலிக தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


நாஞ்சில்மனோ : அடப்பாவிகளா 64 வருஷமா என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க சரி சரி இப்பவாவது கண்ணை துறந்தாங்களே சந்தோசம் [[கொய்யால]]

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், அபு சலீமை போர்சுகல்லில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தியது தவறு என போர்ச்சுகல் நாட்டு கோர்ட் தீர்ப்பு கூறியிருந்தது. இந்த தீர்ப்பின் மீது இந்திய அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள போர்ச்சுகல் கோர்ட்டை அணுகும், என சிபிஐ., டில்லி ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.


நாஞ்சில்மனோ : அடப்பாவிகளா பாவிகளா அப்பாவி மக்களை கொன்னுட்டு ஜாலியா ஜெயில்ல காத்து வாங்கிட்டு இருக்கானுக, ம்ம்ம்ம் இந்த டவுசர் கிழிஞ்ச கேஸை தூக்கிட்டு இன்னும் எத்தனை வருஷமா அலையப்போறானுகளோ, [[காட்டுக்குள்ளே தூக்கிட்டு போனமா டுமீல் டுமீல் விட்டமான்னு செய்யாமல் சொதப்புராயிங்களே]]

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் முக்கிய அமைச்சர்களாக பதவி வகிப்பவர்களை விட, அவர்களது மனைவிகளுக்கு அதிக சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


நாஞ்சில்மனோ : பூவுடன் சேர்ந்த நாரும் மணம் தருவதை போல ஊழலோடு சேர்ந்த அம்மிணிகளும் நாருகிறார்கள் பணத்தில் சொத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு தயாளு அம்மாள், கனிமொழி மாதிரி இல்லையா...?

புதுச்சேரி: அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.60 லட்ச ரூபாய் மோசடி செய்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.


நாஞ்சில்மனோ : பஹ்ரைன் வரனுமா ரெண்டு லட்சம் ரூபா எனக்கு தாங்க நான் கூட்டிட்டு போறேன் ஏமாத்தமாட்டேன், ஏமாத்துனா ஆபீசர் பெல்ட்டோட கனவுல என்ட்ரி ஆகிருவார் அவ்வ்வ்வ்வ்....

முன்னாள் அமைச்சர் ராஜாவையும், தொலைத் தொடர்பு முன்னாள் செயலர் பெகுராவையும் தவிர, அனைவரும் ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். ராஜா இதுவரை, ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. பெகுராவின் ஜாமின் மனுவை, டில்லி ஐகோர்ட் கடந்த நவம்பரில் நிராகரித்தது. அதையடுத்து, அவர் ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பெகுராவின் ஜாமின் மனு, வரும் பிப்ரவரி 24ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. 


நாஞ்சில்மனோ : ஆமா பெரிய செக்கிழுத்த தியாக செம்மலுங்க இவனுகளுக்கு ஜாமீன் கொடுத்தா நாடு உருப்பட்டுரும் போங்கடாங்கோ.....

ஏற்கனவே அறிவித்த திட்டங்களை புதிய திட்டங்கள் போல், முதல்வர் ஜெயலலிதா அறிவிக்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 


நாஞ்சில்மனோ : எல்லாரும் உங்களை மாதிரியே இருக்க முடியுமா என் தா[பா]னை தலைவா....!!

சட்டசபை காங்கிரஸ் தலைவராக உள்ள, தங்கபாலு ஆதரவாளர் கோபிநாத் எம்.எல்.ஏ.,வை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் வலியுறுத்த, மத்திய அமைச்சர் வாசன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால், மீதமுள்ள நான்கு பேரில், சட்டசபை காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? என்ற பரபரப்பு உருவாகியுள்ளது.


நாஞ்சில்மனோ : சட்டையையும் வேஷ்டியையும் கிழிச்சு உருவிட்டு நாறுங்கடா நாதாரிகளா, ரெண்டு கை"நிறைய மண்ணு அள்ளி வச்சிக்கோங்க இப்போதே.....!

கோட்டயம்: "முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை விட, அங்கு புதிய சுரங்கக் கால்வாய் அமைத்து, அணை நீர்மட்டத்தைக் குறைக்கலாம்' என, முல்லைப் பெரியாறு போராட்டக் குழுவின் முன்னாள் தலைவர் சி.பி.ராய் தெரிவித்தார்.


