Sunday, February 9, 2014

பிராப்ள பதிவரின் அதிரடி வருகை, அதிர்ந்த இந்தியாவின் தலைநகரம் !

அவசரமாக ஒருமாத லீவில் பஹ்ரைன் கிளம்ப நேரம் வந்தபடியால் ஒன்வே பிளேன் டிக்கட் எடுக்கலாம்ன்னு நானும் வீட்டம்மாவும், பாப்பா"ம்மாவுமாக கிளம்பினோம், எப்போதும் பதிவாக டிக்கட் எடுக்கும் ட்ராவல்ஸ் ஆபீஸில் போயி கேட்டேன்.

எல்லா பிளைட்லயும், ஒரே ரேட்டு, சாதாரணமா ஏழாயிரம் ஒன்பதாயிரம் என்று [[சீசன் டைம் அல்ல]] எடுக்கும் டிக்கட் விலை அவன் சொன்னது 23000 ரூபாய், எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.
[[சீக்கிரமா அப்பாவை அனுப்பிருவோம்லேய் அப்பா தொல்லைகள் தாங்க முடியல...மும்பை ஏர்போர்ட்]]

ஆஹா என்னமோ ஆளைப்பார்த்து ஆட்டைய போடுறானா இல்லை உண்மையா என்று வேறே ஒரு ட்ராவல்ஸ் ஆபீஸ் போனோம், எனக்கு நான்காம்தேதி டிக்கெட் வேண்டும் சீப்பாக எந்த ஏர்லைன்ஸ் என்றாலும் பரவாயில்லை என்று சொன்னேன்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் சொன்னான், "அங்கிள் [[அங்கிளா ?]] ஏர் இந்தியா பிளைட் இருக்கு ஆனால் நீங்கள் மும்பை டு டில்லி போயி அங்கே ஏர்போர்டில் நான்கு மணிநேரம் காத்திருந்து டெல்லி டூ பஹ்ரைன் போகவேண்டும் என்று சொல்ல...சம்மதித்தேன்.
[[டில்லி ஏர்போர்ட், யூனிபார்மில் ஏர்போர்ட் ஸ்டாஃப், அங்கே இருக்கும் அம்மிணி பாவம் அவர் ஒரு பயணி]]

ஆன்லைனில் அவனுக்கு புக் செய்ய தாமதம் ஆனபடியால், ஏற்கனவே பல் சுத்தம் செய்ய எண்ணி இருந்தபடியால், வீட்டம்மா "பல் ஆஸ்பத்திரி பக்கத்துலதான் இருக்கு வாங்க பத்து நிமிஷத்துல பல் கிளீன் பண்ணி விட்டுருவாள்" [என்னாது டாக்டர் பொண்ணா ?]] விட்டுருவோமா என்ன, அழகான மராட்டி டாக்டர் பல்லை பேர்க்காமல் கிளீன் செய்து விட்டாள், எனக்குதான் பல் கிளீன் செய்தாங்க ஆனால் நான் காட்ட வேண்டிய ஆக்ஷன் எல்லாம் என் பொண்ணு செய்துகிட்டு இருக்கு அவளுக்கு பல் கூச ஆரம்பிச்சுடுச்சு.

டிக்கட் வாங்கிட்டு, பாப்பா பிறந்தநாளுக்கு கடையில போயி கேக் ஆர்டர் பண்ணிட்டு வந்தோம்.
[[டெல்லி டியூட்டி ஃபிரீ]]

பஹ்ரைன் கிளம்பும் நாள் வந்ததும், எல்லாமுறையும் சர்வதேச விமானம் நிலையம் மூலமாக வந்த, போன எனக்கு, உள்ளூர் விமான நிலையம் புதிது, அதுவும் டில்லி ரொம்ப புதிது, டில்லியில் ஏதும் பிரச்சினை என்றால் ரயில் பிடித்து மும்பை போயி சேர பணம் எடுத்து வைத்துக் கொண்டேன்.

