நாகர்கோவிலில் போயி பி என் ஆர் செக் செய்யும் போது வெயிட்டிங் லிஸ்ட் நான்கு என காட்டவும் ஓகே அப்போ டிக்கெட் கன்பாம்'தான்னு நினச்சி, சைக்கிள் பிடிச்சி ஸாரி ரயில் பிடிச்சி சும்மா கிடைத்த ஒரு சீட்டில் படுத்து உறங்கினேன் பரிசோதகர் வந்ததும் கன்பாம் பண்ணலாம்னு....
திருநெல்வேலி தாண்டி ரயில் போயிட்டு இருக்கும் போது பரிசோதகர் என்னை எழுப்பினார், எடுறா அந்த டிக்கட்டை என்று, ம்ஹும் நானும் பந்தாவா எடுத்து நீட்டினேன்...
என்னை மேலேயும் கீழேயுமா பார்த்தார் பாருங்க ஒரு பார்வை.....[[செவில்ல நாலு சாத்து சாத்தி இருந்தா கூட கவலை பட்டுருக்க மாட்டேன் அவ்வ்வ்வ்]] அப்பிடி ஒரு அக்கினி பார்வை...
நீ இந்த இ டிக்கெட்டை வச்சிட்டு ரயில்ல எறினதே தப்பு வா என் கூடன்னு இழுத்துட்டு போனார். மூணு நாலு பெட்டி தாண்டி, அங்கே ஒரு கருப்பு கோட் போட்ட சீப் நின்னுட்டு இருந்தார்.
அவருகிட்டே சிபி மூதேவி என்னை திட்டுறா மாதிரியே திட்டிட்டு, அந்த இ டிக்கெட்டை [[பேப்பரை'னுதான் சொல்லணுமாம்]] காட்டினார், அவரும் என்னை பார்த்தாரு பாருங்க ஒரு பார்வை [[டேய் நான் ஒரு ஸ்டார் ஹோட்டல் மேனேஜர்'டா]]
பேப்பரை பார்த்துட்டு கேட்டார், ஆமா இப்பிடியே ஃபைன் கட்டிட்டு ஒடுறியா அல்லது மும்பை போறியான்னு கேட்டார். சார் எனக்கு மும்பை போகனும்னு சொன்னதும், ஆர்டர் போட்டார் பாருங்க...
இந்த நாதாரி கைபுள்ளைக்கு [[நீங்களுமாய்யா]] 830 ரூபாய் சார்ஜ் பண்ணிட்டு டிக்கெட் குடுய்யானு சொன்னார், சாதாரணமா 500 ரூபாய்தான் என்ன பண்ண குடுத்து ஒரு பேப்பரில்...... @#%@#$#@.....இப்பிடி என்னெல்லாமோ எழுதி தந்தார்....
அப்புறமா மெல்ல கேட்டேன் சார் பெர்த் கிடைக்குமான்னு, காறி துப்பாத குறையாக எங்கே வேணும்னாலும் இருந்துக்கோ'னு சொல்லிட்டாரு, ம்ஹும் ரிஷர்வேசன் பெட்டியில அப்பிடி இருக்க முடியுமாய்யா.....??!! என்ன செய்ய ஒரு ஓரமா காலியா இருந்த சீட்'ல உக்காந்து நேரத்தை ஓட்டிட்டு இருந்தேன்...
ஏனப்பா இவிங்க இம்புட்டு கோபபடுறாங்கன்னு சத்தியமா எனக்கு புரியலை.....!!! அப்புறம் மதுரை தாண்டி ஒரு செக்கர் வந்தார், அவருட்ட போயி சார் எனக்கு ஒரு பெர்த் அரேஞ் பண்ணி தாருங்க சார், சம்திங் தந்துர்றேன்'னு சொன்னதும், போய்யா போ....................னுட்டார், ஆனாலும் அவர் என்னை திரும்ப திரும்ப முறைச்சி பார்த்துட்டே இருந்தார்...!!!