நாஞ்சில்மனோ : ஆஹா இது நல்ல ஐடியாவா இருக்கே சேட்டா......!!!

சசிகலாவின் தம்பி திவாகரனின் சொல்படி, திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றிய, நான்கு எஸ்.பி.,கள், அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர். இதுவும் திவாகரனின் திருவிளையாடலில் ஒன்று என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நாஞ்சில்மனோ : அடடடடடடடா அண்ணன் ஒரு மார்க்கமாத்தான் செயல்பட்டுருக்காரு ம்ம்ம்ம்ம்ம்ம்....!!!

நான் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் என் சொந்த பணத்திலிருந்தோ, கட்சிப் பணத்திலிருந்தோ நிறைவேற்றியதல்ல; அனைத்தும் அரசு பணம் தான்' என கூறியிருக்கிறார், முன்னாள் முதல்வர் கருணாநிதி.


நாஞ்சில்மனோ : ஹா ஹா ஹா ஹா அதான் புகுந்து விளையாடி இருக்காங்க பல முன்னாள்கள் பாவிங்களா மக்கள் காசை இப்பிடியா கொள்ளை அடிப்பீங்க...? இதை கேட்க விக்கி என்ற பக்கி விரைவில் வரப்போறான் ஜாக்குரதை...!!!

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களைப்பற்றி, தொடர்ந்து அவதூறு செய்தி வெளியிட்டால், தினமலர் அலுவலகத்திற்குள் புகுந்து போராடுவோம்'', என, அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்தார்.


நாஞ்சில்மனோ : ஏற்கனவே அந்த பத்திரிக்கை நாறிப்போயி கிடக்கு, ரஷ்யாகாரனுக்கு சிங்கி அடிக்குறதுனால நல்ல ஒரு அமௌன்ட் கிடைச்சிருக்கும் போல.....!!!???

போன இடம் தெரியாமல் போன கடலூர் "புயல் நிவாராணம்.....!!!


நாஞ்சில்மனோ : இதான் அப்போதே கரடியாக கத்தினோம் அம்மா'விடம், அடிப்படைவாதிகளுக்கு அந்த உதவி போய் சேராவிட்டால் ஆட்சி சரியில்லை என்று மக்கள் சொல்வார்கள் தேவையா சும்மாவா சொன்னாங்க செய்வன திருந்தச்செய்யுன்னு....!!!!

கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் சிக்கலான உறவே இருந்துள்ளது. எனவே அதை சுமுகமானதாக மாற்றுவது சுலபமான காரியமல்ல என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் தெரிவித்தார்.


நாஞ்சில்மனோ : உங்களை மாதிரி ம[கொ]லையாளிங்க வெளியுறவு துறையில் இருப்பதால் ஒருநாளும் பாகிஸ்தான், சீனா, இலங்கை உறவு சுமுகமாக சீராகாது பாட்டி, போங்க போயி பியூட்டி பார்லருல போயி மேக்கப் போட்டுட்டு போட்டோவுக்கு போஸ் குடுங்க போஸ்....!!!

ஸ்பெஷல் டிஸ்கி : மிகவும் மனவேதனையுடன் ஒரு பிராப்ள நாட்டாமை பிளாக் நாஞ்சில்மனோ வலைதளத்தில் தடைசெய்யப்படுகிறது, காரணம் என் உயிர் நண்பர்களை தாக்கி எழுதுவது, என் உயிர் நண்பர்களை தாக்கிய தமிழ் பொணத்தையே போடா வெண்ணை என்றவன் நான் என்பது நண்பர்களுக்கு நன்றாக தெரியும்.


எவ்வளவோ பொறுமையாக இருந்து அவதானித்துதான் இதை எழுதுகிறேன், என் உயிர் நண்பர்கள் என வரும் பட்சத்தில் நான் ஒரு சுயநலவாதிதான் என்பதை மறுபடியும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்....!


மும்பைவாசியான நான், ரௌத்திரம் பண்ண வேண்டிய இடத்தில் கண்டிப்பாக ரௌத்திரம் காட்டியே ஆகவேண்டும் என்ற என் அப்பாவின் புத்திமதியை கடைபிடிப்பவன், அதுவும் நண்பர்களுக்கு என்றால் சுளுக்கெடுக்க சொல்லி தெரிய வேண்டியது இல்லை...!!!


