Sunday, March 9, 2014

அந்தப்பெண் நிச்சயம் உயிரோடே இருக்க சான்சே இல்லை !

இதற்கு முன்பு வேலை பார்த்த ஹோட்டலில் ஒரு திகில் சம்பவம்...

 இரவு ஒரு பத்து மணி அளவில் ஒரு பஹ்ரைனி பெண் வந்து, இந்த நம்பர் ரூமுக்கு போகனும் என்று சொல்ல, நான் அந்த ரூமில் தங்கி இருந்த கத்தார் அரபிக்கு போன் செய்து கேட்க, அவனும் அனுப்பு என்று சொன்னான்.

அவள் ரூமுக்கு போன பத்தாவது நிமிஷம் ஒரு பஹ்ரைனி ஆண் ஓடி வந்தான்.

"இப்போ இங்கே வந்த அந்த பெண் எந்த ரூமிற்கு போனாள் ?"

நாங்கள் எங்கள் ஹோட்டலில் தங்கி இருப்பவர்களை தகுந்த ஆதாரம் இல்லாமல் காட்டி கொடுப்பதில்லை.

"இல்லையே இங்கே யாரும் வரலையே"

"மரியாதையாக சொல்றியா இல்லையா ?"

"இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயந்தவன் கிடையாது, இங்கே யாரும் வரவில்லை"

"டேய் அது என் பொண்டாட்டிடா" என்று சொல்லி இடுப்பில் இருந்த நீண்ட கத்தியை என் கழுத்தில் ஆவேசமாக வைக்க...

நாமெல்லாம் ஆரு ? ரூம் நம்பர் சொல்லி வழியையும் கிளீனாக சொல்லி குடுத்தோம்ல, பின்னே....நாடு விட்டு நாடு வந்து நான் எதுக்கு உயிரை விடனும், அதுவும் பொண்டாட்டின்னு சொல்றான், கண்டிப்பா கழுத்தை அறுத்தேப்புடுவான் காட்டரபியுங்கூட !

கொஞ்ச நேரத்தில் மேலே போகும் படிகளில் பெண்ணின் அலறல்...பார்த்தால் அவளின் நீண்ட கொண்டை முடியை பிடித்து கொண்டு தரதரவென இழுத்து வந்தான் கையில் நீண்ட கத்தி...அவள் வாய் மூக்கு கண்களில் இருந்தெல்லாம் ரத்தம்...

வெளியே வரை இழுத்துப்போய், கத்தியை கீழே போட்டுவிட்டு அவளை தூக்கி எறிந்தான் காருக்குள், அவளை ஒரு மனுஷ ஜென்மம் என்றே பார்க்கவில்லை அவன் ! அவள் உடல் காருக்குள்ளும் வெளியேயுமாக கிடக்க, மிதித்து காருக்குள் தள்ளினான், திரும்ப வந்து கத்தியை எடுத்துக் கொண்டு காரில் பறந்தான்.

நான் உடனே கத்தாரி அரபிக்கு போன் செய்து உடனே ரூமை காலி பண்ணு இல்லையெனில் உன் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று சொன்னதும் அவனும் தலைதெறிக்க ரூமை காலி செய்து போகவும், பத்து இருவது கார்களுக்கு மேலாக ஆட்கள் வந்து எங்கள் ஹோட்டலை சூழ்ந்து கொண்டார்கள்.

நாம இன்னையோட காலி"ன்னு மனதில் மரணத்திற்கு முன் வரும் தைரியத்தில் [!] கால் நடுங்க நின்றிருந்தேன் ஓடவும் முடியாது, மற்றவர்கள் யாவரும் ஓடி விட்டார்கள், ஏனெனில் போனவன் கண்டிப்பாக இங்கே தங்கி இருப்பவனை போட்டுத் தள்ள வருவார்கள் என்று தெரிந்து...

ஏழெட்டு பேர் உள்ளே ஓடி வந்தவர்கள், நேராக போனது அந்த ரூமிற்க்குதான், கையில் பெயரே தெரியாத கொடூர ஆயுதங்கள், ஆளை தேடிப்பார்த்தவர்கள் ஆள் இல்லையென்றதும் என்னிடம் வந்தார்கள்.

