நான் மும்பை சர்வதேச ஏர்போர்டில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். நம்ம வைகோ'வின் தம்பி முறையில் ஒருவர்தான் ஏர்போர்ட் மேனேஜரா மும்பை ஏர்போர்ட்டை கலக்கிட்டு இருந்தார். பெயர் நியாபகம் இல்லை, அங்கே ரெண்டாவது மாடியில்தான் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்.ஒரு நாள் நானும் நண்பன் சண்முகமும் [இவன் இப்போ எங்கே இருக்கான்னே தெரியலை] வேலைக்கு போக லிஃப்ட் வர காத்திருந்தோம் கிரவுண்ட் ஃப்ளோரில், சற்று தாமதம் ஆகியது அதே நேரம் ஒரு வாட்ட சாட்டமாக ஒரு நீக்ரோ வந்து அவரும் லிஃப்ட்க்காக வெயிட் பண்ணிட்டு, லிஃப்ட் வந்தது மூணு பேரும் ஏறிக்கொண்டோம், என் நண்பன் சற்று குறும்புக்காரன், அவன் நீக்ரோவின் உடம்பு விறைப்பை கண்டுவியந்தவனாக நீக்ரோவின் கையை லேசாக அமுக்கி பார்த்து விட்டு என்னிடம் சொன்னான், என்னா தண்டிலே இவன் கையின்னு, அவ்வளவுதான் நம்ம நீக்ரோ அண்ணாச்சி அவர் ரெண்டு கையையும் மடக்கி காட்டிட்டு சொன்னார் "இப்ப என்ன செய்யணும்"ன்னு, அதுவும் பச்சை தமிழில்........எங்க ரெண்டு பேருக்கும் குலை நடுங்கி போச்சு, அதற்குள் பர்ஸ்ட் ஃப்ளோர் வர செக்கன்ட் ஃப்ளோர் போகவேண்டிய நாங்க பர்ஸ்ட் ஃப்ளோர்லையே அலறியடித்து வெளியேறி டிப்பாச்சர் ஏரியாவுக்கு வந்து சிரி சிரி என சிரித்தோம் காரணம் நம்ம நீக்ரோ தமிழ் பேசியது!!! நாங்க சிரிப்பதை பார்த்த பிரயாணிகள் எங்களை விநோதமாய் பார்க்க அருகில் இருந்த போலீஸ் அண்ணாச்சி [அவருக்கு எங்களை தெரியும்] எங்களை துரத்த நாங்க படி வழியா ஏறி மேலே ஓடினோம், அங்கே போயும் சிரிப்பு அடங்கலை.....
கொஞ்சம் ஆசுவாச படுத்திட்டு அப்புறமாதான் ரோசிச்சொம் இவனுக்கு தமிழ் எப்பிடி தெரிஞ்சதுன்னு.... மக்கா அவனை பாத்து கேட்டே ஆகணும்னு ரெடி ஆனோம் அந்த நீக்ரோ கையில இருந்த ஏர் டிக்கெட் கே எல் எம் ஏர்வேஸ்.. ஓடினோம் அந்த போர்டிங் கார்ட் வாங்குற இடத்துக்கு. ஆளைக்காணோம் அங்கும் இங்குமாக அலைந்து அண்ணாச்சிய கண்டே பிடிச்சுட்டோம்!!
ஒரு பேங்க் கவுண்டர் பக்கம் உள்ள சேரில் அமர்ந்துருந்தார்...அந்த சேர் மூன்று பேர் அமர கூடிய இருக்கை ஆகும். நாங்களும் மெதுவாக அவர் அருகில் போனோம்.... நல்லா ஜாலியான மனுஷன் போல அவரே கேட்டார், நீங்க தமிழா'ன்னு, பதில் சொல்லாம[ஆச்சரியத்தில்]மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சோம்.... அவர் ஓ சாரின்னுட்டு புக் படிக்க ஆரம்பிச்சார்... பிறகு நாங்க ஆமாம் நாங்க தமிழ்தான் என சொல்ல...சாதாரண நல விசாரிப்புகள்...நடந்தது தமிழில்.....!!!
பிறகுதான் கேட்டோம் உங்களுக்கு தமிழ் எப்பிடி தெரியும்னு....
அவர் சொன்னார் மதுரை உசிலம்பட்டி அரசியல்வாதி [பெயர் மறந்துடிச்சு] ஒருவரின் அக்காவுக்கு பாடிகார்டா இருந்தாராம்!!!! இவர் மட்டும் இல்லையாம் இன்னும் மூணு பேர் வேலை செய்யுறாங்கன்னு சொன்னார்....இன்னும் நிறைய பேசினார்.
அவர் அழகிய தமிழில் பேசியது அருமையாக இருந்தது....
ம்ஹும் எந்த நாட்டுகாரனா இருந்தா என்ன அவர்கள் தமிழ் பேசினால்,
என் உயிர் தமிழ் மணக்கவே செய்கிறது இல்லையா...
கடைசிவரை அவருடன் இருந்து வழி அனுப்பினோம்,
டிஸ்கி : டியூட்டிக்கு போயி மேனேஜர்ட்ட வாங்கி கட்டினது வேற [லேட்] விஷயம்....
ஹா ஹா
ReplyDelete//"இப்ப என்ன செய்யணும்"ன்னு, அதுவும் பச்சை தமிழில்........எங்க ரெண்டு பேருக்கும் குலை நடுங்கி போச்சு, அதற்குள் பர்ஸ்ட் ஃப்ளோர் வர செக்கன்ட் ஃப்ளோர் போகவேண்டிய நாங்க பர்ஸ்ட் ஃப்ளோர்லையே அலறியடித்து வெளியேறி டிப்பாச்சர் ஏரியாவுக்கு வந்து சிரி சிரி என சிரித்தோம் காரணம் நம்ம நீக்ரோ தமிழ் பேசியது!!!//
ReplyDeleteஹா ஹா ஹா ... ஹய்யோ ஹய்யோ .. அடிக்காம விட்டாரே
//என் உயிர் தமிழ் மணக்கவே செய்கிறது இல்லையா...