அந்த பதிவர் யார் என்று நண்பர்கள் பகிரங்கமாக பெயர் சொல்லி தடை போடுவார்கள் அவரவர் பதிவுகளில், அதனால் நானும் தற்போது பெயரை சொல்லவில்லை.


நாஞ்சில்மனோ பதிவில் கோபமா...? ஆம் நண்பர்களே கோபம் சில இடங்களில் தேவைப்படுகிறது, சும்மாவா சொன்னான் மகா பாரதி ரௌத்திரம் பழகு என்று நன்றி நண்பர்களே.....!!! 



Monday, January 23, 2012

நாஞ்சில்மனோ'வின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்....!!!

மேனேஜ்மென்ட் மாற்றம் காரணமாக பதிமூன்று நாட்கள் பிளாக் வர முடியவில்லை. இன்னும் புதிய மேனேஜ்மென்ட் ஹேன்ட் ஓவர் எடுக்க வரவில்லை காரணம் பஹ்ரைனில் தொடராக நடந்து வரும் கலவரம்...!!!!



என்னை தேடி மெயிலிலும் சாட்டிங்கிலும் போனிலும் நலம் விசாரித்த நண்பர்கள், தோழிகள், அண்ணன்கள், என் தங்கைமார் யாவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நன்றிகள் [[ஆஹா கொஞ்ச நாள் நிம்மதியா இருந்தோமே வந்துட்டானா மறுபடியும் கொலை வெறியோட]]

பொங்கலுக்கு நான் யாருக்குமே வாழ்த்து சொல்ல முடிய இயலாமல் போனபடியால், உங்கள் யாவருக்கும் பொன்னான பொங்கல் நல்வாழ்த்துக்கள்....!!!

அடிக்கடி எனக்கு போன் செய்து நலம் விசாரித்த விக்கிக்கும், ஆபிசருக்கும், தங்கச்சிங்க கல்பனா, ரேவா இன்னும் பெயர் சொல்லமுடியாத நண்பர்கள் நண்பிகளுக்கும் மிக்க நன்றி நன்றி....!!!

இன்று முதல் நாஞ்சில்மனோவின் அதிரடி புதிரடி ஆட்டம் ஆரம்பம்......[[எவம்லே அங்கே குனிஞ்சி கல்லேடுக்குறது....!!!]]


புதிய லேப்டாப் வாங்க முயற்ச்சி செய்தேன் பத்து நாட்கள் முன்பு, என் நலம் விரும்பும் நண்பர்களின் [[வேலையில் பிரச்சினை இருப்பதால்]] வேண்டுகோளுக்கு இணங்க வாங்கவில்லை, ஆனால் லேப்டாப் வாங்க வைத்திருந்த பணம் ஒரே நாள் செலவில் காற்றில் கரைந்து விட்டது...!!!

அண்ணே நமக்கு செக்கன்ஹேன்ட் லேப்டாப் வாங்குவோம் அண்ணே என்று "கலியுகம்"தினேஷ் தம்பி சொன்னான், ஆனால் அப்படி வாங்குவதை விட புதுசே நல்லது என தோன்றியதால் யாருக்கும் சொல்லாமல், கம்பியூட்டர் இஞ்சினியர், தம்பி இணையம் புத்தூர் வில்லியம்சை கூட்டிட்டு போயி வாங்கிட்டு வந்துட்டேன்.

என்ன கம்பியூட்டர் படம் போட்டு, பதிவு போட்டு உங்களை கலவர படுத்த விரும்பவில்லை [[ஹி ஹி]] ஏன்னா எங்க அண்ணனுங்க சிபி என்ற மூதேவியும், விக்கி என்ற பக்கியும் ஹோட்டல்ல ஹால் புக் பண்ணி அழுது நாரடிச்சிருவேன்னு சொன்னதால பதிவு எழுத [[கொல்ல]] மாட்டேன்.


அடுத்து நம்ம சிபி அண்ணனின் ஆயிரமாவது பதிவுக்கு சுட சுட கமெண்ட்ஸ் போடமுடியாம போனதுக்கு எனக்கு மிகவும் மனதுக்கு வேதனையாக இருந்தது, மெயில் ஒப்பன் பண்ணியதும் அவனை தொடர்பு கொண்டு அந்த லிங்கை வாங்கி கமெண்ட்ஸ் போட்டபின்தான் மனசு லேசாகியது. அந்த பதிவு அம்புட்டு நெகிழ்ச்சியாக இருந்தது....!!! அண்ணே டேய் அண்ணே வாழ்த்துக்கள்டா....!!!