அம்மாடியோ இந்தாளு இப்பிடி பாக்குறாரே, போலீஸ்ல பிடிச்சி குடுத்துருவாறோன்னு தைரியமா [[அவ்வ்வ்வ்]] திரும்பி உக்காந்துட்டேன், அவரும் என்னை விடாமல் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை என்னை வந்து முகத்தை வளச்சி வளச்சி பார்க்க நான் கலவரமானேன்...
அப்புறமா மெல்ல என்கிட்டே வந்தவர், உங்க டிக்கெட்டை காண்பிங்க என்றார் காண்பிச்சேன், டிக்கெட்டை திருப்பி தந்துவிட்டு கேட்டார், உங்க பெயர் என்ன'னு சார் அதான் டிக்கேட்டுல போட்டுருக்கே என்றேன்...
சரி உங்க ஐ டி குடுங்கன்னு சொன்னதும் அதிர்ச்சி......... ஏன்னா குற்றாலம் ஹோட்டல்ல காறி துப்பி திருப்பி தந்த ஐ டி [[பான்கார்ட்]] ஆச்சே...??? அதையும் பார்த்து விட்டு திருப்பி தந்து விட்டு போய் விட்டார்....
என்னடா வடிவேலு'வை விட கேவலமா நம்ம பொழப்பு போகுதேன்னு நொந்து போனேன்...ஐயையோ மறுபடியும் வந்துட்டாருய்யா அந்த ஆளு...!!! சார் நீங்க நாஞ்சில் மனோ'தானேன்னு கேட்கவும் இன்னும் எனக்கு அதிர்ச்சி....!!!
நம்ம ஆபீசர்தான் டின் கட்ட ஆளை அனுப்பிட்டாரோன்னு பயந்து...ஆமாம் இல்லை'என தலையை அப்பிடியும் இப்பிடியுமா ஆட்டினேன்....
அவருக்கு நல்லா தெரிஞ்சி போச்சி போல, என் கையை இருக்கமா பிடிச்சிட்டு சார் நான் உங்க பிளாக் தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன் சார் சூப்பரா எழுதுறீங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்]] என பாராட்டினார்......[[நன்றி சார்......]]
அப்புறமாதான் எனக்கு அவர் டிக்கெட் மேட்டரை பற்றி சொன்னார். அதாவது "கன்பாம் ஆகாத எந்த இ டிக்கெட்டையும் கையில் வச்சிட்டு ரயில் ஏற கூடாதாம் காரணம் நம்ம பெயரே அதில் இருக்காதாம். கன்பாம் ஆகாத பட்சத்தில் நாம் கட்டும் பணம் நம் கணக்குக்கு ரீஃபன்ட் ஆகிருமாம்..."
சார் இவளவு எழுதுறீங்க ஹி ஹி இது கூடவா தெரியலைன்னு சொன்னார்....!!! என்னய்யா செய்ய ஒருக்கா அனுபவிச்சாதானே இந்த மர மண்டைக்கு புரியுதுன்னு குலம் நலம் விசாரித்தோம்....
அப்புறமா அவரே எனக்கு சூப்பரா பெர்த் அரேஞ் பண்ணி விடை பெற்றார். நல்ல மனுஷன்....!!! [[அவர் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் போடவில்லை]] இப்பிடியும் இருக்காங்க, ஆனால் முதல்ல வந்தவங்க செயல்படும் விதம் மிகவும் அருவருப்பாக இருந்தது....!!!
யோவ் ஃபைன் அடிக்கனுமா அடி தாராளமா.,... ஏன்னா நான் ராங்கா வந்துருக்கேன், ஸோ இப்பிடி ரொம்ப ரஃப் டீல் பண்ணுறது அநியாயம். எனக்கு அவசரமா மும்பை போக வேண்டி இருந்ததாலே சத்தம் போடாமல் கிளம்பிட்டேன். இல்லைன்னா டின்னு கட்டாம விட்டுருக்க மாட்டேன், அது எவனா இருந்தா என்ன....???!!! பின்னாடி வர்றதை அப்பாலிக்கா பாத்துக்கலாம் ம்ஹும்.....