கண்ணீரோடு குடும்பத்திடம் இருந்து விடை பெற்று போர்டிங் கார்டு வாங்கப்போனால், லக்கேஜ் இருபத்தி ஐந்து கிலோ, பதினைந்து கிலோதான் கொண்டுபோக முடியும் என்று கவுண்டரில் சொல்ல, "யோவ் நான் டில்லி போகலைய்யா பஹ்ரைன் போறேன்"ன்னு கோபமாகவும் உஷாராகிட்டன் "ஸாரி சார் வெரி ஸாரி" என்று லக்கேஜை உள்ளே விட்டான் [[எக்ஸ்ட்ரா கிலோவுக்கு பணம் குடுத்தா அது இவன் பாக்கெட்டுல, மக்களே கவனிச்சுக்கோங்க]]

கடுமையான காவல் சோதனைகள் தாங்கமுடியவில்லை, பெல்டை வரை கழட்டி காட்டவேண்டி இருக்கு, கடுமையான கெடுபிடிகள், லேப்டாப் வேற கையில இருந்ததால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

பிளேனில் ஏறுமுன்பு போர்டிங் கார்ட் செக் பண்ணி கிழித்து தரும் இடத்தில் நான் போனதும் [[வரிசையில் நின்னுதான்]] இரண்டு பெண்களில் ஒருத்தி கிழித்து கொடுத்த பேப்பரை திருப்பி வாங்கி என்னை ஒரு லுக் விட்டு சீட் நம்பரை பென்னால் வெட்டிவிட்டு வேறொரு நம்பரை எழுதினாள், நன்றி சொன்னதும் அல்லாமல் எனக்கு ஒரு டவுட்டு, சீட் நம்பர்ல என்னமோ சூனியம் வச்சிட்டாளோன்னு.
[[கம்பளம் வேலைப்பாடுகளுடன் ஏர்போர்ட் தளம்...!]]

பிளேன் உள்ளே போயி எக்னாமிக் சீட் தேடிப் போன என்னை ஏர்ஹோஸ்ட் செக் செய்துவிட்டு என்னை பிளைட்டின் முன்பக்கம் அழைத்து சென்று "பர்ஸ்ட் கிளாஸ்" சீட்டில் அமர வைக்க, அப்பத்தான் புரிந்தது அந்தப் பெண்ணின் லுக்கும், சூனியம் வச்சிட்டான்னு பயப்பட்டதும், மனதில் அப்பெண்ணுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.

டில்லி...

பஹ்ரைன், கத்தார், துபாய், ஷார்ஜா, அபுதாபி, குவைத், மும்பை, திருவனந்தபுரம் ஏர்போர்ட் எல்லாம் பார்த்துருக்கேன் ஆனால் டில்லி ஏர்போர்ட் போல எங்கும் சுத்தம் பார்க்கவில்லை, கிளீன்..... கிளீன்..... கிளீன்... எங்கும் கிளீன், அந்தந்த டிப்பார்ட்மேண்டுக்கு தனிதனி யூனிபார்ம் அதுவும் குளிருக்கான ஜாக்கெட்டும் அப்படியே.
[[மதியம் மூன்று மணி வேளையிலும் பொழியும் பனி !]]

வாக்கிடாக்கியில் ஹிந்தியில்தான் பேசுகிறார்கள், எங்களை மாதிரி ஆங்கிலத்தில் இல்லை, என்ன...பத்தடிக்கு பத்தடி தூரத்துக்கு ஏ கே நாப்பத்தேழு கன்"னுடன் ராணுவ வீரர்கள் ரெடியாக பொசிஷனில் நிற்கிறார்கள்.

டில்லியில் தங்கி இருக்கும் வெங்கட் நாகராஜ் அண்ணனை தொடர்பு கொள்ள ஆசையாக இருந்தது அவர் நம்பர் இல்லை, இருந்திருந்தால் நான்கு மணிநேரம் டில்லியில் பார்க்கமுடிந்த இடங்களை பார்த்து இருக்கலாம், இல்லைன்னா அண்ணனையாவது பார்த்திருக்கலாம்.