இனி அருவாள் உங்கள் பதிவுகளில் நாள்தோறும் தகதகக்கும் நன்றி.....

Sunday, January 8, 2012

சில ஆச்சர்யங்களும் வினோதங்களும்...!!!

சில ஆச்சர்யங்களும் வினோதங்களும்னு எழுதிட்டு அதற்க்கேற்ற படங்களைத்தான் போடணும்னு நினைச்சேன், தற்செயலா நெட் ஒப்பன் செய்யும் போது நம்ம பொரதமர் படம் பார்த்து கடுப்பாகிருச்சு...!!


திட்டனும்னு நினைக்கிற காங்கிரஸ் அல்லக்கை நோள்ளைக்கை எல்லாம் போயி கூகுள் ஆண்டவனை திட்டுங்க, கபில்சிபல் ஏன் சமூக வலைத்தளங்களை முடக்கனும்னு சொன்னாரு தெரியும்தானே...? 


நெட்டுல காங்கிரஸ்'காரனுக போட்டோக்கள்தான் நாறிட்டு நாதாரியா கொட்டி கிடக்கு....!!!!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
௧ : பத்து வலைத்தளம் வச்சிருக்குறவனுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை, ஒரே ஒரு பிளாக் வச்சிட்டு நான் படுற பாடு இருக்கே முடியல...!!!



௨ : ஒரே கார் நம்பர் பிளேட்டை எந்த காரை மாற்றினாலும் அந்த நம்பரை யூஸ் பண்ணலாம், பஹ்ரைன் ரூல்ஸ்...!!!


௩ : பனிரெண்டு கோடியே ஐந்து லட்சம் சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர்...!!!


௪ : தண்ணி அடித்துவிட்டு ஊருக்கு போன் பேசி அலப்பறை செய்யும் மனிதர்கள்...!!!


௫ : லேட்டஸ்ட் செல்போன்கள் வாங்கும் ஆர்வம் மக்களிடையே குறைந்துள்ளது...!!!


௬ : வாயே திறக்காத பிரதமர், வீட்டு மொட்டைமாடியில் தனியாக இருந்து நியாயம் பேசுவாரா...???


௭ : நாஞ்சில்மனோ சென்னை வந்தால் மாபெரும் பதிவர் சந்திப்பு, பிளக்ஸ் போர்ட் கட்டவுட்டு - மெட்ராஸ் பவன் மிரட்டல் [[ஸ்டேஜ்ல காலை பிடிச்சு இழுக்காம இருக்கணும் ஆண்டவா]]...!!!


௮ : அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தனியார் கிளினிக் நடத்த கூடாது என சட்டம் இருந்தும் அதை மதிக்காமல் கிளினிக் நடத்தும் சில டாக்டர்கள்...!!!


௯ : எத்தனை மாடி கட்டிடமாக இருந்தாலும் பயப்படாமல் வேலை செய்யும் கட்டட தொழிலாளர்கள் [[நமக்கு ரெண்டு மாடி ஏறுனாலே தலை கிர்ர்ர்ர்ர்]]...!!!


௰ : என்னதான் கல்லெடுத்து எறிஞ்சாலும் [[என்னை இல்லை]] விழுற மாங்காதான் கீழே விழும்...!!!


௧௧ : கவிட்டுகுள்ளே கைவச்சு உறங்குறவனும் கில்மா படமே கதின்னு கிடப்பவனும் நல்லா இருந்ததா சரித்திரம் பூகோளம் ஒன்றுமே இல்லை...!!!


௧௨ : போரடிக்குற மாட்டின் வாயை கட்டுகிறவன் நாசமாக போவான்...!!!


௧௩ : தமிழனின் உழைப்பும் அவன் வளமும் வேண்டும் ஆனால் தமிழன் மீது வெறுப்பு - அடுத்தடுத்த மாநிலங்கள்...!!!??


௧௪ : இனி ஒரு வீட்டிற்கு எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் தனி தனி கம்பியூட்டர் வேண்டும், வீட்டில் ஒரே சண்டை...!!!