-----------------------------------------------------------------------------------------------------------------------
தன்னை சூடும் படி
காத்திருக்கும்
பூக்கள் மத்தியில்...
அன்பே உன்னை
மட்டுமே சூடிகொள்ளும்
இன்பமே எனக்கு
மகரந்தம்.......!!!
டிஸ்கி : இப்போதான் மறுபடியும் நாகர்கோவில் வந்து சேர்ந்தேன் மும்பையில் இருந்து........!
டிஸ்கி : படங்கள் போட நெட் ஸ்லோ'வா இருக்கு மக்கா.....!!!
நாப்பது வருசமா டிரெய்னல போறேன்.
ReplyDeleteஇ.டிக்கெட் மேட்டரை உங்க அனுபவத்தில தெரிஞ்சுகிட்டேன்.நன்றி...மக்கா
ஹா ஹா ஹா ஹா நன்றி மக்கா....!!!
ReplyDeleteமக்கா ரொம்ப அனுபவீச்சிருக்கீங்க போல..
ReplyDeleteவேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteமக்கா ரொம்ப அனுபவீச்சிருக்கீங்க போல..//
ஹே ஹே ஹே ஹே அனுபவம் ஒரு நல்ல பாடம் இல்லையா.....
உள்ளூர் காரங்க யாரும் பாக்கல இல்லா .....
ReplyDeleteஅண்ணே அதான் கடவுள் ஆள் அனுப்பிவிட்டிருக்காரே நல்லது தான் அண்ணே ...
ReplyDeleteFOOD said...
ReplyDeleteகேட்பதற்கு கஷ்டமாத்தான் இருக்கு. அனுபவங்கள் நல்ல பாடம்தான் என்றாலும், இத்தகைய அனுபவங்கள் பயணம் முழுவதும் வலித்திருக்குமே.//
ஹா ஹா ஹா ஹா வலி நமக்கு புதுசில்லை ஆபீசர், இனி உஷாரா இருப்போமில்ல, அதே போல இனி நம் நண்பர்களுக்கும் இப்பிடி நேர்ந்து விட கூடாது என்பதிலும் கவனமா இருப்பேன்....
koodal bala said...
ReplyDeleteஉள்ளூர் காரங்க யாரும் பாக்கல இல்லா .....//
ஹி ஹி ஹி ஹி சரியான ஆளுய்யா நீர்.....!
தினேஷ்குமார் said...
ReplyDeleteஅண்ணே அதான் கடவுள் ஆள் அனுப்பிவிட்டிருக்காரே நல்லது தான் அண்ணே ...//
ஆமாம் ஆமாம் ஹே ஹே ஹே ஹே....
FOOD said...
ReplyDeleteநெல்லைப்பக்கம் எப்போ வாறீங்க?//
நாளைதான் "நான் சொன்ன" காரியம் நடக்க இருக்கிறது ஆபீசர், அது முடிந்ததும் உங்களை பார்க்க வருவேன் நெல்லைக்கு.....
T.T.R adichatha maraichetenkala?
ReplyDeleteகொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் காமெடியா எழுதி இருக்கிறதால...
ReplyDeleteசெம்ம கலக்கல் பாஸ்! வளைச்சு வளைச்சு டின் கட்டி இருக்காங்க இல்ல! :-)
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteT.T.R adichatha maraichetenkala//
விடுய்யா விடுய்யா ஹே ஹே ஹே ஹே....
ஜீ... said...
ReplyDeleteகொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் காமெடியா எழுதி இருக்கிறதால...
