Wednesday, January 26, 2011

வந்தேமாதரம்

கொடிகாத்த குமாரனா அவரு யாரு
அவரு எங்கே கொடி வித்தாரு
வாஞ்சிநாதனா அவரு யாரு
அவரு எங்கே கஞ்சி குடிச்சாறு
ஆசீர்வாதமா [மும்பை] அவரு யாரு
அவரு எங்கே ஆசீர்வதிக்கபட்டாரு
வ உ சியா அவரு யாரு
அவரு ஏன் செக் எழுதினாரு
என்று
 நக்கல் பண்ணி 
டாஸ்மாக்கில்
லயித்து கொண்டாடும் வாலிபனே
நீ அருந்துவது
மதுவல்ல.....
அந்த மாவீரர்களின்
மனைவி குடும்பத்தின்
தியாகத்தையும்
ரத்தத்தையும்தான் என்பதை
நினைவில் கொள்.....................
 

46 comments:

  1. வடை வாங்க வந்துட்டோம்ல

    ReplyDelete
  2. சுளீர் கவிதை. விடுதலைக்கும், குடியரசுக்கும் நம் கொடுத்த விலை மிக அதிகம் என்பதை எப்படி புரியவக்க முடியும், எல்லாவற்றையும் வெறும் விளையாட்டு என எண்ணும் சிலருக்கு...

    ReplyDelete
  3. நீ அருந்துவது
    மதுவல்ல.....
    அந்த மாவீரர்களின்
    மனைவி குடும்பத்தின்
    தியாகத்தையும்
    ரத்தத்தையும்தான் என்பதை
    நினைவில் கொள்.....................
    //இது என்னை பார்த்து சொல்லவில்லை தானே?
    உங்கள் நாட்டுபற்றுக்கு தலைவணங்குகிறேன்..
    கவிதை இயல்பாய்.. அருமை.

    ReplyDelete
  4. //வடை வாங்க வந்துட்டோம்ல//

    உங்களுக்கேதான் மக்கா.....

    ReplyDelete
  5. //உங்கள் நாட்டுபற்றுக்கு தலைவணங்குகிறேன்..
    கவிதை இயல்பாய்.. அருமை.//

    வந்தேமாதரம்....

    ReplyDelete
  6. //சுளீர் கவிதை. விடுதலைக்கும், குடியரசுக்கும் நம் கொடுத்த விலை மிக அதிகம் என்பதை எப்படி புரியவக்க முடியும், எல்லாவற்றையும் வெறும் விளையாட்டு என எண்ணும் சிலருக்கு...//

    பாரதின்னா சும்மாவா.....
    சரியாக சொன்னீர்கள் மக்கா....

    ReplyDelete
  7. இது நமது நாடு, நம் தேசம், நாம் சாகப்போகிற பூமி.
    இன்றைய சில அரசியல்வாதிகளாலும்

    //
    டாஸ்மாக்கில்
    லயித்து கொண்டாடும் வாலிபனே
    நீ அருந்துவது
    மதுவல்ல.....
    அந்த மாவீரர்களின்
    மனைவி குடும்பத்தின்
    தியாகத்தையும்
    ரத்தத்தையும்தான் என்பதை
    நினைவில் கொள்.....................//

    கொள்ளாத சில குடிமகன்களாலும், நம் நாடு அசிங்கப்பட்டாலும் ஓரு பொது ஜனங்களின் ஒருவனாக( Common man)அனைத்தையும் சகித்துகொண்டு,
    குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம்.

    ReplyDelete
  8. //சில குடிமகன்களாலும், நம் நாடு அசிங்கப்பட்டாலும் ஓரு பொது ஜனங்களின் ஒருவனாக( Common man)அனைத்தையும் சகித்துகொண்டு,
    குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம்//

    வேற என்னத்தை சொல்ல.......
    வந்தேமாதரம்..

    ReplyDelete
  9. சாட்டையடி!! மாஸ் ஹீரோக்கள் இருக்கும்போது வாஞ்சிநாதனும்,குமரனும் எம்மாத்திரம்,மனோ சார்.

    ReplyDelete
  10. //சாட்டையடி!! மாஸ் ஹீரோக்கள் இருக்கும்போது வாஞ்சிநாதனும்,குமரனும் எம்மாத்திரம்,மனோ சார்.//

    சிந்திச்சாதான் நாடு உருபட்ருமே.............குமார்...