௧௫ : கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தை என உறுதிசெய்த ஸ்கேன், ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை [[குழந்தை செல்வம் ஆணா பெண்ணா முடிவு செய்வது மேலே இருக்கும் சர்வசிருஷ்டிகன் செயல்]]...!!!


௧௬ : புறா முட்டை சாப்பிட்டால் பக்கவாதம் குணமாகும் [[நன்றி அன்பு உலகம்]]...!!!


௧௭ : தனுஷ் & ஸ்ருதி கள்ளக்காதல் - படத்துக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கும் அதே கமலின் பழைய டெக்னிக்'தான் இது...!!!


௧௮ : டென்சனில் கையாலேயே மீசையின் ஒவ்வொரு முடியாக பிடுங்கி எறிந்த ஈராக் நண்பன் [[பாவம்]]...!!!


௧௯ : பொறாமை உள்ளவன் பக்கம் தலைவைத்து படுக்காதே....!!!


௨௦ : இருட்டில் போகும் போது நாய் குரைத்தால் குனிந்து கல்லை எடுக்காதே, அது கல்லாக இருக்காது, அப்புறமா நாறிப்போகாதே...!!!

ஒரு ஜோக்...

சிபி : டேய் நீ லூசாடா...?

விக்கி : அதெப்பிடிடா கரெக்டா சொல்லுறே...?

சிபி : ஏன்...?

விக்கி : டேய் நாயே, ஒரு லூசுதான் இன்னொரு லூசு கூட சேரும்...

மனோ : அங்கே என்னடா சத்தம்...?

சிபி, விக்கி : சும்மா உன்னை பற்றிதான் பேசிட்டு இருக்கோம் அண்ணே.....[[அப்போ நானும் லூசாடா கொய்யால]]
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அழகு தேவதையின் அழகு படம், தேவதையின் தேவதை இவள், ஐஸ்வர்யா ராய் [[இப்போ மிஸஸ் பச்சன் அதனால நோ கமெண்ட்ஸ்]] நன்றி கே ஆர் விஜயன்...!!!



இதற்குத்தான் ஆசைபட்டாயா துரோகி.......?????/???/???/?[[என்னா ஒரு ஆட்டம், சிங்கள செயலாளருடன் குத்தாட்டம் போடும் கருணா...???]]

[[அப்போ குலைஞரும் இப்படிதான் பண்ணியிருப்பாரோ...?[[யார்கூட...??? அது உங்கள் சாய்ஸ்]]

டிஸ்கி : என் தங்கச்சிங்க எல்லாம் அண்ணனை மன்னிச்சு........!!!

Friday, January 6, 2012

அநியாயத்துக்கு மேல் அநியாயம் செய்யும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும்....!!!


மருத்துவம் சேவை அல்ல!, கொள்ளை...!!!

உயிருக்கு ஆபத்தான நிலை வருகின்ற போது காப்பாற்றிய மருத்துவரை கடவுளை வணங்குவதை போல் வணக்குவது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களின் இயல்பு காரணம் நம்மால் பசியாற உணவு கொடுக்க முடியும் வெயிலில் ஒதுங்க நிழல் கொடுக்க முடியும் மானத்தை மறைக்க ஆடை கொடுக்க முடியும் ஆனால் ஊசலாடி கொண்டிருக்கும் உயிரை காப்பாற்றி கொண்டு வர இயலுமா?

வலியால் துடிப்பவனை வலி மறக்க செய்ய முடியுமா? நிச்சயம் ஆகாது அது ஒரு மருத்துவரால் தான் முடியும் அதனால் தான் சமூகத்தில் மிக உயரிய அந்தஸ்தில் அவர்களை வைத்து பார்க்கிறோம்

ஆனால் கடவுளின் தூதர்களான மருத்துவர்கள் இன்று தங்களது பொறுப்பையும் தகுதி தாரதரத்தையும் மக்களின் நம்பக தன்மையும் உணர்ந்து நடக்கிறார்களா? இல்லை என்று சொல்வதற்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கிறது ஆனால் அது தான் உண்மை.