செம்ம கலக்கல் பாஸ்! வளைச்சு வளைச்சு டின் கட்டி இருக்காங்க இல்ல! :-)//
ஹா ஹா ஹா ஹா.......
இந்தத் தகவல் புதிதுதான் மனோ!நல்ல அனுபவம் உங்களுக்கு!
ReplyDeleteஅனுபவங்கள்தான் நல்ல பாடம்.
ReplyDeleteயோவ்.என்னய்யாப் பண்றீங்க அங்கே!.மும்பை போறீங்க நா.கோயில் வர்றீங்க!..ஒரே ரவுண்டிங் தான் போல!
ReplyDeleteai ஐ ஜாலி
ReplyDeleteபடைப்பாளிகளுக்கே உரிய உயரிய மரியாதையை நீங்கள் பெற்றது கண்டு மனம் மகிழ்கிறேன் அண்ணாச்சி , அன்பையும் , தகவலையும்,கோபத்தையும் சொல்லிச் சென்ற நவரசப் பதிவு
ReplyDelete//டிஸ்கி : படங்கள் போட நெட் ஸ்லோ'வா இருக்கு மக்கா....// நல்லவேளை..இல்லேன்னா தொந்தியும் தொப்புளுமா ஆபாசப்படமாப் போட்டிருப்பீங்க.
ReplyDeleteநல்லயிருக்குதுங்கன்னா
ReplyDeleteநல்லயிருக்குதுங்கன்னா
நெசமாத்தான் சொல்றீங்களா? நன்றி கூகுளுக்கு...
ReplyDelete//அனுபவங்கள் நல்ல பாடம்தான்//
ReplyDeletei agreed!
நல்ல அனுபவம் உங்களுக்கு....
ReplyDeleteஈ டிக்கெட்டால் பயங்கராமா நொந்திருக்கிறீங்க.
ReplyDeleteஅனுவம் தானே தவறுகளைத் திருத்திக்க உதவும்,
கடைசியில் பகிர்ந்திருக்கும் கவிதை கலக்கல்.
சான்ஸே இல்லை பாஸ், சூப்பராக இருக்கு.
பிடித்தவங்களுக்கு பக்கத்தில் இருக்கும் போது, உணர்ச்சிகள் கவிதையாக மாறும் என்பதை உங்களின் இவ் வரிகள் உணர்த்தி நிற்கிறது.
நல்ல அனுபவம் போங்க.... இந்த இ-டிக்கெட்-ல கண்ணுக்குத் தெரியாதமாதிரி கீழே நிறைய கண்டிஷன் எல்லாம் எழுதி இருக்கும். அதுல ஒண்ணுதான் இந்த வெயிட்லிஸ்ட் டிக்கட் இருந்தால் பயணிக்க முடியாது என்பதும்.... :)
ReplyDeleteஎன்னய்யா இது சொல்லிட்டுஅடிக்க கூடாதா,.,.....எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்....ஆனா கடைசில சொல்லிட்டாங்க போல!
ReplyDeleteமக்கா நீரு டிக்கெட் கூட எடுப்பீரோ சொல்லவே இல்லை ஹி...ஹி... !!
ReplyDeleteகாறி துப்பாத குறையாக எங்கே வேணும்னாலும் இருந்துக்கோ'னு சொல்லிட்டாரு,// haha... pavam neenga!
ReplyDeleteஇனிமே நானும் உங்களைப் போல என் படம் போட்டு ப்ளாக் எழுதப் போறேன்.
வானதின்னு சொன்னா ஒரு பயலுக்கும் தெரியமாட்டேன் என்கிறது.
என் சொந்தக்காரங்க யாரும் நம்புவதே இல்லை.
நல்ல பதிவு, அங்கிள்.
சென்னை பித்தன் said...
ReplyDeleteஇந்தத் தகவல் புதிதுதான் மனோ!நல்ல அனுபவம் உங்களுக்கு!//
ஹா ஹா ஹா ஹா ஆமாம் தல....