    ReplyDelete
  11. “நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை கண்டு”

    வேற சென்ன செய்வது... ஒன்றும் சொல்வதற்கில்லை

    ReplyDelete
  12. பதிவில் கூறப்பட்ட பெயர்கள் இன்று ரொம்ப பேருக்கு தெரியாது.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
    இவர்களின் நினைவு தற்போது எந்த முதிய தலைவருக்கும் கூட இல்லை. பதிவில் சொன்னதற்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. வாஞ்சிநாதன் ஆஷை ஏன் கொலை செய்தார்?

    குமரன், வ.உ.சி போன்ற தன்னலமற்ற தியாகிகளுடன் வாஞிநாத அய்யரை ஒப்பிடாதீர்கள்.

    அது சரி, கத்தியின்றி, ரத்தம் இன்றி விடுதலை அடைந்தோம்னு கூவுறேமே, குமரன், வ.உ.சி இவங்க உயிரும், குருதியும் கணக்குல சேர்க்கிறதில்லையா?
    ------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன'2011)

    ReplyDelete
  14. //நீ அருந்துவது
    மதுவல்ல.....
    அந்த மாவீரர்களின்
    மனைவி குடும்பத்தின்
    தியாகத்தையும்
    ரத்தத்தையும்தான் என்பதை
    நினைவில் கொள்...//

    மனோ சார் .பின்னிடீங்க ......சூப்பர் ...

    ReplyDelete
  15. //“நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை கண்டு”

    வேற சென்ன செய்வது... ஒன்றும் சொல்வதற்கில்லை///

    என்னத்தை சொல்ல........

    ReplyDelete
  16. //இவர்களின் நினைவு தற்போது எந்த முதிய தலைவருக்கும் கூட இல்லை. பதிவில் சொன்னதற்கு பாராட்டுக்கள்//

    கொடுமையின் உச்சம்...

    ReplyDelete
  17. //மனோ சார் .பின்னிடீங்க ......சூப்பர் ...//

    நன்றிலே மக்கா.....

    ReplyDelete
  18. சரியா சொன்னிங்க நண்பரே, சுதந்திர காற்றை வாங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும், ஆனால் அதை இன்று சுவாசிப்பவர்கள் மறந்து விட்டு, தன் சுயநலமே வாழ்க்கை என வாழ்கிறார்கள்.

    ReplyDelete
  19. நிஜமாக மிக நல்ல கவிதை.
    மனோ இப்போதான் வந்தோம்

    இனி தொடந்து சந்திக்லாம்.

    ReplyDelete
  20. //சரியா சொன்னிங்க நண்பரே, சுதந்திர காற்றை வாங்க பட்ட கஷ்டம் அவங்களுக்கு தான் தெரியும், ஆனால் அதை இன்று சுவாசிப்பவர்கள் மறந்து விட்டு, தன் சுயநலமே வாழ்க்கை என வாழ்கிறார்கள்.//

    இதுல கிண்டல் வேற பண்றாங்கய்யா பாவிங்க.....

    ReplyDelete
  21. //நிஜமாக மிக நல்ல கவிதை.
    மனோ இப்போதான் வந்தோம்

    இனி தொடந்து சந்திக்லாம்.//

    வாங்க மக்கா வாங்க வருகைக்கு மிகவும் நன்றி......

    ReplyDelete
  22. சும்மா நச்சுனு சொல்லிருக்கிங்க

    ReplyDelete
  23. //சும்மா நச்சுனு சொல்லிருக்கிங்க //

    நன்றி மக்கா......

    ReplyDelete
  24. என்ன செய்கிறோம் என்றுத் தெரியாமலே இன்றுப் பலர் நாம் வாங்கிய சுதந்திரத்தை வீணடிக்கும் முயற்சியில் உள்ளனர்

    ReplyDelete
  25. /வாஞ்சிநாதன் ஆஷை ஏன் கொலை செய்தார்? //

    ரெண்டு பேருக்கும் வாய்க்கா வரப்புத் தகராறு அதான் சுட்டார்

    ReplyDelete
  26. //என்ன செய்கிறோம் என்றுத் தெரியாமலே இன்றுப் பலர் நாம் வாங்கிய சுதந்திரத்தை வீணடிக்கும் முயற்சியில் உள்ளனர்//

    நாம் கொடுத்த விலை கொஞ்சமா.....

    ReplyDelete
  27. ஒரு நிமிஷம் என் குடி மறந்து போச்சுங்க.......!