 பல மருத்துவர்கள் தங்களது தொழிலை மற்றவர்களின் ஆபத்தான நேரத்தில் பணம் பறிக்கும் கருவியாகவே பார்க்கிறார்கள் இதற்கு விதி விலக்காக சில மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் மறுக்க வில்லை ஆனால் இவர்களது எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது

சென்ற மாதத்தில் ஒரு நாள் எனக்கு மிகவும் நெருங்கிய ஒருவருக்கு இரு சக்ர வாகனத்தில் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்ப்பட்டு கால் எலும்புகள் ஒடிந்து விட்டன உடனடியாக அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிய மருத்துவர்கள் அதற்கு 85 ஆயிரம் செலவாகும் என்றார்கள் அந்த ஆபத்தான நேரத்தில் யோசிப்பதற்கு யாருக்கு தோன்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்யுமாறு சொல்லி கடன் உடன் பட்டு பணத்தை கட்டி விட்டார்கள்.

 பிறகு அந்த நோயாளியின் மருத்துவ அறிக்கைகளை பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காட்டி இதற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரித்தப் போது 35 ஆயிரம் இருந்தால் முடித்து விடலாம் என்றார்கள் நாகர்கோவிலுக்கும் பாண்டிச்சேரிக்கும் தொலைவு சற்று அதிகம் தான் அதற்காக மருத்துவ கட்டணத்தில் கூடவா இவ்வளவு அதிகம் தொலைவு இருக்கும்.

இது உதாரனத்திற்கு நான் சுட்டிக் காட்டிய சிறிய சம்வம் இதை விட கசப்பான கொடுமையான சந்தர்ப்பங்கள் பலவற்றை தினசரி மக்கள் அனுபவித்து வருகிறார்கள் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் எடுத்து போனால் குறைந்த பச்சம் ஐநூறு ரூபாயாவது தேவை படுகிறது சாதாரண காய்ச்சலுக்கே ஒரு நாளையில் இத்தனை ரூபாய் செலவு என்றால் சாதாரண ஏழை ஜனங்களால் அதை எப்படி சமாளிக்க முடியும்..??

 இன்றும் நம் நாட்டில் ஒரு வேளை சோற்றுக்கு கூட வழி இல்லாத மக்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள் இவர்களால் அபாய நேரத்தில் மருத்துவ மனை வாசலை கூட மிதிக்க முடியாத நிலை தான் இந்த நிமிடம் வரை இருக்கிறது.

எழைகளுக்காகத்தான் அரசு மருத்துவ மனைகள் இருக்கின்றனவே அங்கே சென்று இலவச சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா என்று சிலர் சிந்திப்பது நியாயம் தான் ஆனால் அரசாங்க மருத்துவமனைகளின் உண்மையான நிலையை நேரில் சென்று பார்க்கும் போது ஆரோக்கியமான மனிதர்களே தலை சுற்றி விழுந்து விடுவார்கள் நாய் கடிக்கு ஊசி போட வேண்டும் என்றால் கூட செவிலியர்களுக்கு தனியாக பணம் கொடுத்தால் தான் நடக்கும் இல்லை என்றால் மருந்தே குளிர் சாதன பெட்டியில் உறங்கி கொண்டிருந்தாலும் இல்லை என்று இறக்கமே இல்லாமல் சொல்லிவிடுவார்கள் நடந்து நடந்து நாய் போல குறைத்து சாக வேண்டியது தான் ஏழைகளின் தலை எழுத்தாக இருக்கிறது.

 அரசாங்க மருத்துவ மனைகள் சவக்கிடங்குகளாக காட்சியளிக்கும் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவமனைகள் நட்சத்திர ஓட்டல்களாக மின்னுகிறது ஒரு கண் அறுவை சிகிச்சைக்கு ஒரு தனியார் மருத்துவமனை விலை பட்டியலை தருகிறது பத்தாயிரம் ரூபாய்,அறுபதாயிரம் ரூபாய்,ஒன்னேகால் லட்ச்ச ரூபாய் என்பது அந்த பட்டியலில் உள்ள விலை விபரம் இது மூன்று விதமான நோய்களுக்கான சிகிச்சை கட்டணமாக இருக்குமென்று யாரவது நினைத்தால் அவர்கள் முழுமையான அப்பாவிகள்...!

ஒரே நோய்க்கு தரும் மூன்று விதமான கட்டண விபரம் தான் இது அப்படி என்றால் பணத்தை பொறுத்து தான் எங்கள் சிகிச்சையின் தரம் இருக்கும் என்பது தானே பொருளாகும் உயிரை பார்த்து செய்ய வேண்டிய மருத்துவம் பணத்தை பார்த்து செய்தால் அதில் மனிதாபிமானம் என்பது எங்கே இருக்கும்.