சூப்பர் ஏர்போர்ட், உலகில் எல்லா ஏர்போர்டிலும் "டியூட்டி ஃபிரீ"ன்னு மட்டும்தான் எழுதி வச்சிருப்பாங்க அனால் இங்கே "டில்லி டுயூட்டி ஃபிரீ"ன்னு போர்ட் வச்சிருக்காங்க, அநியாய விலை, அருகில் இருக்கும் கடைகளில் காப்பி டீ 130 ருபாய் மினிமம், இலவச குடி தண்ணீர் பைப் குடிக்கவே அருவருப்பு, காரணம் தண்ணீர் மேலாக பாயும் வசதி செய்துள்ளார்கள். வாய் வைத்துதான் குடிக்க வேண்டும் !
[[ஏர்போர்டில் வண்டியில் உட்கார்ந்தே போகனுமா ? இதே போல நிறைய கார்கள் இலவசமாக...!]]

ஸ்மோக்கிங் ரூம் செமையாக அதுவும் ஜாலிகள் அமைத்து இயற்கையாகவே செய்து இருக்கிறார்கள், சிகரெட்டும் உள்ளேயே விற்கிறார்கள், உள்ளே இருந்து வெளியே பார்த்தால் மதியம் மூன்று மணி நேரத்திலும் பனி கீழே இறங்கி எதையும் பார்க்க முடியால் மேகம் மறைத்து வைத்துள்ளது.
[[பனிப் பொழிவின் நடுவே பரப்பரப்பாக இயங்கும் பணியாட்கள் !]]

வெள்ளை சுள்ளையுமாக அரசியல் வியாதிகளையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது, டில்லிக்கு போனாலும் கும்பலாத்தான் போயி வருவாங்க போல, நான்கு மணி நேரமும், பச்சை தண்ணீர் குடிக்காமல் ஒரே ஒரு காப்பி வாங்கி குடித்துவிட்டு, அடுத்த பிளைட் பிடிக்க கிளம்பினேன், பின்னே டில்லி வரை வந்துட்டு எதுவும் குடிக்காம வந்தால் தலைநகரின் மானம் என்னாவது ?

டிஸ்கி : எத்தனையோ முறை [[தைமூர் முதற்கொண்டு யுத்தத்தில் ]] தரைமட்டமாக்கப்பட்ட, ரத்தக்குளியல் நடந்த இடம்தான் டெல்லி, இருந்தாலும் பலமுறை பீனிக்ஸ் பறவையாக எழும்பி, இப்போதும் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் டில்லி மக்களுக்கு ஒரு ராயல் சல்யூட்...!


23 comments:

  1. பிரபல பிராப்பள பதிவர் என்பதால்தான் ப்ர்ஸ்ட்க்ளாலில் சீட்டை ஒதுக்கி இருக்கிறார்களோ என்னவோ?

    ReplyDelete
  2. நீங்க வாங்கி குடிச்ச காப்பிக்கு பெயர் பக்காடியா?

    ReplyDelete
    Replies
    1. நெஸ் காப்பி அதுவும் பிளாக் காப்பி நூற்றி முப்பது ரூபாய் !

      Delete
  3. நம்ம அரவித் கேஜ்ரிவாலுக்கு போன போட்டுபேசி இருக்கலாம். டில்லி மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் நகரம். சிறப்பான விவரிப்பு

    ReplyDelete
  4. அண்ணனுக்கு கிடைத்த அழகான சூனியம்...! ஹா... ஹா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அங்கே போயும் லாட்டரியா! #முதல் வகுப்பு.

    ReplyDelete
  6. //ஒரே ஒரு காப்பி வாங்கி குடித்துவிட்டு, அடுத்த பிளைட் பிடிக்க கிளம்பினேன்// நம்பத்தான் வேண்டிருக்கு! ஹா ஹா ஹா

    ReplyDelete
  7. டெல்லி உங்களை அன்புடன் வரவேற்கிறது..
    சாரி கொஞ்சம் லேட்டா சொல்றேன்....