சே.குமார் said...
ReplyDeleteஅனுபவங்கள்தான் நல்ல பாடம்.//
ஆமாய்யா ஆமாய்யா.....
M.G.ரவிக்குமார்™..., said...
ReplyDeleteயோவ்.என்னய்யாப் பண்றீங்க அங்கே!.மும்பை போறீங்க நா.கோயில் வர்றீங்க!..ஒரே ரவுண்டிங் தான் போல!//
ஐயோ ஐயோ கொல்றாயிங்க கொல்றாயிங்க....
சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteai ஐ ஜாலி//
டேய் அண்ணா, ராஸ்கல் அப்பிடியே ஓடி போயிரு ஆமா.....
A.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteபடைப்பாளிகளுக்கே உரிய உயரிய மரியாதையை நீங்கள் பெற்றது கண்டு மனம் மகிழ்கிறேன் அண்ணாச்சி , அன்பையும் , தகவலையும்,கோபத்தையும் சொல்லிச் சென்ற நவரசப் பதிவு//
மிக்க நன்றி மக்கா.......
செங்கோவி said...
ReplyDelete//டிஸ்கி : படங்கள் போட நெட் ஸ்லோ'வா இருக்கு மக்கா....// நல்லவேளை..இல்லேன்னா தொந்தியும் தொப்புளுமா ஆபாசப்படமாப் போட்டிருப்பீங்க.//
அடபாவி, எட்றா அந்த அருவாளை ஹே ஹே ஹே ஹே.....
கார்த்தி-ஸ்பார்க் said...
ReplyDeleteநல்லயிருக்குதுங்கன்னா
நல்லயிருக்குதுங்கன்னா//
வாங்கோ வாங்கோ, நன்றிங்கோ நன்றிங்கோ....
குணசேகரன்... said...
ReplyDeleteநெசமாத்தான் சொல்றீங்களா? நன்றி கூகுளுக்கு.//
யோவ் எனக்கு நன்றி சொல்றதை விட்டுபுட்டு கூகுளுக்கு நன்றியா அவ்வ்வ்வ்வ்...
ஷர்புதீன் said...
ReplyDelete//அனுபவங்கள் நல்ல பாடம்தான்//
i agreed!//
யோவ் என்ன இங்கே இக்ரிமென்டா போட்டுட்டு இருக்கோம்...
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநல்ல அனுபவம் உங்களுக்கு....//
நல்லகாலம் ரயில் பஞ்சர் ஆகலை ஹி ஹி....
நிரூபன் said...
ReplyDeleteஈ டிக்கெட்டால் பயங்கராமா நொந்திருக்கிறீங்க.
அனுவம் தானே தவறுகளைத் திருத்திக்க உதவும்,
கடைசியில் பகிர்ந்திருக்கும் கவிதை கலக்கல்.
சான்ஸே இல்லை பாஸ், சூப்பராக இருக்கு.
பிடித்தவங்களுக்கு பக்கத்தில் இருக்கும் போது, உணர்ச்சிகள் கவிதையாக மாறும் என்பதை உங்களின் இவ் வரிகள் உணர்த்தி நிற்கிறது.//
மிக்க நன்றி மக்கா........
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteநல்ல அனுபவம் போங்க.... இந்த இ-டிக்கெட்-ல கண்ணுக்குத் தெரியாதமாதிரி கீழே நிறைய கண்டிஷன் எல்லாம் எழுதி இருக்கும். அதுல ஒண்ணுதான் இந்த வெயிட்லிஸ்ட் டிக்கட் இருந்தால் பயணிக்க முடியாது என்பதும்.... :)//
ஆமாம்ய்யா ஆமாம்.....வடிவேலு மாதிரி புலம்ப வச்சிட்டாணுக....
விக்கியுலகம் said...