ReplyDeleteகடைசிவரை அவருடன் இருந்து வழி அனுப்பினோம்,
டிஸ்கி : டியூட்டிக்கு போயி மேனேஜர்ட்ட வாங்கி கட்டினது //
ரொம்ப ரசிக்கும் படியான அனுபவம் அண்ணா !!
அவன் நீக்ரோவின் உடம்பு விறைப்பை கண்டு வியந்தவனாக நீக்ரோவின் கையை லேசாக அமுக்கி பார்த்து விட்டு என்னிடம் சொன்னான், என்னா தண்டிலே இவன்//
ReplyDeleteஅவனுகளுடைய கை மட்டுமா..........!!!!!!!!
உங்களை அவர் எப்படி அடிக்காம விட்டார் பச்சை தமிழில் வேற எதையும் சொல்லவில்லையா
ReplyDeleteபாஸ் text அலைன்மன்ட் பண்ணுங்க கச்சான் முச்சான்னு இருக்கு
ReplyDeleteஇங்கே (USA) Negro என்ற வார்த்தை உபயோகிக்க கூடாது.....
ReplyDeleteநல்ல அனுபவம்தான் போல ...
ReplyDeleteநெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...
// அவன் நீக்ரோவின் உடம்பு விறைப்பை கண்டு வியந்தவனாக நீக்ரோவின் கையை லேசாக அமுக்கி பார்த்து விட்டு என்னிடம் சொன்னான், என்னா தண்டிலே இவன்//
ReplyDeleteஅவனுகளுடைய கை மட்டுமா..........!!!!!!!!//-------------------இனியவன் சொன்னது…
இத்தோடா............என்னால சிரிப்பா அடக்க முடியல சாமிகளா. நான்தா அப்டீனா ஊரு முழக்க இப்டியா இருக்கும்??
// அவன் நீக்ரோவின் உடம்பு விறைப்பை கண்டு வியந்தவனாக நீக்ரோவின் கையை லேசாக அமுக்கி பார்த்து விட்டு என்னிடம் சொன்னான், என்னா தண்டிலே இவன்//
ReplyDeleteஅவனுகளுடைய கை மட்டுமா..........!!!!!!!!//-------------------இனியவன் சொன்னது…
இத்தோடா............என்னால சிரிப்பா அடக்க முடியல சாமிகளா. நான்தா அப்டீனா ஊரு முழக்க இப்டியா இருக்கும்??//
அடப்பாவிகளா காலும் அப்படி இருக்கும்னு சொன்னேன்.(நான் நீள sorry நீலப்படம் பார்த்ததே இல்லைங்க.)
12
ஹஹா.. அருமை..அருமை..
ReplyDeleteபத்தி பிரிச்சு போட்டா கொஞ்சம் நல்லாருக்கும்..
ReplyDeleteஅப்புறம்.. AfroAmericans என்ற வார்த்தையை உபயோகப்படுத்தறதைத்தான் அவங்களும் விரும்புவாங்க.
//ஹா ஹா ஹா ... ஹய்யோ ஹய்யோ .. அடிக்காம விட்டாரே//
ReplyDeleteஉனக்கு நான் அடி வாங்குறதுல அவ்வளவு சந்தொசமாடே.....
//ரொம்ப ரசிக்கும் படியான அனுபவம் அண்ணா !!//
ReplyDeleteநன்றி மக்கா...
//அவனுகளுடைய கை மட்டுமா..........!!!!!!!! ///
ReplyDeleteநான் வீட்டுல இல்லை கடைக்கு போறேன்....
//உங்களை அவர் எப்படி அடிக்காம விட்டார் பச்சை தமிழில் வேற எதையும் சொல்லவில்லையா///
ReplyDeleteவேற எதையாவது சொன்னா மறுபடியும் பக்கத்துல போவோமாக்கும்...
//பாஸ் text அலைன்மன்ட் பண்ணுங்க கச்சான் முச்சான்னு இருக்கு///
ReplyDeleteபச்சை புள்ளை நானு, இதோ சரி பண்ணிடுறேங்க....
//இங்கே (USA) Negro என்ற வார்த்தை உபயோகிக்க கூடாது///
ReplyDeleteதகவலுக்கு நன்றி சித்ரா மேடம்....
//நல்ல அனுபவம்தான் போல ...
ReplyDeleteநெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ///
நன்றி அரசன் உங்கள் எல்லோருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
///இத்தோடா............என்னால சிரிப்பா அடக்க முடியல சாமிகளா. நான்தா அப்டீனா ஊரு முழக்க இப்டியா இருக்கும்///
ReplyDeleteநான் வீட்டுல இல்லீங்கோ....
//ஹஹா.. அருமை..அருமை///
ReplyDeleteநன்றிலே மக்கா....
//பத்தி பிரிச்சு போட்டா கொஞ்சம் நல்லாருக்கும்..
ReplyDeleteஅப்புறம்.. AfroAmericans என்ற வார்த்தையை உபயோகப்படுத்தறதைத்தான் அவங்களும் விரும்புவாங்க///
சின்ன பிள்ளைதானே இனி அப்படியே செய்கிறேன்....
அடுத்து உங்கள் தகவலுக்கு நன்றி மக்கா...