Wednesday, January 26, 2011

சத்தியம்

ஆர்ப்பரிக்கும் ஆழி அலை போல
ஓயாமல் பொங்குதடி உன் நினைவு
அந்த ஒற்றை பனை மரத்தை சுற்றி
அதுவும் உன்னோடு 
ஏன் எரிந்து போகவில்லை
நம் காதலுக்கு சாட்சி சொல்ல
நீ விட்டு போனாயா,
ஓங்கி அடிக்கும் உன் நினைவுகளை
பகிர்ந்து கொள்ள எனக்காக நீ
விட்டு சென்ற அந்த ஒற்றை பனை மரத்தை
காலம் இன்னும் அழிக்கவில்லையடி
என் மனதில் உள்ள காயம் போல....
என் பிள்ளைகளுக்கும் தெரியும்
அந்த ஒற்றை பனை மரத்தை,
அதை கடக்கும் போதெல்லாம் என்
மகள் சத்தமாகவே சொல்கிறாள்
இது என் டாடியின் முன்னாள்
காதலி வாழ்ந்த இடமென்று.....!!!
அக்கணம் பொங்கும் உன் நினைவு
கண்ணீராய் வெளி கொண்டு 
வர முடியவில்லை,
காரணம் நான் அழக்கூடாது என 
நீ வாங்கி கொண்ட சத்தியம்.... 
 

32 comments:

 1. /மகள் சத்தமாகவே சொல்கிறாள்
  இது என் டாடியின் முன்னாள்
  காதலி வாழ்ந்த இடமென்று.....!!!
  அக்கணம் பொங்கும் உன் நினைவு
  கண்ணீராய் வெளி கொண்டு
  வர முடியவில்லை,
  காரணம் நான் அழக்கூடாது என
  நீ வாங்கி கொண்ட சத்தியம்..../

  மறுபடியும் சிலிர்க்க வைக்கும் கவிதை அண்ணா ..

  ReplyDelete
 2. //மகள் சத்தமாகவே சொல்கிறாள்
  இது என் டாடியின் முன்னாள்
  காதலி வாழ்ந்த இடமென்று..//


  மகள் கிட்ட சொன்னதுக்கு, மனைவிகிட்ட சொல்லியிருந்தா விருந்து கிடைச்சிருக்குமே..

  ReplyDelete
 3. //காரணம் நான் அழக்கூடாது என
  நீ வாங்கி கொண்ட சத்தியம்....//

  ahaa... feeling..

  ReplyDelete
 4. கவிதை அருமை..

  ஓங்கி அடிக்கும் உன் நினைவுகளை
  பகிர்ந்து கொள்ள எனக்காக நீ
  விட்டு சென்ற அந்த ஒற்றை பனை மரத்தை
  காலம் இன்னும் அழிக்கவில்லையடி
  ---- அருமை..

  ReplyDelete
 5. சார் அற்புதம் ...
  பழைய காதலி நினைவு சுகம்தான் ....
  நல்ல கவிதை

  ReplyDelete
 6. உங்க வீட்டம்மா மும்பைலதானே இருக்காங்க??

  சும்மாதான் கேட்டேன் :-))))))))))))

  ReplyDelete
 7. >>>காரணம் நான் அழக்கூடாது என
  நீ வாங்கி கொண்ட சத்தியம்....

  kalakkal கலக்கல் லைன்ஸ்

  உங்க மனைவி உங்க பிளாக் படிக்கற வழக்கம் உண்டா? ஹி ஹி ஹி

  ReplyDelete
 8. ஆள் பாக்க தாதா மாதிரி இருக்கீங்க.. ஆனா சாஃப்ட் மைண்ட் போல ம் ம்

  ReplyDelete
 9. சி.பி.செந்தில்குமார் சொன்னது…
  ஆள் பாக்க தாதா மாதிரி இருக்கீங்க.. ஆனா சாஃப்ட் மைண்ட் போல ம் //////

  நீங்க கூடத்தான் ஹீரோ மாதிரி இருக்கீங்க?! ஆனா............?!!!