ReplyDeleteஎன்னய்யா இது சொல்லிட்டுஅடிக்க கூடாதா,.,.....எதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்....ஆனா கடைசில சொல்லிட்டாங்க போல!//
ஒரு மண்ணும் புரியலை போங்க....!!
ஜெய்லானி said...
ReplyDeleteமக்கா நீரு டிக்கெட் கூட எடுப்பீரோ சொல்லவே இல்லை ஹி...ஹி... !!//
தோலை உரிச்சிபுடுவேன் ஆமா......
FOOD said...
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
FOOD said...
நெல்லைப்பக்கம் எப்போ வாறீங்க?
நாளைதான் "நான் சொன்ன" காரியம் நடக்க இருக்கிறது ஆபீசர், அது முடிந்ததும் உங்களை பார்க்க வருவேன் நெல்லைக்கு.....//
அழைப்பை ஏற்றமைக்கு நன்றி. நெல்லையின் எல்லையில் தாரை தப்பட்டையுடன் காத்திருப்பேன், தங்களை வரவேற்க.//
அவ்வ்வ்வ்வ்......தாரை தப்பட்டையா....??? ஆபீசர் கொஞ்சம் சாப்ட்டா நடந்துக்கொங்க நான் பச்ச பிள்ளை......
vanathy said...
ReplyDeleteகாறி துப்பாத குறையாக எங்கே வேணும்னாலும் இருந்துக்கோ'னு சொல்லிட்டாரு,// haha... pavam neenga!
இனிமே நானும் உங்களைப் போல என் படம் போட்டு ப்ளாக் எழுதப் போறேன்.
வானதின்னு சொன்னா ஒரு பயலுக்கும் தெரியமாட்டேன் என்கிறது.
என் சொந்தக்காரங்க யாரும் நம்புவதே இல்லை.
நல்ல பதிவு, அங்கிள்.//
ஹா ஹா ஹா ஹா மாட்நீங்களா...??? வாங்க வாங்க என் வழிக்கு ஹா ஹா ஹா ஹா....
நல்ல அனுபவம்,
ReplyDeleteசொன்ன விதம் இன்னும் அருமை.
நல்ல அனுபவங்கள் எப்போதும் ரயில் மூலம்தான் கிடைக்கும் என்பதை நிருபிக்கின்றது இந்த தொடர் பாவம் சிபி போட்டுத் தாக்கிறீங்க.
ReplyDeleteஅழகான கவிதை மனைவியை பிரிந்த மீண்டும் கானும் இன்பம் அப்படியே படம் பிடிக்கிறது மனசுல கொஞ்சம் வலி நாங்களும் எட்டியிருக்கிறம் என்று.
ReplyDeleteஅப்புறமாதான் எனக்கு அவர் டிக்கெட் மேட்டரை பற்றி சொன்னார். அதாவது "கன்பாம் ஆகாத எந்த இ டிக்கெட்டையும் கையில் வச்சிட்டு ரயில் ஏற கூடாதாம் காரணம் நம்ம பெயரே அதில் இருக்காதாம். கன்பாம் ஆகாத பட்சத்தில் நாம் கட்டும் பணம் நம் கணக்குக்கு ரீஃபன்ட் ஆகிருமாம்...//
ReplyDeleteபயனுள்ள அறிந்துகொள்ள வேண்டிய பகிர்வு. பாராட்டுக்கள்.
போலீஸ்ல பிடிச்சி குடுத்துருவாறோன்னு தைரியமா [[அவ்வ்வ்வ்]] திரும்பி உக்காந்துட்டேன்
ReplyDeleteதைரியமா [[அவ்வ்வ்வ்]] திரும்பி உக்காந்துட்டேன்
போகிற போக்குல நகைச்சுவைய மென்னுட்டு போறீங்களே.. சுவராசியமான பயணம்
ஒரே சூறாவளி சுற்றுப்பயணம்தான் போலிருக்கு :-))
ReplyDelete