Saturday, January 15, 2011

மும்பை

என் திருமணத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம்.
மும்பையில் என்னோடு வேலை செய்து ஊர்  திரும்பிய என் நண்பர்கள் சிலர், கொஞ்ச நாள்[ஒரு வருஷம்] கழித்து என்னையும் மற்ற நண்பர்களையும்  காண்பதற்காக, அவர்கள் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு மும்பை வந்திருந்தார்கள்....நல்லா ஊர் சுற்றி காண்பித்தோம். அப்பிடி ஒரு நாள் ஊர் சுற்றி முடிச்சுட்டு மாலையில் எங்க ஏரியா பார்'ல ஏறி உக்கார்ந்து சரக்கடிச்சுட்டு லேடிஸ் பார்[முஜ்ரா] போவதாக ஏற்பாடு. நல்லா சரக்கடிச்சுட்டு [[அது அப்போ, இப்போ நான் ரொம்ப நல்லவன்]] பாரை விட்டு நாங்கள் வெளியே வந்த போது லேடீஸ் பார் போக ரிக்ஷாவை கூப்பிட ரிக்ஷாகாரர் எங்கள் கோலத்தை பார்த்து வரமுடியாதுன்னு [[ரஃப்பா.....நாங்க அதை விட ரஃப்பால்லா  இருக்கோம்]] சொல்ல, என் நண்பன் விட்டான் பளார் அடி [[காரணம் மதராசின்னு அவன் கேவலமா ஒரு லுக்கு விட்டதுதான்]] நண்பர்களின் அடி தொடர் அடியாக மாற ஆட்டோகாரர் ஆட்டோவோடு ஓடினார், அடுத்த ஆட்டோகாரனிடம் கேட்க்க அவனும்  ஓட தொடர் அடி அடி அடி அடி....
     பொதுவாக மும்பையில் அப்போ எங்கள் கொள்கை!! என்னன்னா பிரச்சினை பண்ணனும்னா பத்து நிமிஷத்துக்குள்ளே [[நண்பனுக்காக]] காரியத்தை முடிச்சிட்டு கெளம்பிடுரதுதான் வழக்கம்!! மக்கள் சுதாரிக்குரதுக்கு முன் எஸ்கேப் ஆகிரனும் இல்லைன்னா மும்பைவாலாக்கள் எலும்பை எண்ணி விடுவார்கள். [[ஆனா இப்போல்லாம் அது நடக்காது எங்கெங்கும் போலீஸ்....சுட்டே விடுவார்கள் சூட்டிங் ஆர்டர் உண்டு]]
நண்பர்களை நான் துரிதபடுத்தியும் அவர்கள் அசையவில்லை காரணம் மும்பை அனுபவம் இல்லாத தமிழ்நாட்டு நண்பர்கள், அதிலும் ஒருவன் தமிழ்நாடு போலீஸ்!!
   ஆக நம்ம போலீஸ் அண்ணாச்சி வந்தே விட்டார்கள், எழு பேரையும் ஒரே ஜீப்பில் அள்ளி போட்டு ஸ்டேசன்[சின்ன] கொண்டு போயி விசாரிக்க, யாரடா உங்க தலைவன்னு ஒரு போலீஸ் கேட்க்க நாசமா போன நண்பன் ஒருவன் என்னை கை காட்ட....எகரை மொகறையா எனக்கு கசாப்பு  கிடைத்தது...அதில் அந்த தமிழ்நாடு போலீஸ் நண்பனுக்கு ஹிந்தி தெரியாது...அவன் நானும் போலீஸ் நானும் போலிஸ்னு தமிழ்ல சொல்ல மும்பை போலீஸ் அவன் திட்டுறதா நினச்சி அவனுக்கும் கசாப்பு கொடுக்க, அவன் ஐடி'யை எடுத்து காட்ட முற்பட நான் தடுத்தே விட்டேன் காரணம் அவன் எதிகாலம் கருதி.... அப்புறம் ஒரு வழியா சாகர் ஏர்போர்ட் போலீஸ்[பெரிய] ஸ்டேசனுக்கு கொண்டு போனார்கள்..அங்கே இருக்கும் போலீஸ் எல்லாமே எனக்கு தெரிந்தவர்கள் காரணம் நான் ஏர்போர்ட்டில் வேலை செய்பவன், அவர்கள் என்னை தம்பி என்றே அழைப்பார்கள்.
என்னை பற்றி அவர்களுக்கு தெரிஞ்சதாலே ஆளுக்கு ஐம்பது ரூபா அபதாரம் அடிச்சுட்டு விட்டு விட்டார்கள்....
  ஆமா நாங்க எங்கே போக கிளம்பினோம்..? ஆங் லேடீஸ் பார்.
தமிழன்னா இளப்பமாடான்னு வெறி [ஏற] வர, நேரே வீட்டுக்கு போயி வேணும்னேதான் எல்லோரும் லுங்கிக்கு மாறினோம்.
லுங்கி கட்டியவனேல்லாம் மதராசின்னுதான் சொல்லுவாங்க இங்கே, அதான் லுங்கி!!! கட்டிட்டு ஆட்டோ பிடிச்சு [பாவம்] லேடீஸ் பார் போக, அங்கே இருந்த செக்கூர்ட்டி தடுக்க அங்கேயும் ஒரே ரகளை....ஒரு வழியா உள்ளே விட்டுட்டாங்க....ஆஹா ஒரே ஆட்டம்தான் லுங்கிய தூக்கி  கட்டிட்டு ப்பூப்ப்....!!!!!
அங்கே  வந்தவன்  எல்லாம் ஏதோ ஆதிவாசி காட்டுக்குள்ளே வந்த பீலிங்குல இருந்துருப்பானுவளோ...
ஆக அன்னைக்கு செலவாகிய பணம் ஒம்பது ஆயிரம் ரூபா.....எல்லாரும் சேர்ந்தே கொடுத்தோம்...ரெண்டு மணிக்கு பார் பூட்டியதும் வெளியே வந்து எங்களை  மதராசின்னு தடுத்தானே செக்கூரிட்டி அவருக்கும் எனிமா கொடுத்து விட்டார்கள் நண்பர்கள். ஆனா இந்த முறை பாஸ்ட் எஸ்கேப்....
அந்த தமிழ்நாடு போலீஸ் நண்பன் இப்ப  சப் இன்ஸ்பெக்டர்'ரா   இருக்கான் நெல்லை மாவட்டத்தில்!!!! போலீசுக்கே கசாப்பு ஹா ஹா ஹா மறப்பானாக்கும்.....!!!
    நான் என்ன சொல்ல வர்றேன்னா நாங்க செய்தது எல்லாமே தப்புதான்  இல்லையா...?
இருந்தாலும், அதிலும் மும்பையில் அந்த நாட்களில் எனக்கு இருந்த தைரியம், வேகம், வாழ்க்கை பற்றிய அலட்சியம், நண்பனுக்காக அடி வாங்குறது, கொடுக்குறது, எதையும் சந்திக்க நேருக்கு நேர் நெஞ்சை நிமிர்த்துவது.................!!!! [[ஒரு வேளை இந்த அனுபவம்தான் மும்பையில் செட்டில் ஆக தைரியத்தை தந்ததோ]]
ஆத்தீ........... இப்போ நினைச்சா  கனவு போல ஆச்சர்யமா இருக்குதுய்யா...!!! இப்போ போலிசை ஒரு கிலோமீட்டர் தூரத்துல கண்டாலே வேற வழியா போயிடுறேன்...!!! எந்த தகராறோ பிரச்சினையோ பண்ண துணிவில்லை, அது தேவையும் இல்லைன்னு மனசு சொல்லுது "துஷ்டனை கண்டால் தூர விலகு" அப்பிடிதான் இப்போ நானும் நண்பர்களும்....!!!
 