    ReplyDelete
  28. //ஒரு நிமிஷம் என் குடி மறந்து போச்சுங்க.......! //

    ஹா ஹா ஹா ஹா அப்பிடி போடு அருவாளை......

    ReplyDelete
  29. இங்க அரசாங்கம் ஊத்தி கொடுக்குற வேலதாண்ணா பண்ணுது.

    ReplyDelete
  30. //இங்க அரசாங்கம் ஊத்தி கொடுக்குற வேலதாண்ணா பண்ணுது. ///

    ஊத்தி குடுக்குரதொட நின்னுட்டா சரி "வேற" ஏதும் ஆரம்பிச்சிராம....

    ReplyDelete
  31. இந்த தலைமுறையை சொல்லி குறையில்லை மனோ! நமது வரலாற்றை இவர்களிடம் ஒழுங்காக சேர்க்கவில்லை நமது அரசியல்வாதிகள்! வரலாற்றில்கூட பாரபட்சம் உள்ளது!

    ReplyDelete
  32. //இந்த தலைமுறையை சொல்லி குறையில்லை மனோ! நமது வரலாற்றை இவர்களிடம் ஒழுங்காக சேர்க்கவில்லை நமது அரசியல்வாதிகள்! வரலாற்றில்கூட பாரபட்சம் உள்ளது!//

    ரஜினியின் வரலாறை பாட புஸ்தகத்தில் போட போறாங்களாம் என்னத்தை சொல்ல....

    ReplyDelete
  33. //நல்ல சிந்தனை //

    நன்றி வீரா....

    ReplyDelete
  34. வரும் தேர்தல்ல எந்த கொடுமையும் கூட நடக்கலாம்.

    ReplyDelete
  35. நல்ல கருத்துக்கள் கொண்ட கவிதை,,, அருமை

    ReplyDelete
  36. //வரும் தேர்தல்ல எந்த கொடுமையும் கூட நடக்கலாம்.//

    நாமதான் பாவம் இல்லையா பிரபு....

    ReplyDelete
  37. //நல்ல கருத்துக்கள் கொண்ட கவிதை,,, அருமை //

    நன்றி ரியாஸ்....
    வருகைக்கும் நன்றி....

    ReplyDelete
  38. //நீ அருந்துவது
    மதுவல்ல.....
    அந்த மாவீரர்களின்
    மனைவி குடும்பத்தின்
    தியாகத்தையும்
    ரத்தத்தையும்தான் என்பதை
    நினைவில் கொள்.....//

    அண்ணா உண்மைலேயே நீங்க ஒரு கவிஞர் ..
    கட்சி வரி படிக்கும்போது ஒரு சிலிர்ப்பு வந்துச்சு ..

    ReplyDelete
  39. திருந்தா”குடி”மகன்களுக்கு இக்கவிதை ஒரு சரியான சவுக்கடி...!!!! கவிதையின் கடைசி வரி நெத்தியடி...!!!! தல.

    ReplyDelete
  40. சரி உண்மையிலேயே இவங்கல்லாம் யாரு. எங்கோ கேட்ட பெயர் மாதிரி இருக்கு. சரி நீ ஒரு பெக் ஊத்துமக்கா வர வர எல்லாமே மட்டமான சரக்காவே இருக்கு. வந்தே மாதரமா. எடுக்காதே வாந்தி மாத்திரம்.

    ReplyDelete
  41. //சரி உண்மையிலேயே இவங்கல்லாம் யாரு. எங்கோ கேட்ட பெயர் மாதிரி இருக்கு. சரி நீ ஒரு பெக் ஊத்துமக்கா வர வர எல்லாமே மட்டமான சரக்காவே இருக்கு. வந்தே மாதரமா. எடுக்காதே வாந்தி மாத்திரம்//

    ஹா ஹா ஹா ஹா அண்ணா நீங்களுமா.....
    ஒரு பிளாக் லேபள் பார்சல் டூ கன்னியாகுமரி....

    ReplyDelete
  42. //திருந்தா”குடி”மகன்களுக்கு இக்கவிதை ஒரு சரியான சவுக்கடி...!!!! கவிதையின் கடைசி வரி நெத்தியடி...!!!! தல//

    நன்றி மக்கா..

    ReplyDelete
  43. தமிழ்நாட்டில் குடி மகன்கள் அதிகமாகி வரும் நேரத்தில் தேசப்பற்றை சாட்டையடியாக உணர்த்தியுள்ளீர்கள். அற்புதம்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!