ஆகவே அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் நோய் வந்தால் ஒன்று சகித்துக் கொண்டு வாழ வேண்டும் அல்லது வேறு வழியே இல்லை சாக வேண்டும் இது தான் நமது நாட்டின் ஆரோக்கிய வாழ்வின் எதார்த்த நிலை ஆங்கில வைத்தியம் என்று இல்லை மாற்று மருத்துவ முறைகளான அனைத்துமே பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது என்று சொன்னால் அதிலும் தவறு இல்லை

மருத்துவர்கள் வாங்கும் கட்டணம் ஒரு புறம் என்றால் மருந்துகளின் விலை ஏற்றம் இன்னொரு புறம் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெறும் ஒன்பது ரூபாய்க்கு விற்ற metrogyl Gel என்ற மருந்து இன்று முப்பது ரூபாய் எதற்க்காக அதன் விலை இத்தனை மடங்கு உயர்ந்துள்ளது என்று யாரும் கேட்க முடியாது.

 கேட்டாலும் இந்த ஜனநாயக நாட்டில் பதில் கிடைக்காது விலை ஏற்றம் செய்யும் அளவிற்கு அதன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த மருந்து கம்பெனி சொல்லுமே ஆனால் இது வரை தரமற்ற மருந்தை எதற்காக விற்றீர்கள் என்று நான் கேட்டால் அது ஜனாயக விரோதமாகி விடும் இது தான் நம் நாட்டின் இன்றைய நிலை

இந்த நிலையில் தான் நமது மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் மருந்துகளின் விலை குறைய வேண்டும் என்று பேசியிருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்று தான் அம்மா நீங்கள் வேண்டுகோள்விடும் நிலையில் இல்லை கட்டளை இடும் நிலையில் உள்ளிர்கள்...

 ஒரு மருந்தின் உற்பத்தி செலவு போக லாபமாக இத்தனை சதவிகிதம் வைத்து விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று கட்டளை இடுங்கள் கோடான கோடி இந்தியர்கள் குலதெய்வமாக உங்களை கையெடுத்து வணக்குவார்கள் ஆனால் என்ன செய்வது நான் வெறும் அலங்கார பொம்மை தானே என்று சொல்விர்கள் நிஜம் தான் அலங்கார பொம்மைகள் அவசியத்திற்கு உதாவாது என்று எங்களுக்கும் தெரியும் இருந்தாலும் ஒரு நப்பாசை சொல்லி தான் பார்ப்போமே என்று...

நன்றி : உஜிலாதேவி.

இது ஒரு மீள்பதிவு.

Thursday, January 5, 2012

நாட்டு நடப்புகள்...!!!

லோக்பால் விவகாரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பார்லி.,யில் நாடகம் நடத்தி மசோதா நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது என்றும் இந்த விஷயத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தும் மகஜர் ஒன்றை பா.,ஜ., எம்.பி.,க்கள் குழுவினர் இன்று பிரதீபா பாட்டிலிடம் வழங்கினர். 



[[ ஜனாதிபதி அவிங்க ஆளுன்னு தெரிஞ்சும் வலியபோயி கொடுப்பதை நாடகம்னு சொல்லலாம்தானே...?]]

நில அபகரிப்பு புகார் தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள தி.மு.க., பொருளாளர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார் என்பவர் அளித்த நில அபகரிப்பு புகார் தொடர்பாக உதயநிதி, சைதாப்பேட்டை கோர்ட்டில் முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


[[ கனிமொழி செய்ததை விடவா கூடுதல் செய்துட்டார் விடுங்க மைலார்ட், அப்பிடியே நிலத்தை திருப்பி கொடுத்தாலும், இவிங்க ஆட்சியில திரும்பவும் வேதாளம் முருங்கை கதைதான் ஹி ஹி ]]

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 18 ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி 30ம் தேதி கவர்னர் உரையுடன் கூட்டம் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


[[ மாற்றம் ஒன்றே மாற்றமே இல்லாதது இது அம்மாவுக்கு சாலப்பொருந்தும் விடுங்க வழியை ]]

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி, தமிழக - கேரள கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கேரள அரசு தயாராக உள்ளது' என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 


[[ சுற்றி சுற்றி மறுபடியும் முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறியே சேட்டா கொஞ்சம் அடங்கி கீழே இறங்கி வாங்க ]]

ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்து துவக்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.