    ReplyDelete
  8. சரக்கு அடிச்சீரா? ஒருவாட்டி செக்யூரிட்டி செக்இன் முடிச்சு, அங்கேயே சரக்கடிக்க ஆரம்பிச்சேன். கிங்பிஷர் ஏர் ஹோஸ்டர்ஸ் தேடிக் கண்டுபுடுச்சு வண்டி ஏத்துனாங்க. டெல்லி ஏர் போர்ட்ல அந்த அனுபவம் நன்னா இருந்துது.

    #நான் பாத்தவரைக்கும் பெர்லின் ஏர்போர்ட் அழகானது.

    ReplyDelete
  9. தில்லி ஏர்ப்போர்ட் அரசியல்வாதிகளுக்காகவே இருக்கறதாச்சே அங்க கூட்டமாத்தான் வருவாய்ங்க!

    ReplyDelete
  10. Superji....... Baharin patri neengal eluthuvathai padikka aasai !

    ReplyDelete
  11. பிராப்ள பதிவர் என்பதால் இம்புட்டு மரியாதையா?

    முன்கூட்டியே வெங்கட் அண்ணாவிடம் நம்பர் இருந்தால் பேசியிருக்கலாமே?

    ReplyDelete
  12. சும்மாவா பின்னே...
    எதுவும் குடிக்காம வந்தா...!!
    நாளைய வரலாறு என்ன சொல்லும் நம்மை...
    ஹா ஹா ஹா

    ReplyDelete
  13. பிரபல பதிவர் என்றால்
    எப்படியெல்லாம் சலுகை கிடைக்கிறது
    பாருங்கள்
    படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. எப்படியோ டெல்லி நல்லாயிருக்குன்னு சொல்லீட்டிங்க....

    ReplyDelete
  15. ஆம் ஆத்மியின் ஆசியா கிளை செயலாளர் அவர்களே...!!

    ReplyDelete
    Replies
    1. துண்டு போட்டு வச்சிக்கலேய் தம்பி ஹி ஹி...

      Delete
  16. அடபோங்கண்ணே.. ஏதோ ஒப்புக்கு சப்பாணியா டில்லி ஏர்போர்ட்ல காலை வச்சிட்டு, கதை சொல்றீங்களே! எதுனாச்சும் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் முன்னாடி நின்னு ஒரு போட்டோ எடுத்தாவது போட்டிருக்கலாம்!

    ReplyDelete
  17. கடைசியில், நம்ம டில்லி ஏர்போர்ட்டு தான் கிடைத்ததா இவ்வளவு விவரமாக எழுத? ரொம்பப் புதுசாகக் கட்டிய மும்பை, டில்லி இரண்டும்தான் இந்தியாவில் கொஞ்சம் சகிக்கக் கூடிய சுத்தமும் அழகும் உடையவை. அது சரி, சென்னையைப் பற்றி எழுதிவிடாதீர்கள். டின் கட்டி விடுவார்கள். அவ்வளவு மோசம். ஏர்போர்ட்டில் நடக்கும்போதே உங்கள்மீது (மேலிருந்து) கண்ணாடித் தகடுகள் விழும். இதுவரை பதின்மூன்று முறை விழுந்திருக்கிறதாம்!

    ReplyDelete
  18. புதிய விமானப்பயணிகளுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் தங்கள் அனுபவம். தங்கள் நடையில் பகிர்ந்தவிதம் அருமையாக இருந்தது.

    ReplyDelete
  19. பிரபல்யம் என்பதால் முதல் வகுப்பு போல!ஹீ பலதடவை நானே ஈழத்தவன்/ தமிழன் என்ற பயத்தில் வேண்டாம் என்று நிராகரித்தேன் டெல்லியூடாக சென்னை பயணம் போக இனிப்போகலாம் சென்னைக்கு என்ற உணர்வைத்தருகின்றது பதிவு!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!