 டிஸ்கி : இப்போ மும்பை ரொம்ப மாறிடிச்சி அமைதி அமைதி...ஆனா என்ன  இடையிடையே குண்டு மட்டும் வெடிக்கும், அதையும் மும்பைவாலாக்கள் சகஜமாக பழகி கொண்டார்கள்...!!!

22 comments:

  1. வயது மனிதனுக்கான பக்குவத்தை தருகிறது அல்லது நாம் பக்குவட்டடுகிறோம்.... பகிர்வு நல்லாயிருக்கு....
    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வயது மனிதனுக்கான பக்குவத்தை தருகிறது அல்லது நாம் பக்குவப்படுகிறோம்.... பகிர்வு நல்லாயிருக்கு....
    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நாங்கலாம் அந்தகாலத்துல....... அப்படின்னு ஆரம்பிச்சுருக்க வேண்டியதுதான அண்ணாச்சி...

    ஏதோ சுதந்திர போராட்டத்துக்காக நேதாஜி ட்ருப்ல துப்பாக்கி முனைல சண்டைபோட்டா மாதிரியே பில்டப் கொடுக்கறீங்க.... தண்ணியடிச்சிட்டு ஊர்ல ரகளை பண்ணதுல்லாம் ஒரு சாதனையா...:)))

    ReplyDelete
  4. எந்த தகராறோ பிரச்சினையோ பண்ண துணிவில்லை, அது தேவையும் இல்லைன்னு மனசு சொல்லுது "துஷ்டனை கண்டால் தூர விலகு//
    நாமளா யாரோட வம்புக்கும் போறதில்ல -ன்னு வடிவேல் சொன்னமாதிரியா ? உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு..
    பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. பெரிய ஆளுதான் போல நீங்க........... நாங்கள்லாம் பூச்சி வகையறா..........