[[ ஏற்கனவே வாங்கி கட்டினது போதாதுன்னு மறுபடியும் திருவாய் மலர்ந்துள்ளார் ஹி ஹி நீங்க காமெடி பீசானது ரொம்ப வருத்தமா இருக்குங்க...!!!]]

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரபல தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, அனில் அம்பானி, ஏர்டெல் நிறுவனர் சுனில் பாரதி மிட்டல் ஆகியோர் ராஜாவை தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் சந்தித்தனர் என்று ஆசிர்வாதம் ஆச்சாரி 
சாட்சியம் அளித்தார்.


[[ ஆஹா "கனி" கைவிட்டது போதாதுன்னு, இவரும் கைவிட்டுட்டாரே, ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்களோ அவ்வ்வ்வ்வ்வ் ]]

உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது,'' என, கடலூரில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். "தானே' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: "தானே' புயலால், கடலூர் மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக நிவாரண உதவிகளை செய்வதற்கு, அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்குத் தேவையான குடிநீர், மின்சாரம், வீடுகள், சாலை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க, 850 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஆகவே, பயிர், படகுகள், குடியிருந்த வீடுகளை இழந்திருந்தாலும், எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய, உங்களுக்கு மறுவாழ்வு அளிக்க, இந்த அரசு இருக்கிறது. 


[[ அருமையான உதவி நன்றிகள், அப்பிடியே உதவி தொகை சரியா மக்கள்கிட்டே போயி சேருதான்னும் வாட்ச் பண்ணுங்க, அப்புறம் இந்த விலைவாசியை கொஞ்சம்.............அங்கே என்ன சத்தம்...? ஒன்னும் இல்லை அம்மா சும்மா பேசிட்டு இருக்கோம் ]]

புதுச்சேரி, கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில், 96 லட்சம் ரூபாய் செலவில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன,'' என நித்தியானந்தா தெரிவித்தார். 


[[ ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை பட்ட மாதிரி இருக்கே, மனசுக்கு மனோரஞ்சிதமா இருக்கே ஹி ஹி ]]

நடிகை நமீதா தற்போது மும்பையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை தீவிரமாக காதலித்து வருகிறாராம்.


[[சிபி தற்கொலை முயற்சி, விக்கியால் காப்பாற்றபட்டு ரூம் போட்டு சோமபானம் குடுத்து, நாஞ்சில்மனோ'வின் ஹோட்டலில் பாதுகாப்பாய் வைக்கப்பட்டுள்ளான் - செய்தி ]]



[[ ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ, கொய்யால இதெல்லாம் ஒரு பொழப்பு போங்கடாங்கோ...!!!]]

இந்திய அமைச்சர் மட்டும் அல்ல; அமெரிக்க அதிபர் ஒபாமாவே இலங்கை வந்து கூறினாலும் அதிகாரப் பகிர்வு வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.


[[ அங்கேயும் ஒரு கருணாநிதியா ச்சே ச்சீ கலாநிதியா கொய்யால ]]

சிங்கப்பூர் அரசியல்வாதிகளின் சம்பளம், பாதியாகக் குறைக்கப்பட உள்ளது. சம்பளம் குறைக்கப்பட்டாலும் அவர்கள் தான் உலகில் அதிகளவில் சம்பளம் வாங்கும் அரசியல்வாதிகளாக உள்ளனர். அந்நாட்டு பிரதமர் லீ செயின் லூங், ஆண்டுக்கு 23 லட்சம் டாலர் சம்பளம் பெறுகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா ஆண்டுக்கு வெறும் 4 லட்சம் டாலர் மட்டும் தான் சம்பளம் வாங்குகிறார்.


[[ அதான் நம்ம அரசியல்பேதிங்க இப்பிடி அநியாயம் பண்ணுரானுகளோ...???]]

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதால் அவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பினர்.


[[ அட ஆச்சர்யமா இருக்கு, உலக வரலாற்றில் முதன்முறையாக கல்வீசி தாக்குதல் நடத்திய "ராணுவம்....!!!!" ]]

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!