அவர்கள் கேட்குமுன்னே நானே சொல்லிவிட்டேன், இதோ இப்பதான் ரூம் காலி செய்துகொண்டு அதோ அந்த வழியில் காரில் போகிறான் என்று வேறொரு திசையை காட்டினேன், எந்த கம்பெனி கார் ? ஸாரி தெரியாது என்று சொன்னேன்.

நம்பிட்டான் போல...சரசரவென்று நான் காட்டிய திசையில் கார்கள் பறந்தன, கத்தார் அரபி அம்புட்டானோ இல்லையோ, ஆனால் அந்தப்பெண் நிச்சயம் உயிரோடே இருக்க சான்சே இல்லை !

இனியும் நிறைய திகில் சம்பவங்கள் உண்டு, நியாபகம் வரும்போது ஒவ்வொன்றாக சொல்றேன்.

21 comments:

  1. பகீீீர் திகில்.....

    ReplyDelete
  2. உங்க வேலையிலும் ரிஸ்க்!? ரிஸ்க் இல்லாத வேலை எதுன்னே தெரியலைண்ணா!

    ReplyDelete
  3. உன் வேலை இவ்வளவு ஆபத்தா மச்சான்? அதுவும் இவனுங்க கிட்டே .....ரொம்ப எச்சரிக்கையா தான் இருக்கணும். ஆனாலும் நீயி புத்திசாலி தான் மச்சான்.

    ReplyDelete
  4. அச்சச்சோ.. இம்புட்டு ரிஸ்க் இருக்கா அண்ணே?

    ReplyDelete
  5. பஹ்ரைன் இந்தியாவ விட மோசம் போல!

    ReplyDelete
  6. அடச்சே, என்னே ஒரு பஹ்ரைன் சமூகம்....

    ReplyDelete
  7. ஏலே ஒரு முக்கிய அறிவிப்பு , ஒரு பொம்பள தன் புருஷன வீட்ல விட்டுட்டு இன்னொருத்தனோட ஹோட்டலுக்கு வந்திருக்கு .இப்ப அவ புருஷன் வெளிய கத்தியோட காத்துட்டு இருக்கான் . உன் நல்லதுக்காக ஒரு நிமிஷம் விளக்க அணைக்க போறோம் . அந்த பொம்பள மட்டும் ஒழுங்கா வீடு போய் சேர்த்திடு . ஓகே லைட் ஆப் ...


    ஏலே லைட்ஸ் ஆன், என்னடா ஒரு பயலையும் காணோம் . ஹோட்டல்ல வந்ததுங்க பூரா அதே கேசு தானா ? அவ்வ்வ்வ் .

    ReplyDelete
  8. வெளிநாட்டில் நல்லா சம்பாதிக்கிறான்னு சொல்லுவாங்க நிறைய பேரு! அதிலுள்ள ரிஸ்க் எவ்வளவு பயங்கரமா இருக்கு! நலமுடன் தொடர வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  9. அடங்கொன்னியா...... இப்படியெல்லாம் நடக்குதா........?

    ReplyDelete
  10. எத்தனை எத்தனை சம்பவங்கள் இப்படி..... படிக்கவே திகில்...... நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்!

    ReplyDelete
  11. ஹும்...அனாவசியமாக ஒரு பெண்ணின் சாபத்திற்கு ஆளாகிவிட்டீர்கள்!
    (அது சரி, முஸ்லிம் நாடுகளில் தண்டனைகள் கடுமையாக இருக்கும் என்பார்களே, அங்கும் இந்த மாதிரி வேலைகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகிறார்களா?) (உங்கள் ஓட்டலில் இம்மாதிரி அடிக்கடி நடக்குமா?)

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!

    ReplyDelete
  13. அண்ணே நடந்தது எங்கே சோல்ஜர்லயா ...

    ReplyDelete
  14. இவ்ளோ கொடுமையா அந்த பெண்ணை தண்டித்திருக்கிறானே கிராதகன்...

    நீங்க எப்படிப்பா இன்னும் தைரியமா அதே இடத்தில் இருக்கீங்க? பயமா இல்லையா?

    இதுப்போன்று எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கும்.. ஒவ்வொரு நாளுமே உங்களுக்கு அட்வென்ச்சர் போல் தான் இல்லையா?

    பாவம் அந்தப்பெண்..

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!