    நீங்க இப்பயும் மும்பை வாசம் தானா?

    ReplyDelete
  7. //ஹையா வட எனக்கா //

    பாயாசமும் இருக்கு சாப்பிடுங்கோ....

    ReplyDelete
  8. //வயது மனிதனுக்கான பக்குவத்தை தருகிறது அல்லது நாம் பக்குவட்டடுகிறோம்.... பகிர்வு நல்லாயிருக்கு....
    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்///

    நன்றி..............வாழ்த்துக்கள் கருணாகரசு....

    ReplyDelete
  9. //ஏதோ சுதந்திர போராட்டத்துக்காக நேதாஜி ட்ருப்ல துப்பாக்கி முனைல சண்டைபோட்டா மாதிரியே பில்டப் கொடுக்கறீங்க.... தண்ணியடிச்சிட்டு ஊர்ல ரகளை பண்ணதுல்லாம் ஒரு சாதனையா...:))) ///

    சாதனை இல்லை மக்கா அனுபவம்.
    இந்த அனுபவம் இனி கிடைக்க போவதில்லை சரிதானே.....

    ReplyDelete
  10. //நாமளா யாரோட வம்புக்கும் போறதில்ல -ன்னு வடிவேல் சொன்னமாதிரியா ? உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்///

    ஹா ஹா ஹா ஹா நன்றி வாழ்த்துக்கள் அண்ணா.....

    ReplyDelete
  11. //நல்ல பகிர்வு..
    பொங்கல் வாழ்த்துக்கள்///

    ரொம்ப நன்றிப்பா......வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  12. //பெரிய ஆளுதான் போல நீங்க........... நாங்கள்லாம் பூச்சி வகையறா..........

    நீங்க இப்பயும் மும்பை வாசம் தானா?///



    நீங்க பூச்சின்னா நான் புழு வகையறா இப்போ.....ஹா ஹா ஹா ஹா.....
    [[ஆமாம் மும்பை செட்டில்தான் மக்கா]]

    ReplyDelete
  13. எனக்கென்னமோ இந்த திருமணம் அப்படிங்கற வளைவுக்கு அப்புறமா தான் பொறுமை வருது நண்பரே.

    ReplyDelete
  14. ரொம்ப தா தில்லா ஆடியிருக்கீங்க !!
    இதெல்லாம் வயசு,மற்றும் உடன் ஆட்கள் உள்ள தெம்பில் வருவது. பின்னாட்களில் இவைகள் மறைந்து மறந்துவிடும். ஆனாலும் முபையில் செட்டில் ஆவதற்கு பழக்கமும் துணிவும் வேண்டும்தான்.
    துணிச்சல் கார நாஞ்சில் மனோ வால்க! வால்க!! :))

    ReplyDelete
  15. மனோ...”துஷ்டனைக் கண்டால் தூரவிலகு”ன்னு முன்னமே படிச்சிருப்பீங்கதானே !

    ReplyDelete
  16. //எனக்கென்னமோ இந்த திருமணம் அப்படிங்கற வளைவுக்கு அப்புறமா தான் பொறுமை வருது நண்பரே//

    அப்பிடியும் இருக்கலாம், காதல் திருமணம் ஆச்சே....ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  17. //ஆனாலும் முபையில் செட்டில் ஆவதற்கு பழக்கமும் துணிவும் வேண்டும்தான்.
    துணிச்சல் கார நாஞ்சில் மனோ வால்க! வால்க!! :))///


    நான் இல்ல நான் இல்ல......
    ஆத்தீ இங்கினேயே அடி வாங்க வச்சிருவாரோ.....ஹா ஹா ஹா ஹா....

    ReplyDelete
  18. //மனோ...”துஷ்டனைக் கண்டால் தூரவிலகு”ன்னு முன்னமே படிச்சிருப்பீங்கதானே ///

    விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே வீட்டுலயும் சர்ச்லையும் சொல்லுவாங்க, நாம கேட்டாதானே....

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.


    சகோ பாலோயர்ஸ் delete பண்ணிவிட்டு

    வேறு வைக்கவும்.

    ReplyDelete
  20. தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக யதார்த்தம் மனோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. //தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக யதார்த்தம் மனோ. வாழ்த்துக்கள்.//


    நன்றி,
    தொடர்ந்து வருகை தாருங்கள் மக்கா...

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!