  ReplyDelete
 10. இதுகூட சுகம்தான்....

  ReplyDelete
 11. ஆஹா ரைட்டு.. அருமை மனோ.பனை மரத்தின் காட்சி கண் முன்னே உருவெடுக்கின்றது.. ஆனா எங்கயோ எடிக்கிற மாதிரி ஒரு பீலிங்..

  ReplyDelete
 12. இப்படியெல்லாம் நீங்க கவிதை எழுத ஆரம்பித்தால் அப்பரம் நாங்க என்ன பண்றதாம் ??..

  ReplyDelete
 13. தல கவிதையின் கடைசி வரிகள் கண்கலங்க வைக்கிறது எனக்கும்....!!

  ReplyDelete
 14. தாங்கள்...... தாங்களே எழுதியதா? இருந்தும் நல்லா இருக்கே.... ஹி,ஹி,ஹி,ஹி...

  ReplyDelete
 15. கவிதைக்குள்ளிருக்கும் காதலை உணர்ந்து வாசிக்கிறேன் வரிகளை

  ReplyDelete
 16. //
  அழக்கூடாது என
  நீ வாங்கி கொண்ட சத்தியம்.... //

  இது வேறயா...intha டீலிங்கும் நல்ல தான் இருக்கு

  ReplyDelete
 17. முதல் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன் நண்பரே! உங்கள் கவிதை அருமையாக உள்ளது! இனம்புரியாத சோகத்தை நெஞ்செங்கும் பரவச்செய்கிறது இக்கவிதை வாழ்த்துக்கள்!  இன்று முதல் இன்ட்லியிலும் உங்களைத் தொடருகிறேன்! அங்கே ' மாத்தி யோசி ' அப்டீன்னு ஒரு கடைய தொடந்து வச்சுட்டு காத்துக்கிட்டு இருக்கேன் - உங்கள் மேலான வருகைக்காக!

  ReplyDelete
 18. கருத்துரைத்த என் அருமை நண்பர்கள் எல்லாருக்கும் என் பணிவான நன்றிகள்.....
  ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கமெண்ட்ஸ் போட முடியாத என் நிலையை புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.....
  புரிந்து கொள்ளாதவர்களுக்கும் பதில் அந்த கவிதையிலேயே இருக்கிறது.
  மறுபடியும் என் நன்றிகளை உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் நன்றி.....
  வருகை தந்த எல்லாருக்கும்....

  ReplyDelete
 19. கவிதை மிக உணர்வோடு இருக்கு... பாராட்டுக்கள்.

  ReplyDelete
 20. //உங்க வீட்டம்மா மும்பைலதானே இருக்காங்க??

  சும்மாதான் கேட்டேன் :-))))))))))))//

  ReplyDelete
 21. கலக்குங்க அண்ணா

  ReplyDelete
 22. கலகிட்டீங்கண்ணே..!!

  ReplyDelete
 23. மகள் சொல்கிறாள் என்கிற் ஒரு வார்த்தையை
  திரும்பத் திரும்ப படித்தேன்
  நேர்மையான
  நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. காலம் இன்னும் அழிக்கவில்லையடி
  என் மனதில் உள்ள காயம் போல....


  காலமே பதில் சொல்லட்டும் உங்கள் காயங்களுக்கு..

  நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவிற்கு
  www.oruthulithen.blogspot.com
  மாரிமுத்து.

  ReplyDelete
 25. அட, இங்க பார்ரா இந்தபயலுக்குள்ளே என்னமோ இருந்திருக்கே? சோகத்த புழிஞ்சு எடுத்துட்டேய்யா...

  ReplyDelete
 26. மனோ...அனுபவபூர்வமா உண்ர்வோடு இருக்குக் கவிதை !

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!